இளைஞர்
பிற்சேர்க்கை


“பிற்சேர்க்கை,” இளைஞரின் பெலனுக்காக: தேர்வுகளை செய்வதற்கான வழிகாட்டி (2022)

“பிற்சேர்க்கை,” இளைஞரின் பெலனுக்காக

பாரன்குவிலா கொலம்பியா ஆலயம்

பிற்சேர்க்கை

உடன்படிக்கைப் பாதையில் உங்கள் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான ஒரு வழி, கீழே உள்ள கேள்விகளைச் சிந்திப்பதாகும். ஆலயப் பரிந்துரையைப் பெறுவதற்காக நீங்கள் நேர்காணல் செய்யப்படும்போது கேட்கப்படும் கேள்விகள் இவைதான், ஆனால் நேர்காணலுக்காகக் காத்திருக்காதீர்கள். உங்கள் சொந்த ஆவிக்குரிய பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். இளம் பெண்கள் தலைப்பு, ஆரோனிய ஆசாரியத்துவ குழும தலைப்பு மற்றும் பத்து கட்டளைகள் ஆகியவை உங்கள் சுய மதிப்பீட்டில் உதவிகரமான கருவிகளாக இருக்கலாம்.

ஆலய சின்னம்

இளைஞர்களுக்கான ஆலயப் பரிந்துரை கேள்விகள்

நித்திய பிதாவாகிய தேவன், அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியானவர் பற்றி உங்களுக்கு விசுவாசமும் சாட்சியுமுண்டா?

இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியிலும், உங்களுடைய இரட்சகரும் மீட்பருமாகிய அவருடைய பாத்திரத்திலும் உங்களுக்கு சாட்சியமுண்டா?

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷ மறுஸ்தாபிதம்பற்றி உங்களுக்கு சாட்சியமுண்டா?

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவரை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும் மற்றும் ஆசாரியத்துவத்தின் சகல திறவுகோல்களையும் கையாள பூமியில் ஒரே நபராகவும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா? பிரதான தலைமையின் அங்கத்தினர்கள், மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தினரை தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா? சபையின் பிற பொது அதிகாரிகளையும், உள்ளூர் தலைவர்களையும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

அவருக்கு முன்பாக சகல காரியங்களும் “சுத்தமாகச் செய்யப்படவேண்டுமென” கர்த்தர் சொல்லியிருக்கிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:41). உங்கள் சிந்தனையிலும் நடத்தையிலும் ஒழுக்க தூய்மைக்கு நீங்கள் முயற்சிக்கிறீர்களா? கற்புடமை நியாயப்பிரமாணத்திற்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா?

உங்களுடைய குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் பிறருடன் உங்களுடைய தனிப்பட்ட மற்றும் பொது நடத்தையில் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நீங்கள் பின்பற்றுகிறீர்களா?

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபைக்கு எதிரான எந்த போதனைகளையும், நடைமுறைகள் அல்லது கோட்பாட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்களா அல்லது ஊக்குவிக்கிறீர்களா?

வீட்டிலும் சபையிலும் ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரிக்கவும், உங்கள் கூட்டங்களில் பங்கேற்கவும், திருவிருந்துக்கு ஆயத்தப்படவும் தகுதியுள்ளவராக பங்கெடுக்கவும், சுவிசேஷத்தின் நியாயப்பிரமாணங்களுடனும் கட்டளைகளுடனும் இணக்கத்துடன் உங்கள் வாழ்க்கையை வாழ நீங்கள் முயற்சிக்கிறீர்களா?

நீங்கள் செய்கிற எல்லாவற்றிலும் நேர்மையாயிருக்க நீங்கள் முயற்சிக்கிறீர்களா?

நீங்கள் முழு தசமபாகம் செலுத்துபவரா?

ஞானவார்த்தையை நீங்கள் புரிந்துகொண்டு அதற்கு கீழ்ப்படிகிறீர்களா?

உங்கள் மனந்திரும்புதலின் பகுதியாக ஆசாரியத்துவத்துடன் தீர்க்கப்படவேண்டிய கடுமையான பாவங்கள் எதாவது உங்கள் வாழ்க்கையில் உண்டா?

கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவும் ஆலய நியமங்களில் பங்கேற்கவும் தகுதியுள்ளவராக உங்களை நீங்களே கருதுகிறீர்களா?

இளம்பெண்கள் தலைப்பு

தெய்வீக தன்மை மற்றும் நித்திய இலக்குடன் நான் பரலோக பெற்றோரின் அன்புக்குரிய குமாரத்தி.

இயேசு கிறிஸ்துவின் சீஷராக நான் அவரைப் போலாக முயற்சி செய்கிறேன். தனிப்பட்ட வெளிப்படுத்தலை நான் நாடி செயல்படுகிறேன். அவரது பரிசுத்த நாமத்தில் பிறருக்கு ஊழியம் செய்கிறேன்.

எல்லா நேரங்களிலும், எல்லாவற்றிலும், எல்லா இடங்களிலும் நான் தேவனின் சாட்சியாக நிற்பேன்.

மேன்மையடைதலுக்கு தகுதிபெற நான் முயலும்போது, மனந்திரும்புதலின் வரத்தை பேணுகிறேன், ஒவ்வொரு நாளும் முன்னேற முயல்வேன். விசுவாசத்துடன், என் வீட்டையும் குடும்பத்தையும் பெலப்படுத்துவேன், பரிசுத்த உடன்படிக்கைகள் செய்து காத்துக் கொள்வேன், பரிசுத்த ஆலயங்களின் நியமங்களையும் ஆசீர்வாதங்களையும் பெறுவேன்.

ஆரோனிய ஆசாரியத்துவ குழுமத்தின் தலைப்பு

நான் தேவனின் அன்புக்குரிய குமாரன், நான் செய்யும்படி அவர் எனக்கு ஒரு பணியை வைத்திருக்கிறார்.

என் முழு இருதயத்தோடும், ஊக்கத்தோடும், மனதோடும், பலத்தோடும், நான் தேவனை நேசிப்பேன், என் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பேன், என் சொந்த வீட்டில் தொடங்கி மற்றவர்களுக்கு சேவை செய்ய அவருடைய ஆசாரியத்துவத்தைப் பயன்படுத்துவேன்.

நான் சேவை செய்ய, விசுவாசிக்க, மனந்திரும்பி, ஒவ்வொரு நாளும் முன்னேற முயற்சிக்கும்போது, ​​ஆலய ஆசீர்வாதங்களையும் சுவிசேஷத்தின் நீடித்த மகிழ்ச்சியையும் பெற நான் தகுதி பெறுவேன்.

இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷனாக இருப்பதன் மூலம், நான் ஒரு விடாமுயற்சியுள்ள ஊழியக்காரனாகவும், உண்மையுள்ள கணவனாகவும், அன்பான தந்தையாகவும் மாறத் தயாராக இருப்பேன்.

கிறிஸ்துவண்டை வரவும் அவருடைய பாவநிவர்த்தியின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும் அனைவரையும் அழைத்து, இரட்சகரின் திரும்புதலுக்காக உலகத்தை ஆயத்தப்படுத்த நான் உதவுவேன்.

மக்கள் ஒரு வரைபடத்தை வாசித்தல் சின்னம்

பத்துக் கட்டளைகள்

உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.

உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.

ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.

உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

கொலை செய்யாதிருப்பாயாக.

விபசாரம் செய்யாதிருப்பாயாக.

களவு செய்யாதிருப்பாயாக.

பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக.”

இச்சியாதிருப்பாயாக.

யாத்திராகமம் 20:3–17 பார்க்கவும்.

இரண்டு சிறுவர்கள் சட்டையில், ஒருவன் டை கட்டுகிறான்.