கையேடுகளும் அழைப்புகளும்
21 ஊழியம் செய்தல்


“21. ஊழியம் செய்தல்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“21. ஊழியம் செய்தல்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை

பாறையைத் தூக்கும் மனிதர்கள்

21.

ஊழியம் செய்தல்

21.0

முன்னுரை

ஊழியம் செய்தல் என்பது இரட்சகர் செய்தது போல் மற்றவர்களுக்கு சேவை செய்வதாகும் (மத்தேயு 20:26–28 பார்க்கவும்).

அவருடைய சபையின் அனைத்து உறுப்பினர்களும் அத்தகைய கவனிப்பைப் பெற வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். இந்த காரணத்திற்காக, ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்கள் ஒவ்வொரு உறுப்பினர் குடும்பத்திற்கும் ஊழியம் செய்யும் சகோதரர்களாக பணிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு வயது வந்த சகோதரிக்கும் ஊழியம் செய்யும் சகோதரிகள் பணிக்கப்படுகிறார்கள்.

21.1

ஊழியம் செய்யும் சகோதர சகோதரிகளின் பொறுப்புகள்

ஊழியம் செய்யும் சகோதரிகளும் சகோதரர்களும் தங்களுக்கு நியமிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு பின்வரும் பொறுப்புகளைக் கொண்டுள்ளனர்:

  • பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீதான தங்கள் விசுவாசத்தை வலுப்படுத்த அவர்களுக்கு உதவுதல்.

  • அவர்கள் நியமங்களைப் பெறும்போது தேவனுடன் பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்துகொள்வதற்கும் அவற்றைக் கைக்கொள்ளுவதற்கும் அவர்களுக்கு உதவுதல்.

  • தேவைகளைப் பகுத்தறிந்து கிறிஸ்துவைப் போன்ற அன்பையும், அக்கறையையும் சேவையையும் வழங்குதல்.

  • ஆவிக்குரிய ரீதியிலும் உலகப்பிரகார ரீதியிலும் சுயசார்பு கொண்டவர்களாக மாற அவர்களுக்கு உதவுதல்.

21.2

ஊழியம் செய்தலை நிர்வகித்தல்

21.2.1

பணித்தல்களைச் செய்தல்

மூப்பர் குழுமம் மற்றும் ஒத்தாசைச் சங்கத்தின் தலைமைத்துவங்கள் ஊழியம் செய்யும் சகோதர சகோதரிகளுக்கான பணித்தல்களை ஜெபத்துடன் பரிசீலிக்கின்றன. அவர்கள் பொதுவாக இரண்டு சகோதரர்கள் அல்லது இரண்டு சகோதரிகளை தோழமைகளாக நியமிக்கிறார்கள். தோழமைகள் மற்றும் பணிகளுக்கு அவர்கள் ஆயரின் ஒப்புதலைப் பெறுகிறார்கள்.

ஒரு நபர் அல்லது குடும்பத்திற்கு ஒன்றாக ஊழியம் செய்ய திருமணமான தம்பதிகள் நியமிக்கப்படலாம்.

ஊழியம் செய்யும் சகோதர சகோதரிகள் அழைக்கப்படுவதில்லை, ஆதரிக்கப்படுவதில்லை அல்லது பணிக்கப்படுவதில்லை.

21.2.2

இளைஞர்களுக்கான ஊழியம் செய்தலின் பணித்தல்கள்

ஒரு இளம் பெண், விருப்பமாகவும் திறமையாகவும் இருக்கும்போது, ஒத்தாசைச் சங்கத்தின் சகோதரிக்கு ஊழியம் செய்யும் தோழமையாக பணியாற்றலாம். ஒரு இளம் பெண் 14 வயதாகும் போது பணியாற்ற ஆரம்பிக்கலாம்.

2:38

ஒரு இளைஞன் ஒரு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர், ஆசிரியர் அல்லது ஆசாரியர் அலுவலுக்கு நியமிக்கப்படும்போது அவருக்கு ஊழியத் தோழனாக பணியாற்றுகிறார்.

21.3

ஊழியம் செய்தலின் நேர்காணல்கள்

2:34

மூப்பர் குழுமத் தலைவரும் அவருடைய ஆலோசகர்களும் ஊழியம் செய்யும் சகோதரர்களை நேர்காணல் செய்கிறார்கள். ஒத்தாசைச் சங்கத் தலைவரும் அவருடைய ஆலோசகர்களும் ஊழிய சகோதரிகளை நேர்காணல் செய்கிறார்கள்.

இந்த நேர்காணல்கள் ஒவ்வொரு காலாண்டிற்கும் குறைந்தது ஒரு முறையாவது நடத்தப்படும்.

அவற்றின் நோக்கங்கள்:

  • நியமிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் பலம், தேவைகள் மற்றும் சவால்களைப்பற்றி ஆலோசித்தல்.

  • தேவைப்பட்டால், நியமங்களைப் பெறுவதற்கு ஆயத்தமாக இருப்பவர்களுக்கு உதவுவதற்கான வழிகளைப்பற்றி கலந்துரையாடல்.

  • மூப்பர் குழுமம், ஒத்தாசைச் சங்கம், தொகுதி ஆலோசனைக் குழு மற்றும் பிறர் எவ்வாறு உதவக்கூடும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

  • ஊழியம் செய்யும் சகோதர சகோதரிகளுக்குக் கற்பித்து ஊக்கப்படுத்துங்கள்.

21.4

ஊழியம் செய்யும் முயற்சிகளை ஒருங்கிணைத்தல்

2:49

ஒத்தாசைச் சங்க மற்றும் மூப்பர் குழும தலைமைகள் குறைந்தபட்சம் காலாண்டுக்கு ஒருமுறை கூடுகிறார்கள். ஊழிய செய்தலின் நேர்காணல்களில் தாங்கள் கற்றுக்கொண்டதை அவர்கள் மதிப்பாய்வு செய்கிறார்கள் (21.3 பார்க்கவும்). அவர்கள் ஊழியம் செய்தலின் பணித்தல்களையும் ஒருங்கிணைக்கிறார்கள்.

குறைவான ஆர்வமுள்ள உறுப்பினர்களைக் கொண்ட அங்கங்களில், சில உறுப்பினர்களுக்கு ஊழியம் செய்யும் சகோதரிகள் மற்றும் ஊழியம் செய்யும் சகோதரர்கள் இருவரையும் நியமிக்க வேண்டாம் என்று ஒத்தாசைச் சங்க மற்றும் மூப்பர் குழுமத் தலைமைகள் முடிவு செய்யலாம்.