கையேடுகளும் அழைப்புகளும்
17. சுவிசேஷத்தைக் கற்பித்தல்


“17. சுவிசேஷத்தைக் கற்பித்தல்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“17. சுவிசேஷத்தைக் கற்பித்தல்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை

தாய் மகனுக்குக் கற்பித்தல்

17.

சுவிசேஷத்தைக் கற்பித்தல்

பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீதான தங்கள் விசுவாசத்தை வலுப்படுத்த மக்களுக்குதவ சுவிசேஷத்தை நாம் போதிக்கிறோம்.

17.1

கிறிஸ்துவைப் போன்ற கற்பித்தலின் கொள்கைகள்

சுவிசேஷத்தைப் போதிக்கும் போது, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைவர்கள் முதன்மை போதகரான இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள்.

தலைவர்கள் கிறிஸ்துவைப் போன்ற போதனையின் பின்வரும் கொள்கைகளை தங்கள் அமைப்புகளில் உள்ள ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இரட்சகரின் வழியில் கற்பித்தலில் இந்தக் கோட்பாடுகள் இன்னும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

3:45

17.1.1

நீங்கள் கற்பிப்பவர்களை நேசிக்கவும்

இரட்சகர் செய்கிற அனைத்தும் அவருடைய அன்பின் வெளிப்பாடாகும் ( 2 நேபி 26:24 பார்க்கவும்).

3:19

17.1.2

பரிசுத்த ஆவியின் மூலம் கற்பிக்கவும்

ஆசிரியர்கள் ஆயத்தமாகி, கற்பிக்கும்போது பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலை நாடுகிறார்கள், மேலும் ஒவ்வொரு நாளும் அவருடைய செல்வாக்கிற்கு தகுதியுடையவர்களாக வாழ முயற்சி செய்கிறார்கள்.

3:47

17.1.3

கோட்பாட்டை கற்பிக்கவும்

இரட்சகரின் முன்மாதிரியைப் பின்பற்றி, ஆசிரியர்கள் சுவிசேஷத்தின் இன்றியமையாத, இரட்சிக்கும் சத்தியங்களில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் வேதங்கள், பிற்காலத் தீர்க்கதரிசிகளின் போதனைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டங்களைப் பயன்படுத்தி கற்பிக்கிறார்கள்.

3:33

17.1.4

சிரத்தையுடன் கற்றுக்கொள்ளுதலை அழைக்கவும்

ஆசிரியர்கள் தங்கள் சொந்த கற்றுக்கொள்ளுதலுக்கு உறுப்பினர்களை பொறுப்பேற்க ஊக்குவிக்கிறார்கள்.

17.2

வீட்டை மையமாகக் கொண்ட சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதலும் கற்பித்தலும்

சபைத் தலைவர்களும் ஆசிரியர்களும் வீட்டை மையமாகக் கொண்ட சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதலையும் கற்பித்தலையும் ஊக்குவிக்கிறார்கள், ஆதரிக்கிறார்கள்.

சுவிசேஷத்தை எவ்வாறு படிப்பது மற்றும் கற்பிப்பது என்பது குறித்து தங்கள் சொந்த உணர்த்துதலைத் தேடுமாறு தலைவர்களும் ஆசிரியர்களும் உறுப்பினர்களை ஊக்குவிக்கின்றனர். அவர்களின் முக்கிய ஆதாரங்கள் வேதங்கள் மற்றும் பொது மாநாட்டு செய்திகளாக இருக்க வேண்டும்.

3:35

17.3

தலைவர்களின் பொறுப்புகள்

  • இரட்சகரின் வழியில் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதலிலும் கற்பிப்பதிலும் முன்மாதிரியாக இருங்கள்.

  • அவர்களின் அமைப்புகளில் கற்பித்தல் விசுவாசத்தை வளர்க்கிறது மற்றும் கோட்பாட்டு ரீதியாக சரியானது என்பதை உறுதிப்படுத்தவும்.

  • அவர்களின் அமைப்புகளில் உள்ள ஆசிரியர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கவும்.

17.4

ஆசிரியர் ஆலோசனைக் குழுக் கூட்டங்கள்

ஆசிரியர் ஆலோசனைக் குழுக் கூட்டங்களில், கிறிஸ்துவைப் போன்ற போதனையின் கொள்கைகளைப்பற்றி ஆசிரியர்கள் ஒன்றாக ஆலோசனை செய்கிறார்கள். சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதலையும் கற்பித்தலையும் எவ்வாறு மேம்படுத்துவதென்பதைப்பற்றி அவர்களும் ஆலோசனை செய்கிறார்கள். இரட்சகரின் வழியில் போதித்தலை அவர்கள் ஆதாரமாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை 50 நிமிட வகுப்பு நேரத்தில் ஆசிரியர் ஆலோசனைக் குழுக் கூட்டங்கள் காலாண்டுக்கு ஒருமுறை நடைபெறும்.

6:7