கையேடுகளும் அழைப்புகளும்
16. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழுதல்


“இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழுதல்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழுதல்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை

தம்பதியர் ஜெபித்தல்

16.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழுதல்

தேவனின் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணி, தெய்வீகமாக நியமிக்கப்பட்ட நான்கு பொறுப்புகளில் கவனம் செலுத்துகிறது (1.2 பார்க்கவும்). இவற்றில் முதலாவது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழுதல். இவற்றைச் செய்யும்போது நாம் சுவிசேஷத்தின்படி வாழ்கிறோம்:

  • இயேசு கிறிஸ்துமீது விசுவாசத்தைப் பிரயோகிக்கும்போது.

  • அனுதினமும் மனந்திரும்பும்போது.

  • இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் நியமங்களைப் பெற்று தேவனுடன் உடன்படிக்கைகளைச் செய்யும்போது.

  • அந்த உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளுவதன் மூலம் இறுதிபரியந்தம் நிலைத்திருக்கும்போது.

சுவிசேஷத்தின்படி வாழுதல் இரட்சிப்பு மற்றும், மேன்மையடைதலின் பணியின் பிற அம்சங்களை உள்ளடக்கியது.