என்னைப் பின்பற்றி வாருங்கள்
அக்டோபர் 5-11. “அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்” ஏசாயா 50-57


“அக்டோபர் 5-11. ‘அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்’: ஏசாயா 50-57,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)

“அக்டோபர் 5-11. ‘அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்’: என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026

இயேசு முட்கிரீடத்தை அணிந்திருத்தல்

கிறிஸ்து கேலி செய்யப்படுதல்–கார்ல் ஹெய்ன்ரிச் ப்ளாக்

ஏசாயா 5-11: “அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்”

ஏசாயா 50–57

தனது ஊழியம் முழுவதும், ஏசாயா ஒரு பலத்த விடுவிப்பவரைப்பற்றி பேசினான். இந்த தீர்க்கதரிசனங்கள் பல நூற்றாண்டுகள் கழித்து பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்டிருந்தபோது விசேஷமாக இஸ்ரவேலர்களுக்கு விலைமதிப்பற்றதாக இருந்திருக்கும். பாபிலோனின் சுவர்களை இடிக்கக்கூடிய ஒருவர் உண்மையில் ஒரு வலிமையான ஜெயம்கொள்பவராக இருப்பார். அதிகாரம் 52–53 இல் ஏசாயா விவரித்த மேசியா அப்படிப்பட்டவராக இல்லை: “அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அனுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம். … நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்” (ஏசாயா 53:3–4).

அத்தகைய எதிர்பாராத விடுவிப்பவரை அனுப்புவதன் மூலம், உண்மையான விடுதலையைப்பற்றி தேவன் நமக்குக் கற்பித்தார். ஒடுக்கப்படுவதிலிருந்தும் உபத்திரவத்திலுமிருந்தும் நம்மைக் காப்பாற்ற, “ ஒடுக்கப்பட்ட, உபத்திரவப்பட்ட ” ஒருவரை தேவன் அனுப்பினார். சிலர் சிங்கத்தை எதிர்பார்த்த இடத்தில், அவர் ஒரு ஆட்டுக்குட்டியை அனுப்பினார் ( ஏசாயா 53: 7 பார்க்கவும்). நிச்சயமாக, தேவனின் வழிகள் நம் வழிகள் அல்ல (ஏசாயா 55: 8–9 பார்க்கவும்). இயேசு கிறிஸ்து சிறையைத் திறப்பதன் மூலம் மட்டுமல்ல, அங்கே நம்முடைய இடத்தைப் பெறுவதன் மூலமும் நம்மை விடுவிக்கிறார். துயரத்தின் மற்றும் துக்கத்தின் சங்கிலிகளிலிருந்து அவர் நம்மை விடுவித்து அவற்றை தம்மீது தாங்கிக் கொள்கிறார் (ஏசாயா 53: 4–5,12பார்க்கவும்). அவர் நம்மை தூரத்திலிருந்து காப்பாற்றுவதில்லை. “நித்திய கிருபையுடன்” கூடிய செயலில் “உன்னைவிட்டு விலகாமலும்” நம்முடன் அவர் பாடனுபவிக்கிறார் (ஏசாயா 54:8,10).

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

ஏசாயா 50–52

கர்த்தருடைய ஜனத்துக்கு எதிர்காலம் பிரகாசமாயிருக்கிறது.

இஸ்ரவேலர் பல ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்டிருந்தாலும், அந்த சிறைப்பிடிப்பு அவர்களின் சொந்த மோசமான தேர்ந்தெடுப்புகளின் விளைவாக இருந்தாலும், அவர்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்க வேண்டும் என்று கர்த்தர் விரும்பினார். உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிற எதை நீங்கள் ஏசாயாவின் செய்தியில் காண்கிறீர்கள்? இது போன்ற அட்டவணை நீங்கள் படிக்க உதவக்கூடும்:

தேவனை பற்றி நான் என்ன கற்றுக்கொள்கிறேன் (உதாரணமாக, ஏசாயா 50:2, 5–9; 51:3–8, 15–16; 52:3, 9–10 பார்க்கவும்)

நம்பிக்கையின் செய்திகள் (உதாரணமாக, ஏசாயா 50:9; 51:3–5, 11–12, 22–23; 52:9–10 பார்க்கவும்).

நம்பிக்கையை நனவாக்க நான் என்ன செய்ய முடியும் (உதாரணமாக, ஏசாயா 50:10; 51:1–2, 6–9; 52:1–3, 9–11)

மோசியா 12:20–24; 15:13–18; 3 நேபி 20:29–46; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 113:7–10; ரசல் எம். நெல்சன், “எதிர் காலத்தை விசுவாசத்துடன் தழுவிக்கொள்ளுங்கள்,” லியஹோனா, நவ் 2020, 73–76ஐ பார்க்கவும்.

இயேசு ஒரு சிலுவையை சுமந்திருத்தல்

அன்பினிமித்தமாக– ஏஞ்சலா ஜான்சன்

இயேசு கிறிஸ்துவண்டை வர கற்பவர்களுக்கு உதவுங்கள் பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் அறிந்துகொள்ளவும் அவர்களுடைய அன்பை உணர்த்துக்கொள்ளவும் கற்பவர்களுக்கு நீங்கள் ஆசிரியராக செய்யும் உதவியால் வரும் ஆசீர்வாதம் உச்சிதம். (Teaching in the Savior’s Way8). ஏசாயா 50–57ஐ மற்றவர்களுக்குக் கற்பிக்க நீங்கள் ஆயத்தமாகும்போது,​​இஸ்ரவேலின் சவால்களுக்கும், ஏசாயாவை குறித்த கிறிஸ்துவின் தீர்க்கதரிசனங்களுக்கும் அவர்களின் சொந்தப் போராட்டங்களில் தெய்வீக உதவியைப் பெறுதலுக்கும் இடையேயான தொடர்பைக் காண நீங்கள் அவர்களுக்கு எப்படி உதவலாம் என்பதைக் கவனியுங்கள்.

ஏசாயா 53.

வேத பாட வகுப்பு சின்னம்
என்னுடைய பாவங்களையும், துக்கங்களையும், இயேசு கிறிஸ்துவே தம்மீது எடுத்துக்கொண்டார்.

இயேசு கிறிஸ்துவின் மீட்பின் ஊழியத்தை ஏசாயா 53ஐ விட அழகாக வேதத்தில் சில அதிகாரங்களே விவரிக்கின்றன. இந்த வல்லமை வாய்ந்த போதனைகளை நன்கு புரிந்துகொண்டு செயல்படுத்துவதற்கு இது போன்ற நிகழ்ச்சிகளைக் கவனியுங்கள்:

  • கதைகளும் திரைப்படங்களும் மக்களைக் காப்பாற்றும் கதாநாயகர்களை பெரும்பாலும் எவ்வாறு சித்தரிக்கின்றன என்பதை சிந்தியுங்கள் அல்லது விவாதியுங்கள். அந்த சித்தரிப்புகளை நீங்கள் ஏசாயா 53இல் வாசித்து, இரட்சகரின் விளக்கங்களுடன் ஒப்பிடலாம்.

  • ஒவ்வொரு வசனத்தையும் படித்தவுடன், “துக்கங்கள்,” “துயரங்கள்” மற்றும் “மீறல்கள்” எல்லா ஜனத்துக்கும் குறிப்பாக உங்களுக்காகவும், இரட்சகர் பாடனுபவித்ததை சிந்திக்க இடைநிறுத்துங்கள். நீங்கள் வாசிக்கும்போது “நாங்கள்” மற்றும் “எங்கள்” போன்ற சொற்களை “நான்” மற்றும் “என்” என்று மாற்றலாம். இந்த வசனங்கள் உங்களுக்கு என்ன உணர்வுகள் அல்லது எண்ணங்களை உணர்த்துகின்றன?

  • “My Kingdom Is Not of This World” (சுவிசேஷ நூலகம்) காணொலியையும் நீங்கள் பார்க்கவும், மற்றும் ஏசாயா 53இல் உள்ள தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறின என்பதைப்பற்றி யோசிக்கவும் எண்ணுங்கள். இரட்சகர் நமக்காக சுமக்கும் சில துக்கங்களும் துயரங்களும் யாவை?

    5:25

    My Kingdom Is Not of This World

  • இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியைச் சுற்றியுள்ள நிகழ்வுகளின் படங்களைக் கண்டறியவும் (Gospel Art Book, nos. 56-60ஐ பார்க்கவும்). பின்பு ஏசாயா 53இல் உள்ள படங்களில் உள்ள நிகழ்வுகளை விவரிக்கும் சொற்றொடர்களைக் காணலாம். இந்தப் போதனைகள் உங்களை என்ன செய்யத் தூண்டுகின்றன?

Behold the Great Redeemer Die,” Hymns, no. 191. ஐயும் பார்க்கவும்

ஏசாயா 54; 57:15-19.

நான் அவரிடம் திரும்ப வேண்டும் என்று இயேசு கிறிஸ்து விரும்புகிறார்.

நம்முடைய பாவங்கள் அல்லது பலவீனங்களால் நாம் அனைவரும் கர்த்தரிடமிருந்து தொலைவில் இருப்பதாக உணரும் காலங்கள் உண்டு. அவர் தங்களை எப்போதும் மன்னிப்பார் என்ற நம்பிக்கை சிலருக்கு விட்டொழிந்தது. அதுபோன்ற காலங்களில் உறுதியளிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் ஏசாயா 54 மற்றும் 57 படிக்க சிறந்த அதிகாரங்கள் ஆகும். குறிப்பாக ஏசாயா 54:4–10; 57:15–19இல், உங்களைப்பற்றி இரட்சகர் எப்படி உணர்கிறார் என்று எந்த வார்த்தைகள் உங்களுக்கு போதிக்கின்றன? அவரைப்பற்றிய இந்த விஷயங்களை அறிந்து கொள்வது உங்கள் வாழ்க்கையில் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது?

மூப்பர் டியட்டர் எப். உக்டர்ப் போதித்தார்:

நம்முடைய வாழ்க்கை எவ்வளவு சீர்கெட்டு போயிருந்ததாக தென்பட்டாலும் பரவாயில்லை. நம்முடைய பாவங்கள் எவ்வளவு கருஞ்சிவப்பாயோ நம்முடைய காழ்ப்புணர்ச்சி எவ்வளவு கசப்பாயோ, நம்முடைய இருதயங்கள் எவ்வளவு தனிமையாகவோ, கைவிடப்பட்டதாகவோ, நொறுங்குண்டதாகவோ இருப்பினும் பரவாயில்லை. நம்பிக்கை இல்லாமல், மனமுறிவில் வாழ்கிறவர்கள், நம்பிக்கை துரோகம் செய்தவர்கள், தங்கள் உத்தமத்தைப் பறிகொடுத்தவர்கள் அல்லது தேவனிடத்திலிருந்து திரும்பிப்போனவர்கள் ஆகியோரும் கூட மீண்டும் கட்டியெழுப்பப்படலாம். …

“சுவிசேஷத்தின் சந்தோஷமான செய்தி இதுவே: நமது அன்பான பரலோக பிதா வழங்கிய நித்திய மகிழ்ச்சியின் திட்டத்தின் காரணமாகவும், இயேசு கிறிஸ்துவின் எல்லையற்ற தியாகத்தின் மூலமாகவும், நாம் நமது வீழ்ச்சியிலிருந்து மீட்கப்பட்டு தூய்மைக்கு மறுபடியும் சேர்க்கப்படுவது மட்டுமல்லாமல் இம்மைக்குரிய கற்பனையையும் கடந்து நித்திய ஜீவனின் சுதந்திரவாளிகளாகவும், தேவனின் விவரிக்க முடியாத மகிமையில் பங்குதாரர்களாகவும் மாறமுடியும்.“ “He Will Place You on His Shoulders and Carry You Home,“ Liahona, May 2016, 102).

பாட்ரிக் கியரோன், “உங்களை வீட்டிற்கு அழைத்து வருவதே தேவனின் நோக்கம்,” லியஹோனா, மே 2024, 87–89ஐ பார்க்கவும்.

ஏசாயா 55–56

“என் உடன்படிக்கையைப் பிடித்துக்கொள்ள” கர்த்தர் அனைவரையும் அழைக்கிறார்.

பல தலைமுறைகளாக, இஸ்ரவேலர் தேவனின் உடன்படிக்கை ஜனங்களாக அடையாளம் காணப்பட்டார்கள். இருப்பினும், தேவனின் திட்டம் எப்போதுமே ஒரு தேசத்தை விட அதிகமாக உள்ளடக்கியதாகவே உள்ளது, ஏனென்றால் “தாகமாக இருக்கும் ஒவ்வொருவரும்” “தண்ணீரண்டை வாருங்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள் (ஏசாயா 55:1). ஏசாயா 55 மற்றும் 56ஐ வாசிக்கும்போது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மேலும் தேவஜனம் என்பதன் அர்த்தம் என்ன என்பதை சிந்தித்துப் பாருங்கள். தேவனிடமிருந்து “முற்றிலும் பிரிந்துவிட்டதாக” உணருபவர்களுக்கு அவருடைய செய்தி என்ன? (ஏசாயா 56:3). “என் உடன்படிக்கையைப் பிடித்துக் கொள்பவர்களின்” மனநிலைகளையும் செயல்களையும் விவரிக்கும் வசனங்களைக் குறிப்பதைக் கருத்தில் கொள்ளவும்( ஏசாயா 56:4–7 பார்க்கவும்).

கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.

பிள்ளைகள் பகுதி சின்னம்

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

ஏசாயா 51-52

“[என்னுடைய] பெலன்கொள்” என்று கர்த்தர் என்னை அழைக்கிறார்.

  • ஏசாயா 51:9, 17; 52:1–2, 9இல் உள்ள “எழும்பு,” “எழுந்துநில்,” மற்றும் “உன் பெலன்கொள் ”போன்ற சொற்றொடர்களைக் கண்டறிவது உங்கள் பிள்ளைகளுக்கு வேடிக்கையாக இருக்கலாம், பின்னர் அந்த சொற்றொடர்களை செயல்படுத்தவும். அப்படிச் செய்த பிறகு, ஆவிக்குரியவகையில் “எழும்பு,” “எழுந்துநில்,” மற்றும் “உன் பெலன்கொள் ” என்றால் என்ன என்பதைப் பற்றி நீங்கள் பேசலாம். இந்த வசனத்தில் நாம் செய்யும்படியாக கர்த்தர் நம்மிடம் என்ன கேட்கிறார்?

  • உங்கள் பிள்ளைகள் ஏசாயா 51:1, 4, 7ஐ படித்து, கர்த்தர் யாரிடம் பேசுகிறார் என்றும் அவர்கள் என்ன செய்ய அவர் விரும்புகிறார் என்றும் அடையாளம் காண முடியும். நாம் கர்த்தருக்கு “செவிசாய்க்கிறோம்“ என்பதின் அர்த்தம் என்ன? நாம் கர்த்தருக்கு “செவிசாய்க்கிறோம்“ என்பதை எவ்வாறு காட்டலாம்?

ஏசாயா 53:3-9

இயேசு கிறிஸ்துவே தம்மீது என்னுடைய பாவங்களையும், துக்கங்களையும், எடுத்துக்கொண்டார்.

  • நீங்களும் உங்கள் பிள்ளைகளும் இயேசு கிறிஸ்துவின் துன்பம் மற்றும் மரணத்தைக் காட்டும் பல படங்களைப் பார்க்கலாம் (உதாரணமாக, Gospel Art Book, nos. 56, 5758 பார்க்கவும்). பிறகு நீங்கள் ஏசாயா 53:3–6, 9ஐ ஒன்றாகப் படித்து, படங்களில் என்ன நடக்கிறது என்பதை விவரிக்கும் வார்த்தைகளைத் தேடலாம். ஏசாயா இந்த சத்தியங்கள் சம்பவிக்கும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பகிர்ந்துள்ளார் என்பதை உங்கள் பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவுங்கள். இந்த விஷயங்களை ஜனங்கள் பல வருடங்களுக்கு முன்பே தெரிந்து கொள்வது ஏன் முக்கியம்? (ஆல்மா 39:15–19 பார்க்கவும்).

  • ஏசாயா 53:4இல் “அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்” என்று படித்த பிறகு, உங்கள் பிள்ளைகள் ஒரு கனமான பொருளைத் தூக்க முயற்சி செய்யலாம் (அல்லது ஒன்றைத் தூக்குவது போல் நடிக்கலாம்). “துக்கமோ “துயரமோ“ அல்லது “சோகமோ“ எவ்வாறு கனமாகவும் சுமக்க கடினமாகவும் இருக்கும் என்பதைப் பற்றி பேசுங்கள். நம்முடைய “துக்கங்களை,” “துயரங்களை,” “அக்கிரமங்களையோ” அல்லது பாவங்களையோ இயேசு ஏன் சுமந்தார்? (ஆல்மா 7:11–12ஐ பார்க்கவும்).

பிள்ளைகளுடன் இயேசு கிறிஸ்து

ஏசாயா 55:6

நான் கர்த்தரை தேடி அவரை அழைக்க முடியும்.

  • ஏசாயா 55:6ஐ பற்றி உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க, நீங்கள் இயேசுவின் படத்தை அறையில் எங்காவது மறைத்து வைக்கலாம். படத்தைக் கண்டுபிடிக்க உங்கள் பிள்ளைகளை அழைக்கலாம், அவர்கள் “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேட“ ஒரு வழியை காண்பிக்கவும். “Seek the Lord Early“ (Children’s Songbook, 108) போன்ற பாடல் அவர்களுக்கு யோசனைகளை கொடுக்கக்கூடும். பிறகு, பிள்ளைகளில் ஒருவர் படத்தை மறைத்து, செயல்பாட்டை மீண்டும் செய்ய அனுமதிக்கலாம்.

ஏசாயா 55:8-9

கர்த்தருடைய வழிகள் என்னுடைய வழிகளைவிட உயர்ந்திருக்கிறது.

  • ஏசாயா 55:9ஐ படித்த பிறகு, உங்கள் பிள்ளைகள் முக்காலியின் மேல் நின்றுகொண்டு, நீங்கள் “உயர்ந்து” இருக்கும்போது பார்ப்பவை எப்படி வித்தியாசமாக இருக்கிறது என்பதைப் பற்றி பேசுவது அவர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். அல்லது ஏசாயா 55:9இல் அவர்களுக்குப் புரிந்ததை அவர்கள் ஒரு படமாக வரையலாம். நம்முடைய வழிகளை விட உயர்ந்த தேவனின் சில வழிகளை நீங்கள் விவாதிக்கலாம். உதாரணமாக, பாவிகளை அவர் நடத்தும் விதம் என்ன? (மாற்கு 2:15–17 பார்க்கவும்). மற்றவர்களை வழிநடத்தும் அவருடைய வழி என்ன?( மத்தேயு 20:25–28 பார்க்கவும்). தேவனின் உயர்ந்த வழிகளையும் எண்ணங்களையும் எப்படி நம்பக் கற்றுக்கொண்டீர்கள் என்பதை உங்கள் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

இயேசுவின் சித்திரம்

அவரின் ஒளி – மைக்கேல் மால்ம்

ஆரம்ப வகுப்பு நிகழ்ச்சி பக்கம்: நான் கர்த்தரை தேடி அவரை கூப்பிடமுடியும்