“அக்டோபர் 19-25. “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்”: எரேமியா 1–3; 7; 16–18; 20,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“அக்டோபர் 19-25. எரேமியா ‘நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026
எரேமியா–வால்டர் ரானே
அக்டோபர் 19–25: “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்”
எரேமியா 1–3; 7; 16–18; 20
முதலில், எரேமியா ஒரு நல்ல தீர்க்கதரிசியாவான் என்று நினைக்கவில்லை. “ நான் பேச அறியேன்,” என்று அவன் எதிர்ப்பு தெரிவித்தான் (எரேமியா 1:6). “என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்” என்று கர்த்தர் அவனுக்கு உறுதியளித்தார் (வசனம் 9). எரேமியா தான் ஒரு அனுபவமற்ற “குழந்தை” ( வசனம் 6) என்று உணர்ந்தான், ஆனால் அவன் உணர்ந்ததை விட அவன் உண்மையில் மிகவும் தயாராக இருக்கிறான் என்று கர்த்தர் விளக்கினார். அவன் பிறப்பதற்கு முன்பே இந்த அழைப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்தான் ( வசனம் 5 ஐ பார்க்கவும்). எனவே எரேமியா தனது அச்சங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அழைப்பை ஏற்றுக்கொண்டான். எருசலேமின் ராஜாக்களையும் ஆசாரியர்களையும் அவர்கள் பாசாங்கு பரிசுத்தத் தன்மை அவர்களை அழிவிலிருந்து காப்பாற்றாது என்று எச்சரித்தான். தான் பேச முடியாது என்று நினைத்த “குழந்தை” தேவனின் வார்த்தையை “[இருதயத்தில்] எரியும் நெருப்பாக” உணர்ந்தான், அமைதியாக இருக்க முடியவில்லை( எரேமியா 20: 9).
எரேமியாவின் கதையே உங்கள் கதையும் கூட. நீங்கள் பிறப்பதற்கு முன்பே தேவன் உங்களை அறிந்திருந்து, இந்த வாழ்க்கையில் உங்கள் ஊழியத்திற்கென உங்களை தயார்படுத்தினார். மற்றவற்றுடன், அந்த ஊழியத்தில் எரேமியா முன்னறிவித்தவையும் அடங்கும்: தேவ ஜனத்தை ஒவ்வொருவராக “சீயோனுக்கு அழைத்து வருவதற்காக” கூட்டிச் சேர்த்தல்( எரேமியா 3:14). என்ன செய்வது என்றும் அல்லது சொல்வது என்றும் உங்களுக்குத் தெரியாவிட்டாலும், “பயப்படாதே…; நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்”( எரேமியா 1:8,19).
எரேமியா புத்தகத்தின் மேலோட்டமான பார்வைக்கு, “Jeremiah” in the Bible Dictionary பார்க்கவும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
எரேமியா 1:4-19; 7:1-7; 20:8-9
கர்த்தருடைய வார்த்தையை பேச தீர்க்கதரிசிகள் அழைக்கப்படுகிறார்கள்.
தீர்க்கதரிசிகளைப் பற்றி கேள்விப்படாத நண்பர் ஒருவருடன் நீங்கள் பேசிகொண்டு இருக்கும்போது, எரேமியா 1:4–19இல் தீர்க்கதரிசியாக இருக்க எரேமியாவின் அழைப்பைப் பயன்படுத்தி கருத்தை விளக்க முடிவு செய்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். தேவனுடைய தீர்க்கதரிசிகளைப் பற்றி போதிக்கிற இந்த வசனங்களில் நீங்கள் எதை காண்கிறீர்கள்? நீங்கள் எரேமியா 7:1–7; 20:8–9ஐயும், “We Listen to a Prophet’s Voice” (Hymns, no. 22) போன்ற ஒரு பாடலையும் பார்க்கலாம்.
இன்று ஜீவிக்கிற தீர்க்கதரிசியைப் பற்றியும் உங்கள் நண்பருக்கு கற்பிக்க நீங்கள் விரும்பலாம். இந்த வசனங்களில் உதவக்கூடிய ஏதேனும் இருக்கிறதா? உதாரணமாக, நம் நாளில் தீர்க்கதரிசிகள் எதை “பிடுங்கவோ“ அல்லது “இடிக்கவோ“ செய்கிறார்கள்? அவர்கள் எதை “கட்டவும்“ “நாட்டவும்“ செய்கிறார்கள்? எரேமியா 1:10. நம்முடைய ஜீவிக்கிற தீர்க்கதரிசி தேவனால் அழைக்கப்பட்டவர் என்பதை நீங்கள் எப்படி அறிந்துகொண்டீர்கள்?
விசுவாசப் பிரமாணங்கள் 1:6, 9; “Why Do We Have Prophets?” (video), ChurchofJesusChrist.org.பார்க்கவும்.
Why Do We Have Prophets?
எரேமியா 1:5
நான் பிறப்பதற்கு முன்பே தேவன் என்னை அறிந்துவைத்திருக்கிறார்.
எரேமியா 1: 5இல் எரேமியா தன்னைப் பற்றி என்ன கற்றுக்கொண்டான்? புதிதாக அழைக்கப்பட்ட தீர்க்கதரிசியாக அந்தத் தகவலை அவன் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்?
எரேமியா 1:5இல் தன்னைப் பற்றி கற்றுக்கொண்டவற்றில் பெரும்பாலானவை உங்களைப் பற்றியும் உண்மையாக இருக்கின்றன. நீங்கள் பிறப்பதற்கு முன்பே தேவன் உங்களை அறிந்துவைத்திருந்து குறிப்பிட்ட பொறுப்புகளுக்கு உங்களை தயார்படுத்தினார். நீங்கள் பிறப்பதற்கு முன் உங்கள் வாழ்க்கையைப் பற்றி மேலும் அறிய ஆல்மா 13:1–4; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:53–56; மற்றும் ஆபிரகாம் 3:22–23ஐ படியுங்கள். நீங்கள் கண்டறிந்த உண்மைகளை பட்டியலிடலாம். இந்த காரியங்களை அறிந்துகொள்வது உங்களுக்கு ஏன் முக்கியமானதாக இருக்கிறது?
இந்த சத்தியங்கள் மூப்பர் அஹ்மத் எஸ். கார்பிட்டின் வாழ்க்கையை எவ்வாறு பாதித்தன என்பதைப் பற்றி அறிய, “நீங்கள் இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க முடியும்!” என்ற அவருடைய செய்தியைப் படிக்கவும். (லியஹோனா மே 2021, 63-63). நம்முடைய அநித்தியத்துக்கு முந்தைய வாழ்க்கையைப்பற்றி அறிந்துகொள்வது, நம்முடைய உலக வாழ்க்கையை எவ்வாறு தாக்கமுண்டாக்கும்?
உங்கள் அநித்தியத்திற்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றி தலைவர் ரசல் எம். நெல்சன் கூறியதாவது:
“உனது பரலோக பிதா உன்னை அநேக காலமாக அறிந்திருக்கிறார் இந்த ஏற்ற காலத்தில் பூமிக்கு வந்து, தரணியில் அவருடைய மகத்தான கிரியையில் ஒரு தலைவராகும்படி நீ அவருடைய மகனாக, அல்லது மகளாக தேர்ந்தெடுக்கப்பட்டாய். உன்னுடைய தேக அம்சங்களுக்காக அல்ல, தைரியம், மனோபலம், சுத்த இருதயம், உண்மைவிரும்பி, ஞானவாஞ்சை, பிறருக்கு சேவை செய்யும் மனப்பான்மை போன்ற உனதுஆவிக்குரிய பண்புகளுக்காக நீ தேர்ந்தெடுக்கப்பட்டாய்.
இக்குணாதிசயங்களில் சிலவற்றை அநித்தியத்திற்கு முந்தைய வாழ்க்கையில் மேம்படுத்தினாய். மற்றவைகளை நீ விடாமுற்சியோடு தேடும்போது பூலோகத்தில் அவைகளை மேம்படுத்தலாம்” (“Decisions for Eternity,” Liahona, Nov. 2013, 107).
உங்கள் அநித்தியத்திற்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றிய இந்த உண்மைகளை நினைவில் கொள்வது நீங்கள் சந்திக்கும் எந்த சூழ்நிலைகளில் முக்கியமானதாக இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். இந்த உண்மைகளை நினைவுபடுத்த நீங்கள் என்ன செய்யலாம்?
ரசல் எம். நெல்சன், “Decisions for Eternity,” Liahona, Nov. 2013, 106–9; Topics and Questions, “Foreordination,” “Premortal Life,” Gospel Libraryஐ பார்க்கவும்.
எரேமியா 2:13இல், கர்த்தர் ஜனங்களின் ஆவிக்குரிய நிலையை “உடைந்த தொட்டிகளுக்கு“ ஒப்பிட்டு, “ஜீவத் தண்ணீரின் ஊற்றுக்கு” தம்மை ஒப்பிட்டார்.
எரேமியா 2; 7
“அவர்கள் ஜீவ தண்ணீரின் ஊற்றாகிய என்னை கைவிட்டுவிட்டார்கள்.”
இஸ்ரவேலர் வாழ்ந்த வறண்ட பிராந்தியத்தில், ஜனங்கள் விலைமதிப்பற்ற நீரை தொட்டிகள் என்றழைக்கப்பட்ட நிலத்தடி நீர்த்தேக்கங்களில் சேமித்து வைத்தனர். எரேமியா 2:13இல் குறிப்பிடப்பட்டுள்ள “உடைந்த தொட்டிகள்” எதைக் குறிக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒரு நீரூற்றில் இருந்து தண்ணீரைப் பெறுவது ஏன் ஒரு தொட்டியை நம்பியிருப்பதை காட்டிலும் சிறந்தது? “ஜீவ தண்ணீரின் ஊற்றை” கைவிடுவது என்பதன் அர்த்தம் என்ன? நீங்கள் எரேமியா 2மற்றும் 7ஐ படிக்கும்போது, ஜனங்கள் எவ்வாறு கர்த்தருடைய ஜீவத் தண்ணீரை விட்டுவிலகுகிறார்கள் என்பதைக் கவனியுங்கள் (உதாரணமாக, எரேமியா 2:26–28; 7:2–11ஐ பார்க்கவும்). இரட்சகர் உங்களுக்குக் கொடுப்பதற்கு ஏன் “ஜீவத் தண்ணீர்“ ஒரு நல்ல அடையாளமாக இருக்கிறது? நீங்கள் எப்படி ஜீவத் தண்ணீரைப் பெறுகிறீர்கள் என்று சிந்தியுங்கள்.
எரேமியா 7 “கர்த்தருடைய வீட்டிற்குள்…கர்த்தரை ஆராதிப்பதற்காக“ பிரவேசித்தவர்களை நோக்கிக் குறிப்பிடப்படுகிறது, ஆனால் அவர்களின் செயல்கள் அவர்களின் வெளிப்புற பக்தியுடன் பொருந்தவில்லை (வசனங்கள் 2–11ஐ பார்க்கவும்). வசனங்கள் 21–23இல் கர்த்தர் உங்களுக்கு என்ன செய்திகளை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?
பொருள்சார் பாடங்களைப் பயன்படுத்தவும். கர்த்தரின் தீர்க்கதரிசிகள் பெரும்பாலும் ஆவிக்குரிய சத்தியங்களை பரிச்சயமானவைகளுடன் ஒப்பிடுகிறார்கள். நீங்கள் சுவிசேஷத்தைக் கற்றுக்கொண்டு போதிக்கும் போது அப்படியே செய்ய எண்ணலாம். உதாரணமாக, எரேமியா 2:13ஐ கற்பனை செய்து பார்க்க, இடிந்த அல்லது உடைந்த கொள்கலனில் தண்ணீரை வைக்கலாம். இல்லாவிடில் குடிநீர் நீரூற்றில் இருந்து குடிக்கலாம். இயேசு எப்படி “ஜீவத்தண்ணீர் ஊற்றாக” இருக்கிறார்? எரேமியா 2:13. கர்த்தருடைய ஜீவதண்ணீர் ஊற்றிலிருந்து நாம் எவ்வாறு குடிப்போம்?
எரேமியா 3:14–18; 16:14–21
கர்த்தர் தம் ஜனத்தைக் கூட்டிச்சேர்ப்பார்.
எரேமியா 16:14–15இல், பிந்தைய நாட்களில் இஸ்ரவேலின் கூடுகையை எகிப்திலிருந்து இஸ்ரவேலின் வெளியேற்றத்துடன் எரேமியா ஒப்பிட்டான். உங்கள் கருத்துப்படி, வெளியேற்றத்தைக் காட்டிலும் கூடுவது ஏன் தேவனுடைய ஜனத்திற்கு மிக முக்கியமானதாக இருக்கும்?
அந்தக் கூடுகை எவ்வாறு நிகழ்கிறது என்பதைப்பற்றி எரேமியா 3:14–18; 16:14–21 என்ன கூறுகின்றன?
“இஸ்ரவேலின் நம்பிக்கை“, என்ற தனது செய்தியில், தலைவர் ரசல் எம். நெல்சன், எரேமியாவைப்போலவே, இஸ்ரவேலின் கூடுகை “இன்று பூமியில் நடைபெறும் மிக முக்கியமான விஷயம்“ என்று கற்பித்தார் (worldwide youth devotional, June 3, 2018, Gospel Library). அவருடைய செய்தியைப் படிக்கவோ அல்லது கேட்கவோ செய்து, (அ) தலைவர் நெல்சன் இஸ்ரவேலின் கூட்டத்தை எவ்வாறு வரையறுக்கிறார் என்றும், (ஆ) அதன் முக்கியத்துவத்தை அவர் எவ்வாறு விவரிக்கிறார் என்றும், (இ) இந்த கூடுகையில் நீங்கள் எப்படி பங்களிக்கமுடியும் என்றும் உங்களால் கண்டெடுக்க முடியுமா என்பதைப் பார்க்கவும்.
கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
எரேமியா 1:5
நான் பிறப்பதற்கு முன்பே பரலோக பிதா என்னை அறிந்திருந்தார்.
-
எரேமியா 1:5இல் கற்பிக்கப்படும் முக்கியமான சத்தியத்தை அறிமுகப்படுத்த, உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு குழந்தையின் படத்தைக் காட்டலாம் (அல்லது, முடிந்தால், உங்கள் பிள்ளைகள் குழந்தைகளாக இருந்தபோது அவர்களின் படங்களைப் பார்க்கலாம்). உங்கள் பிள்ளைகள் பிறப்பதற்கு முன் அவர்கள் எங்கு வாழ்ந்தார்கள் என்று அவர்களுக்குத் தெரியுமா என்று கேளுங்கள். “I Lived in Heaven” (Children’s Songbook, 4) போன்ற நமது அநித்தியத்திற்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றி கற்பிக்கும் பாடலையும் நீங்கள் ஒன்றாகப் பாடலாம்.
-
உங்கள் பிள்ளைகள் மேலும் கற்றுக்கொள்ள விரும்பினால், வேதவாக்கியங்களுக்கான வழிகாட்டியில் “Premortal Life” கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவலாம். அநித்தியத்திற்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளான “யார்,“ “எப்போது“ மற்றும் “என்ன“ என்பவைகளுக்கான பதில்களை அவர்கள் தேடலாம்.
எரேமியா 1:4-19
கர்த்தருடைய வார்த்தையை பேச தீர்க்கதரிசிகள் அழைக்கப்படுகிறார்கள்.
-
வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜீவிக்கிற தீர்க்கதரிசி அல்லது தீர்க்கதரிசிகளின் படங்களைக் காண்பிக்க எண்ணுங்கள் (சிலவற்றை சபை இதழ்கள், சுவிசேஷ கலை புத்தகம், மற்றும் என்னைப் பின்பற்றி வாருங்கள்) ஆகியவைகளில் காணலாம். இந்த தீர்க்கதரிசிகளைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்கு என்ன தெரியும் என்று கேளுங்கள்.
-
தீர்க்கதரிசிகள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி கற்பிக்க, எரேமியா 1 வசனங்கள் 5, 7, 10, மற்றும் 19 போன்ற சில பயனுள்ள வசனங்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரும் வசனங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதைப் படித்து, தீர்க்கதரிசிகளைப் பற்றி தாங்கள் கற்றுக் கொள்ளும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
எரேமியா 16:14–16
பரலோக பிதாவின் பிள்ளைகள் அவரிடம் திரும்பி வர நான் உதவ முடியும்.
-
நீங்கள் எரேமியா 16:16ஐ வாசிக்கும்போது, உங்கள் பிள்ளைகள் அறையைச் சுற்றியுள்ள பொருட்களை “மீன்பிடிப்பது“ அல்லது “வேட்டையாடுவது“ போல் பாசாங்கு செய்யலாம். தலைவர் ரசல் எம் நெல்சன் இந்த வசனத்தில் உள்ள மீனவர்களையும் வேட்டைக்காரர்களையும் ஊழியக்காரர்களுடன் ஒப்பிட்டுள்ளார் (“The Gathering of Scattered Israel,” Liahona , Nov. 2006, 81 பார்க்கவும்). ஊழியக்காரர்கள் என்ன செய்கிறார்கள்? சிதறடிக்கப்பட்ட இஸ்ரவேலை நாம் எப்படி மீன் பிடிப்பது போல பிடிக்கவும், வேட்டையாடுவது போல வேட்டையாடவும் முடியும்? (“A Message for Children from President Russell M. Nelson” [video], ChurchofJesusChrist.org பார்க்கவும்).
3:30Video: A Message for Children from President Russell M. Nelson
எரேமியா 18:1-6
குயவன் களிமண்ணை வடிவமைப்பது போல, கர்த்தர் என் வாழ்க்கையை வழிநடத்த அனுமதிக்க முடியும்.
-
இந்த வசனங்களை ஆராய, மட்பாண்டங்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் விவாதிக்கலாம் அல்லது காட்டலாம் (இந்த சுருக்கத்தின் முடிவில் உள்ள படத்தைப் பார்க்கவும்). எரேமியா 18:1–6இல் கர்த்தர் நமக்கு என்ன செய்தியைக் கூறுகிறார்? கர்த்தருடைய கைகளில் களிமண்ணாக இருப்பதன் அர்த்தம் என்ன? ( ஏசாயா 64: 8 பார்க்கவும்). குயவனின் களிமண்ணுடன் நம்மை ஒப்பிடும் மற்றொரு கதைக்கு, மூப்பர் ரிச்சர்ட் ஜே. மேனஸின் செய்தியைப் பார்க்கவும் ““The Joy of Living a Christ-Centered Life” (Liahona, Nov. 2015, 27–30).
கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.