“மே 18–24. ‘பலங்கொண்டு திடமனதாயிரு’: யோசுவா 1–8; 23-24” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026}
“மே 18–24. ‘பலங்கொண்டு திடமனதாயிரு,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026
மோசே யோசுவாவை நியமித்தல்-டாரல் தாமஸ் (விளக்கம்)
யோசுவா 18–24: “பலங்கொண்டு திடமனதாயிரு”
யோசுவா 1–8; 23–24
இதற்கு பல தலைமுறைகள் ஆனது, ஆனால் கர்த்தருடைய வாக்குத்தத்தம் நிறைவேற்றப்படவிருந்தது: இஸ்ரவேல் புத்திரர் வாக்குத்தத்தத்தின் தேசத்தை சுதந்தரிக்க இருந்தனர். ஆனால் அவர்கள் வழியில் யோர்தான் நதியும், எரிகோவின் சுவர்களும், கர்த்தரை நிராகரித்த ஒரு வலிமைமிக்க ஜனங்களும் நின்றனர் (1 நேபி 17:35 பார்க்கவும்). மேலும் அவர்கள் தங்கள் அன்புக்குரிய தலைவன் மோசே இல்லாமல் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த நிலைமை சில இஸ்ரவேலர்களை பலவீனமாகவும் பயமாகவும் உணரச் செய்திருக்கக்கூடும், ஆனால் கர்த்தர், “பலங்கொண்டு திடமனதாயிருங்கள்” என்றார். அவர்கள் தைரியமாக இருக்க என்ன காரணம்? அவர்களுடைய சொந்த பலத்தினாலோ அல்லது மோசேயின் அல்லது யோசுவாவின் காரணத்தினாலோ அல்ல, ஆனால் “நீ போகுமிடமெலாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” என்றதனாலேயே ( யோசுவா 1:9). நம்முடைய சொந்த நதிகளைக் கடக்க, சுவர்களை வீழ்த்த வேண்டியிருக்கும்போது, நம் வாழ்க்கையில் அற்புதமான விஷயங்கள் நடக்கக்கூடும், ஏனென்றால் “ கர்த்தர் [நம்] நடுவிலே அற்புதங்களைச் செய்வார்” (யோசுவா 3: 5).
யோசுவாவின் புதத்கத்தைப்பற்றிய மேலோட்டமான பார்வைக்கு, “Joshua, book of” in the Bible Dictionary பார்க்கவும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
யோசுவா 1:1–9
நான் அவருக்கு விசுவாசமாக இருந்தால் தேவன் என்னுடன் இருப்பார்.
மோசேயை மாற்றுவதற்கு யோசுவா அழைக்கப்படவிருந்தது அவனுக்கு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். யோசுவா 1:1–9ல் அவனை ஊக்குவிக்க கர்த்தர் சொன்னதை கவனியுங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் கடினமான சவால்களைப்பற்றி சிந்தியுங்கள்; இந்த வசனங்களில் எது உங்களுக்கு தைரியம் தருகிறது?
யோசுவா என்னும் பெயர் (எபிரேயுவில்எஹோசுவா அல்லது எசுவா) “யேகோவா இரட்சிக்கிறார்” எனும் அர்த்தமுடையதாகும். இயேசு என்ற பெயர் எசுவாவிலிருந்து வந்தது. ஆகவே, யோசுவாவைப் பற்றி நீங்கள் படிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரை யோர்தான் நதியைக் கடந்து வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு வழிநடத்தியதில் அவனுடைய பங்கைக் கவனியுங்கள். கிறிஸ்து நமக்காகச் செய்வதைப் போலவே அவனுடைய ஊழியம் எப்படி ஒன்றாய் இருந்தது?
யோசுவா 1:8
தேவனுடைய வார்த்தை என் வழியை செழுமையாக்கும்.
அவர் யோசுவாவை ஊக்குவித்தபோது, கர்த்தர் யோசுவா 1:8-ல் வேதங்கள் அல்லது “நியாயப்பிமாணத்தின் வார்த்தையை” பற்றி அறிவுரை வழங்கினார். யோசுவாவின் பெரிய பொறுப்பைக் கருத்தில் கொண்டு, இந்த அறிவுரை ஏன் குறிப்பாக உதவியாக இருந்திருக்கலாம்?
வேதங்களை வாசிக்கும்படி கர்த்தர் நம்மை அழைக்கும்போது, வெறும் வாசிப்புக்கு அப்பாற்பட்ட வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிறார். அவர் பெரிய ஆசீர்வாதங்களையும் வாக்களிக்கிறார். இந்த அழைப்புகள் மற்றும் வாக்குறுதியளிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைக் கண்டறிய கீழே உள்ள அட்டவணை உங்களுக்கு உதவும்:
|
அழைப்பு |
வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள். | |
|---|---|---|
|
யோசுவா 1:8 | அழைப்பு பகலும் இரவும் தியானியுங்கள் | வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள்.
|
அழைப்பு
| வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள்.
| |
அழைப்பு
| வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள்.
| |
அழைப்பு
| வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள். தேசத்தில் செழித்திருங்கள் | |
அழைப்பு
| வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள்.
| |
அழைப்பு
| வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள்.
| |
|
Russell M. Nelson, “Hear Him,” Liahona, May 2020, last paragraph on page 89 | அழைப்பு
| வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள்.
|
கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் இந்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றினார்? உங்கள் வேதம் படிக்கும் பழக்கத்தை மதிப்பிடுவதற்கு இப்போது நல்ல நேரமாக இருக்கலாம். என்ன நன்றாக நடக்கிறது? தேவனுடைய வார்த்தையில் அதிக அர்த்தமுள்ள அனுபவங்களைப் பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உணர்கிறீர்கள்?
See also “As I Search the Holy Scriptures,” Hymns, no. 277.
யோசுவா 2
இரட்சிப்புக்கு விசுவாசமும் கிரியைகளும் அவசியம்.
புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் ராகாபை விசுவாசம் மற்றும் கிரியைகள் இரண்டிற்கும் ஒரு எடுத்துக்காட்டு என்று பார்த்தார்கள் (எபிரெயர் 11:31; யாக்கோபு 2:25 பார்க்கவும்) நீங்கள் யோசுவா 2 வாசிக்கும்போது, ராகாபின் விசுவாசத்தின் பங்கைக் கவனியுங்கள், தன்னையும், அவளது குடும்பத்தினரையும், இஸ்ரவேலின் ஒற்றர்களையும் காப்பாற்றிய செயலையும் கருத்தில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உங்கள் விசுவாசமும் உங்கள் கிரியைகளும் உங்களையும் மற்றவர்களையும் எவ்வாறு பாதிக்கும் என்பதைப்பற்றி இது என்ன கற்பிக்கிறது?
ராகாப் அவளது ஜன்னல் அருகில். வாக்குத்தத்தத்திற்காகக் காத்திருத்தல்–எலஸ்பெத் யங் (விளக்கம்)
யோசுவா 3–4
இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தால், நான் தேவனின் “அற்புதங்களை” அனுபவிக்க முடியும்.
கர்த்தர் தம்முடைய ஜனங்களை வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் சென்றபோது அவர்களிடையே அதிசயங்களைச் செய்தார், மேலும் அவர் உங்களுக்கும் அதையே செய்வார். யோசுவா 3–4 பற்றிய உங்கள் ஆய்வுக்கு வழிகாட்ட சில கேள்விகள்:
-
இஸ்ரவேலர் யோர்தான் நதியைக் கடப்பதற்கு முன்பு தங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள் (யோசுவா 3:5 பார்க்கவும்).
-
“ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரின் ஓரத்திலே” பட்டமாத்திரத்தில், நதி பிரிந்தது என்பதைக் கவனியுங்கள் (யோசுவா 3:13, 15). அது ஏன் முக்கியமானது?
-
யோர்தான் நதியில் பிற பல குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் நடந்தன—2 இராஜாக்கள் 2:6–15; 5:1–14; மற்றும் மாற்கு 1:9–11 பார்க்கவும். இந்த நிகழ்வுகளுக்கு இடையே என்ன தொடர்புகளை நீங்கள் காண்கிறீர்கள்?
-
கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் “அதிசயங்களை” எவ்வாறு செய்திருக்கிறார் யோசுவா 3:5 அந்த அதிசயங்களை நீங்கள் எவ்வாறு அடிக்கடி அனுபவிக்க முடியும் அல்லது அடையாளம் காணலாம்? (எடுத்துக்காட்டாக, யோசுவா 3:17 பார்க்கவும்).
யோசுவா 6–8
கீழ்ப்படிதல் என் வாழ்க்கையில் தேவ வல்லமையைக் கொண்டுவருகிறது.
யோசுவா 6–8 எரிகோ மற்றும் ஆய் தேசங்கள் மீதான யுத்தங்களைப்பற்றி பேசுகின்றன. நீங்கள் இந்த அதிகாரங்களை வாசிக்கும்போது, உங்கள் சொந்த வாழ்க்கையில் நீங்கள் எவ்வாறு சோதனையை எதிர்த்துப் போராடுகிறீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவும் (எடுத்துக்காட்டாக, யோசுவா 7:10–13 பார்க்கவும்). தேவன் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதையும் அவருடைய வல்லமையைப் பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? எடுத்துக்காட்டாக, எரிகோவை எடுத்துக்கொள்வதற்கான கர்த்தரின் அறிவுறுத்தல்களில் உங்களைக் கவர்ந்தது எது? ( யோசுவா 6:1–5 பார்க்கவும்). ஒருவேளை யோசுவா 7ல் உள்ள விவரம், நீங்கள் அகற்ற வேண்டிய உங்கள் வாழ்க்கையில் “சாபத்தீடானது இருக்கிறதா” என்பதை தீர்மானிக்க உங்களை ஊக்குவிக்கும் (யோசுவா 7:13).
யோசுவா 23–24
“யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்.”
யோசுவா 23–24 இல் இஸ்ரவேலர்களுக்கு யோசுவாவின் இறுதிப் போதனைகள் முக்கியமான எச்சரிக்கைகள், ஆலோசனைகள் மற்றும் வாக்குறுதியளிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை உள்ளடக்கியது. ஒருவேளை நீங்கள் கண்டுபிடித்தவற்றின் பட்டியலை உருவாக்கலாம். இஸ்ரவேலர் அனுபவித்த எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, யோசுவா தனது வாழ்க்கையின் முடிவில் இந்த விஷயங்களை அவர்களிடம் சொல்லத் தேர்ந்தெடுத்தது ஏன்? “கர்த்தரைப் பற்றிக்கொள்வதற்கு” உங்களுக்கு உணர்த்தும் எதைக் காண்கிறீர்கள். யோசுவா 23:8.
Dale G. Renlund, “Choose You This Day,” Liahona, Nov. 2018, 104.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
யோசுவா 1–4; 6
“பலங்கொண்டு திடமனதாயிரு”
-
இயேசு கிறிஸ்து மூலம் உங்கள் பிள்ளைகள் “பலங்கொண்டு திடமனதாயிருக்க” (யோசுவா 1:6) உதவுவதற்கான ஒரு வழி இங்கே உள்ளது. யோசுவா 1:6, 9, மற்றும் 18-ல் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட ஒரு சொற்றொடரைக் கண்டுபிடிக்க அவர்களை அழைக்கவும், அதை எழுதவும் அல்லது மனப்பாடம் செய்யவும். யோசுவாவைப் போலவே உங்கள் பிள்ளைகளுக்கும் இந்தச் செய்தி தேவைப்படும் சூழ்நிலைகளைப் பற்றி சிந்திக்க உதவுங்கள். யோசுவா 1–4; 6லுள்ள சில கதைகளை நீங்கள் ஒன்றாக மதிப்பாய்வு செய்யலாம் (see also “Joshua the Prophet” and “Rahab and the Spies” in Old Testament Stories, 85–91). இந்தக் கதைகளில் உள்ளவர்கள் எப்படி கர்த்தரிடம் தைரியத்தையும் வலிமையையும் காட்டினார்கள்?
2:59Joshua the Prophet
1:39Rahab and the Spies
யோசுவா 1:8
வேதங்களைப் படிப்பது எனக்கு ஆசீர்வாதத்தைத் தருகிறது.
-
யோசுவா 1:8-ஐ வாசிப்பது உங்கள் பிள்ளைகள் வேதங்களை தாங்களாகவே வாசிக்க உணர்த்தும். நாம் எப்படி, ஏன் வேதங்களை வாசிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கும் வார்த்தைகளை இந்த வசனத்தில் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவுங்கள். 1 நேபி 15:23–24; 2 நேபி 31:20; 32:3; யாக்கோபு 4:6; ஏலமன் 3:29–30 லும் அவர்கள் அதையே தேடலாம். வேதவாக்கியங்களை வாசிக்கும் திட்டத்தை உருவாக்கவும் செயல்படுத்தவும் நீங்கள் அவர்களுக்கு உதவலாம்.
யோசுவா 3–4
தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க நான் ஞானஸ்நானம் பெற வேண்டும்.
-
இஸ்ரவேலர்கள் யோர்தான் நதியைக் கடக்கும் கதையை ஞானஸ்நானத்தின் அடையாளமாக நீங்கள் பயன்படுத்தலாம்—வனாந்தரத்தில் நமது பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு, தேவனுடன் ஒரு உடன்படிக்கை உறவில் புதிய வாழ்க்கையைத் தொடங்குதல். யோசுவா 3–4 (or “Joshua the Prophet” in Old Testament Stories, 85–89) நீங்கள் ஒன்றாக படிக்கும்போது, இயேசு ஞானஸ்நானம் பெற்ற படத்தைப் பார்த்து, இஸ்ரவேலர்கள் கடந்து வந்த அதே நதியில் இயேசு ஞானஸ்நானம் பெற்றார் என்பதை விளக்கலாம். “Baptism” (Children’s Songbook, 100–101) போன்ற ஒரு பாடலை நீங்கள் பாடலாம். ஞானஸ்நானம் பெறுவது இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்தில் எப்படி ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதைப் போன்றது என்பதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.
2:59Joshua the Prophet
யோசுவா 24:15.
நான் இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய தேர்வு செய்யலாம்.
-
யோசுவா இஸ்ரவேலர்களை அழைத்தது போல், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதைத் தேர்ந்தெடுக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவ நீங்கள் என்ன செய்யலாம்? நீங்கள் அவர்களை இவற்றைச் செய்ய அழைக்கலாம்:
-
யோசுவா 24:15லிருந்து குறுகிய சொற்றொடரை மனப்பாடம் செய்யலாம் . இது உங்கள் பிள்ளைகளுக்கு வேடிக்கையாக இருக்க முயற்சி செய்யுங்கள். அவர்கள் மனப்பாடம் செய்யும் வார்த்தைகளின் எண்ணிக்கை அவர்களின் வயதைப் பொறுத்தது.
-
இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்யத் தேர்ந்தெடுத்தவர்களைப் பற்றிய கதைகளைக் கண்டறியவும். Friend magazine, the Gospel Art Book, or Old Testament Stories இவற்றிலும் மற்றும் பிற வேதக் கதைகள் புத்தகங்களிலும் தேடலாம்.
-
இரட்சகரைப் பின்பற்றவும் சேவை செய்யவும் அவர்கள் தேர்வுசெய்யக்கூடிய நடிப்பு சூழ்நிலைகள்.
-
பல்வேறு நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தவும். “எல்லா பிள்ளைகளும் வித்தியாசமாக இருக்கிறார்கள், அவர்கள் வளரும்போது, அவர்களின் தேவைகள் மாறும். உங்கள் கற்பித்தல் முறைகளை மாற்றுவது அவர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்” (Teaching in the Savior’s Way, 31).
கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.