என்னைப் பின்பற்றி வாருங்கள்
பெப்ருவரி 16–22. “நீதியை அதிகமாக பின்பற்றுபவனாயிருக்க”: ஆதியாகமம் 12–17; ஆபிரகாம் 1–2


“பெப்ருவரி 16–22. ‘நீதியை அதிகமாக பின்பற்றுபவனாயிருக்க’: ஆதியாகமம் 12–17; ஆபிரகாம் 1–2” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)

“பெப்ருவரி 16–22. ‘நீதியை அதிகமாக பின்பற்றுபவனாயிருக்க’,” என்னைப் பின்பற்றி வாருங்கள்: 2026

மெல்கிசேதேக்கு ஆபிராமின் தலையில் கைகளை வைத்து ஆசீர்வதித்தல்

மெல்கிசேதேக்கு, ஆபிராமை ஆசீர்வதித்தல்– வால்டர் ரானே (விளக்கம்)

பெப்ருவரி 16–22: “நீதியை அதிகமாக பின்பற்றுபவனாயிருக்க”

ஆதியாகமம் 12–17;ஆபிரகாம் 1–2

தேவன் அவனுடன் செய்த உடன்படிக்கையின் காரணமாக, ஆபிரகாம் “விசுவாசிகளின் தகப்பன்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138: 41 ) மற்றும் “தேவனுடைய சிநேகிதன்” (யாக்கோபு 2:23) என அழைக்கப்பட்டான் . இன்று மில்லியன் கணக்கானவர்கள் அவனை தங்களின் நேரடி மூதாதையராக மதிக்கிறார்கள், மற்றவர்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு மாறுவதன் மூலம் அவனுடைய குடும்பத்தில் தத்தெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆயினும் ஆபிரகாம்தாமே ஒரு துயரப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவன்—அவனுடைய தகப்பன், உண்மையான தேவனின் வழிபாட்டைக் கைவிட்டு, ஆபிரகாமை பொய்யான தெய்வங்களுக்கு பலியிடச்செய்ய முயன்றான். இதையும் விட, ஆபிரகாமின் வாஞ்சை “நீதியை அதிகமாக பின்பற்றுபவனாக இருக்க வேண்டும்” (ஆபிரகாம் 1: 2), என்பதாகவே இருந்தது, அவனுடைய வாஞ்சையை தேவன் மதித்தார் என்பதை அவனுடைய வாழ்க்கையின் விவரம் காட்டுகிறது. ஒருவரின் குடும்ப வரலாறு எப்படி இருந்தது என்பது பொருட்டின்றி, எதிர்காலம் நம்பிக்கையால் நிரப்பப்படலாம் என்பதற்கு ஆபிரகாமின் வாழ்க்கை ஒரு சாட்சியமாக நிற்கிறது.

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

ஆபிரகாம் 1:1–19

என் விசுவாசத்துக்காகவும் நீதியான வாஞ்சைகளுக்காகவும் தேவன் என்னை ஆசீர்வதிப்பார்.

“நாம் அனைவரும் நமது குடும்பங்கள் [மற்றும்] நமது கலாச்சாரத்தால் செல்வாக்கடைகிறோம்,” என்று மூப்பர் நீல் எல். ஆண்டர்சன் கற்பித்தார், “இருப்பினும், நாம் தனித்துவமாகவும் தனித்தனியாகவும் கட்டுப்படுத்தி உருவாக்கும் ஒரு இடம் நமக்குள் இருப்பதாக நான் நம்புகிறேன். … இறுதியில், நமது உள்ளார்ந்த ஆசைகளுக்கு உயிர் கொடுக்கப்படுகிறது, அவை நம் விருப்பங்களிலும் செயல்களிலும் காணப்படுகின்றன” (“Educate Your Desires, Elder Andersen Counsels,” ChurchofJesusChrist.org). ஆபிரகாம் 1:1–19 மூப்பர் ஆண்டர்சன் என்ன கற்பித்தார் என்பதை நிரூபிக்கிறது. இதைப் போன்ற கேள்விகள் உதவக்கூடும்:

  • ஆபிரகாம் எதை விரும்பினான்? அவனது ஆசைகள் அவனது செயல்களில் எப்படி வெளிப்பட்டது? அவனுடைய ஆசைகளை தேவன் எப்படி ஆதரித்தார்?

  • உங்கள் வாஞ்சைகள் யாவை? உங்கள் செயல்களில் அவை எவ்வாறு வெளிப்படுகின்றன? தேவன் எவ்வாறு உங்களை ஆதரிக்கிறார்?

  • நீதியை வாஞ்சிக்காத குடும்ப உறுப்பினர்களுக்காக இந்த வசனங்கள் என்ன செய்தியை கொண்டிருக்கின்றன?

ஆபிரகாம் மற்றும் சாராளின் மிகப்பெரிய ஆசைகளில் ஒன்று—ஒரு குழந்தையைப் பெற வேண்டும்—என்பது பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்தது (ஆதியாகமம் 15:1–6 ஐப் பார்க்கவும்). இந்தச் சோதனையை ஆபிரகாமும் சாராளும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதைப் பற்றி எபிரெயர் 11:8–13ல் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? அவருடைய வாக்குறுதிகள் “தொலைவில்” இருந்தாலும், அவற்றை “தழுவுவதற்கு” இரட்சகர் உங்களுக்கு எப்படி உதவுகிறார்?

See also “Deliverance of Abraham” (video), Gospel Library.

1:38

Deliverance of Abraham

ஆதியாகமம் 12:1–3 ; 13:15–16 ; 15:1–6 ; 17:1–8, 15–22 ; ஆபிரகாம் 2:6–11

வேத பாட வகுப்பு சின்னம்
நான் அவருடன் உடன்படிக்கை செய்யவும் கைக்கொள்ளவும் வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

தேவன் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்? ஏனென்றால் தேவன் உங்களோடும் இதே போன்ற உடன்படிக்கையை செய்ய விரும்புகிறார். இந்த உடன்படிக்கை ஆபிரகாமின் சந்ததியிலோ அல்லது “வித்திலோ” தொடரும் என்றும், “இந்த சுவிசேஷத்தைப் பெறுபவர்களில் அநேகர்… உங்கள் சந்ததியினராகக் கணக்கிடப்படுவார்கள்” (ஆபிரகாம் 2: 10–11 பார்க்கவும்). வேறு வார்த்தைகளில் எனில், நீங்கள் ஞானஸ்நானம் பெறும்போது மற்றும் நீங்கள் ஆலயத்தில் உடன்படிக்கைகளை செய்யும்போது இன்னும் முழுமையாக— உடன்படிக்கை உங்களில் தொடர்கிறது (கலாத்தியர் 3:26–29; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 132:30–32).

அந்த காரணத்திற்காக, நீங்கள் ஆபிரகாம் 2:6–11 ஐப் படித்து, ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் தேவன் வாக்குறுதி அளித்ததைப் பட்டியலிடுங்கள்(மேலும் ஆதியாகமம் 12:1–3; 13:15–16; 15:1–6; 17:1–8, 15–22 பார்க்கவும்). இந்த ஆசீர்வாதங்கள் உங்களுக்கு எப்படி பொருந்தக்கூடும்?

இந்த வாக்குறுதிகளில் சில நித்திய இணைகளைக் கொண்டுள்ளன. சுதந்தர தேசம் அல்லது பெரிய சந்ததி போன்ற வாக்குறுதிகள் எப்படி நித்தியமாக நிறைவேற்றப்படுகின்றன? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 131:1–4; 132:20–24, 28–32).

ஆசீர்வாதங்களை வாக்களித்ததோடு, தேவன் ஆபிரகாமிடம் “நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” என கூறினார் (ஆதியாகமம் 12:2; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது). அதன் அர்த்தம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நீங்கள் எப்படி ஆசீர்வாதமாக இருப்பீர்கள்? (ஆபிரகாம் 2:11 பார்க்கவும்).

உடன்படிக்கைகளைப் பற்றி கற்பிக்க, மூப்பர் டேல் ஜி. ரென்லண்ட், அமேசான் ஆற்றில் பெரும் அலைகள் பற்றிப் பேசினார், மேலும் தலைவர் எமிலி பெல் ப்ரீமேன் உடைந்த கணுக்காலுடன் பாறைப் பாதையில் நடப்பதைப் பற்றி பேசினார் (see “Accessing God’s Power through Covenants,” Liahona, May 2023, 35–37; “Walking in Covenant Relationship with Christ,” Liahona, Nov. 2023, 76–79). “தேவன் நான் ஏன் அவருடன் உடன்படிக்கை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்?” என்ற கேள்விக்கு பதிலளிக்க உதவும் வாக்கியங்களை இந்த செய்திகளில் ஒன்று அல்லது இரண்டையும் தேடுங்கள்.

ஒருவருக்கொருவர் கற்பிக்க மக்களை அழைக்கவும். உடன்படிக்கைகளைப் பற்றி உங்கள் குடும்பத்திற்கோ அல்லது சபை வகுப்பிற்கோ நீங்கள் கற்பிக்கிறீர்கள் என்றால், ஒவ்வொரு நபருக்கும் மூப்பர் ரென்லண்ட் அல்லது தலைவர் ப்ரீமேனின் செய்தியில் ஒரு பகுதியைப் படிப்பதற்காகக் கொடுப்பதைக் கருத்தில் கொள்ளவும். பின்னர் அவர்கள் கற்றுக்கொண்டதை குடும்பத்தினர் அல்லது வகுப்பில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இது மக்கள் ஒருவருக்கொருவர் சாட்சியளிக்கவும் கற்றுக்கொள்ளவும் அனுமதிக்கிறது, மேலும் அது ஆவியை அழைக்கிறது. (Teaching in the Savior’s Way26 பார்க்கவும்.)

See also Topics and Questions, “Abrahamic Covenant,” Gospel Library; “Thoughts to Keep in Mind: The Covenant,” in this resource.

ஆபிரகாமும் சாராளும்

ஆபிரகாமிய உடன்படிக்கை–டிலீன் மார்ஷ்(விளக்கம்)

ஆதியாகமம் 14:18–19; ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, ஆதியாகமம் 14:25–40

“மெல்கிசேதேக்கு ஒரு விசுவாசமுள்ள மனிதன்.”

மெல்கிசேதேக்கை அறியாத ஒருவருக்கு நீங்கள் அவரை அறிமுகப்படுத்துகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் என்ன சொல்வீர்கள்? ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, ஆதியாகமம் 14:26–27, 33–38 (வோதாகம பிற்சேர்க்கையில்); ஆல்மா 13:13–19; கோட்பாடும் உடன்படிக்கைகளும்107:1–4. மெல்கிசேதேக்கின் இந்த விவரிப்புகளில் கிறிஸ்துவைப் போன்ற என்ன குணங்களை நீங்கள் காண்கிறீர்கள்? மெல்கிசேதேக்கின் வாழ்க்கையைப் பற்றிய உங்கள் ஆய்வு, மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை நீங்கள் பார்க்கும் விதத்தை எவ்வாறு பாதிக்கிறது?

ஆதியாகமம் 14:18–24; ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, ஆதியாகமம் 14:36–40

ஆபிரகாம் தசமபாகம் செலுத்தினான்.

ஆதியாகமம் 14:18–24 மற்றும் ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, ஆதியாகமம் 14:36–40 (வேதாகம பிற்சேர்க்கையில்) செல்வத்தைப் பற்றிய ஆபிரகாமின் அணுகுமுறையைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? உதாரணமாக, ஆதியாகமம் 14:23இல் சோதோமின் ராஜாவுக்கு அவன் அளித்த பதிலைக் கவனியுங்கள். தசமபாகம் என்ற நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்படிவது பணத்தைப் பற்றிய உங்கள் பார்வையை எவ்வாறு பாதித்துள்ளது?

ஆதியாகமம் 16

தேவன் எனக்கு செவிசாய்க்கிறார்.

நீங்கள் ஆதியாகமம் 16ஐ வாசிக்கும்போது, ​​ஆகார் உணர்ந்ததைப் போல், நீங்கள் அநியாயமாக நடத்தப்பட்டதாக உணர்ந்த ஒரு நேரத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்கலாம். “இஸ்மவேல்” என்றால் “தேவன் கேட்கிறார்” என்பதை நினைவில் கொள்க. தேவன் உங்களுக்குச் செவிசாய்த்தார் என்று எப்படிக் காட்டினார்?

See also “Secret Prayer,” Hymns, no. 144.

கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.

பிள்ளைகள் பகுதி சின்னம் 01

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

ஆபிரகாம் 1:18; 2:8

இயேசு கிறிஸ்து என்னை கரம்பிடித்து வழிநடத்துவார்.

  • நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஆபிரகாம் 1:18 மற்றும் 2:8 ஐ வாசிக்கும்போது, ​​​​இரண்டு வசனங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள உடலின் ஒரு பகுதியைக் கேட்க அவர்களை அழைக்கலாம். ஒருவேளை நீங்கள் ஒரு விளையாட்டை விளையாடலாம், அதில் ஒரு பிள்ளை கண்களை மூடிக்கொண்டு, பிள்ளையை எங்காவது கையைப்பிடித்து அழைத்துச் செல்கிறீர்கள். இயேசு கிறிஸ்து நம்மைக் கரம்பிடித்து நடத்துவது அல்லது நம்மைப் பாதுகாப்பது எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி நீங்கள் பேசலாம்.

ஆதியாகமம் 13:5–12.

நான் சமாதானம் செய்பவராக இருக்க முடியும்.

  • உங்கள் பிள்ளைகள் ஆதியாகமம் 13:5–12 லிருந்து கதையை ஆபிரகாம், லோத்து மற்றும் மேய்ப்பர்கள் போல் நடித்து மகிழ்வார்கள். நம் குடும்பம் அல்லது நண்பர்களுடன் சமாதானம் செய்பவராக ஆபிரகாமின் முன்மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்? அவர்களின் பதில்களை நடித்துக்காட்ட முயற்சிக்கவும்.

ஆபிரகாம் லோத்துடன் பேசுதல்

லோத்தின் தேர்வு,-வில்லியம் ப்ரடரிக்ஸ் © Providence Collection/licensed from goodsalt.com

ஆதியாகமம் 13:16; ஆதியாகமம் 15:1–6; 17:1–8; ஆபிரகாம் 2:9–11

நான் அவருடன் உடன்படிக்கை செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

  • உங்கள் பிள்ளைகளுக்கு மணல் கொள்கலன், இரவு வானில் உள்ள நட்சத்திரங்கள் அல்லது இந்த குறிப்பின் முடிவில் உள்ள படத்தைக் காட்டவும். ஆதியாகமம் 13:1615:1–6.ல் உள்ள தேவனின் வாக்குறுதிகளைப் புரிந்துகொள்ள இது அவர்களுக்கு உதவும்; தேவனுடைய வாக்குறுதிகள் சாத்தியமற்றதாகத் தோன்றினாலும், அவற்றை நம்புவதற்கு நீங்கள் எப்படிக் கற்றுக்கொண்டீர்கள் என்பதைப் பற்றி பேசுங்கள்.

  • உடன்படிக்கைகளைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க, அவர்கள் ஒரு வாக்குறுதியை அளித்த அல்லது யாராவது அவர்களுக்கு வாக்குறுதி அளித்த நேரத்தைப் பற்றி உங்களிடம் சொல்லச் சொல்லுங்கள். இது பயனுள்ளதாக இருந்தால், ஞானஸ்நானம் அல்லது ஆலயத்தில் நீங்கள் தேவனுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகள் உட்பட உங்களுடைய சில உதாரணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் உடன்படிக்கைகள் தேவனுடனான உங்கள் உறவை எவ்வாறு பாதித்தன? ஆதியாகமம் 15:1–6; 17:1–8; ஆபிரகாம் 2:9–11லிருந்து ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் தேவன் வாக்களித்த சில ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்ள சில சொற்றொடர்களைத் தேர்வு செய்யவும்.

  • உங்கள் பிள்ளைகள் ஞானஸ்நானம் பெறும்போது தேவனுடன் உடன்படிக்கை செய்யத் தயாராவதற்கு, பிற்சேர்க்கை A அல்லது பிற்சேர்க்கை B இல் பரிந்துரைக்கப்பட்ட சில நிகழ்ச்சி யோசனைகளைப் பயன்படுத்தலாம்.

ஆபிரகாம் 1:12–17; ஆதியாகமம் 16:7–11

தேவன் எனக்கு செவிசாய்க்கிறார்.

  • ஆபிரகாமின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டபோது, ​​அவன் தேவனை அழைத்தான். ஆகார் வனாந்தரத்தில் தனியாக இருந்தபோது, ​​தேவன் தனக்குச் செவிசாய்த்தார் என்பதை அவள் அறிந்தாள். இந்த இரண்டு கதைகளையும் உங்கள் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்: “Abraham and Sarah” and “Hagar” in Old Testament Stories, 28–31, 32–33. இந்த கதைகளிலிருந்து தேவனைப்பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? தேவன் உங்களுக்குச் செவிசாய்த்ததாக நீங்கள் உணரும்போது நீங்கள் ஒருவருக்கொருவர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். A song like “A Child’s Prayer” (Children’s Songbook, 12–13) இந்த கொள்கையை வலுப்படுத்த முடியும்.

2:20

Abraham and Sarah

1:23

Hagar

கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

சாராள் நட்சத்திரங்களை அண்ணாந்து பார்த்தல்

தேவனின் வாக்குத்தத்தத்தை சிந்தித்தல்–கர்ட்னி மாட்ஸ்

ஆரம்ப வகுப்பு நிகழ்ச்சி பக்கம்: நான் அவருடன் உடன்படிக்கை செய்ய தேவன் விரும்புகிறார்