“6. பிணையத் தலைமை,” பொது கையேட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).
“6. பிணையத் தலைமை,” பொது கையேட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை
6.
பிணையத் தலைமை
6.1
பிணையத்தின் நோக்கங்கள்
பிற்கால சீயோனை முளைகளால் பிணைக்கப்பட்ட தாபரமாகவும் அல்லது கூடாரமாகவும் ஏசாயா விவரித்தான் (ஏசாயா 33:20; 54:2 பார்க்கவும்).
கர்த்தர் தம்முடைய மக்களை “ஒன்றாகக் கூட்டிச் சேர்ப்பதற்கும்” உலகத்திலிருந்து “பாதுகாப்புக்காகவும் … ஒரு அடைக்கலத்திற்காகவும்” பிணையங்களை நிறுவுகிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 115:6).
6.2
பிணையத் தலைமை
சபையின் பணியை பிணையத்தில் வழிநடத்த ஆசாரியத்துவ திறவுகோல்களை பிணையத் தலைவர் தரித்திருக்கிறார் (3.4.1 பார்க்கவும்). அவரும் அவருடைய ஆலோசகர்களும் ஒரு பிணையத் தலைமை ஆகிறார்கள். அவர்கள் பிணைய உறுப்பினர்களை அன்புடன் கவனித்து, இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடர்களாக ஆகுவதற்கு உதவுகிறார்கள்.
பிணையத் தலைவருக்கு நான்கு முக்கியப் பொறுப்புகள் உள்ளன:
-
பிணையத்தில் அவர் தலைமை தாங்கும் பிரதான ஆசாரியர்.
-
பிணையத்தில் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியை அவர் வழிநடத்துகிறார்.
-
அவர் ஒரு பொதுவான நியாயாதிபதி
-
பதிவேடுகள், நிதி மற்றும் சொத்துக்களை அவர் மேற்பார்வையிடுகிறார்.
6.3
சேகரத் தலைவர்களின் அதிகாரத்திற்கும் பிணையத் தலைவர்களின் அதிகாரத்திற்கும் இடையிலான வேறுபாடுகள்
ஒவ்வொரு உறுப்பினர் சேகரத்திலும், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர் சேகரத் தலைவராக அழைக்கப்படுகிறார். அவர் ஒரு பிணையத் தலைவரைப் போலவே பணியாற்றுகிறார், ஆனால் பின்வரும் வேறுபாடுகளுடன்:
-
அவர் பிரதான ஆசாரியர் குழுமத்தின் தலைவர் அல்ல. அத்தகைய குழுமங்க்கள் பிணையங்களில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.
-
ஊழியத் தலைவரின் ஒப்புதலுடன், ஒரு சேகரத் தலைவர் ஒரு சகோதரர் மூப்பராக நியமிக்கப்பட நேர்காணல் செய்யலாம். ஒரு சேகரத் தலைவர் அல்லது அவரது வழிகாட்டுதலின் கீழ் உள்ள ஒருவர் (1) ஒரு சகோதரரை ஆதரித்தலுக்கு முன்மொழியலாம் மற்றும் (2) நியமிப்பை நிறைவேற்றலாம் (18.10.1.3, 18.10.3, மற்றும் 18.10.4 பார்க்கவும்). இருப்பினும், ஒரு சேகரத் தலைவரால், கோத்திர பிதாக்கள், பிரதான ஆசாரியர்கள் அல்லது ஆயர்களை நியமிக்க முடியாது.
-
ஊழியத் தலைவரின் ஒப்புதலுடன், ஒரு சேகரத் தலைவர் கிளைத் தலைவர்களை பணிக்கலாம் (18.11 பார்க்கவும்).
-
அவர் முழுநேர ஊழியக்காரர்களை விடுவிப்பதில்லை.
-
அவர் ஆலயப் பரிந்துரை நேர்காணல்களை நடத்துவதில்லை அல்லது ஆலய பரிந்துரைகளில் கையெழுத்திடுவதில்லை (26.3.1 பார்க்கவும்).
-
ஊழியத் தலைவரால் அதிகாரமளிக்கப்பட்டாலொழிய அவர் உறுப்பினர் ஆலோசனைக் குழுவைக் கூட்டமாட்டார்.
6.5
உயர் ஆலோசனைக் குழு
பிணைய உயர்மட்ட ஆலோசனைக் குழுவை அமைக்க, 12 பிரதான ஆசாரியர்களை பிணையத் தலைமை அழைக்கிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 102:1; 124:131 பார்க்கவும்).
6.5.1.
பிணையத் தலைமையின் பிரதிநிதியாக இருக்கிறார்
பிணையத்திலுள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு உயர் ஆலோசகரை பிணையத் தலைமை நியமிக்கிறது.
பிணையத்தில் ஒவ்வொரு மூப்பர் குழுமத்திற்கும், ஒரு உயர் ஆலோசகரை பிணையத் தலைமை நியமிக்கிறது.
ஆலய மற்றும் குடும்ப வரலாற்றுப் பணிக்கும் ஊழியப் பணிக்கும் பின்வரும் நபர்களுக்கு அவர்களின் பொறுப்புகளில் அறிவுறுத்துவதற்கு உயர் ஆலோசகர்களை பிணையத் தலைமை நியமிக்கலாம்:
-
மூப்பர் குழுமத் தலைமைகள்
-
தொகுதி ஊழியத் தலைவர்கள்
-
தொகுதி ஆலய மற்றும் குடும்ப வரலாறு தலைவர்கள்
6.7
பிணைய அமைப்புகள்
பிணைய ஒத்தாசைச் சங்கம், இளம் பெண்கள், ஆரம்ப வகுப்பு, ஞாயிறு பள்ளி மற்றும் இளைஞர்கள் அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு தலைவரால் வழிநடத்தப்படுகின்றன. இந்த தலைவர்கள் பிணையத் தலைமையின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றுகின்றனர்.
இந்தத் தலைவர்களின் முக்கியப் பொறுப்புகள் பிணையத் தலைமைக்கு உதவுவதும், தொகுதி அமைப்புத் தலைமைகளுக்கு அறிவுறுத்துவதும் ஆதரிப்பதும் ஆகும்.
6.7.1.
பிணைய ஒத்தாசைச் சங்கம், இளம் பெண்கள், ஆரம்ப வகுப்பு மற்றும் ஞாயிறு பள்ளி தலைமைகள்
இந்த தலைமைகளின் உறுப்பினர்களுக்கு பின்வரும் பொறுப்புகள் உள்ளன:
-
பிணைய ஆலோசனைக் குழுவில் (தலைவர்கள் மட்டும்) பணியாற்றுவது.
-
புதிதாக அழைக்கப்படும் தொகுதி அமைப்பு தலைமைகளை அறிமுகப்படுத்துதல்.
-
தொடர்ந்து ஆதரவு மற்றும் அறிவுறுத்தலை வழங்குவது. அவர்களின் தேவைகளைப்பற்றி அறிந்து கொள்ளவும், அவர்கள் பணியாற்றும் உறுப்பினர்களின் தேவைகளைப்பற்றி விவாதிக்கவும், பிணையத் தலைமையிடமிருந்து தகவல்களைத் தொடர்பு கொள்ளவும், தொகுதி அமைப்புத் தலைமைகளுடன் தொடர்பு கொள்வதும்.
-
பிணையத் தலைமைக் கூட்டங்களின் போது தொகுதி அமைப்புத் தலைமைகளை அறிவுறுத்துதல் (29.3.4 பார்க்கவும்).
6.7.2.
பிணைய வாலிபர் தலைமை
பிணைய வாலிபர் தலைமைக்கு பின்வரும் பொறுப்புகள் உள்ளன:
-
ஆரோனிய ஆசாரியத்துவ சகோதரர்களுக்கான அவர்களின் பொறுப்புகளில் ஆயத்துக்கு ஒரு ஆதாரமாக பணியாற்றுவது.
-
பிணைய இளைஞர் தலைமைக் குழுவில் பணியாற்றுவது (29.3.10 பார்க்கவும்).
-
பிணையத் தலைமையின் வழிகாட்டுதலின் கீழ், பிணைய ஆரோனிய ஆசாரியத்துவ நிகழ்ச்சிகள் மற்றும் முகாம்களைத் திட்டமிட்டு ஒருங்கிணைப்பது.