“18. ஆசாரியத்துவ நியமங்கள் மற்றும் ஆசீர்வாதங்களை நிறைவேற்றுதல்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).
“18. ஆசாரியத்துவ நியமங்கள் மற்றும் ஆசீர்வாதங்களை நிறைவேற்றுதல்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை
18.
ஆசாரியத்துவ நியமங்கள் மற்றும் ஆசீர்வாதங்களை நிறைவேற்றுதல்
18.0
முன்னுரை
நியமங்களும் ஆசீர்வாதங்களும் ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தால் மற்றும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் செய்யப்படும் பரிசுத்தமான செயல்கள் ஆகும். ஆசாரியத்துவ நியமங்களும் ஆசீர்வாதங்களும் தேவனின் வல்லமையை பெறுதலை அனுமதிக்கின்றன (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:20 ஐப் பார்க்கவும்).
நியமங்களும் ஆசீர்வாதங்களும் பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசத்தோடும் பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலின்படியும் செய்யப்பட வேண்டும். அவை சரியான அங்கீகாரத்துடன் (தேவைப்படும்போது), தேவையான ஆசாரியத்துவ அதிகாரத்துடன், சரியான முறையில் மற்றும் தகுதியான பங்கேற்பாளர்களால் செய்யப்படுவதைத் தலைவர்கள் உறுதி செய்கிறார்கள் (18.3 பார்க்கவும்).
18.1
இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலுக்கான நியமங்கள்
ஆசாரியத்துவம் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலுக்கு தேவையான சுவிசேஷ நியமங்களை நிர்வகிப்பதற்கான அதிகாரத்தை உள்ளடக்கியது. இந்த நியமங்களைப் பெறும்போது மக்கள் தேவனுடன் பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்கிறார்கள். இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலுக்கான நியமங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
-
ஞானஸ்நானம்
-
திடப்படுத்தலும் பரிசுத்த ஆவியின் வரமும்
-
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை அருளுதல் மற்றும் ஒரு அலுவலுக்கு (ஆண்களுக்கு) நியமனம்
-
ஆலய தரிப்பி்த்தல்
-
ஆலய முத்திரித்தல்
உடன்படிக்கையில் பிறந்த குழந்தை 8 வயதுக்கு முன் இறந்துவிட்டால், எந்த நியமங்களும் தேவையில்லை அல்லது நிறைவேற்ற வேண்டியதில்லை. உடன்படிக்கையில் குழந்தை பிறக்கவில்லை என்றால், அவன் அல்லது அவள் பெற்றோருடன் முத்திரிக்கப்படுவது மட்டுமே தேவையான ஒரே நியமம். இரட்சகரின் பாவநிவர்த்தியின் காரணமாக, 8 வயதுக்கு முன் இறக்கும் அனைத்து குழந்தைகளும் “பரலோகத்தின் சிலஸ்டியல் ராஜ்யத்தில் இரட்சிக்கப்படுகிறார்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137:10; மரோனி 8:8–12 ஐயும் பார்க்கவும்).
18.3
ஒரு நியமம் அல்லது ஆசீர்வாதத்தில் பங்கேற்றல்
ஒரு நியமத்தை அல்லது ஆசீர்வாதத்தை நிறைவேற்றுபவர்கள் அல்லது அதில் பங்கேற்பவர்கள் அவசியமான ஆசாரியத்துவ அதிகாரம் பெற்று தகுதியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் பொதுவாக, ஒரு ஆலய பரிந்துரை வைத்திருப்பது தகுதியின் தரத்துடன் தொடர்புடையது. இருப்பினும், ஆவியானவர் மற்றும் இந்த அத்தியாயத்தில் உள்ள அறிவுறுத்தல்களின்படி, ஆயர்களும் பிணையத் தலைவர்களும் தேவையான ஆசாரியத்துவ அலுவலை வகிக்கும் தகப்பன்கள் மற்றும் கணவர்கள் முழுமையாக ஆலயத்திற்கு தகுதியற்றவர்களாக இருந்தாலும் சில நியமங்கள் மற்றும் ஆசீர்வாதங்களை செய்ய அல்லது பங்கேற்க அனுமதிக்கலாம். தீர்க்கப்படாத கடுமையான பாவங்களை செய்திருக்கிற ஆசாரியத்துவம் தரித்திருப்பவர் பங்கேற்கக்கூடாது.
சில கட்டளைகள் மற்றும் ஆசீர்வாதங்களை நிறைவேற்றுவதற்கு அல்லது பெறுவதற்குத் தேவையான ஆசாரியத்துவத் திறவுகோல்களை தரித்திருக்கும் ஒரு தலைமைதாங்கும் தலைவரின் ஒப்புதல் தேவை (3.4.1 பார்க்கவும்). தேவைப்படும்போது, அவர் அங்கீகரிக்கும் ஆலோசகரால் ஒப்புதல் அளிக்கப்படலாம். பின்வரும் விளக்கப்படங்களைப் பார்க்கவும். பிணையத் தலைவர்கள் பற்றிய குறிப்புகள் ஊழியத் தலைவர்களுக்கும் பொருந்தும். ஆயர்களைப் பற்றிய குறிப்புகள் கிளைத் தலைவர்களுக்கும் பொருந்தும்.
இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலுக்கான நியமங்களை நிறைவேற்றுவதற்கு அல்லது பெறுவதற்கு ஒப்புதல் அளிக்க எந்தத் தலைவர்கள் திறவுகோல் தரித்திருக்கிறார்கள்?
|
நியமம் |
திறவுகோல்களைத் தரித்தவர்கள் யார் |
|---|---|
நியமம் ஞானஸ்நானம் | திறவுகோல்களைத் தரித்தவர்கள் யார் ஆயர் (8 வயது குழந்தைகள் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் காரணமாக ஞானஸ்நானம் தாமதமான 9 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய உறுப்பினர்களுக்கு) ஊழியத் தலைவர் (மனமாறியவர்களுக்கு) |
நியமம் திடப்படுத்தலும் பரிசுத்த ஆவியின் வரமும் | திறவுகோல்களைத் தரித்தவர்கள் யார் ஆயர் (8 வயது குழந்தைகள் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் காரணமாக ஞானஸ்நானம் தாமதமான 9 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய உறுப்பினர்களுக்கு) ஊழியத் தலைவர் (மனமாறியவர்களுக்கு) |
நியமம் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை அருளுதல் மற்றும் ஒரு அலுவலுக்கு (ஆண்களுக்கு) நியமனம் | திறவுகோல்களைத் தரித்தவர்கள் யார் பிணைய தலைவர் |
நியமம் ஆலய தரிப்பி்த்தல் | திறவுகோல்களைத் தரித்தவர்கள் யார் ஆயர் மற்றும் கிளைத் தலைவர் |
நியமம் ஆலய முத்திரித்தல் | திறவுகோல்களைத் தரித்தவர்கள் யார் ஆயர் மற்றும் கிளைத் தலைவர் |
பிற நியமங்கள் மற்றும் ஆசீர்வாதங்களை நிறைவேற்றுவதற்கு அல்லது பெறுவதற்கு எந்தத் தலைவர்கள் திறவுகோல்களை தரித்திருக்கிறார்கள்?
|
நியமம் அல்லது ஆசீர்வாதம் |
திறவுகோல்களைத் தரித்தவர்கள் யார் |
|---|---|
நியமம் அல்லது ஆசீர்வாதம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி ஆசிர்வதித்தல் | திறவுகோல்களைத் தரித்தவர்கள் யார் ஆயர் |
நியமம் அல்லது ஆசீர்வாதம் திருவிருந்து | திறவுகோல்களைத் தரித்தவர்கள் யார் ஆயர் |
நியமம் அல்லது ஆசீர்வாதம் ஆரோனிய ஆசாரியத்துவத்தை அருளுதல் மற்றும் ஒரு அலுவலுக்கு நியமனம் (இளைஞர்கள் மற்றும் ஆண்களுக்கு) | திறவுகோல்களைத் தரித்தவர்கள் யார் ஆயர் |
நியமம் அல்லது ஆசீர்வாதம் அழைப்புகளில் பணியாற்ற உறுப்பினர்களை பணித்தல் | திறவுகோல்களைத் தரித்தவர்கள் யார் 30.8 பார்க்கவும் |
நியமம் அல்லது ஆசீர்வாதம் எண்ணெயைப் பரிசுத்தப்படுத்தல் | திறவுகோல்களைத் தரித்தவர்கள் யார் ஒப்புதல் தேவையில்லை |
நியமம் அல்லது ஆசீர்வாதம் பிணியாளிகளை ஆசீர்வதித்தல் | திறவுகோல்களைத் தரித்தவர்கள் யார் ஒப்புதல் தேவையில்லை |
நியமம் அல்லது ஆசீர்வாதம் தகப்பனின் ஆசீர்வாதங்கள் உட்பட ஆறுதல் மற்றும் ஆலோசனையின் ஆசீர்வாதங்கள் | திறவுகோல்களைத் தரித்தவர்கள் யார் ஒப்புதல் தேவையில்லை |
நியமம் அல்லது ஆசீர்வாதம் வீடுகளை பிரதிஷ்டை செய்தல் | திறவுகோல்களைத் தரித்தவர்கள் யார் ஒப்புதல் தேவையில்லை |
நியமம் அல்லது ஆசீர்வாதம் கல்லறைகளை பிரதிஷ்டை செய்தல் | திறவுகோல்களைத் தரித்தவர்கள் யார் ஆராதனைக்கு தலைமை தாங்கும் ஆசாரியத்துவ தலைவர் |
நியமம் அல்லது ஆசீர்வாதம் கோத்திர பிதா ஆசீர்வாதங்கள் | திறவுகோல்களைத் தரித்தவர்கள் யார் ஆயர் |
18.4
இளம் குழந்தைகளுக்கான நியமங்கள்
(1) முடிவில் பங்கேற்க சட்டப்பூர்வ உரிமை உள்ள பெற்றோர் அல்லது (2) சட்டபூர்வ பாதுகாவலர்களின் ஒப்புதலுடன், ஒரு இளம் குழந்தை ஆசீர்வதிக்கப்படலாம், ஞானஸ்நானம் பெறலாம், திடப்படுத்தப்படலாம், ஆசாரியத்துவ அலுவலுக்கு நியமிக்கப்படலாம் அல்லது அழைப்பிற்கு பணிக்கப்படலாம்.
18.6
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி ஆசிர்வதித்தல்
குழந்தைகள் பொதுவாக அவர்களின் பெற்றோர் வசிக்கும் தொகுதியில் உபவாச மற்றும் சாட்சி கூட்டத்தின் போது பெயரிடப்பட்டு ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
18.6.1
யார் ஆசீர்வாதம் கொடுக்கிறார்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:70 க்கு இணங்க, மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்களால் ஒரு குழந்தைக்கு பெயரிட்டு ஆசீர்வதிப்பதற்கான நியமம் நிறைவேற்றப்படுகிறது.
ஒரு குழந்தை ஒரு பெயரையும் ஆசீர்வாதத்தையும் பெற வேண்டும் என்று விரும்பும் ஒரு நபர் அல்லது குடும்பம் ஆயருடன் நியமத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துகிறார்கள். தொகுதியில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கும் ஆசீர்வதிப்பதற்கும் அவர் ஆசாரியத்துவ திறவுகோலை தரித்திருக்கிறார்.
ஒரு ஆயர், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை தரித்திருக்கும் ஒரு தகப்பன் முழுமையாக ஆலயத்திற்கு தகுதியற்றவராக இருந்தாலும் தனது குழந்தைக்கு பெயரிட்டு ஆசீர்வதிக்க அனுமதிக்கலாம் (18.3 பார்க்கவும்). ஆயர்கள் தங்கள் சொந்த குழந்தைகளை ஆசீர்வதிக்க தங்களை தயார்படுத்திக்கொள்ள தகப்பன்களை ஊக்குவிக்கிறார்கள்.
18.6.2
அறிவுரைகள்
ஆயத்தின் வழிகாட்டுதலின் கீழ், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் ஒரு குழந்தைக்கு பெயரிட்டு ஆசீர்வதிக்க ஒரு வட்டத்தில் கூடுகிறார்கள். அவர்கள் ஒரு குழந்தையின் கீழ் தங்கள் கைகளை வைக்கிறார்கள், அல்லது அவர்கள் ஒரு பெரிய குழந்தையின் தலையில் தங்கள் கைகளை லேசாக வைக்கிறார்கள். பின்னர் குரலாக செயல்படுபவர்:
-
ஜெபத்தில் இருந்தபடியே பரலோக பிதாவை அழைக்கிறார்.
-
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தால் ஆசீர்வாதம் நிறைவேற்றப்படுகிறது என்று கூறுகிறார்.
-
குழந்தைக்கு ஒரு பெயரைக் கொடுக்கிறார்.
-
குழந்தையை அழைக்கிறார்.
-
ஆவியின் வழிகாட்டுதலின்படி குழந்தைக்கு ஒரு ஆசீர்வாதத்தை அளிக்கிறார்.
-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நிறைவு செய்கிறார்.
18.6.3
குழந்தை பதிவு படிவம் மற்றும் ஆசீர்வாத சான்றிதழ்
ஒரு குழந்தை ஆசீர்வதிக்கப்படுவதற்கு முன், ஒரு எழுத்தர் குழந்தை பதிவுப் படிவத்தைத் தயாரிக்க தலைவர் மற்றும் எழுத்தர் ஆதாரங்களை (LCR) பயன்படுத்துகிறார். ஆசீர்வாதத்திற்குப் பிறகு, அவர் அந்த கணினியில் உறுப்பினர் பதிவேட்டை உருவாக்கி, ஆசீர்வாத சான்றிதழைத் தயாரிக்கிறார். இந்த சான்றிதழில் ஆயர் கையொப்பமிட்டு குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு வழங்கப்படுகிறது.
உறுப்பினர் பதிவேடு மற்றும் சான்றிதழில் உள்ள பெயர், பிறப்புச் சான்றிதழ், உள்ளூர் பிறப்புப் பதிவேடு அல்லது தற்போதைய சட்டபூர்வப் பெயருடன் பொருந்த வேண்டும்.
18.7
ஞானஸ்நானம்
ஒரு நபர் சபையில் உறுப்பினராகி பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு அதிகாரம் உள்ள ஒருவரால் தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுவது அவசியம். மேன்மையடைதல் தேடும் அனைவரும் இந்த நியமங்களைப் பெறுவதன் மூலம் இரட்சகரின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.
18.7.1
ஒரு நபர் ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தப்படுவதற்கான ஒப்புதல்
18.7.1.1
பதிவேட்டில் உள்ள உறுப்பினர்களாக இருக்கும் குழந்தைகள்
ஒரு தொகுதியில் பதிவேட்டிலுள்ள 8 வயது உறுப்பினர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கான ஆசாரியத்துவ திறவுகோலை ஆயர் தரித்திருக்கிறார். இந்த குழந்தைகள் அவர்களின் 8வது பிறந்தநாளில் அல்லது அதற்குப் பிறகு முடிந்தவாறு சீக்கிரமாகவே ஞானஸ்நானம் பெற்று, திடப்படுத்தப்பட வேண்டும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:27 ஐப் பார்க்கவும்). இவர்கள் சபை உறுப்பினர் பதிவேடுகளில் ஏற்கனவே உள்ள குழந்தைகள் (33.6.2 பார்க்கவும்). அவர்கள் 8 வயதை எட்டும்போது, அவர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்படுவதற்கு அவர்களுக்கு எல்லா வாய்ப்பும் இருப்பதை ஆயர் உறுதிசெய்கிறார்.
ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர் ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தப்படுவதற்காக பதிவுசெய்யப்பட்ட குழந்தைகளை நேர்காணல் செய்கிறார். 31.2.3.1ல் அறிவுரைகள் உள்ளன.
ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் பதிவேட்டை நிரப்புவது பற்றிய தகவலுக்கு, 18.8.3 ஐப் பார்க்கவும்.
18.7.1.2
மனமாறியோர்
ஒரு ஊழியத்தில் மனம் மாறியவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கான ஆசாரியத்துவ திறவுகோல்களை ஊழியத் தலைவர் தரித்திருக்கிறார். இந்த காரணத்திற்காக, முழுநேர ஊழியக்காரர்கள் ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தலுக்காக மனம் மாறியவர்களை நேர்காணல் செய்கிறார்கள்.
18.7.2
ஞானஸ்நான ஆராதனைகள்
ஞானஸ்நான ஆராதனை எளிமையானதாகவும், சுருக்கமாகவும், ஆவிக்குரியவிதமாாகவும் மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். இது பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்:
-
முன்னிசை
-
ஆராதனையை நடத்தும் சகோதரரின் சுருக்கமான வரவேற்பு
-
ஒரு தொடக்கப் பாடல் மற்றும் ஜெபம்
-
ஞானஸ்நானம் மற்றும் பரிசுத்த ஆவியின் வரம் போன்ற சுவிசேஷ விஷயங்களில் ஒன்று அல்லது இரண்டு குறுகிய செய்திகள்
-
ஒரு தேர்வுசெய்யப்பட்ட இசை
-
ஞானஸ்நானம்
-
ஞானஸ்நானத்தில் பங்கு பெற்றவர்கள் உலர்ந்த ஆடைகளை மாற்றும்போது, அது பயபக்தியின் நேரம் (இந்த நேரத்தில் பாடல்கள் அல்லது ஆரம்ப வகுப்பு பாடல்கள் இசைக்கப்படலாம் அல்லது பாடப்படலாம்)
-
பதிவேட்டிலுள்ள 8 வயது நிரம்பிய உறுப்பினர்களின் திடப்படுத்தல்; ஆயரால் தீர்மானிக்கப்பட்டால் மனம் மாறியவர்களின் திடப்படுத்தல் (18.8 பார்க்கவும்)
-
விரும்பினால், புதிய மனம் மாறியவர்கள் சாட்சியங்களைப் பகிர்தல்
-
ஒரு நிறைவுப் பாடல் மற்றும் ஜெபம்
-
பின்னிசை
பதிவேட்டிலுள்ள ஒரு குழந்தை ஞானஸ்நானம் பெறத் தயாராகும்போது, ஆயம் மற்றும் ஆரம்ப வகுப்பு தலைமையில் உறுப்பினர் ஒருவர் ஞானஸ்நான ஆராதனையைத் திட்டமிடவும் நேரம் குறிக்கவும் குடும்பத்துடன் ஆலோசனை கூறுகிறார். ஆயத்தின் உறுப்பினர் ஆராதனையை நடத்துகிறார். ஒரே மாதத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஞானஸ்நானம் பெற்றால், அவர்கள் ஞானஸ்நான ஆராதனையைப் பகிர்ந்து கொள்ளலாம்.
பதிவேட்டிலுள்ள பல குழந்தைகளுள்ள பிணையங்களில், பல தொகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் ஒரே ஞானஸ்நான ஆராதனையைப் பகிர்ந்து கொள்ளலாம். பிணையத் தலைமையில் ஒரு உறுப்பினர் அல்லது நியமிக்கப்பட்ட உயர் ஆலோசகர் ஆராதனையை நடத்துகிறார்.
ஒரு தகப்பன் ஆசாரியத்துவத்தைப் பெற்று, ஞானஸ்நானம் கொடுக்கும் வரை குடும்ப உறுப்பினரின் ஞானஸ்நானம் தாமதிக்கப்படக்கூடாது.
ஆயத்தின் வழிகாட்டுதலின் கீழ், தொகுதி ஊழியத் தலைவர் (ஒருவர் அழைக்கப்பட்டால்) அல்லது தொகுதியில் ஊழியப் பணியை வழிநடத்தும் மூப்பர்கள் குழுமத் தலைமை உறுப்பினர், மனம் மாறியவர்களுக்கு ஞானஸ்நான ஆராதனைகளைத் திட்டமிட்டு நடத்துகிறார். அவர்கள் முழுநேர ஊழியக்காரர்களுடன் ஒருங்கிணைக்கிறார்கள்.
18.7.3
நியமத்தை யார் நிறைவேற்றுகிறார்கள்
ஞானஸ்நானத்தின் ஒழுங்குமுறை ஒரு ஆசாரியன் அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவரால் நிறைவேற்றப்படுகிறது. ஞானஸ்நானம் நிறைவேற்றுபவர் ஆயரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் (அல்லது முழுநேர ஊழியக்காரர் ஞானஸ்நானம் கொடுத்தால் ஊழியத் தலைவரால்).
ஒரு ஆயர், ஒரு ஆசாரியன் அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருக்கும் தகப்பன் முழுமையாக ஆலயத்திற்கு தகுதியற்றவராக இருந்தாலும் தனது குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்க அனுமதிக்கலாம் ( 18.3 பார்க்கவும்). தங்கள் சொந்த குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்க தங்களை தயார்படுத்திக்கொள்ள தகப்பன்களை ஆயர்கள் ஊக்குவிக்கிறார்கள்.
18.7.4
நியமத்தை எங்கு நிறைவேற்றலாம்
ஞானஸ்நானம் ஒரு ஞானஸ்நான தொட்டி இருக்குமானால் அதில் செய்யப்பட வேண்டும். தொட்டி இல்லை என்றால், பாதுகாப்பான நீர்நிலையைப் பயன்படுத்தலாம்.
பாதுகாப்பிற்காக, ஒரு தொட்டி நிரப்பப்படும் போது பொறுப்புள்ள வயது வந்தவர் இருக்க வேண்டும் மற்றும் அது காலிசெய்யப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, பாதுகாக்கப்படும் வரை அங்கிருக்க வேண்டும். ஒவ்வொரு ஞானஸ்நான ஆராதனைக்குக்குப் பிறகும் தொட்டியை உடனடியாக காலிசெய்ய வேண்டும். தொட்டி பயன்பாட்டில் இல்லாத போது தொட்டியிருக்கும் அறை கதவுகள் பூட்டப்பட வேண்டும்.
18.7.5
உடை
ஞானஸ்நானம் கொடுப்பவர் மற்றும் ஞானஸ்நானம் பெறுபவர் ஈரமாக இருக்கும் போது உடல் தெரியாத வெள்ளை ஆடைகளை அணிவார்கள். ஞானஸ்நானம் கொடுக்கும்போது, ஒரு தரிப்பிக்கப்பட்ட நபர் இந்த ஆடையின் கீழ் ஆலய வஸ்திரம் அணிந்திருப்பார். உள்ளூர் அங்கங்கள் பட்ஜெட் நிதியைப் பயன்படுத்தி ஞானஸ்நான ஆடைகளை வாங்குகின்றன மற்றும் அதன் பயன்பாட்டிற்கு கட்டணம் வசூலிப்பதில்லை.
18.7.6
சாட்சிகள்
தலைமை தாங்கும் தலைவரால் ஏற்கப்பட்ட இரண்டு சாட்சிகள், ஒவ்வொரு ஞானஸ்நானத்தையும் அது முறையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உட்பட சபையின் ஞானஸ்நானம் பெற்ற உறுப்பினர்கள் சாட்சிகளாக இருக்கலாம்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:73 இல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள் சரியாகப் பேசப்படாவிட்டால், ஞானஸ்நானம் மீண்டும் செய்யப்பட வேண்டும். நபரின் உடல், முடி அல்லது ஆடையின் ஒரு பகுதி முழுமையாக மூழ்கவில்லை என்றால் அது மீண்டும் செய்யப்பட வேண்டும்.
18.7.7
அறிவுரைகள்
ஞானஸ்நான நியமத்தை நிறைவேற்ற, ஒரு ஆசாரியர் அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்:
-
ஞானஸ்நானம் பெறுகிற நபருடன் தண்ணீரில் நிற்கிறார்.
-
நபரின் வலது மணிக்கட்டை இடது கையால் பிடித்துக் கொள்கிறார் (வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும்). ஞானஸ்நானம் பெறுபவர், ஆசாரியத்துவம் தரித்தவரின் இடது மணிக்கட்டை தனது இடது கையால் பிடிக்கிறார்.
-
தன் வலது கையை மேல்நோக்கி உயர்த்துகிறார்.
-
அந்த நபரின் முழுப் பெயரைக் கூறி, “இயேசு கிறிஸ்துவினால் ஆணையிடப்பட்டவனாய் நான் உனக்கு பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் அளிக்கிறேன். ஆமென்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:73).
-
அந்நபர் தனது மூக்கை வலது கையால் பிடிக்கச் செய்து (வசதிக்காக); பின்னர் தன் வலது கையை அந்த நபரின் மேல்முதுகில் வைத்து, ஆடை உட்பட அந்த நபரை முழுவதுமாக மூழ்கடிக்கிறார்.
-
அவரை தண்ணீரில் இருந்து மேலே வர உதவுகிறார்.
18.8
திடப்படுத்தலும் பரிசுத்த ஆவியின் வரமும்
ஒரு நபர் ஞானஸ்நானம் பெற்ற பிறகு, அவன் அல்லது அவள் சபையின் உறுப்பினராக திடப்படுத்தப்பட்டு, கைகளை வைப்பதன் மூலம் பரிசுத்த ஆவியைப் பெறுகிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:41; அப்போஸ்தலர் 19:1-6 ஐப் பார்க்கவும்). இந்த இரண்டு நியமங்களும் பூர்த்தி செய்யப்பட்டு, முறையாகப் பதிவு செய்யப்பட்ட பிறகு அந்த நபர் சபையின் உறுப்பினராகிறார் (யோவான் 3:5; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 33:11; 3 நேபி 27:20 பார்க்கவும்).
ஆயர் திடப்படுத்தல்களின் நிறைவேறுதல்களை மேற்பார்வையிடுகிறார். எட்டு வயது குழந்தைகள் பொதுவாக ஞானஸ்நானம் பெற்ற நாளில் திடப்படுத்தப்படுகிறார்கள். மனம் மாறியவர்கள் குறிப்பாக அவர்கள் வசிக்கும் தொகுதியில் எந்த ஒரு திருவிருந்து கூட்டத்திலும் திடப்படுத்தப்படுவார்கள், அவர்களின் ஞானஸ்நானத்திற்குப் பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னுரிமையளிக்கப்படுகிறது.
ஆயத்தின் உறுப்பினர் புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்தும் போது 29.2.1.1 இல் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறார்.
18.8.1
நியமத்தை யார் நிறைவேற்றுகிறார்கள்
ஆலய தகுதிபெற்ற ஒரு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர் மட்டுமே திடப்படுத்தப்படுதலின் குரலாக இருக்க முடியும். இருப்பினும், ஒரு ஆயர், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை தரித்திருக்கும் ஒரு தகப்பனை, முழுமையாக ஆலய தகுதி பெறாதவராக இருந்தாலும், அவரது குழந்தையின் திடப்படுத்தலுக்காக வட்டத்தில் நிற்க அனுமதிக்கலாம் (18.3 பார்க்கவும்).
குறைந்தபட்சம் ஒரு ஆயத்தின் உறுப்பினர் இந்த நியமத்தில் பங்கேற்கிறார். மனம் மாறிய ஒருவருக்கு ஊழியக்கார மூப்பர்கள் கற்பித்தவுடன், ஆயர் அவர்களை பங்கேற்க அழைக்கிறார்.
18.8.2
அறிவுரைகள்
ஆயத்தின் வழிகாட்டுதலின் கீழ், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் திடப்படுத்தலில் பங்கேற்கலாம். அவர்கள் தங்கள் கைகளை நபரின் தலையில் லேசாக வைக்கிறார்கள். பின்னர் குரலாக செயல்படுபவர்:
-
அந்நபரை அவரது முழுப் பெயரால் அழைக்கிறார்.
-
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தால் நியமம் நிறைவேற்றப்படுகிறது என்று கூறுகிறார்.
-
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் அங்கத்தினராக திடப்படுத்துகிறார்.
-
“பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்” (“பரிசுத்த ஆவியின் வரத்தை அல்ல”).
-
ஆவியின் வழிகாட்டுதலின்படி ஆசீர்வாத வார்த்தைகளை அளிக்கிறார்.
-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நிறைவு செய்கிறார்.
18.8.3
ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் பதிவேடு மற்றும் சான்றிதழ்
பதிவேட்டில் உறுப்பினராக இருக்கும் குழந்தை ஞானஸ்நானத்திற்காக நேர்காணல் செய்யப்படுவதற்கு முன்பு, ஒரு எழுத்தர் LCR ஐப் பயன்படுத்தி ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் படிவத்தைத் தயாரிக்கிறார். ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர் நேர்காணலை நடத்தி படிவத்தில் கையெழுத்திடுகிறார். ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தலுக்குப் பிறகு, LCR இல் குழந்தையின் உறுப்பினர் பதிவேட்டை புதுப்பிக்க ஒரு எழுத்தர் இந்தப் படிவத்தைப் பயன்படுத்துகிறார்.
முழுநேர ஊழியக்காரர் மனம்மாறிய ஒருவரை ஞானஸ்நானத்திற்காக நேர்காணல் செய்யும்போது, அவர் பிரதேச புத்தக திட்ட (ABP) பயன்பாட்டைப் பயன்படுத்தி ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் பதிவேட்டை நிரப்புகிறார். ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தலுக்குப் பிறகு, ஊழியக்காரர்கள் ABPயில் தகவல்களைப் பதிவுசெய்து மின்னணு முறையில் தொகுதி எழுத்தரிடம் சமர்ப்பிக்கிறார்கள். தொகுதி எழுத்தர் LCR இல் உள்ள தகவலை மதிப்பாய்வு செய்து உறுப்பினர் பதிவேட்டை உருவாக்குகிறார்.
உறுப்பினர் பதிவேடு உருவாக்கப்பட்ட பிறகு, ஒரு எழுத்தர் ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் சான்றிதழைத் தயாரிக்கிறார். இந்த சான்றிதழில் ஆயர் கையொப்பமிட்டு அந்த நபருக்கு வழங்கப்படுகிறது.
உறுப்பினர் பதிவேடு மற்றும் சான்றிதழில் உள்ள பெயர், பிறப்புச் சான்றிதழ், உள்ளூர் பிறப்புப் பதிவேடு அல்லது தற்போதைய சட்டபூர்வப் பெயருடன் பொருந்த வேண்டும்.
18.9
திருவிருந்து
சபை உறுப்பினர்கள் தேவனை ஆராதிக்கவும், திருவிருந்தில் பங்குபெறவும் ஓய்வு நாளில் சந்திக்கிறார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:75; 59:9; மரோனி 6:5–6 ஐப் பார்க்கவும்). இந்த நியமத்தின் போது, இரட்சகரின் மாம்சத்தையும் இரத்தத்தையும் தியாகம் செய்ததை நினைவுகூரவும், தங்கள் பரிசுத்த உடன்படிக்கைகளை புதுப்பிக்கவும் அவர்கள் அப்பத்தையும் தண்ணீரையும் எடுக்கிறார்கள்.(மத்தேயு 26:26–28; ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, மாற்கு 14:20–25; லூக்கா 22:15–20; 3 நேபி 18; மரோனி 6:6 பார்க்கவும்).
18.9.1
திருவிருந்தை நிர்வகிப்பதற்கான ஒப்புதல்
தொகுதியில் திருவிருந்தை நிர்வகிப்பதற்கான ஆசாரியத்துவ திறவுகோலை ஆயர் தரித்திருக்கிறார். திருவிருந்தை ஆயத்தப்படுத்துவதிலும், ஆசீர்வதிப்பதிலும், பரிமாறுவதிலும் பங்கேற்கும் அனைவரும் அவரிடமிருந்தோ அல்லது அவருடைய வழிகாட்டுதலின் கீழ் உள்ள ஒருவரிடமிருந்தோ ஒப்புதல் பெற வேண்டும்.
18.9.2
நியமத்தை யார் நிறைவேற்றுகிறார்கள்
-
ஆசிரியர்கள், ஆசாரியர்கள் மற்றும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் திருவிருந்தை ஆயத்தம் செய்யலாம்.
-
ஆசாரியர்கள் மற்றும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் திருவிருந்தை ஆசீர்வதிக்கலாம்.
-
உதவிக்காரர்கள், ஆசிரியர்கள், ஆசாரியர்கள், மற்றும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் திருவிருந்தை பரிமாறலாம்.
18.9.3
திருவிருந்துக்கான வழிகாட்டுதல்கள்
திருவிருந்தின் பரிசுத்த தன்மை காரணமாக, அது ஒழுங்காகவும் பயபக்தியுடனும் இருக்கும்படிக்கு, ஆசாரியத்துவ தலைவர்கள் கவனமாக ஆயத்தம் செய்ய வேண்டும்.
திருவிருந்தை நிர்வகிப்பவர்கள் கர்த்தரின் பிரதிநிதியாக இருகக்கிறார்கள் என்பதை உணர்ந்து கண்ணியமான முறையில் செய்ய வேண்டும்.
திருவிருந்தை பரிமாறுதல் இயற்கையானதாக இருக்க வேண்டும் மற்றும் அதிக முறையானதாக இருக்கக்கூடாது.
திருவிருந்து சபை உறுப்பினர்களுக்கானது என்றாலும், மற்றவர்கள் அதில் பங்கு பெறுவதைத் தடுக்க எதுவும் செய்யக்கூடாது.
18.9.4
அறிவுரைகள்
-
திருவிருந்தை ஆயத்தம் செய்பவர்கள், ஆசீர்வதிப்பவர்கள் அல்லது பரிமாறுபவர்கள் முதலில் தங்கள் கைகளை சோப்பு அல்லது பிற சுத்திகரிப்பவைகள் கொண்டு கழுவ வேண்டும்.
-
ஆசிரியர்கள், ஆசாரியர்கள் அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள், அப்ப தட்டுகள் உடையாத அப்பங்கள், கோப்பைகள் சுத்தமான தண்ணீருடன் தண்ணீர் தட்டுகள் மற்றும் சுத்தமான மேஜை துணிகள் ஆகியவை கூட்டத்திற்கு முன் இருப்பதை உறுதி செய்கின்றனர்.
-
தொகுதி உறுப்பினர்கள் திருவிருந்து பாடலைப் பாடும்போது, திருவிருந்தை ஆசீர்வதிப்பவர்கள் பயபக்தியுடன் நின்று, அப்பத் தட்டுகளை மூடும் துணியை அகற்றி, அப்பத்தை கடி அளவு துண்டுகளாக பிட்கிறார்கள்.
-
பாடலுக்குப் பிறகு, அப்பத்தை ஆசீர்வதிப்பவர் மண்டியிட்டு அப்பத்துக்கான ஜெபத்தை கூறுகிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77 ஐப் பார்க்கவும்).
-
திருவிருந்து ஜெபங்கள் தெளிவாகவும், துல்லியமாகவும், கண்ணியத்துடனும் பேசப்படுவதை ஆயர் உறுதி செய்கிறார். யாராவது வார்த்தைகளில் பிழை செய்து தன்னைத் திருத்திக் கொண்டால், அதற்கு மேல் திருத்தம் தேவையில்லை. அந்த நபர் தனது தவறை சரிசெய்யவில்லை என்றால், ஆயர் அவரை மீண்டும் ஜெபம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறார்.
-
ஜெபத்துக்குப் பிறகு, ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் பயபக்தியுடன் அப்பத்தை உறுப்பினர்களுக்கு பரிமாறுகிறார்கள். தலைமை தாங்கும் தலைவர் முதலில் அதைப் பெறுகிறார், அதன் பிறகு எந்த ஒழுங்கமைப்பும் இல்லை. ஒரு தட்டு உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதும், அவர்கள் அதை ஒருவருக்கொருவர் அனுப்பலாம்.
-
முடிந்தால் உறுப்பினர்கள் தங்கள் வலது கையால் எடுக்கிறார்கள்.
-
அப்பம் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டதும், திருவிருந்தைப் பரிமாறுபவர்கள் மேசைக்கு தட்டுகளைத் திருப்பி எடுத்துச் செல்கிறார்கள். திருவருந்தை ஆசீர்வதிப்பவர்கள் அப்பத் தட்டுகளின் மேல் ஒரு துணியை வைத்து தண்ணீர் தட்டுகளை திறக்கிறார்கள்.
-
தண்ணீரை ஆசீர்வதிக்கும் நபர் மண்டியிட்டு, தண்ணீருக்கான பரிசுத்த ஜெபத்தைச் சொல்கிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:79 ஐப் பார்க்கவும்). அவர் திராட்சை ரசம் என்ற சொல்லுக்கு பதிலாக தண்ணீர் என மாற்றுகிறார்.
-
ஜெபத்துக்குப் பிறகு, ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் பயபக்தியுடன் தண்ணீரை உறுப்பினர்களுக்கு பரிமாறுகிறார்கள். தலைமை தாங்கும் தலைவர் முதலில் அதைப் பெறுகிறார், அதன் பிறகு எந்த ஒழுங்கமைப்பும் இல்லை.
-
அனைத்து உறுப்பினர்களுக்கும் தண்ணீர் பரிமாறப்பட்டதும், திருவிருந்தை பரிமாறுபவர்கள் அந்த தட்டுகளை திருவிருந்து மேசைக்கு திருப்பி எடுத்துச் செல்கிறார்கள். திருவிருந்தை ஆசீர்வதித்தவர்கள் தட்டுகளின் மேல் ஒரு துணியை வைக்கிறார்கள், மேலும் திருவிருந்தை ஆசீர்வதித்து நிறைவேற்றியவர்கள் பயபக்தியுடன் தங்கள் இருக்கைகளில் அமர்கிறார்கள்.
-
கூட்டத்திற்குப் பிறகு, திருவிருந்தை ஆயத்தம் செய்தவர்கள் சுத்தம் செய்து, மேஜை துணிகளை மடித்து, பயன்படுத்தப்படாத அப்பங்களை அகற்றுவார்கள்.
18.10
ஆசாரியத்துவத்தை அருளுதல் மற்றும் ஒரு அலுவலுக்கு நியமனம் செய்தல்
ஆசாரியத்துவத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன: ஆரோனிய மற்றும் மெல்கிசேதேக்கு (3.3; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:1, 6 ஐப் பார்க்கவும்). ஒரு நபருக்கு ஆசாரியத்துவம் வழங்கப்படும் போது, அவர் அந்த ஆசாரியத்துவத்தில் ஒரு அலுவலுக்கு நியமிக்கப்படுகிறார். இந்த ஆசாரியத்துவங்களில் ஏதேனும் ஒன்று அருளப்பட்ட பிறகு, ஒரு மனிதன் அந்த ஆசாரியத்துவத்தில் உள்ள மற்ற அலுவல்களுக்கு மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.
18.10.1
மெல்கிசெதேக்கு ஆசாரியத்துவம்
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை அருளுவதற்கும், மூப்பர் மற்றும் பிரதான ஆசாரியரின் அலுவல்களுக்கு நியமனம் செய்வதற்கும் ஆசாரியத்துவத் திறவுகோல்களை பிணையத் தலைவர் தரித்திருக்கிறார். இருப்பினும், ஆயர் பொதுவாக இந்த நியமனங்களுக்கான பரிந்துரைகளை வழங்குகிறார்.
18.10.1.1
மூப்பர்கள்
தகுதியான சகோதரர்கள் அவர்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்கும்போது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைப் பெறலாம் மற்றும் மூப்பர்களாக நியமிக்கப்படலாம். தனிப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில், ஆயர் ஒரு இளைஞனை அவரது 18வது பிறந்தநாளுக்குப் பிறகு விரைவில் மூப்பராக நியமிக்க பரிந்துரைக்கப்பட வேண்டுமா அல்லது ஆசாரியர்கள் குழுமத்தில் இன்னும் சிறிது காலம் இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கிறார்.
இந்த முடிவை எடுப்பதில், ஆயர் முதலில் அந்த இளைஞன் மற்றும் அவனது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் கலந்தாலோசிக்கிறார். தகுதியான ஆண்கள் 19 வயதிற்குள் அல்லது கல்லூரிக்குச் செல்வதற்கு, முழு நேர ஊழியக்காரராக சேவையாற்றுவதற்கு, இராணுவத்தில் பணியாற்றுவதற்கு அல்லது முழுநேர வேலைவாய்ப்பை ஏற்றுக்கொள்வதற்கு வீட்டை விட்டு வெளியேறும் முன் மூப்பராக நியமிக்கப்பட வேண்டும்.
சமீபத்தில் ஞானஸ்நானம் பெற்ற 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்கள், பின்வருவனவற்றைப் பெற்ற பிறகு மூப்பர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்:
-
ஆரோனிய ஆசாரியத்துவத்தைப் பெற்று ஆசாரியர்களாகப் பணியாற்றினர்.
-
சுவிசேஷம் பற்றிய போதிய புரிதலை வளர்த்துக் கொண்டனர்.
-
தங்கள் தகுதியை நிரூபித்தனர்.
சபை உறுப்பினராக குறிப்பிட்ட நேரம் தேவையில்லை.
18.10.1.2
பிரதான ஆசாரியர்கள்
பிணையத் தலைமை, உயர் ஆலோசனைக்குழு அல்லது ஆயத்துக்கு அழைக்கப்படும் போது ஆண்கள் பிரதான ஆசாரியர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
18.10.1.3
நேர்காணல் மற்றும் ஆதரித்தல்
பிணைய தலைமையின் ஒப்புதலுடன், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ நியமனப் பதிவேட்டில் அறிவுறுத்தப்பட்டபடி ஆயர் சகோதரரை நேர்காணல் செய்கிறார். அப்போது பிணைய தலைமை உறுப்பினரும் அவரை நேர்காணல் செய்கிறார். ஊழியத் தலைவரின் ஒப்புதலுடன், சேகரத் தலைவர் ஒரு சகோதரரை மூப்பராக நியமிக்க நேர்காணல் செய்யலாம் (6.3 பார்க்கவும்).
18.10.2
ஆரோனிய ஆசாரியத்துவம்
ஆரோனிய ஆசாரியத்துவத்தை அருளுவதற்கும், உதவிக்காரர், ஆசிரியர் மற்றும் ஆசாரியர் அலுவல்களுக்கு நியமனம் செய்வதற்கும் ஆயர் ஆசாரியத்துவ திறவுகோல்களை தரித்திருக்கிறார். தகுதியான சகோதரர்கள் பொதுவாக பின்வரும் வயதில் இந்த அலுவல்களுக்கு குறிப்பாக நியமிக்கப்படுவார்கள், ஆனால் அதற்கு முன் அல்ல:
-
உதவிக்காரர் ஆண்டின் தொடக்கத்தில் அவர்களுக்கு 12 வயதாகும்போது
-
ஆசிரியர் ஆண்டின் தொடக்கத்தில் அவர்களுக்கு 14 வயதாகும்போது
-
ஆசாரியர் ஆண்டின் தொடக்கத்தில் அவர்களுக்கு 16 வயதாகும்போது
ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர், உதவிக்காரர்களாக அல்லது ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களை நேர்காணல் செய்து, அவர்கள் ஆவிக்குரிய விதமாக தயாராக இருக்கிறார்களா என்பதைத் தீர்மானிக்கிறார்கள். ஆசாரியர்களாக நியமிக்கப்படும் சகோதரர்களை ஆயர் நேர்காணல் செய்கிறார்.
ஆசாரியத்துவ நியமனத்திற்காக ஒரு இளைஞனை நேர்காணல் செய்வதற்கு முன், ஆயத்தின் உறுப்பினர் அந்த இளைஞனின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் அனுமதி பெறுகிறார். பெற்றோர்கள் விவாகரத்து பெற்றிருந்தால், அவர் சட்டப்பூர்வ பாதுகாவலராகிய பெற்றோரிடம் அனுமதி பெறுகிறார்.
18.10.3
ஒரு உறுப்பினரை அவர் நியமிக்கப்படுவதற்கு முன்பு ஆதரிக்கப்பட முன்வைக்க வேண்டும்
ஒரு சகோதரர் நேர்காணல் செய்யப்பட்டு, ஆசாரியத்துவ அலுவலுக்கு நியமிக்கப்படுவதற்கு தகுதியானவர் என்று கண்டறியப்பட்ட பிறகு, அவர் ஆதரிக்கப்படுவதற்காக முன்வைக்கப்படுகிறார். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் பார்க்கவும் 20:65, 67). மூப்பர்கள் அல்லது பிரதான ஆசாரியர்களாக நியமிக்கப்படும் சகோதரர்கள் பிணைய மாநாட்டின் பொது அமர்வில் பிணையத் தலைவர் உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்படுகிறார்கள் (சேகரத் தலைவர்களுக்கான வழிமுறைகளுக்கு 6.3 ஐப் பார்க்கவும்). உதவிக்காரர்களாக, ஆசிரியர்களாக அல்லது ஆசாரியர்களாக நியமிக்கப்பட வேண்டிய சகோதரர்கள் ஒரு ஆயத்தின் உறுப்பினரால் திருவிருந்து கூட்டத்தில் முன்வைக்கப்படுகிறார்கள்.
ஆதரித்தலை நடத்துபவர் சகோதரரை நிற்கச் சொல்கிறார். ஆரோனிய அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் (தேவைப்பட்டால்) மற்றும் சகோதரரை ஆசாரியத்துவ அலுவலை அருளும் முன்மொழிதலை அவர் அறிவிக்கிறார். பின்னர் அவர் முன்மொழிந்ததை ஆதரிக்க உறுப்பினர்களை அழைக்கிறார். உதாரணமாக, ஒரு சகோதரரை மூப்பராக நியமிக்க, அவர் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்:
“[பெயர்] மெல்கிசேதேக்கு ஆசாரித்துவத்தைப் பெற்று மூப்பராக நியமிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம். ஆதரவாக இருப்பவர்கள் அதை உயர்த்திய கையால் தெரிவிக்கலாம். [சுருக்கமாக இடைநிறுத்தவும்.] எதிர்ப்பவர்கள் இருந்தால், அதையும் தெரிவிக்கலாம். [சுருக்கமாக இடைநிறுத்தவும்.]”
நல்ல நிலையில் இருக்கும் ஒரு உறுப்பினர் நியமனத்தை எதிர்த்தால், தலைமை தாங்கும் தலைவர் அல்லது நியமிக்கப்பட்ட மற்றொரு ஆசாரியர் கூட்டத்திற்குப் பிறகு அவரை அல்லது அவளை தனிப்பட்ட முறையில் சந்திப்பார். உறுப்பினர் ஏன் எதிர்க்கிறார் என்பதை தலைவர் புரிந்து கொள்ள முற்படுகிறார். ஆசாரியர் அலுவலுக்கு நியமிக்கப்பட்ட நபரை தகுதி நீக்கம் செய்யக்கூடிய நடத்தையை உறுப்பினர் அறிந்திருந்தால் அவர் கற்றுக்கொள்கிறார்.
சில சமயங்களில், ஒரு சகோதரர் பிணைய மாநாட்டில் முன்வைக்கப்படுவதற்கு முன், ஒரு மூப்பர் அல்லது பிரதான ஆசாரியராக நியமிக்கப்பட வேண்டியிருக்கலாம். இது நிகழும்போது, அவர் தனது தொகுதி திருவிருந்து கூட்டத்தில் ஆதரிக்கப்படுவதற்காக முன்வைக்கப்படுகிறார். பின்னர் அவர் அடுத்த பிணைய மாநாட்டில் நியமனத்தை அங்கீகரிப்பதற்காக முன்வைக்கப்படுகிறார் (மேலே விவரிக்கப்பட்ட ஆதரித்தலுக்கான செயல்முறையை தழுவி).
18.10.4
நியமத்தை யார் நிறைவேற்றுகிறார்கள்
பிணையத் தலைவர் அல்லது அவரது வழிகாட்டுதலின் கீழ் ஒரு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர் ஒரு மனிதனை மூப்பர் அலுவலுக்கு நியமிக்கலாம். ஊழியத் தலைவரின் ஒப்புதலுடன், சேகரத் தலைவர் அல்லது அவரது வழிகாட்டுதலின் கீழ் ஒருவர் நியமனம் செய்யலாம் ( 6.3 பார்க்கவும்). மெல்கிசேதேக்கு ஆசாரித்துவம் தரித்திருப்பவர்கள் மட்டுமே வட்டத்தில் நிற்க முடியும்.
பிணையத் தலைவர் அல்லது அவரது வழிகாட்டுதலின் கீழ் ஒரு பிரதான ஆசாரியர் ஒருவரைப் பிரதான ஆசாரியர் அலுவலுக்கு நியமிக்கலாம். பிரதான ஆசாரியர்கள் மட்டுமே வட்டத்தில் நிற்க முடியும்.
ஒரு மனிதனை மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ அலுவலுக்கு நியமிப்பவர் ஆலயத் தகுதியானவராக இருக்க வேண்டும். பிணையத் தலைவர் அல்லது அவர் நியமிக்கும் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
ஒரு ஆசாரியர் அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர் ஒரு சகோதரரை உதவிக்காரர், ஆசிரியர் அல்லது ஆசாரியர் அலுவலுக்கு நியமிக்கலாம். அவர் ஆயரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கவேண்டும் ஆயர் அல்லது அவர் நியமிக்கும் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
ஆரோனிய ஆசாரியத்துவ நியமனத்தில் பங்கேற்க, ஒரு நபர் ஒரு ஆசாரியராக அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவராக இருக்க வேண்டும்.
ஒரு ஆசாரியர் அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருக்கும் ஒரு தகப்பன் முழுவதுமாக ஆலய தகுதி பெறாமல் இருந்தாலும், ஒரு ஆயர், தனது மகனை உதவிக்காரர், ஆசிரியர் அல்லது ஆசாரியர் பதவிக்கு நியமிக்க ஒரு ஆயர் அனுமதிக்கலாம் (18.3 பார்க்கலாம்). தங்கள் சொந்த மகன்களை நியமிக்க தங்களை தயார்படுத்திக்கொள்ள தகப்பன்களை, ஆயர்கள் ஊக்குவிக்கிறார்கள்.
18.10.5
அறிவுரைகள்
ஆசாரியத்துவத்தை அருளுவதற்கும், ஒரு நபரை ஆசாரியத்துவ அலுவலுக்கு நியமிப்பதற்கும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் தங்கள் கைகளை அந்த நபரின் தலையில் லேசாக வைக்கின்றனர். பின்னர் குரலாக செயல்படுபவர்:
-
நபரை அவரது முழுப் பெயரால் அழைக்கிறார்.
-
நியமத்தை நிறைவேற்ற அவர் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் அதிகாரத்தை குறிப்பிடுகிறார் (ஆரோனிய அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம்).
-
ஆரோனிய அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் ஏற்கனவே வழங்கப்படாவிட்டால் அதை அருளுகிறார்.
-
ஆரோனிய அல்லது மெல்கிசேக்கு ஆசாரித்துவத்தில் உள்ள ஒரு அலுவலுக்கு அவரை நியமித்து, அந்த அலுவலின் உரிமைகள், வல்லமைகள் மற்றும் அதிகாரத்தை வழங்குகிறார்.
-
ஆவியின் வழிகாட்டுதலின்படி ஆசீர்வாத வார்த்தைகளை அளிக்கிறார்.
-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நிறைவு செய்கிறார்.
ஏற்கனவே அவருக்கு உரிய ஆசாரியத்துவம் வழங்கப்பட்ட பிறகு, ஒருவரை ஆசாரியர் அலுவலுக்கு நியமிக்க, நியமனம் நிறைவேற்றுபவர் படி 3ஐத் தவிர்க்கிறார்.
18.10.6
நியமன பதிவேடும் சான்றிதழும்
ஆரோனிய ஆசாரியத்துவத்தில் ஒரு அலுவலுக்கு நியமிக்கப்படுவதற்கு ஒரு சகோதரர் நேர்காணல் செய்யப்படுவதற்கு முன்பு, ஒரு எழுத்தர் LCR ஐப் பயன்படுத்தி ஆரோனிய ஆசாரியத்துவ நியமனப் பதிவேட்டைத் தயாரிக்கிறார். ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர் நேர்காணலை நடத்தி அனைத்து தகுதி நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டால் படிவத்தில் கையொப்பமிடுவார்.
நியமனத்திற்குப் பிறகு, ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர் படிவத்தை பூர்த்தி செய்து ஒரு எழுத்தரிடம் கொடுக்கிறார். அவர் LCR நியமனத்தைப் பதிவு செய்து, நியமன சான்றிதழைத் தயாரிக்கிறார்.
ஒரு நபரின் தற்போதைய சட்டப்பூர்வ பெயர், நியமனப் பதிவேடு மற்றும் சான்றிதழில் பயன்படுத்தப்பட வேண்டும்.
18.11
அழைப்புகளில் சேவை செய்ய உறுப்பினர்களை பணித்தல்
பெரும்பாலான சபை பதவிகளுக்கு அழைக்கப்பட்ட மற்றும் ஆதரிக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்த பதவியில் சேவையாற்ற பணிக்கப்பட வேண்டும் (யோவான் 15:16; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:11; இந்த கையேட்டில் 3.4.3.1 ஐயும் பார்க்கவும்). பணிக்கப்படும்போது, அந்த நபருக்கு (1) அழைப்பில் செயல்படுவதற்கான அதிகாரம் மற்றும் (2) ஆவியினால் வழிநடத்தப்படும் ஆசீர்வாத வார்த்தைகள் கொடுக்கப்படுகின்றன.
பிணையத் தலைவர்கள், ஆயர்கள் மற்றும் குழுமத் தலைவர்கள் பணிக்கப்படும்போது தலைமைக்கான திறவுகோல்களைப் பெறுகிறார்கள் (3.4.1.1 பார்க்கவும்). இருப்பினும், தலைமைகளில் உள்ள ஆலோசகர்கள் உட்பட, மற்ற அழைப்புகளில் பணியாற்றுவதற்கு உறுப்பினர்களை பணிக்கும்போது திறவுகோல்கள் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது.
18.11.1
பணித்தலை யார் நிறைவேற்றுகிறார்கள்
ஒரு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவரால் பணித்தல் நிறைவேற்றப்படுகிறது. உரிய ஆசாரியத்துவ திறவுகோல்களை தரித்திருக்கும் தலைவரிடமிருந்து அவர் ஒப்புதல் பெற வேண்டும். பணிக்க அங்கீகாரம் பெற்றவர்கள் 30.8 இல் குறிப்பிடப்பட்டுள்ளனர். பிரதான ஆசாரியராக இருக்க வேண்டிய ஒரு பதவிக்கு ஒருவர் பணிக்கப்படும்போது ஒரு மூப்பர் குரல் கொடுக்கவோ அல்லது வட்டத்தில் நிற்கவோ கூடாது.
தலைமை தாங்கும் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் பணித்தலில் பங்கேற்கலாம். தலைவர்கள் தங்கள் ஆலோசகர்களுக்கு முன்பாக பணிக்கப்படுகின்றனர்.
ஒரு தலைமை தாங்கும் தலைவர், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை தரித்திருக்கும் ஒரு கணவன் அல்லது தகப்பன் முழுமையான ஆலய தகுதியில்லாதவராக இருந்தாலும் தனது மனைவி அல்லது குழந்தைகளைப் பணிப்பதற்காக வட்டத்தில் நிற்க அனுமதிக்கலாம் (18.3 பார்க்கவும்).
18.11.2
அறிவுரைகள்
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் தங்கள் கைகளை அந்த நபரின் தலையில் லேசாக வைப்பார்கள். பின்னர் குரலாக செயல்படுபவர்:
-
அந்நபரை அவரது முழுப் பெயரால் அழைக்கிறார்.
-
அவர் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தில் செயல்படுகிறார் என்று கூறுகிறார்.
-
பிணையம், தொகுதி, குழுமம் அல்லது வகுப்பில் உள்ள அழைப்பிற்கு அந்நபரை பணிக்கிறார்.
-
அந்நபர் அவற்றைப் பெற வேண்டுமானால் திறவுகோல்களை அருளுகிறார்.
-
ஆவியின் வழிகாட்டுதலின்படி ஆசீர்வாத வார்த்தைகளை அளிக்கிறார்.
-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நிறைவு செய்கிறார்.
18.12
எண்ணெயை பரிசுத்தப்படுத்தல்
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்தவர்கள் ஒலிவ எண்ணெயை நோயுற்றவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படுவதற்கு முன்பு அதை பரிசுத்தப்படுத்த வேண்டும் (யாக்கோபு 5:14 ஐப் பார்க்கவும்). வேறு எந்த எண்ணெயும் பயன்படுத்தக்கூடாது.
உறுப்பினர்கள் பரிசுத்தப்படுத்தப்பட்ட எண்ணெயை உட்கொள்ளக்கூடாது அல்லது உடலின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவக்கூடாது.
18.12.1
நியமத்தை யார் நிறைவேற்றுகிறார்கள்
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் எண்ணெயைப் பரிசுத்தப்படுத்தலாம். அவர்கள் ஒரு ஆசாரியத்துவ தலைவரிடம் ஒப்புதல் பெற தேவையில்லை.
18.12.2
அறிவுரைகள்
எண்ணெயைப் பரிசுத்தப்படுத்த, மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்:
-
ஒலிவ எண்ணெய் திறந்த கொள்கலனை ஏந்துகிறார்.
-
ஜெபத்தில் இருந்தபடியே பரலோக பிதாவை அழைக்கிறார்.
-
அவர் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தில் செயல்படுகிறார் என்று கூறுகிறார்.
-
எண்ணெயைப் பரிசுத்தப்படுத்தி (கொள்கலனை அல்ல) அதை அபிஷேகம் செய்வதற்கும் நோயுற்றவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆசீர்வதிப்பதற்கும் தனித்து வைக்கிறார்.
-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நிறைவு செய்கிறார்.
18.13
நோய்வாய்ப்பட்டவர்களுக்கு நிர்வகித்தல்
“கைகளை வைப்பதன் மூலம்” நோய்வாய்ப்பட்டவர்களுக்கு நிர்வகிப்பது இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: எண்ணெய் அபிஷேகம் மற்றும் ஒரு ஆசீர்வாதத்துடன் அபிஷேகத்தை முத்திரித்தல். பரிசுத்தப்படுத்தப்பட்ட எண்ணெய் கிடைக்கவில்லை என்றால், அபிஷேகம் இல்லாமல் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தால் ஆசீர்வாதம் வழங்கப்படலாம்.
18.13.1
யார் ஆசீர்வாதம் கொடுக்கிறார்
தகுதியான மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் மட்டுமே நோயுற்றவர்களுக்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்வகிக்க முடியும். அவர்கள் ஒரு ஆசாரியத்துவ தலைவரிடம் ஒப்புதல் பெற தேவையில்லை. முடிந்தால், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை தரித்திருக்கும் ஒரு தகப்பன் தனது குடும்பத்தின் நோய்வாய்ப்பட்ட உறுப்பினர்களுக்கு நிர்வகிக்கலாம்.
பொதுவாக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு நிர்வகிக்கிறார்கள். இருப்பினும், ஒருவர் அபிஷேகம் மற்றும் முத்திரித்தல் இரண்டையும் செய்யலாம்.
18.13.2
அறிவுரைகள்
எண்ணெய் அபிஷேகம் ஒரு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் உடையவரால் செய்யப்படுகிறது. அவர்:
-
ஒரு துளி பரிசுத்தப்படுத்தப்பட்ட எண்ணெயை நபரின் தலையில் வைக்கிறார்.
-
நபரின் தலையில் அவரது கைகளை லேசாக வைத்து, அந்த நபரை அவரது முழுப் பெயரால் அழைக்கிறார்.
-
அவர் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தில் செயல்படுகிறார் என்று கூறுகிறார்.
-
நோயுற்றவர்களையும் துன்புற்றவர்களையும் அபிஷேகம் செய்து ஆசிர்வதிப்பதற்காகப் பரிசுத்தப்படுத்தப்பட்ட எண்ணெயை அவர் அபிஷேகம் செய்வதாகக் குறிப்பிடுகிறார்.
-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நிறைவு செய்கிறார்.
அபிஷேகத்தை முத்திரிக்க, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் அந்த நபரின் தலையில் தங்கள் கைகளை லேசாக வைக்கின்றனர். பின்னர் அபிஷேகத்தை முத்திரிப்பவர்:
-
அந்நபரை அவரது முழுப் பெயரால் அழைக்கிறார்.
-
அவர் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தால் அபிஷேகத்தை முத்திரிப்பதாகக் கூறுகிறார்.
-
ஆவியின் வழிகாட்டுதலின்படி ஆசீர்வாத வார்த்தைகளை அளிக்கிறார்.
-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நிறைவு செய்கிறார்.
18.14
தகப்பனின் ஆசீர்வாதங்கள் உட்பட ஆறுதல் மற்றும் ஆலோசனையின் ஆசீர்வாதங்கள்
18.14.1
யார் ஆசீர்வாதம் கொடுக்கிறார்
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர்களிடம் கோரும் மற்றவர்களுக்கும் ஆறுதல் மற்றும் ஆலோசனையின் ஆசீர்வாதங்களை வழங்கலாம்.
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை தரித்திருக்கும் ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுக்கு தகப்பனின் ஆசீர்வாதங்களை வழங்கலாம். தேவைப்படும் சமயங்களில் தகப்பனின் ஆசிர்வாதங்களைப் பெற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊக்குவிக்கிறார்கள். தகப்பனின் ஆசீர்வாதங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பதிவு செய்யப்படலாம்.
ஒரு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர் ஆறுதல் மற்றும் ஆலோசனை அல்லது தகப்பனின் ஆசீர்வாதத்தை வழங்க ஒரு ஆசாரியத்துவத் தலைவரிடம் ஒப்புதல் பெறத் தேவையில்லை.
18.14.2
அறிவுரைகள்
ஆறுதல் மற்றும் ஆலோசனை அல்லது தகப்பனின் ஆசீர்வாதத்தை வழங்க, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்தவர்கள் தங்கள் கைகளை அந்த நபரின் தலையில் லேசாக வைக்கின்றனர். பின்னர் குரலாக செயல்படுபவர்:
-
அந்நபரை அவரது முழுப் பெயரால் அழைக்கிறார்.
-
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தால் ஆசீர்வாதம் நிறைவேற்றப்படுகிறது என்று கூறுகிறார்.
-
ஆவியின் வழிகாட்டுதலின்படி ஆசீர்வாதம், ஆறுதல் மற்றும் அறிவுரை வார்த்தைகளை வழங்குகிறார்.
-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நிறைவு செய்கிறார்.
18.15
வீடுகளை பிரதிஷ்டை செய்தல்
சபை உறுப்பினர்கள் தங்கள் வீடுகளை மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தால் பிரதிஷ்டை செய்யலாம்.
18.15.2
அறிவுரைகள்
ஒரு வீட்டை பிரதிஷ்டை செய்ய, மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்:
-
ஜெபத்தில் இருந்தபடியே பரலோக பிதாவை அழைக்கிறார்.
-
அவர் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தில் செயல்படுகிறார் என்று கூறுகிறார்.
-
பரிசுத்த ஆவியானவர் வசிக்கக்கூடிய ஒரு பரிசுத்த இடமாக வீட்டை பிரதிஷ்டை செய்கிறார் மற்றும் ஆவியின் வழிகாட்டுதலின்படி வேறு வார்த்தைகளை வழங்குகிறார்.
-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நிறைவு செய்கிறார்.
18.16
கல்லறைகளை பிரதிஷ்டை செய்தல்
18.16.1
யார் கல்லறையை பிரதிஷ்டை செய்கிறார்
ஒரு கல்லறையை பிரதிஷ்டை செய்பவர் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை தரித்திருக்க வேண்டும் மற்றும் ஆராதனையை நடத்தும் ஆசாரியத்துவ தலைவரால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
18.16.2
அறிவுரைகள்
ஒரு கல்லறையை பிரதிஷ்டை செய்ய, ஒரு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்தவர்:
-
ஜெபத்தில் இருந்தபடியே பரலோக பிதாவை அழைக்கிறார்.
-
அவர் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தில் செயல்படுகிறார் என்று கூறுகிறார்.
-
மரித்தவரின் சரீரத்துக்கு இளைப்பாறும் இடமாக புதைக்கப்பட்ட இடத்தை பிரதிஷ்டை செய்து பரிசுத்தப்படுத்துகிறார்.
-
உயிர்த்தெழுதல் வரை (பொருத்தமானபடி) அந்த இடம் பரிசுத்தமாக பாதுகாக்கப்படவும் ஜெபம் செய்கிறார்.
-
பரலோக பிதாவிடம் குடும்பத்தை ஆறுதல்படுத்தும்படி கேட்கிறார் மற்றும் ஆவியானவரால் வழிநடத்தப்பட்ட எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்.
-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நிறைவு செய்கிறார்.
ஒரு சபை உறுப்பினரின் உடல் தகனம் செய்யப்பட்டால், அஸ்தி வைக்கப்பட்டுள்ள இடத்தை பிரதிஷ்டை செய்யலாமா என்பதைத் தீர்மானிக்க தலைமை தாங்கும் தலைவர் தனது தீர்ப்பைப் பயன்படுத்துகிறார்.
18.17
கோத்திரபிதா ஆசீர்வாதங்கள்
தகுதியுள்ள, ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொரு உறுப்பினரும், பரலோக பிதாவிடமிருந்து உணர்த்தப்பட்ட வழிகாட்டுதலை வழங்கும் கோத்திரபிதா ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள் (ஆதியாகமம் 48:14–16; 49; 2 நேபி 4:3–11 பார்க்கவும்).
ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர் கோத்திரபிதா ஆசீர்வாதத்தைப் பெற விரும்பும் உறுப்பினர்களை நேர்காணல் செய்கிறார். உறுப்பினர் தகுதியானவராக இருந்தால், நேர்காணல் செய்பவர் கோத்திர பிதா ஆசீர்வாதப் பரிந்துரையைத் தயாரிக்கிறார். ChurchofJesusChrist.orgல் அவர் அதை கோத்திர பிதா ஆசீர்வாத அமைப்பு மூலம் சமர்ப்பிக்கிறார்
கோத்திர பிதா ஆசீர்வாதப் பரிந்துரையை வழங்கும் நபர், ஆசீர்வாதத்தின் முக்கியத்துவத்தையும் பரிசுத்த தன்மையையும் புரிந்து கொள்ளும் அளவுக்கு உறுப்பினர் முதிர்ச்சியடைந்திருப்பதை உறுதிசெய்கிறார்.
18.17.1
கோத்திர பிதா ஆசிர்வாதம் பெறுதல்
ஒரு பரிந்துரையைப் பெற்ற பிறகு, கோத்திர பிதா ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கான சந்திப்பை ஏற்படுத்த, உறுப்பினர் கோத்திர பிதாவைத் தொடர்பு கொள்கிறார். சந்திப்பு நாளில், உறுப்பினர் ஜெபத்தின் மனப்பான்மையுடனும், ஞாயிற்றுக்கிழமை உடையுடனும் கோத்திர பிதாவிடம் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு கோத்திர பிதா ஆசீர்வாதமும் பரிசுத்தமானது, இரகசியமானது மற்றும் தனிப்பட்டது. எனவே, குறைவான எண்ணிக்கையிலான குடும்ப உறுப்பினர்களைத் தவிர, தனிப்பட்ட முறையில் இது வழங்கப்படுகிறது.
கோத்திர பிதா ஆசீர்வாதத்தைப் பெற்ற ஒருவர், அதன் வார்த்தைகளைப் பொக்கிஷமாகக் கருதி, அவற்றைச் சிந்தித்து, இம்மையிலும் நித்தியத்திலும் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெறத் தகுதியுள்ளவராக வாழ வேண்டும்.
சபை உறுப்பினர்கள் ஆசீர்வாதங்களை ஒப்பிடக்கூடாது மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் தவிர அவற்றை பகிர்ந்து கொள்ளக்கூடாது. கோத்திர பிதா ஆசீர்வாதங்கள் சபைக் கூட்டங்களில் அல்லது பிற பொதுக் கூட்டங்களில் படிக்கப்படக்கூடாது.