என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஜனுவரி 19–25. ஆதாம் ஏவாளின் வீழ்ச்சி: ஆதியாகமம் 3–4; மோசே 4–5


“ஜனுவரி 19–25. ஆதாம் ஏவாளின் வீழ்ச்சி: ஆதியாகமம் 3–4; மோசே 4–5” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)

“ஜனுவரி 19–25. ஆதாம் ஏவாளின் வீழ்ச்சி,” என்னைப் பின்பற்றி வாருங்கள்: 2026

ஆதாமும் ஏவாளும்

ஆதாமும் ஏவாளும்–டக்ளஸ் எம்.பிரையர்

ஜனவரி 19–25: ஆதாம் ஏவாளின் வீழ்ச்சி

ஆதியாகமம் 3–4; மோசே 4–5

முதலில், ஆதாம் ஏவாளின் வீழ்ச்சியின் கதை ஒரு சோகம் போல் தோன்றலாம். ஆதாமும் ஏவாளும் அழகிய ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். வேதனை, துக்கம் மற்றும் மரணம் இருக்கும் உலகத்தினுள் அவர்கள் அனுப்பப்பட்டனர் (ஆதியாகமம் 3:16–19 பார்க்கவும்). அவர்கள் தங்கள் பரலோக பிதாவிடமிருந்து பிரிக்கப்பட்டார்கள். ஆனால் மோசே புத்தகத்தில் ஜோசப் ஸ்மித் தீர்க்கதரிசி மூலம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சத்தியங்கள் வீழ்ச்சியைப் பற்றிய தனித்துவமான கண்ணோட்டத்தை நமக்குத் தருகின்றன.

ஆம், ஏதேன் தோட்டம் அழகாக இருந்தது. ஆனால் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அழகான சூழலை விட வேறு ஏதோ தேவைப்பட்டது. அவர்களுக்கும், நம் அனைவருக்கும் வளர, ஒரு வாய்ப்பு தேவைப்பட்டது. ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறுவது தேவனிடம் திரும்பி வருவதற்கும், இறுதியில் அவரைப் போல மாறுவதற்கும் தேவையான முதல் படியாகும். அதாவது எதிர்ப்பை எதிர்கொள்வது, தேர்வுகள் செய்வது, தவறுகளைச் செய்வது, மனந்திரும்ப கற்றுக்கொள்வது, இரட்சகரை நம்புவது, அவரின் பாவநிவர்த்தி முன்னேற்றத்தையும் “நம்முடைய மீட்பின் சந்தோஷத்தையும்” சாத்தியப்படுத்துகிறது (மோசே 5:11). ஆகவே, ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சியைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, சோகமாக தோன்றுகிறவைகளில் கவனம் செலுத்தாதீர்கள்,மாறாக சாத்தியங்களில்—ஆதாமும் ஏவாளும் இழந்த பரதீசை அல்ல, ஆனால் அவர்கள் தேர்வினால், நாம் பெற அனுமதிக்கிற மகிமையின் மீது கவனம் செலுத்துங்கள்.

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

ஆதியாகமம் 3; மோசே 4 .

தேவனின் திட்டத்தின் அவசியமான பகுதியாக இந்த வீழ்ச்சி இருந்தது.

ஆதாம் மற்றும் ஏவாளின் தேர்வு பூலோகத்தில் நாம் அனுபவிக்கும் பல கஷ்டங்களுக்கு வழிவகுத்தது என்பது உண்மைதான். ஆனால் அவர்களின் தேர்வுக்கு நாம் வருத்தப்படுகிறோம் என்று அர்த்தமல்ல. ஆதியாகமம் 3 மற்றும் மோசே 4 நீங்கள் வாசிக்கும்போது, தேவனின் திட்டத்திற்கு வீழ்ச்சி ஏன் முக்கியமானது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளலாம்.

மோசே 5:9–12ன் படி, வீழ்ச்சியைப் பற்றி ஆதாமும் ஏவாளும் எப்படி உணர்ந்தார்கள்? இந்த வீழ்ச்சியுற்ற உலகில் உங்கள் அனுபவங்களுக்கு அவர்களின் வார்த்தைகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்? 2 நேபி 2:19–25 லிருந்து நீங்கள் வேறு என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

மோசியா 3:19; ஆல்மா 12:21–37; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:39–43ஐயும் பார்க்கவும்.

ஏவாள் ஒரு ஆப்பிளை வைத்திருத்தல்

ஏதேனை விட்டுச் செல்லுதல்–ஆன்னி ஹென்றி நாடர்

ஆதியாகமம் 3:1–7 ; மோசே 4:22–31 ; 5:4–15

இயேசு கிறிஸ்து நம்பிக்கையையும், மீட்பையும் தருகிறார்.

ஆதாம் மற்றும் ஏவாளின் கதை இயேசு கிறிஸ்துவின் மூலம் நம்பிக்கை மற்றும் மீட்பின் ஒன்றாகும். ஆதியாகமம் 3:1–7; மோசே 4:22–31 இல் ஏன் என்பதைப் பார்க்க, நீங்கள் வீழ்ச்சியின் விளைவுகளைத் தேடுவதன் மூலம் தொடங்கலாம், மற்றும் நீங்கள் கண்டறிவதைக் குறிக்கவும் அல்லது பட்டியலிடவும். இந்த விளைவுகள் உங்களை எவ்வாறு பாதிக்கின்றன? இந்த விளைவுகளிலிருந்து நம்மை மீட்பதற்கான தேவனின் திட்டத்தை, மோசே 5:4–15 இல் நீங்கள் தேடலாம். ஆதாமும் ஏவாளும் தூதன் அவர்களைச் சந்தித்த பிறகு ஏன் “மகிழ்ச்சி” அடைந்தார்கள்? பரலோக பிதாவின் திட்டத்தைப்பற்றி அவர்களிடமிருந்து நீங்கள் என்ன அறிந்துகொள்கிறீர்கள்?

See also “Because of Him” (video), Gospel Library.

2:44

Because of Him

ஆதியாகமம் 3:16 ; மோசே 4:22

ஆதாம் ஏவாளை “ஆண்டு கொள்ளுதல்” என்பதன் அர்த்தம் என்ன?

ஒரு கணவன் தன் மனைவியை இரக்கமற்ற முறையில் நடத்துவது நியாயமானது என்று வேதத்தின் இந்தப் பகுதி சில சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. நம் நாளில், குடும்பத்தில் தங்கள் தெய்வீக பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் சம பங்காளிகளாகப் பார்க்க வேண்டும் என்று கர்த்தரின் தீர்க்கதரிசிகள் போதித்துள்ளனர் ( “குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்” [சுவிசேஷ நூலகம்] பார்க்கவும்). ஒரு நேர்மையான கணவர் “ஊழியம் செய்ய நாடுவார், அவர் பிழையை ஒப்புக் கொண்டு மன்னிப்பை நாடுவார்; அவர் விரைவாக புகழ்வார்; அவர் குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை கருத்தில் கொள்வார்; அவர் தனது குடும்பத்தின் ‘வாழ்க்கை மற்றும் பாதுகாப்பின் தேவைகளை’ வழங்குவதற்கான பெரும் பொறுப்பை உணருவார்; அவர் தனது மனைவியை மிகுந்த மரியாதையுடனும் மதிப்புடனும் நடத்துவார் என மூப்பர் டேல் ஜி.ரென்லன்டும், சகோதரி ரூத் லிபர்ட் ரென்லன்டும், விளக்கினர். … அவர் தனது குடும்பத்தை ஆசீர்வதிப்பார்” (The Melchizedek Priesthood: Understanding the Doctrine, Living the Principles [2018], 23).

மோசே 4:1–4

வேத பாட வகுப்பு சின்னம்
நான் வளர சுயாதீனமும் எதிர்ப்பும் தேவை.

மூப்பர் டேல் ஜி. ரென்லண்ட் போதித்தார், “நமது பரலோக பிதாவின் இலக்கு, அவருடைய பிள்ளைகள் சரியானதைச் செய்யச் செய்வதல்ல; அவருடைய பிள்ளைகள் சரியானதைச் செய்யத் தேர்ந்தெடுத்து இறுதியில் அவரைப் போல் ஆக வேண்டும் என்பதே.”(“Choose You This Day,” Liahona, Nov. 2018, 104). பரலோக பிதாவின் திட்டத்தில் நாம் சரியானதைச் செய்யத் தேர்ந்தெடுப்பது ஏன் மிகவும் முக்கியமானது?

மோசே 4:1–4ஐ நீங்கள் வாசிக்கும்போது, ​​பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் உங்கள் தேர்வு செய்யும் உரிமையை—உங்கள் சுயாதீனத்தைப் பாதுகாக்க என்ன செய்தார்கள் என்று பாருங்கள். அவருடைய பாதுகாக்கும் வல்லமையை நீங்கள் எப்படி பெற முடியும்? ஆலோசனைகளுக்காக, “Make inspired choices” பாகத்தை For the Strength of Youth: A Guide for Making Choices (4–5) இல் படிப்பதைக் கருத்தில் கொள்ளவும்.

2 நேபி 2:11–20, 25–30 இல் சுயாதீனம்பற்றி லேகி கற்பித்ததையும் வாசிப்பதைக் கருத்தில் கொள்ளவும். சுயாதீனத்துக்கு எதிர்ப்பு ஏன் தேவை? உங்களை “தேர்வு செய்ய சுதந்திரமாக” ஆக்கியதற்காக இயேசு கிறிஸ்துவுக்கு உங்கள் நன்றியை எவ்வாறு காட்டலாம்? (2 நேபி 2:27).

See also Dallin H. Oaks, “Opposition in All Things,” Liahona, May 2016, 114–17; Topics and Questions, “Agency,” Gospel Library; “Choose the Right,” Hymns, no. 239.

பங்கேற்றலை அதிகரியுங்கள். பல கற்றல் நடவடிக்கைகள் ஒரு தனிநபர், குடும்பம் அல்லது வகுப்பாக செய்யப்படலாம்; சிறிய குழுக்களில்; அல்லது ஜோடிகளாக. வாய்ப்பு இல்லாதவர்களை பங்கேற்க அனுமதிக்க பல்வேறு முறைகளைப் பயன்படுத்தவும். மோசே 4 மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக வழிகாட்டியில் இந்த நிகழ்ச்சிக்கு, நீங்கள் ஒருவரையோ அல்லது குழுவையோ படிக்க அழைக்கலாம் மற்றொரு குழு 2 நேபி 2 இல் உள்ள வசனங்களைப் படிக்கலாம் அவர்கள் அந்தந்த பிரிவில் கற்றுக்கொண்டதை ஒருவருக்கொருவர் கற்பிக்க முடியும்.

மோசே 4:4–12; 5:13–33

சாத்தான் என்னை “ஏமாற்றவும் குருடனாக்கவும்” முயல்கிறான்.

நீங்கள் மோசே 4:4–12, 5:13–33, வாசிக்கும்போது ஆதாமையும் ஏவாளையும் அவர்களது பிள்ளைகளையும் சாத்தான் சோதிக்க முயன்ற வழிகளைப் பட்டியலிடுவதைக் கருத்தில் கொள்ளவும். இன்று அதே விஷயங்களை செய்ய அவன் எப்படி முயற்சிக்கிறான்? சாத்தானின் வஞ்சகங்களை எதிர்க்க பரலோக பிதா உங்களுக்கு எப்படி உதவுகிறார்?

மோசே 4:13–16, 27

“தேவனாகிய கர்த்தராகிய நான் … அவர்களுக்கு உடுத்தினேன்.”

தடைசெய்யப்பட்ட கனியை சாப்பிட்ட பிறகு, ஆதாமும் ஏவாளும் தங்கள் சொந்த நிர்வாணத்தை மறைக்க முயன்றனர். பின்னர், கர்த்தர் அவர்களுக்கு ஆடை அளித்தார், மோசே 4:13–16, 27, நீங்கள் வாசிக்கும்போது, பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ளவும்:

  • நிர்வாணமும் ஆடையும் வேதங்களில் எதைக் குறிக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள் (உதாரணத்துக்கு வெளிப்படுத்தல் 7:9, 13–15; 2 நேபி 9:14; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:22–26, 76 பார்க்கவும்). ஆதாம் மற்றும் ஏவாளின் நிர்வாணம் மற்றும் ஆடை அணிந்த அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

  • நீங்கள் ஆலயத்தில் தரிப்பிக்கப்பட்டிருந்தால், உங்கள் ஆலய வஸ்திரத்தின் முக்கியத்துவத்தையும் அது எதைப் பிரதிபலிக்கிறது என்பதையும் பற்றி ஆதாமும் ஏவாளும் உங்களிடம் என்ன சொல்லக்கூடும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

See also “Sacred Temple Clothing” (video), Gospel Library.

4:12

Sacred Temple Clothing

மோசே 5: 4–9, 16–26

என் பலிகளை நான் மனமுவந்து மற்றும் கீழ்ப்படிதலான இருதயத்துடன் கொடுத்தால் தேவன் ஏற்றுக்கொள்வார்.

நீங்கள் மோசே 5: 4–9, 16–26 படிக்கும்போது, இந்த பலிகளைப்பற்றிய ஆதாம் ஏவாள் மற்றும் அவர்களின் மகன்களான காயீன் மற்றும் ஆபேலின் மனோபாவங்களைக் கருத்தில் கொள்ளுங்கள். ஆபேலின் பலியை கர்த்தர் ஏன் ஏற்றுக்கொண்டார், ஆனால் காயீனின் பலியை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?

கர்த்தர் உங்களிடம் எதை தியாகம் செய்யும்படி கேட்கிறார்? அந்த தியாகங்களைப் பற்றி நீங்கள் நினைக்கும் விதத்தை வடிவமைக்கும் ஏதாவது இந்த வசனங்களில் உள்ளதா?

கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.

பிள்ளைகள் பகுதி சின்னம் 01

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

ஆதியாகமம் 3; மோசே 4; 5:8–15

இயேசு கிறிஸ்து நம்மை வீழ்ச்சியிலிருந்து இரட்சிக்கிறார்.

  • ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சியை உங்கள் பிள்ளைகள் நன்கு புரிந்துகொள்ள உதவ, “Adam and Eve” (in Old Testament Stories, 13–16) நீங்கள் படங்களை நகலெடுக்கலாம் மற்றும் அவற்றை வெட்டியெடுக்கலாம். ஆதாம் மற்றும் ஏவாளின் அனுபவங்களைப்பற்றி கலந்துரையாடும்போது படங்களை ஒழுங்காக வைக்க நீங்கள் இணைந்து வேலை செய்யலாம். நீங்கள் செய்யும்போது, ​​பரலோக பிதாவின் திட்டத்தில், ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறுவது ஏன் முக்கியமானது என்பதைப் பற்றி பேசுங்கள்.

  • இயேசு கிறிஸ்து வீழ்ச்சியின் விளைவுகளை எப்படி மேற்கொள்கிறார் என்பதை உங்கள் பிள்ளைகள் புரிந்துகொள்வதன் மூலம் அவருடைய பாவநிவர்த்திக்காக நன்றியுணர்வை உணர முடியும். மோசே 4:25; 6:48; ரோமர் 5:12; 2 நேபி 2:22–23 நீங்கள் ஒன்றாக வாசிக்கும்போது, இந்த வாக்கியத்தை முடிப்பதற்கான வழிகளைக் கண்டறிய உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்: “வீழ்ச்சியின் காரணமாக, நான் …” பின்பு நீங்கள் மோசே 5:8–11, 14–15; 6:59; ஆல்மா 11:42 ஒன்றாக வாசித்து, அவர்கள் இந்த வாக்கியத்தை முடிக்க முடியும்: “இயேசு கிறிஸ்துவின் காரணமாக, நான்…”, இயேசு கிறிஸ்துவுக்கான உங்கள் நன்றியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மோசே 4:1–4

நான் சரியானதைத் தேர்ந்தெடுக்கலாம்.

  • சுயாதீனத்தின் கொள்கையை அறிமுகப்படுத்த ஒரு எளிய பொருள்சார் பாடத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்: இந்த வார நிகழ்ச்சி பக்கத்திற்கு வண்ணம் தீட்ட உங்கள் குழந்தைகளை அழைக்கவும், ஆனால் ஒரே ஒரு வண்ணம் மட்டும் கொடுக்கவும் ஏன் தேர்வுகள் பெறுவது சிறப்பாக இருக்கும்? மோசே 4:1–4ஐ நீங்கள் ஒன்றாக வாசித்து, சரி மற்றும் தவறுக்கிடையே நாம் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதைப் பற்றி பேசலாம். பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் எவ்வாறு நல்ல தேர்வுகளைச் செய்ய நமக்கு உதவுகிறார்கள்?

  • உங்கள் பிள்ளைகள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு அவர்கள் செய்யக்கூடிய நல்ல தேர்வுகளைப் பற்றி சிந்திக்கவும் படங்களை வரையவும் உதவுங்கள். அல்லது நீங்கள் “Choose the Right Way” (Children’s Songbook, 160–61) போன்ற நல்ல தேர்வுகள் செய்வது பற்றி ஒரு பாடலை ஒன்றாகப் பாடலாம். நீங்கள் ஒரு நல்ல தேர்வு செய்த நேரத்தைப் பற்றி நீங்கள் ஒருவருக்கொருவர் சொல்லலாம் மற்றும் அதன் பிறகு நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதைப் பற்றி பேசலாம்.

ஆதாமும் ஏவாளும்

வீழ்ச்சி- ராப்ர்ட் டி. பாரெட்

மோசே 5:4, 8

நான் பரலோகப் பிதாவிடம் ஜெபிக்க முடியும்

  • ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற நேரிட்டபோது, ​​அவர்களால் இனிமேலும் பரலோக பிதாவுடன் இருக்க முடியவில்லை. உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து மோசே 5:4, 8 வாசியுங்கள், அவருக்கு அருகிலிருக்க உணரவும் அவரைக் கேட்கவும் ஆதாமும் ஏவாளும் என்ன செய்தார்கள் என்பதைக் கண்டறியவும். நம்முடைய ஜெபங்களில் பரலோக பிதாவிடம் நாம் சொல்லக்கூடிய சில விஷயங்கள் யாவை?

கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

ஆதாமும் ஏவாளும் ஒரு பலிபீடத்தில் பலியிட வேண்டிய ஆட்டுக்குட்டியுடன்

பிதாவின் ஒரே பேறானவரின் பலியின் மாதிரியில்- மைக் மாம் (மோசே 5:5–9 பார்க்கவும்)

ஆரம்ப வகுப்பு நிகழ்ச்சி பக்கம்: ஆதாம், ஏவாளின் வீழ்ச்சி