கையேடுகளும் அழைப்புகளும்
5. பொது மற்றும் பிரதேச தலைமைத்துவம்


“5. பொது மற்றும் பிரதேச தலைமைத்துவம்,” பொது கையேட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“5. பொது மற்றும் பிரதேச தலைமைத்துவம்,” பொது கையேட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை

பிரதான தலைமை

5.

பொது மற்றும் பிரதேச தலைமைத்துவம்

5.0

முன்னுரை

இயேசு கிறிஸ்துதாமே அவருடைய சபைக்கு “மூலைக்கல்லாயிருக்கிறார்” (எபேசியர் 2:20). அவர் அனைத்து ஆசாரியத்துவ திறவுகோல்களையும் தரித்திருக்கிறார். இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியில் அவருக்குதவ அப்போஸ்தலர்களையும் தீர்க்கதரிசிகளையும் அவர் அழைக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஊழியர்களுக்கு அவர் தற்போது பூமியில் உள்ள தேவனின் இராஜ்யத்துடன் தொடர்புடைய அனைத்து திறவுகோல்களையும் அவர் அருளுகிறார். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:12–13 பார்க்கவும்; இந்தக் கையேட்டில் 3.4.1 ஐயும் பார்க்கவும்.)

தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்கள் மூலம், உலகம் முழுவதிலும் தம்முடைய பணிகளில் உதவுவதற்காக எழுபதின்மரின் அலுவலுக்கு மனிதர்களை கர்த்தர் அழைக்கிறார் (கோட்பாடும்உடன்படிக்கைகளும் 107:38 பார்க்கவும்). கூடுதலாக, தலைமை ஆயம், பொது அதிகாரிகள் மற்றும் பிற ஆண்கள் மற்றும் பெண்கள் தலைவர்களுக்கு, பணியில் உதவுவதற்கு முக்கியமான பொறுப்புகள் வழங்கப்படுகின்றன.

அதிகத் தகவலுக்கு, பொது கையேட்டில் அத்தியாயம் 5 பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் சேவை செய்தல் (ChurchofJesusChrist.org) பார்க்கவும்.