கையேடுகளும் அழைப்புகளும்
29. சபையில் கூட்டங்கள்


“29. சபையில் கூட்டங்கள்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“29. சபையில் கூட்டங்கள்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை

திருவிருந்துக் கூட்டத்தில் தாயும் மகளும்

29.

சபையில் கூட்டங்கள்

29.0

முன்னுரை

ஆராதிக்கவும், ஒருவரையொருவர் மேம்படுத்தவும், சுவிசேஷத்தைக் கற்பிக்கவும் கற்கவும் பிற்காலப் பரிசுத்தவான்கள் ஒன்று கூடுகிறார்கள் ( ஆல்மா 6:6; மரோனி 6:5–6 பார்க்கவும்). “இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” (மத்தேயு 18:20) என இரட்சகர் வாக்களித்தார் ஒன்றாகச் சந்திப்பது நம் இருதயங்கள் “ ஒன்றாய் பின்னப்பட்டு, ஒருவருக்கொருவர் அன்பாயிருக்க,” ஒரு வழியாகும் (மோசியா 18:21).

இருப்பினும், ஒரு கூட்டத்தை நடத்துவது ஒருபோதும் இயேசு கிறிஸ்து செய்ததைப் போல சேவை செய்வதையும் ஊழியத்தையும் மாற்றக்கூடாது.

29.1

கூட்டங்களை திட்டமிடுதலும் நடப்பித்தலும்

“தேவனின் கட்டளைகள் மற்றும் வெளிப்பாடுகளின்படி அவர்கள் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டு” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:45; மரோனி 6:9; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 46:2 ஐயும் பார்க்கவும்) தலைவர்கள் கூட்டங்களைத் திட்டமிட்டு நடத்துகிறார்கள். அவர்கள் தங்கள் கூட்டங்களில் பரிசுத்த ஆவியின் செல்வாக்கை அழைப்பதற்கான வழிகளைத் தேடுகிறார்கள்.

கூட்டங்களின் எண்ணிக்கை மற்றும் கால அளவு உறுப்பினர்களுக்கு அல்லது அவர்களது குடும்பங்களுக்கு சுமைகளை உருவாக்காமல் இருப்பதை தலைவர்கள் உறுதி செய்கிறார்கள்.

29.2

தொகுதி கூட்டங்கள்

29.2.1

திருவிருந்துக் கூட்டம்

29.2.1.1

திருவிருந்துக் கூட்டத்தை திட்டமிடுதல்

ஆயம் திருவிருந்துக் கூட்டத்தை திட்டமிட்டு நடத்துகிறது. கூட்டத்தின் கவனம் திருவிருந்திலும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை வளர்ப்பதிலும் இருப்பதை அவர்கள் உறுதி செய்கிறார்கள்.

திருவிருந்துக் கூட்டம் ஒரு மணி நேரம் நீடிக்கும். இது பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்:

  1. முன்னிசை (வழிகாட்டுதல்களுக்கு 19.3.2 பார்க்கவும்).

  2. வாழ்த்துதல்களும் வரவேற்பும்.

  3. வருகை தரும் தலைமை அதிகாரிகள் அல்லது பிற தலைவர்களை அங்கீகரித்தல்.

  4. அறிவிப்புகள். இவை குறைந்தபட்சமாக வைக்கப்பட வேண்டும்.

  5. ஆரம்ப துதிப் பாடலும் ஜெபமும் 19.3.2 மற்றும் 29.6 பார்க்கவும்

  6. பின்வருபவை போன்ற தொகுதி மற்றும் பிணைய விவகாரம்:

    • அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை ஆதரித்தல் மற்றும் விடுவித்தல் (30.3 மற்றும் 30.6 பார்க்கவும்).

    • ஆரோனிய ஆசாரியத்துவத்தில் ஒரு அலுவலுக்கு நியமிக்கப்பட வேண்டிய சகோதரர்களின் பெயர்களை முன்மொழிதல் (18.10.3 பார்க்கவும்).

    • சமீபத்தில் மனமாறியவர்கள் உட்பட புதிய தொகுதி உறுப்பினர்களை அங்கீகரித்தல்.

  7. பிள்ளைகளுக்குப் பெயரிடுதல் மற்றும் ஆசீர்வதித்தல் (18.6 பார்க்கவும்). இது பொதுவாக உபவாச மற்றும் சாட்சி கூட்டத்தில் செய்யப்படுகிறது (29.2.2 பார்க்கவும்).

  8. புதிய மனமாறியவர்களை திடப்படுத்துதல் (18.8 பார்க்கவும்).

  9. திருவிருந்தின் துதிப்பாடலும், திருவிருந்தை நிர்வகித்தலும். கூட்டத்தின் முக்கிய அம்சம் திருவிருந்தாகும். உறுப்பினர்கள் தங்கள் எண்ணங்களை இரட்சகரையும் அவர்களுக்காக அவர் தியாகத்தையும் நோக்கி செலுத்துவதற்காக இந்த நியமம் ஒரு வாய்ப்பாகும்.

    திருவிருந்தை ஆயத்தம் செய்தல், ஆசீர்வதித்தல் மற்றும் பரிமாறுதலைப்பற்றி மேலும் அறிய, 18.9 பார்க்கவும்.

  10. சுவிசேஷ செய்திகள் மற்றும் சபைப்பாடல் அல்லது பிற இசை.

  11. நிறைவு துதிப்பாடலும் ஜெபமும்.

  12. பின்னிசை

29.2.1.4

செய்தியாளர்களைத் தேர்ந்தெடுத்தல்

திருவிருந்துக் கூட்டத்திற்கு செய்தியாளர்களை ஆயம் தேர்ந்தெடுக்கிறது. பெரும்பாலும் அவர்கள் இளைஞர்கள் உட்பட தொகுதி உறுப்பினர்களை அழைக்கிறார்கள்.

செய்தியாளர்கள் இயேசு கிறிஸ்துவைக் குறித்து சாட்சியமளிக்கிறார்கள் மற்றும் வேதவசனங்களைப் பயன்படுத்தி அவருடைய சுவிசேஷத்தைப் போதிக்கிறார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:12; 52:9 பார்க்கவும்).

29.2.2

உபவாசம் மற்றும் சாட்சி கூட்டம்

உபவாசம் மற்றும் சாட்சிய கூட்டத்தில், நியமிக்கப்பட்ட செய்தியாளர்கள் அல்லது சிறப்பு இசைத் தேர்வு செய்யப்பட்டவை இல்லை. மாறாக, நடத்தும் நபர் ஒரு சுருக்கமான சாட்சியம் அளிக்கிறார். பின்னர் அவர் சபையின் உறுப்பினர்களை தங்கள் சாட்சியங்களை பகிர்ந்துகொள்ள அழைக்கிறார். சாட்சி பகிர்ந்து கொள்ளுவதென்பது பரிசுத்த ஆவியால் உணர்த்தப்பட்ட சுவிசேஷ சத்தியங்களை அறிவிப்பதாகும்.

29.2.3

தொகுதி மாநாடு

29.2.4

ஆயக் கூட்டம்

கருத்தில் கொள்ள வேண்டிய பின்வரும் காரியங்கள் அடங்கும்:

  • தொகுதியில் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியை ஒருங்கிணைத்தல்.

  • தொகுதியில் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை வலுப்படுத்துதல், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பிள்ளைகள்.

  • ஆசாரியத்துவ நியமங்கள் உட்பட, நியமங்களைப் பெற ஆயத்தமாகக்கூடிய உறுப்பினர்களை அடையாளம் காணுதல்.

  • தொகுதி பதவிகளுக்கு அழைக்க உறுப்பினர்களை அடையாளம் காணுதல்.

29.2.5

தொகுதி ஆலோசனைக் கூட்டம்

ஆயர் தொகுதி ஆலோசனைக் குழுக் கூட்டங்களைத் திட்டமிடுகிறார், தலைமை தாங்குகிறார் மற்றும் நடத்துகிறார். ஆயர் இல்லாமல் ஆலோசனைக் குழு முக்கிய முடிவுகளை எடுப்பதில்லை.

தொகுதி அமைப்பின் தலைவர்கள் தொகுதி ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் இரண்டு நிலைகளில் கலந்து கொள்கிறார்கள்:

  1. அனைத்து தொகுதி உறுப்பினர்களையும் ஆசீர்வதிக்க உதவும் தொகுதி ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக.

  2. அவர்களின் அமைப்புகளின் பிரதிநிதிகளாக.

அவர்கள் ஒன்றாகச் சந்திக்கும் போது, தொகுதி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் முழு சபையின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் பயனடையும் காரியங்களைப்பற்றி விவாதிக்கிறார்கள். ஒவ்வொரு ஆலோசனைக் குழு உறுப்பினரும் இந்த காரியங்களில் அவன் அல்லது அவளின் எண்ணங்களையும் உணர்த்துதலையும் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

தொகுதி ஆலோசனைக் குழு கூட்டம் பொதுவாக ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடிக்காது. அவர்கள் ஒரு ஜெபம் மற்றும் முந்தைய கூட்டங்களின் பணிகளைப்பற்றிய சுருக்கமான அறிக்கைகளுடன் தொடங்குகிறார்கள். தனிநபர்களையும் குடும்பங்களையும் ஆசீர்வதிக்க மிகவும் தேவையான காரியங்களுக்கு ஆயர் முன்னுரிமை அளிக்கிறார்.

  • இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழுதல். அனைத்து உறுப்பினர்களும் விசுவாசத்தைக் கட்டியெழுப்பவும், இரட்சிப்பின் நியமங்களைப் பெறவும், தங்கள் உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளவும் உதவுதல்.

  • தேவையிலிருப்போரைப் பராமரித்தல் தனிநபர்களை, குடும்பங்களை மற்றும் சமூகத்தை ஆசீர்வதிக்க ஆதாரங்கள் மற்றும் திறன்களைப் பகிர்ந்து கொள்ளுதல். சுயசார்புடையவர்களாக மாற, சபை உறுப்பினர்களுக்கு உதவுதல். (அதிகாரம் 22 பார்க்கவும்.)

  • சுவிசேஷத்தைப் பெற அனைவரையும் அழைத்தல். சுவிசேஷத்தைப்பற்றி கற்றுக்கொள்பவர்களின் முன்னேற்றம் மற்றும் புதிய மற்றும் திரும்ப வரும் உறுப்பினர்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தல். உறுப்பினர்கள் மற்றவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் வழிகளைப்பற்றி கலந்துரையாடல். (அத்தியாயம் 23 பார்க்கவும்.)

  • நித்தியத்திற்கும் குடும்பங்களை ஒன்றிணைத்தல். ஆலய நியமங்களைப் பெற ஆயத்தமாகும் உறுப்பினர்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தல். ஆலயப் பரிந்துரைக்கு அதிக உறுப்பினர்கள் தகுதி பெற உதவும் வழிகளைத் திட்டமிடுதல். ஆலய மற்றும் குடும்ப வரலாற்றுப் பணிகளில் உறுப்பினர்கள் பங்கேற்கும் வழிகளைப்பற்றி விவாதித்தல். (அதிகாரம் 25 பார்க்கவும்.)

ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் எந்தவொரு தனிப்பட்ட அல்லது உணர்வுபூர்வ தகவலை இரகசியமாக வைத்திருக்க வேண்டும் (4.4.6 பார்க்கவும்).

4:37

29.2.6

தொகுதி இளைஞர் ஆலோசனைக் குழு கூட்டம்

ஒவ்வொரு கூட்டத்திற்கு முன்பும், ஆயரும் நடத்தும் நபரும் விவாதிக்க வேண்டிய காரியங்களை மதிப்பாய்வு செய்கிறார்கள்.

  • இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணி.

  • தொகுதியில் உள்ள இளைஞர்களின் தேவைகள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிகள்.

  • குறைந்த உற்சாகமான அல்லது புதிய உறுப்பினர்களான இளைஞர்களை அணுகுவதற்கான முயற்சிகள்.

  • தேவையிலிருப்போருக்கு சேவை செய்வதற்கான வாய்ப்புகள் உட்பட செயல்பாடுகள். குழுமம் அல்லது வகுப்பு தலைமைக் கூட்டங்களில் பெரும்பாலான திட்டமிடுதல் செய்யப்படுகிறது (அத்தியாயம் 20 பார்க்கவும்).

  • ஊழியம் செய்தல் (அதிகாரம் 21 பார்க்கவும்).

  • புதிதாக அழைக்கப்படும் குழும மற்றும் வகுப்புத் தலைமைகளை அறிமுகம் செய்தல்.

29.2.8

ஞாயிறு கூட்டங்களுக்கான நேரங்கள்

ஞாயிறு கூட்டங்களுக்கு தொகுதிகள் பின்வரும் இரண்டு மணி நேர அட்டவணைகளில் ஒன்றைப் பயன்படுத்துகின்றன.

திட்டம் 1

60 நிமிடங்கள்

திருவிருந்துக் கூட்டம்

10 நிமிடங்கள்

வகுப்புகள் மற்றும் கூட்டங்களுக்கு மாறுதல்

50 நிமிடங்கள்

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும்: ஆரம்ப வகுப்பு, சிறுவர் பள்ளி உட்பட

மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகள்: ஞாயிறு பள்ளி

இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகள்: ஆசாரியத்துவ குழும கூட்டங்கள், ஒத்தாசைச் சங்க கூட்டங்கள் மற்றும் இளம் பெண்கள் கூட்டங்கள்

ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமைகள்: இளைஞர்கள் மற்றும் வயது வந்தவர்களுக்கான கூட்டங்கள். ஆயம், தலைப்பை தீர்மானித்து ஆசிரியர்களை நியமிக்கிறது.

திட்டம் 2

50 நிமிடங்கள்

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும்: ஆரம்ப வகுப்பு, சிறுவர் பள்ளி உட்பட

மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகள்: ஞாயிறு பள்ளி

இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகள்: ஆசாரியத்துவ குழும கூட்டங்கள், ஒத்தாசைச் சங்க கூட்டங்கள் மற்றும் இளம் பெண்கள் கூட்டங்கள்

ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமைகள்: இளைஞர்கள் மற்றும் வயது வந்தவர்களுக்கான கூட்டங்கள். ஆயம், தலைப்பை தீர்மானித்து ஆசிரியர்களை நியமிக்கிறது.

10 நிமிடங்கள்

திருவிருந்துக் கூட்டத்திற்கு மாறுதல்

60 நிமிடங்கள்

திருவிருந்துக் கூட்டம்

29.3

பிணையக் கூட்டங்கள்

29.3.1

பிணைய மாநாடு

29.3.2

பிணைய பொது ஆசாரியத்துவக் கூட்டம்

29.3.3

பிணைய ஆசாரியத்துவத் தலைமைக் கூட்டம்

29.3.4

பிணையத் தலைமைக் கூட்டங்கள்

29.3.5

பிணைய பிரதான ஆசாரியர் குழுமக் கூட்டம்

29.3.6

பிணையத் தலைமைக் கூட்டம்

29.3.7

உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

29.3.8

பிணைய ஆலோசனைக் கூட்டம்

29.3.9

பிணைய வயதுவந்தோர் தலைமை ஆலோசனைக் கூட்டம்

29.3.10

பிணைய இளைஞர் தலைமை ஆலோசனைக் குழுக்கூட்டம்

29.3.11

பிணைய ஆயர்கள் ஆலோசனைக் கூட்டம்

29.5

மரித்தவர்களுக்கான அடக்க ஆராதனைகளும் பிற சடங்குகளும்

29.5.1

பொது கொள்கைகள்

மரித்தவர்களுக்கான சபை சேவைகளின் முக்கிய நோக்கம் இரட்சிப்பின் திட்டத்தை, குறிப்பாக இரட்சகரின் பாவநிவர்த்தி மற்றும் உயிர்த்தெழுதலைப்பற்றிய சாட்சியமாகும். இந்த சேவைகள் கண்ணியமானதாகவும், ஆவிக்குரிய அனுபவங்களாகவும் இருக்க வேண்டும்.

சபைத் தலைவர்கள் மரித்தவர்களுக்கான சபை சேவைகளில் பிற மதங்கள் அல்லது குழுக்களின் சடங்குகளைச் சேர்க்கக்கூடாது.

29.5.2

குடும்பத்திற்கு உதவிசெய்தல்

இயேசு கிறிஸ்துவின் சீடர்களாக, சபைத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் “துக்கப்படுவோரோடு கூட துக்கப்படவும், ஆறுதல் தேவைப்படுவோருக்கு ஆறுதலளிக்கிறார்கள்,” (மோசியா 18:9). ஒரு உறுப்பினர் மரித்தால், ஆறுதலளிக்க ஆயர் அந்த குடும்பத்தை சந்திக்கிறார்.

மூப்பர் குழும மற்றும் ஒத்தாசைச் சங்கம் உட்பட தொகுதி உறுப்பினர்களிடமிருந்து உதவியை ஆயர் வழங்குகிறார், .

29.5.4

அடக்க ஆராதனைகள் (வழக்கமான இடத்தில்)

ஒரு சபைக் கட்டிடத்திலோ அல்லது வேறு இடத்திலோ ஆயரால் நடத்தப்படும் ஒரு அடக்க ஆராதனை ஒரு சபைக் கூட்டம் மற்றும் ஒரு மத சேவையாகும். இது ஒரு ஆவிக்குரிய நிகழ்வாக இருக்க வேண்டும்.

அடக்க ஆராதனை குறித்த நேரத்தில் தொடங்க வேண்டும். பொதுவாக, கலந்துகொள்பவர்களுக்கான மரியாதையின் நிமித்தம் அவை 1.5 மணிநேரத்திற்கு மேல் நீடிக்கக் கூடாது.

பொதுவாக ஞாயிற்றுக்கிழமையில் அடக்க ஆராதனைகள் நடைபெறுவதில்லை.

29.6

சபைக் கூட்டங்களில் ஜெபங்கள்

சபைக் கூட்டங்களில் ஜெபங்கள் சுருக்கமாகவும், எளிமையாகவும், பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும். ஞானஸ்நானம் பெற்ற எந்த சபை உறுப்பினரும் ஆரம்ப அல்லது நிறைவு ஜெபத்தை ஏறெடுக்கலாம். ஞானஸ்நானம் பெறாத பிள்ளைகள் ஆரம்ப வகுப்பில் ஜெபிக்கலாம்.

29.7

ஒளிபரப்புக் கூட்டங்கள் மற்றும் மெய்நிகர் கூட்டங்களை நடத்துதல்

விதிவிலக்காக, திருவிருந்துக் கூட்டங்கள், அடக்க ஆராதனைகள் மற்றும் திருமணங்களின் நேரடி ஒளிபரப்பை ஆயர் அதிகாரமளிக்கலாம்.

திருவிருந்துக் கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பில் திருவிருந்து நிர்வகிப்பதை சேர்க்கக்கூடாது.

சில கூட்டங்களில், ஆயர் அல்லது பிணையத் தலைவர், நேரில் கலந்து கொள்ள முடியாத உறுப்பினர்களை மெய்நிகராக பங்கேற்க அதிகாரமளிக்கலாம். இந்தக் கூட்டங்களில் பின்வருவன அடங்கும்:

  • தலைமை அல்லது ஆலோசனைக் கூட்டங்கள் போன்ற தலைமை கூட்டங்கள்.

  • குழுமம், ஒத்தாசைச் சங்கம் மற்றும் இளம் பெண்கள் கூட்டங்கள்.

  • ஞாயிறு பள்ளி வகுப்புகள்.

  • ஆரம்ப வகுப்புகளும் பாடும் நேரமும்