என்னைப் பின்பற்றி வாருங்கள்
மே 11–17. “கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு”: உபாகமம் 6–8; 15; 18; 29–30; 34


“மே 11–17. ‘கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு’: உபாகமம் 6– 8; 15;; 29; 30; 34,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)

“மே 11–17. ‘கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026

நேபோ மலையில் மோசே

நேபோ மலையில் மோசே-ஜான் ஸ்டீல், © Providence Collection/licensed from goodsalt.com

மே 11– 17:“கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு”

உபாகமம் 6–8;15;18;29–30;34

எரியும் புதரிலிருந்து தேவன் அவனிடம் பேசியபோது மோசேயின் பூலோக ஊழியம் ஒரு மலையில் தொடங்கியது (யாத்திராகமம் 3:1–10 பார்க்கவும்). 40க்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பிறகு, தேவன் மோசேக்கு நேபோ மலையின் உச்சியிலிருந்து வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தைப்பற்றிய ஒரு காட்சியைக் கொடுத்தபோது இதுவும் ஒரு மலையிலே முடிந்தது.(உபாகமம் 34:1–4 பார்க்கவும்). வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்குள் நுழைய இஸ்ரவேல் புத்திரரை ஆயத்தப்படுத்துவதற்காக மோசே தனது வாழ்க்கையை கழித்திருந்தான், உபாகமம் புத்தகம் அவனுடைய இறுதி அறிவுறுத்தல்கள், நினைவூட்டல்கள், அறிவுரைகள் மற்றும் இஸ்ரவேலர்களிடம் வேண்டுகோள்களைப் பதிவு செய்கிறது. மக்களுக்குத் தேவையான ஆயத்தமான மோசேயின் ஊழியத்தின் உண்மையான பொருள்—ஜனங்களுக்குத் தேவைப்பட்டதை ஆயத்தம் செய்வது—வனாந்தரத்தில் உயிர்வாழ்வது, தேசங்களை வெல்வது அல்லது ஒரு சமூகத்தை உருவாக்குவதைப்பற்றியது அல்ல என்பதை அவனுடைய வார்த்தைகளை வாசிப்பது தெளிவுபடுத்துகிறது. இது தேவனை நேசிக்கவும், அவருக்குக் கீழ்ப்படியவும், அவருக்கு விசுவாசமாகவும் இருக்க கற்றுக்கொள்வது பற்றியதாகும். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமான நித்திய ஜீவனுக்குள் நுழைய நாம் அனைவருக்கும் தேவைப்படும் ஆயத்தம் இதுதான். மோசே ஒருபோதும் “பாலும் தேனும் பாயும் தேசத்தில்” கால் வைக்காதபோதும்,(யாத்திராகமம் 3:8), அவனுடைய விசுவாசத்தினாலும் விசுவாசமாயிருந்ததாலும், தம்மைப் பின்பற்றுபவர்கள் யாவருக்காகவும் தேவன் ஆயத்தம் செய்த வாக்குத்தத்தத்தின் தேசத்தில் அவன் நுழைந்தான்.

உபாகமத்தின் ஒரு மேம்போக்கான பார்வைக்கு “உபாகமம்” வேதாகம அகராதியில் பார்க்கவும்.

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

உபாகமம் 6:4–7; 8:2–5, 11–17; 29:18–20; 30:6–10, 14–20

வேத பாட வகுப்பு சின்னம்
“நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், அன்புகூருவாயாக.”

மோசேயின் நியாயப்பிரமாணம் பல வெளிப்புற விழாக்கள் மற்றும் சடங்குகளை உள்ளடக்கியது. உபாகமத்தில் மோசேயின் அறிவுரையில் நீங்கள் பார்ப்பது போல், கர்த்தர் தம்முடைய மக்களின் உள்ளார்ந்த நிலை—அவர்களின் இருதயங்களின் ஆவிக்குரிய நிலை குறித்தும் அக்கறை கொண்டிருந்தார்.

கீழே உள்ள பத்திகளில், இருதயம் என்ற வார்த்தையைத் தேடுங்கள், அது எதைக் குறிக்கும் என்று சிந்தியுங்கள். இந்த பத்திகளை உங்கள் இருதயத்தில் ஒரு வகையான ஆவிக்குரிய சோதனை என்று நீங்கள் நினைக்கலாம். நீங்களே என்ன நோயறிதலை உங்களுக்கு வழங்குவீர்கள்? உங்கள் இருதயத்தின் ஆவிக்குரிய ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் என்ன சிகிச்சைகளை பரிந்துரைப்பீர்கள்? உங்கள் எண்ணங்களை எழுதவும்:

  • உபாகமம் 6:4–7:

  • உபாகமம் 8:2–5:

  • உபாகமம் 8:11–17:

  • உபாகமம் 29:18–20:

  • உபாகமம் 30:6–10:

  • உபாகமம் 30:14–20:

உங்கள் எண்ணங்களை ஒழுங்கமைப்பதற்கான ஒரு வழி, இருதயத்தை வரைந்து, உங்கள் இருதயத்தில் இருக்க வேண்டும் என்று கர்த்தர் கூறும் விஷயங்களை அதில் எழுதுவதாகும். பின்னர் உங்கள் இருதயத்திற்கு வெளியே வைத்திருக்க வேண்டிய விஷயங்களை அதற்கு வெளியே எழுதலாம்.

தேவனை முழு இருதயத்துடன் நேசிக்கிறீர்கள் என்பதை எப்படிக் காட்டுவீர்கள்? யோசனைகளுக்கு, “Love God, love your neighbor,” For the Strength of Youth: A Guide for Making Choices, 10–12 பார்க்கவும்.

See also M. Russell Ballard, “Lovest Thou Me More Than These?,” Liahona, Nov. 2021, 51–53.

உங்கள் சொந்த ஆவிக்குரிய உள்ளுணர்வுகளை தேடுங்கள். என்னைப் பின்பற்றி வாருங்கள் வேத வாக்கியங்களில் கவனம் செலுத்த வேண்டிய பத்திகளையும் கொள்கைகளையும் பரிந்துரைக்கிறது, ஆனால் அது உங்கள் படிப்பை மட்டுப்படுத்த வேண்டாம். நீங்கள் உபாகமத்தைப் படிக்கும்போது, ​​இங்கு முக்கியப்படுத்தப்படாத ஒரு கொள்கையை நீங்கள் கண்டறியலாம். நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியதை ஆவியானவர் வழிநடத்தட்டும்.

உபாகமம் 6:4–12, 20–25

“கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.”

வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்குள் நுழையும் இஸ்ரவேலர்கள் எகிப்தில் ஏற்பட்ட வாதைகளைக் கண்டதில்லை அல்லது செங்கடலைக் கடந்ததில்லை. தேவனின் ஜனங்களாக இருக்க வேண்டுமென்றால், அவர்களும் எதிர்கால சந்ததியினரும் தேவனின் அற்புதங்களையும் தேவனின் நியாயப்பிரமாணங்களையும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதை மோசே அறிந்திருந்தான்.

உபாகமம் 6:4–12, 20–25ல், தேவன் உங்களுக்காகச் செய்த பெரிய காரியங்களை நினைவில் வைக்க உங்களுக்கு உதவக்கூடிய என்ன ஆலோசனைகளை நீங்கள் காண்கிறீர்கள்? கர்த்தருடைய வார்த்தை தினமும் “உங்கள் இருதயத்தில்” இருக்கும்படி நீங்கள் என்ன செய்ய உணர்த்தப்படுகிறீர்கள்? (வசனம் 6).

Brother Jan E. Newman’s message “Preserving the Voice of the Covenant People in the Rising Generation” (Liahona, Nov. 2023, 36–38) நீங்கள் படிக்கலாம், கிறிஸ்துவின் மீதான உங்கள் நம்பிக்கையை வருங்கால சந்ததியினருக்கு எவ்வாறு கொண்டு செல்வீர்கள் என்று சிந்தியுங்கள்.

See also Deuteronomy 11:18–21; Dale G. Renlund, “Consider the Goodness and Greatness of God,” Liahona, May 2020, 41–44; Bible Dictionary, “Frontlets or phylacteries.”

உபாகமம் 15:1–15

தேவைப்படுபவர்களுக்கு உதவுவது தாராளமான கைகள் மற்றும் விருப்பமுள்ள இருதயங்களை உள்ளடக்கியது.

“உங்களில் ஒரு ஏழையும் இல்லாத” நாளுக்கு நாம் இன்னும் வரவில்லை (உபாகமம் 15:4), எனவே குறிப்பிட்ட நடைமுறைகள் மாறியிருந்தாலும், உபாகமம் 15 இல் உள்ள ஏழைகளுக்கு உதவுவது பற்றிய கொள்கைகள் இன்னும் மதிப்புமிக்கவை. 1–15 வசனங்கள் தேவைப்படுபவர்களுக்கு நாம் ஏன் உதவுகிறோம், அதைப் பற்றிய நமது மனப்பான்மை என்ன என்பதைப் பற்றி என்ன கற்பிக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

தேவைப்படுபவர்களுக்கு “உங்கள் கையை அகலமாக திறப்பது” என்றால் என்ன? (வசனங்கள் 8, 11) தேவைப்படும் மக்களுக்கு உதவுவதைப் பற்றி கர்த்தருடைய உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? (15 வசனத்தைப் பார்க்கவும்).

See also “Have I Done Any Good?,” Hymns, no. 223.

யாத்திராகமம் 18:15–19

மோசே இயேசு கிறிஸ்து “போலவே” இருந்தான்.

உபாகமம் 18:15–19ல் (அப்போஸ். 3:20–23; 1 நேபி 22:20–21; ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:40; 3 நேபி 20:23 பார்க்கவும்) லுள்ள தீர்க்கதரிசனம் குறித்து பேதுரு, நேபி, மரோனி, மற்றும் இரட்சகர் தாமே கூறியிருக்கிறார்கள். இந்த வசனங்களிலிருந்து இரட்சகரைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக் கொள்ளுகிறீர்கள்? கடந்த சில வாரங்களாக மோசேயைப் பற்றி நீங்கள் படித்ததைப் பற்றி சிந்தியுங்கள். மோசே எப்படி இயேசு கிறிஸ்துவைப் “போல்” இருக்கிறாரன்?

நேபியர்களுக்கு இயேசு போதித்தல்

இயேசு கிறிஸ்து பண்டைய அமெரிக்காவில் உள்ள தம்முடைய மக்களிடம், “என்னைக் குறித்தே தீர்க்கதரிசி மோசே பேசியிருக்கிறான்” (3 நேபி 20:23) என்று கூறினார்.

உபாகமம் 29:9; ஏசாயா 30:15–20

நன்மை தீமைக்கு இடையே தேர்ந்தெடுக்க கர்த்தர் என்னை அழைக்கிறார்.

உபாகமம் 29:9 30:15–20ல் உள்ள மோசேயின் வார்த்தைகளை 2 நேபி 2:26–29 4:4இல் அவரது குடும்பத்திற்கு லேகியின் இறுதிப் போதனைகள் சிலவற்றை ஒப்பிடுவது சுவாரஸ்யமாக இருக்கலாம். மோசே கற்பித்ததை லேகி எவ்வாறு விரிவுபடுத்தினான்? “வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க” உங்களைத் தூண்டும் இந்தப் பத்திகளில் நீங்கள் எதைக் காண்கிறீர்கள்? (உபாகமம் 30:19).

பிள்ளைகள் பகுதி சின்னம்

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

உபாகமம் 6:5.

நான் தேவனை முழு இருதயத்துடன் நேசிக்க முடியும்.

  • உபாகமம் 6:5-ஐ உங்கள் பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவுவதற்கு, நீங்கள் இருதயத்தையும், உடலின் வெளிப்புற உருவத்தையும், வலிமையான கையையும் வரையலாம். வசனத்தில் உள்ள “இருதயம்,” “ஆத்துமா,” “பலம்” போன்ற வார்த்தைகளை நீங்கள் படிக்கும்போது உங்கள் பிள்ளைகள் படங்களைச் சுட்டிக்காட்டலாம். நாம் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும் கர்த்தரை நேசிப்பதை எப்படிக் காட்டுவது?

உபாகமம் 6:6–15

தேவனுடைய வார்த்தையை நான் என் இருதயத்தில் வைத்திருக்க முடியும்.

  • இஸ்ரவேலர்கள் ஒவ்வொரு நாளும் காணக்கூடிய இடத்தில் வேதப் பத்திகளை வைக்கும்படியான கர்த்தரின் அறிவுரையை உங்கள் பிள்ளைகளுடன் படிக்கவும் (உபாகமம் 6:6–9 பார்க்கவும்). நீங்கள் “கர்த்தரை மறவாதபடிக்கு” (வசனம் 12) மற்றும் அவர் உங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்வதற்கான வழிகளைப் பற்றி சிந்திக்க உங்களையும் உங்கள் குழந்தைகளையும் இது உணர்த்தும்.

  • இரட்சகரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணத்தில் உபாகமம் 6:13, 16 மற்றும் 8:3 உதவியதை நீங்கள் சுட்டிக்காட்டலாம். எப்படி என்பதைப் பார்க்க, மத்தேயு 4:1-10ஐ ஒன்றாக வாசியுங்கள். ​​தேவைப்படும் சமயங்களில் உங்களுக்கு உதவிய சில வேதப் பத்திகளை பின்னர் நீங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம்.

ஒரு வாலிபன் வேதங்களை வாசித்தல்

யாத்திராகமம் 18:15–18

தீர்க்கதரிசிகள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி போதிக்கிறார்கள்.

  • உபாகமம் 18:18ஐ நீங்கள் ஒன்றாக வாசிக்கும்போது, ​​இந்த வசனத்தில் மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்து என்பதை உங்கள் பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவுங்கள். ஒருவேளை நீங்கள் மோசே செய்த காரியங்கள் மற்றும் இயேசு கிறிஸ்து செய்த காரியங்களின் படங்களைப் பார்த்து, உங்கள் பிள்ளைகள் அவற்றைப் பொருத்த அனுமதிக்கலாம் (see Gospel Art Book, nos. 15, 16, 3839). நமது தீர்க்கதரிசி இரட்சகரைப்பற்றி நமக்கு என்ன போதித்திருக்கிறார்?

உபாகமம் 29:12–13; 30:8–10

என் உடன்படிக்கைகளின் காரணமாக, நான் தேவனின் மக்களில் ஒரு பகுதியாக இருக்கிறேன்.

  • உபாகமம் 29:12–13 பற்றி பேசுவது, பரலோக பிதாவுடன் அவர்கள் செய்யவிருக்கும் அல்லது செய்த உடன்படிக்கைகளைப்பற்றி விவாதிக்க உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தேவனின் ஜனம் என்பதற்கு அர்த்தம் என்ன? நம்முடைய வாக்குத்தத்தங்கள் எப்படி நம்மை தேவனின் ஜனங்களாக ஆக்குகின்றன? (13 வசனத்தைப் பார்க்கவும்; மோசியா 18:8–10ஐயும் பார்க்கவும்).

  • உடன்படிக்கை என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கு உங்கள் பிள்ளைகளுக்கு உதவி தேவைப்பட்டால், “Covenant” in the Guide to the Scriptures (Gospel Library)இல் ஒரு வரையறையைக் கண்டறியுமாறு பரிந்துரைக்கவும். உபாகமம் 30:8–10 இல் தேவனும் இஸ்ரவேலர்களும் ஒருவருக்கொருவர் என்ன வாக்குறுதிகளை அளித்தனர்? தேவனிடம் நாம் என்ன வாக்குறுதிகளை செய்துள்ளோம்? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37, 77 பார்க்கவும்). இந்த வாக்குறுதிகள் எவ்வாறு நம்மை அவருடன் இணைக்கின்றன? “Standing on the Promises” (Gospel Library) போன்ற உடன்படிக்கைகளைப் பற்றிய பாடலை ஒன்றாகப் பாடுவதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

வாக்குத்தத்தத்தின் தேசத்தை நோக்கி மோசே பார்த்தல்

கர்த்தர் அவனுக்கு அனைத்து தேசங்களையும் காட்டினார் –வால்டர் ரானே

ஆரம்ப வகுப்பு நிகழ்ச்சி பக்கம்: தேவனுடைய வார்த்தையை நான் என் இருதயத்தில் வைத்திருக்க முடியும்