கையேடுகளும் அழைப்புகளும்
25. தொகுதியிலும் பிணையத்திலும் ஆலய மற்றும் குடும்ப வரலாற்றுப் பணி


“25. தொகுதியிலும் பிணையத்திலும் ஆலய மற்றும் குடும்ப வரலாற்றுப் பணி,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“25. தொகுதியிலும் பிணையத்திலும் ஆலய மற்றும் குடும்ப வரலாற்றுப் பணி,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை

ஆலயம்

25.

தொகுதியிலும் பிணையத்திலும் ஆலய மற்றும் குடும்ப வரலாற்றுப் பணி

25.0

முன்னுரை

ஆலய மற்றும் குடும்ப வரலாற்றுப் பணி குடும்பங்களை இணைக்கும் மற்றும் நித்தியத்திற்கும் முத்திரிக்கும் வழியாகும்.(மத்தேயு 16:19 பார்க்கவும்). இந்தப் பணியில் பின்வருவன அடங்குகிறது:

ஆலயங்கள்” மற்றும் “குடும்ப வரலாறு” (Gospel Topics, topics.ChurchofJesusChrist.org)-ல் கூடுதல் தகவல் கிடைக்கிறது.

25.1

ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்று பணிகளில் உறுப்பினரும் தலைவரும் பங்கேற்றல்

சபை உறுப்பினர்களுக்கு தங்கள் குடும்பங்களை நித்தியமாக ஒன்றிணைக்க உதவ சிலாக்கியமும் பொறுப்பும் உள்ளன. அவர்கள் ஆலய நியமங்களைப் பெறும்போது உடன்படிக்கைகளைச் செய்யத் தங்களைத் ஆயத்தப்படுத்திக் கொள்கிறார்கள், மேலும் அந்த உடன்படிக்கைகளைக் கைக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

ஆலய நியமங்களைப் பெறாத மரித்த தங்களின் உறவினர்களை அடையாளம் காண சபை உறுப்பினர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். பின்னர் உறுப்பினர்கள் அந்த உறவினர்களின் சார்பாக நியமங்களைச் செய்கிறார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:18 பார்க்கவும்). ஆவி உலகில், மரித்த நபர்கள் தங்களுக்காக செய்யப்பட்டுள்ள நியமங்களை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ தேர்ந்தெடுக்கலாம்.

25.1.1

ஆலய வருகைக்கான தனிப்பட்ட பொறுப்பு

ஆலயத்தில் எப்போது, எத்தனை முறை ஆராதிக்க வேண்டும் என்பதை உறுப்பினர்கள் தாங்களாகவே தீர்மானிக்கிறார்கள். ஆலய வருகைக்கான ஒதுக்கீட்டையோ அல்லது அறிக்கையிடல் அமைப்புகளையோ தலைவர்கள் ஏற்படுத்துவதில்லை.

25.2

தொகுதியில் ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்றுப் பணிகளை ஏற்பாடு செய்தல்

25.2.1

ஆயம்

தொகுதியின் ஆலய மற்றும் குடும்ப வரலாற்று முயற்சிகளை வழிநடத்தும் போது, மூப்பர் குழும மற்றும் ஒத்தாசைச் சங்க தலைமைகளுடன் ஆயம் ஒருங்கிணைக்கிறது. இந்த தலைவர்கள் அடிக்கடி ஒன்றாக ஆலோசனை செய்கிறார்கள்.

தொகுதியில் ஆலய மற்றும் குடும்ப வரலாற்றுப் பணிகளுக்கான பின்வரும் பொறுப்புகளும் ஆயத்துக்கு உண்டு:

  • ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்றுப் பணிகளின் கோட்பாடு மற்றும் ஆசீர்வாதங்கள் சபையில் கற்பிக்கப்படுவதை உறுதிசெய்யவும்.

  • தொகுதி ஆலோசனைக் குழுவிலும் தொகுதி இளைஞர் ஆலோசனைக் குழுக் கூட்டங்களிலும் ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்றுப் பணி ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்யவும்.

  • ஆலய ஆயத்தப்படுதல் பாடத்திட்ட அமைப்பை மேற்பார்வையிடவும் (25.2.8 பார்க்கவும்).

  • ஆலயப் பரிந்துரைகளை வழங்கவும் (அத்தியாயம் 26 பார்க்கவும்).

25.2.2

மூப்பர் குழுமம் மற்றும் ஒத்தாசைச் சங்க தலைமைகள்

மூப்பர் குழுமம் மற்றும் ஒத்தாசைச் சங்க தலைமைகள் தொகுதியில் அன்றாட ஆலய மற்றும் குடும்ப வரலாற்று முயற்சிகளை வழிநடத்துகின்றன (8.2.4 மற்றும் 9.2.4 பார்க்கவும்). ஆயரின் ஒருங்கிணைப்பின் கீழ், தொகுதி ஆலோசனைக் குழுவுடன் இந்த முயற்சிகளை வழிநடத்த அவர்கள் ஒன்றாக வேலை செய்கிறார்கள்.

இந்த தலைவர்களுக்கு பின்வரும் பொறுப்புகள் உள்ளன:

  • ஆலய நியமங்களைப் பெறவும், ஆலய உடன்படிக்கைகளைச் செய்யவும் ஆயத்தமாக உறுப்பினர்களுக்கு உதவுங்கள்.

  • தங்கள் சூழ்நிலைகள் அனுமதிக்கிற அளவில் அடிக்கடி ஆலயத்தில் ஆராதிக்க உறுப்பினர்களை ஊக்குவிக்கவும்.

  • உறுப்பினர்கள் தங்கள் முன்னோர்களைப்பற்றி அறிந்து கொள்ளவும், அவர்கள் சார்பாக ஆலய நியமங்களைச் செய்யவும் ஊக்குவிக்கவும்.

  • தொகுதி ஆலய மற்றும் குடும்ப வரலாற்று தலைவரின் பணியை வழிநடத்துங்கள். இந்தத் தலைவர் அழைக்கப்படாவிட்டால், மூப்பர் குழுமத் தலைமையின் உறுப்பினர் இந்தப் பாத்திரத்தை நிரப்புவார் (25.2.3 பார்க்கவும்).

மூப்பர் குழுமத் தலைவர் ஒத்தாசைச் சங்கத் தலைவர் ஒவ்வொருவரும் தொகுதியில் ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்றுப் பணிகளை வழிநடத்த உதவ, தலைமையின் ஒரு உறுப்பினரை நியமிக்கிறார்கள். இந்த இரண்டு தலைமை உறுப்பினர்களும் இணைந்து செயல்படுகின்றனர். தொகுதி ஆலய மற்றும் குடும்ப வரலாற்று ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் அவர்கள் கலந்து கொள்கிறார்கள் (25.2.7 பார்க்கவும்).

25.2.3

தொகுதி ஆலய மற்றும் குடும்ப வரலாற்று தலைவர்

ஒரு தொகுதி ஆலய மற்றும் குடும்ப வரலாற்று தலைவர் ஒருவரை அழைப்பதா என்பதைத் தீர்மானிக்க, பிணையத் தலைவருடன் ஆயம் ஆலோசனை நடத்துகிறது. இந்த நபர் ஒரு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை தரித்திருப்பவராக இருக்க வேண்டும்.

மூப்பர் குழுமத் தலைமை மற்றும் ஒத்தாசைச் சங்கத் தலைமையை அவர்களின் ஆலய மற்றும் குடும்ப வரலாற்றுப் பொறுப்புகளில் தொகுதி ஆலய மற்றும் குடும்ப வரலாற்று தலைவர் ஆதரிக்கிறார். அவருக்கு பின்வரும் பொறுப்புகளும் உள்ளன:

  • தொகுதி ஆலய மற்றும் குடும்ப வரலாற்று ஒருங்கிணைப்புக் கூட்டங்களை வழிநடத்துகிறார் (25.2.7 பார்க்கவும்).

  • தொகுதி ஆலய மற்றும் குடும்ப வரலாற்று ஆலோசகர்களுக்கு அறிவுறுத்துகிறார். தொகுதி ஆலய மற்றும் குடும்ப வரலாற்று பணிகளில் உறுப்பினர்களுக்கு உதவ அவர்களுடைய முயற்சிகளை ஒருங்கிணைக்கிறார்.

  • சுவிசேஷத்தைக் கற்பவர்கள், புதிய உறுப்பினர்கள் மற்றும் திரும்ப வரும் உறுப்பினர்கள் ஆலய மற்றும் குடும்ப வரலாற்றுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு உதவ தொகுதி ஊழியத் தலைவர் மற்றும் ஊழியக்காரர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

25.2.4

தொகுதி ஆலய மற்றும் குடும்ப வரலாற்று ஆலோசகர்கள்

தொகுதி ஆலய மற்றும் குடும்ப வரலாற்று ஆலோசகர்கள் தொகுதி ஆலய மற்றும் குடும்ப வரலாற்றுத் தலைவர் அல்லது இந்தப் பாத்திரத்தை நிரப்பும் மூப்பர் குழுமத் தலைமையின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றுகிறார்கள். இந்த உறுப்பினர்களை சேவை செய்ய ஆயம் அழைக்கிறது. வயது வந்தவர்களும் இளைஞர்களும் அழைக்கப்படலாம்.

ஆலோசகர்களுக்கு பின்வரும் பொறுப்புகள் உள்ளன:

  • உறுப்பினர்கள் தங்கள் முன்னோர்களைக் கண்டறிந்து அவர்கள் சார்பாக ஆலய நியமிப்புகளைச் செய்வதன் ஆசீர்வாதங்களை அனுபவிக்க உதவ.

  • ஆலய நியமங்களைப் பெறவும், ஆலய உடன்படிக்கைகளைச் செய்யவும் ஆயத்தமாக உறுப்பினர்களுக்கு உதவுங்கள்.

  • ஆலய மற்றும் குடும்ப வரலாற்று ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் பங்கேற்க (25.2.7 பார்க்கவும்).

25.2.7

தொகுதி ஆலய மற்றும் குடும்ப வரலாற்று ஒருங்கிணைப்புக் கூட்டங்கள்

சுருக்கமான முறைசாரா தொகுதி ஆலய மற்றும் குடும்ப வரலாற்று ஒருங்கிணைப்பு கூட்டங்கள் ஒழழுங்காக நடத்தப்படுகின்றன. தொகுதி ஆலய மற்றும் குடும்ப வரலாற்று தலைவர் அழைக்கப்பட்டால், அவர் இந்தக் கூட்டங்களை நடத்துகிறார். இல்லையெனில், இந்தப் பாத்திரத்தை நிரப்பும் மூப்பர் குழுமத் தலைமையின் உறுப்பினர் நடத்துகிறார்.

அழைக்கப்பட்ட மற்றவர்கள் :

  • நியமிக்கப்பட்ட ஒத்தாசைச் சங்க மற்றும் மூப்பர் குழுமத் தலைமைகளின் உறுப்பினர்கள்.

  • ஆசாரியர் குழுமத்தில் உதவியாளர்.

  • இளம் பெண்கள் வகுப்பின் மிக மூத்த தலைமையின் உறுப்பினர்.

  • ஆலய மற்றும் குடும்ப வரலாற்று ஆலோசகர்கள்.

இந்தக் கூட்டங்களின் நோக்கம்:

  • கோரியபடி குறிப்பிட்ட தொகுதி உறுப்பினர்களுக்கு அவர்களின் ஆலய மற்றும் குடும்ப வரலாற்று பணிகளுக்கு எப்படி உதவுவது என்று திட்டமிடுதல்.

இந்த கூட்டங்கள் நேரிலோ அல்லது தொலைதூரத்திலோ நடத்தப்படலாம். தொலைபேசி அழைப்புகள், உரைகள் மற்றும் மின்னஞ்சல்கள் உள்ளிட்ட பிற வழிகளிலும் ஒருங்கிணைப்பு நிகழலாம்.

25.2.8

ஆலய ஆயத்தப்படுதல் பாடத்திட்டம்

உறுப்பினர்கள் ஆலய நியமங்ளைப் பெறும்போது உடன்படிக்கைகளைச் செய்ய அவர்கள் ஆயத்தமாக உதவ ஆயரின் வழிகாட்டுதலின் கீழ், ஆலய ஆயத்தப் பாடம் ஒன்று ஏற்பாடு செய்யப்படலாம். இந்த பாடங்கள் வழக்கமான ஞாயிறு கூட்டங்களுக்கு வெளியே உறுப்பினர்களுக்கு வசதியான நேரத்தில் நடத்தப்படுகின்றன. அவை ஒரு கூடுமிடத்திலோ அல்லது ஒரு வீட்டிலோ நடத்தப்படலாம்.

பாடத்திட்டத்தை ஒழுங்கமைப்பதற்கான பாடங்களும் அறிவுறுத்தல்களும் உன்னதத்திலிருந்து தரிப்பிக்கப்பட்டு: ஆலய ஆயத்தம் கருத்தரங்கு ஆசிரியர் கையேடு-ல் உள்ளன. பங்கேற்பாளர்களுக்கு பரிசுத்த ஆலயத்திற்குள் பிரவேசிப்பதற்கு ஆயத்தப்படுதல் பிரதிகள் வழங்கப்படுகின்றன. தனிப்பட்ட படிப்புக்கும் பாட ஆதாரங்களுக்கும் temples.ChurchofJesusChrist.org பார்க்கவும்.

25.4

குடும்ப வரலாற்று ஆதாரங்கள்

25.4.1

எனது குடும்பம்: எங்களை ஒன்றுகூடி வரச்செய்யும் கதைகள்

உறவினர்களையும் முன்னோர்களையும் கண்டறியவும் அவர்களின் கதைகளைச் சேகரிக்கவும் எனது குடும்பம்: எங்களை ஒன்றாகக் கொண்டுவரும் கதைகள் மக்களுக்கு உதவுகின்றன. ஆலய நியமங்களுக்கு குடும்பப் பெயர்களைத் தயாரிக்கவும் உறுப்பினர்களுக்கு இந்தக் கையேடு உதவும்.

ChurchofJesusChrist.org-ல் கையேடு பதிவிறக்கம் செய்யப்படலாம். store.ChurchofJesusChrist.org-ல் பிரதிகள் விண்ணப்பிக்கப்படலாம்.

25.4.2

FamilySearch.org மற்றும் குடும்ப தேடுதல் செயலிகள்

FamilySearch.org ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்று பணிகளுக்கான சபையின் இணையதளம். இது பயனாளிகளுக்கு உதவும்:

  • குடும்ப மர இணைப்புகளையும் உறவுகளையும் வளர்க்கவும்.

  • முன்னோர்கள் மற்றும் அவர்களின் கதைகளைக் கண்டறியவும்.

  • குடும்பக் கதைகள், புகைப்படங்கள் மற்றும் வரலாறுகளைப் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் பாதுகாக்கவும்.

  • ஆலய நியமங்களுக்கு குடும்பப் பெயர்களைத் தயாஆயத்தம் செய்யவும்.

கைபேசி சாதனங்களிலிருந்து ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்றுப் பணிகளில் மக்கள் பங்கேற்க குடும்பதேடல் மரம் செயலி மற்றும் குடும்பதேடல் நினைவுகள் செயலி உதவுகிறது.

25.5

ஆலயப் பணியாளர்களை பரிந்துரைத்தலும் அழைத்தலும்

25.5.1

ஆலயப் பணியாளர்களை பரிந்துரைத்தல்

சாத்தியமான ஆலயப் பணியாளர்கள் பின்வரும் வழிகளில் அடையாளம் காணப்படுகிறார்கள்:

  • ஆயர் அல்லது மற்றொரு தொகுதி தலைவரால் அடையாளம் காணப்பட்ட உறுப்பினர்கள்

  • சேவை செய்வதற்காக ஆயரை அணுகும் உறுப்பினர்கள்

  • ஆலயத் தலைவர், பணித்தலைவி அல்லது மற்றொரு ஆலயத் தலைவரால் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர்கள்

  • ஊழிய சேவைக்குத் தயாராகும் அல்லது சமீபத்தில் திரும்ப வந்த உறுப்பினர்கள் (அத்தியாயம் 24 பார்க்கவும்)

பரிந்துரை ஆலயப் பணியாளர் கருவியைப் பயன்படுத்தி சாத்தியமான ஆலயப் பணியாளர்களின் பெயர்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த கருவி ஆயர்கள், பிணையத் தலைவர்கள் மற்றும் ஆலயத் தலைமைகளுக்கு கிடைக்கிறது.