“ஏப்ரல் 20–26. ‘கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்வோம்’: யாத்திராகமம் 19–20; 24; 31–34,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“ஏப்ரல் 20–26. ‘கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்வோம்,’”: யாத்திராகமம் 19–20; 24; 31–34என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026
மோசேயும் கற்பலகைகளும்-ஜெர்ரி ஹார்ஸ்டன் (விளக்கம்)
ஏப்ரல் 20–26: “கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்வோம்”
யாத்திராகமம் 19–20; 24; 31–34
கடந்த காலத்தில் இஸ்ரவேலின் பிள்ளைகள் முணுமுணுத்து, அலைந்து திரிந்திருந்தாலும், மோசே சீனாய் மலையின் அடிவாரத்தில் நியாயப்பிரமாணத்தைப் படித்தபோது, அவர்கள் இந்த உடன்படிக்கையை செய்தார்கள்: “கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம்” (யாத்திராகமம் 24:7). தேவன் மோசேயை மலைக்கு அழைத்தார், “அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண” ஒரு கூடாரத்தைக் கட்டும்படி அவரிடம் சொன்னார்.(யாத்திராகமம் 25:8).
இஸ்ரவேலர் தங்கள் மத்தியில் தேவனின் பிரசன்னத்தை எவ்வாறுபெற முடியும் என்பதைக் கற்றுக்கொள்வதற்கு மோசே மலையின் உச்சியில் இருந்தபோது, இஸ்ரவேலரோ மலையின் அடிப்பகுதியில், வழிபடுவதற்காக ஒரு தங்க சிலையைச் செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் “வேறு தெய்வங்கள் இல்லை” என்று உறுதியளித்த சிறிது காலத்திலேயே, அவர்கள் தங்கள் வாக்குத்தத்தத்திலிருந்து “விரைவாக விலகிவிட்டார்கள்” (யாத்திராகமம் 20:3; 32:8; யாத்திராகமம் 24:3) ஐயும் பார்க்கவும். இது ஒரு ஆச்சரியமான திருப்பமாக இருந்தது, ஆனால் விசுவாசமும் உறுதிப்பாடும் சில சமயங்களில் பொறுமையின்மை, பயம் அல்லது சந்தேகத்தால் வெல்லப்படலாம் என்பதை அனுபவத்திலிருந்து நாம் அறிவோம். நம் வாழ்வில் கர்த்தருடைய பிரசன்னத்தை நாம் தேடுகையில், கர்த்தர் பண்டைய இஸ்ரவேலைக் கைவிடவில்லை என்றும், அவர் நம்மையும் நாம் நேசிக்கிற ஜனத்தையும் கைவிடமாட்டார் என்பதையும் அறிந்து கொள்வது ஊக்கமளிக்கிறது—ஏனென்றால் அவர் “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும் மகா தயையும், சத்தியமும் உள்ள தேவன்.” (யாத்திராகமம் 34:6).
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
யாத்திராகமம் 19:3–6
கர்த்தருடைய உடன்படிக்கையின் ஜனம் அவருக்கு ஒரு பொக்கிஷம்.
தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்: “பழைய ஏற்பாட்டில் விசித்திரமான எனும் வார்த்தைமொழிபெயர்க்கப்பட்ட எபிரேய பதமான செகுல்லா, அதாவது ‘மதிப்புள்ள சொத்து,’ அல்லது ‘பொக்கிஷம்’ என்பதாகும் … கர்த்தரின் ஊழியக்காரர்களால் அவரது விசித்திரமான ஜனமாக நாம் அடையாளப்படுத்தப்படுவது என்பது மிக உயர்ந்த பாராட்டாகும்” (“Children of the Covenant,” Ensign, May 1995, 34). யாத்திராகமம் 19:3–6ஐ நீங்கள் புரிந்துகொள்ளும் விதத்தை தலைவர் நெல்சனின் வார்த்தைகள் எவ்வாறு பாதிக்கின்றன? கர்த்தர் உங்களைப் பொக்கிஷமாகக் கருதுகிறார் என்பதை உங்களுக்கு எப்படிக் காட்டினார்?
யாத்திராகமம் 19:10–11, 17
பரிசுத்த அனுபவங்களுக்கு ஆயத்தம் தேவைப்படுகிறது.
இஸ்ரவேல் புத்திரர் “தேவனைச் சந்திப்பதற்கு” முன்பே ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும் (யாத்திராகமம் 19:10–11, 17) அவருடன் ஒரு உடன்படிக்கையைக் காத்துக்கொள்ள வேண்டும் என்றும், கர்த்தர் மோசேயிடம் சொன்னார் (யாத்திராகமம் 19:5 பார்க்கவும்). திருவிருந்து மற்றும் ஆலய நியமங்கள் உட்பட ஆவிக்குரிய அனுபவங்களுக்கு நீங்கள் எவ்வாறு தயாராகிறீர்கள்? மற்றவர்கள் தயாராக நீங்கள் எப்படி உதவலாம்? லூக்கா 6:12–13; ஏனோஸ் 1:2–6; ஆல்மா 17:2–3லிருந்து ஆயத்தம் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
பாரம்பரியமாக எகிப்தில் உள்ள இந்த மலை சீனாய் மலையாக நம்பப்படுகிறது.
யாத்திராகமம் 20:1–17
தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது.
இஸ்ரவேலர்கள் சீனாய் மலையின் அடிவாரத்தில் கூடியிருந்தபோது, பத்துக் கட்டளைகளைக் கொடுக்கும் தேவனின் குரலைக் கேட்டனர் (உபாகமம் 4:12–13 பார்க்கவும்). இவை, நிச்சயமாக, தேவனின் ஒரே கட்டளைகள் அல்ல—வேதங்களில் இன்னும் பல உள்ளன. ஆகவே, யாத்திராகமம் 20:1–17-ஐ நீங்கள் படிக்கும்போது, தேவன் ஏன் இந்தப் பத்தை குறிப்பாக வலியுறுத்தினார் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் பத்துக் கட்டளைகளின் முக்கியத்துவத்தைப்பற்றி சிந்திக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய மாதிரி அட்டவணை இங்கே:
|
கட்டளை |
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கர்த்தர் என்னிடம் கேட்கிறார்… |
இந்த கட்டளைப்படி வாழ்வதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் |
|---|---|---|
-
இந்தப் பத்துக் கட்டளைகளைக் கடைப்பிடிப்பது, மத்தேயு 22:34–40-ல் இயேசு கொடுத்த இரண்டு பெரிய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்கு உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது?
-
தேவனுக்கு முன் வைக்க நீங்கள் சோதிக்கப்படக்கூடிய விஷயங்கள் என்ன? தேவனுக்கு முதலிடம் கொடுப்பதால் என்ன ஆசீர்வாதங்களைப் பார்த்தீர்கள்?
-
பத்துக் கட்டளைகள் நீண்ட காலத்திற்கு முன்பே கொடுக்கப்பட்டதாகவும், இன்று பொருந்தாது என்றும் கூறும் ஒருவருக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்? உங்கள் பதிலின் ஒரு பகுதியாக உங்கள் வாழ்க்கையிலிருந்து என்ன உதாரணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள்? இந்த பாடல் “How Gentle God’s Commands” (Hymns, no. 125) தேவனின் கட்டளைகளை நீங்கள் மற்றவர்களுக்கு விளக்கும் விதத்தை பாதிக்கிறதா?
-
யாத்திராகமம் 20:6ல் உள்ள வாக்குறுதியை கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் எப்படி நிறைவேற்றினார்?
See also “The Great Commandment—Love the Lord,” in Teachings of Presidents of the Church: Ezra Taft Benson (2014), 37–45; Dallin H. Oaks, “No Other Gods,” Liahona, Nov. 2013, 72–75; Topics and Questions, “Commandments,” Gospel Library.
யாத்திராகமம் 24:1–11
உடன்படிக்கைகள் செய்வது தேவனின் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படிய என் விருப்பத்தைக் காட்டுகின்றன.
யாத்திராகமம் 24:3–8 -ஐ நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் தேவனுடன் செய்துள்ள உடன்படிக்கைகளைக் கருத்தில் கொள்ளுங்கள். இஸ்ரவேலின் உடன்படிக்கையில் இன்று தேவன் எதிர்பார்க்கும் சடங்குகளிலிருந்து வேறுபட்டு இருந்தபோதிலும், சில ஒற்றுமைகளை நீங்கள் கவனிக்கலாம். எடுத்துக்காட்டாக, வசனங்கள் 4, 5, மற்றும் 8 ஒரு பலிபீடம், மிருகஜீவன்களின் பலி மற்றும் இரத்தத்தைக் குறிப்பிடுகின்றன. இந்த விஷயங்கள் எதைக் குறிக்கக்கூடும், அவை உங்கள் உடன்படிக்கைகளுடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன?
யாத்திராகமம் 32–34
பாவம் என்பது தேவனை விட்டு விலகுவதாகும்; மனந்திரும்புதல் என்பது தீமையிலிருந்து விலகி அவரை நோக்கி திரும்புவதாகும்.
உங்களை இஸ்ரவேலர்களின் இடத்தில் வைக்க முயற்சி செய்யுங்கள்—நீங்கள் வனாந்தரத்தில் இருக்கிறீர்கள், மோசே 40 நாட்கள் சென்றுவிட்டான், வாக்குறுதியளிக்கப்பட்ட தேசம் தொடர்பாக கானானியர்களுடன் மோதல் உங்கள் எதிர்காலத்தில் ஏற்படும் (யாத்திராகமம் 32:1–8ஐப் பார்க்கவும்). இஸ்ரவேலர் ஒரு தங்க சிலையை விரும்பியது ஏன் என நினைக்கிறீர்கள்? யாத்திராகமம் 33:11–17 இல் மோசே கர்த்தரிடம் மன்றாடியதைப்பற்றி உங்களுக்கு எதை உணர்த்துகிறது?
இஸ்ரவேலரின் பாவம் தீவிரமானது என்றாலும், இந்த கதை தேவனின் இரக்கம் மற்றும் மன்னிப்பைப்பற்றிய செய்தியையும் அடக்கியுள்ளது. யாத்திராகமம் 34:1–10 இரட்சகர் பற்றி என்ன கற்பிக்கிறது? (யாத்திராகமம் 32:30–32; மோசியா 14:4–8; 15:9; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:3–5 பார்க்கவும்).
யாத்திராகமம் 31:13–16
ஓய்வு நாள் ஒரு அடையாளம்
தலைவர் ரசல் எம். நெல்சன் விளக்கினார், “நான் இளைஞைனாக இருந்த ஆண்டுகளில், ஓய்வுநாளில் செய்ய வேண்டிய காரியங்களின் பட்டியல்களையும், செய்யக்கூடாத காரியங்களை தொகுத்த மற்றவர்களின் பட்டியலைப் படித்தேன்.” ஓய்வுநாளில் என்னுடைய நடத்தை மற்றும் எனது மனநிலை எனக்கும் என் பரலோக பிதாவுக்கும் இடையே ஒரு அடையாளமாக இருந்தது என்பதை வேதவசனங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டது பின்னாளில்தான். [யாத்திராகமம் 31:13; எசேக்கியேல் 20:12, 20]. அந்த புரிதலுடன், எனக்கு இனி செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியல்கள் தேவையில்லை. ஓய்வுநாளுக்கு ஒரு நிகழ்ச்சி பொருத்தமானதா இல்லையா என்பதை நான் முடிவு செய்ய வேண்டியிருந்தபோது, ‘தேவனுக்கு நான் என்ன அடையாளம் கொடுக்க விரும்புகிறேன்?’ என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அந்த கேள்வி ஓய்வு நாள் பற்றிய எனது தேர்வுகளை தெளிவாக்கியது” (“The Sabbath Is a Delight,” Liahona, May 2015, 130). ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதன் மூலம் தேவனுக்கு என்ன அடையாளத்தைக் கொடுக்க விரும்புகிறீர்கள் என்று சிந்தியுங்கள்.
யாத்திராகமம் 34:1–4
மோசே செய்த இரண்டு கற்பலகைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
மோசே மலையிலிருந்து இறங்கி வந்தபோது, கற்பலகைகளில் எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்தைக் கொண்டுவந்தான். இஸ்ரவேலர் தங்கள் உடன்படிக்கையை மீறியதைக் கண்ட பின், மோசே பலகைகளை உடைத்தான் (யாத்திராகமம் 31:18 ; 32:19 பார்க்கவும்). பின்னர், மற்றொரு கற்பலகையை உருவாக்கி அவற்றை மீண்டும் மலைக்குக் கொண்டு செல்லும்படி தேவன் மோசேக்குக் கட்டளையிட்டார் (யாத்திராகமம் 34:1–4 பார்க்கவும்). யாத்திராகமத்தின் ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு 34:1–2 (வேதாகம பிற்சேர்க்கையில்) முதல் கற்பலகைகள் தேவனின் “பரிசுத்த முறைமையை” அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் நியமங்களை உள்ளடக்கியிருந்தன என்பதை தெளிவுபடுத்துகிறது. இரண்டாவது தொகுப்பில் “ஒரு மாம்சப்பிரகார கட்டளையாகிய நியாயப்பிரமாணம்” அடங்கும். இது “குறைவான ஆசாரியத்துவத்தால்” நிர்வகிக்கப்படும் ஒரு குறைவான நியாயப்பிரமாணமாகும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84: 17-27 பார்க்கவும்), இது இஸ்ரவேலர்களை உயர் நியாயப்பிரமாணம் மற்றும் உயர் ஆசாரியத்துவத்திற்கு தயார்படுத்துவதற்காக ஆகும், இதனால் அவர்கள் தேவ சமூகத்தில் பிரவேசிக்க முடியும்.
கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
யாத்திராகமம் 20:3–17
நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தேவன் எனக்கு கட்டளைகளைத் தருகிறார்.
-
பத்துக் கட்டளைகளைப் பற்றி கற்றுக்கொள்வதை உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி வேடிக்கையாக மாற்றலாம்? யாத்திராகமம் 20:3–17ஐ நீங்கள் ஒன்றாக வாசிக்கும்போது, பத்துக் கட்டளைகள் ஒவ்வொன்றையும் குறிக்கும் வகையில் ஒரு படத்தைக் கண்டுபிடிக்க அல்லது வரைய உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு உதவட்டும். உங்கள் பிள்ளைகள் ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தக் கட்டளைப்படி எப்படி வாழலாம் என்பதைப் பற்றி பேசலாம். அந்த கட்டளைப்படி வாழ்வது உங்களுக்கு எப்படி மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
“Keep the Commandments” (Children’s Songbook, 146–47) போன்ற ஒரு பாடலை நீங்கள் பாடலாம். தேவன் ஏன் நாம் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க விரும்புகிறார் என்பதை பாடலில் உள்ள வார்த்தைகளைக் கண்டுபிடிக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.
குழந்தைகள் ஆவிக்குரிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்களின் சாட்சியம் வளரும். நீங்கள் கேட்கும் கேள்விகள், உங்கள் பிள்ளைகள் இரட்சகரைப் பற்றி எப்படி உணர்கிறார்கள் என்பதையும், சுவிசேஷத்தின்படி வாழுதல் அவர்களை எப்படி ஆசீர்வதித்திருக்கிறது என்பதையும் பகிர்ந்துகொள்ள ஊக்குவிக்கும் (இரட்சகரின் வழியில் போதித்தல் பார்க்கவும், 32). அவர்கள் இதைச் செய்யும்போது, அவர்கள் சாட்சியளிக்கிறார்கள். பத்துக் கட்டளைப்படி வாழ்வதன் மூலம் கிடைக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி கலந்துரையாடும்போது இதை எப்படிச் செய்யலாம் என்பதைக் கவனியுங்கள்.
யாத்திராகமம் 20:12
நான் என் பெற்றோரை கனம்பண்ண வேண்டும் என கர்த்தர் விரும்புகிறார்.
-
“உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.” (யாத்திராகமம் 20:12) என்ற சொற்றொடரை உங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்ள உதவுங்கள். ஒருவரை “கனம்பண்ணுவது” என்பது அவர்களுக்கு மரியாதை காட்டுவது அல்லது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது என்று நீங்கள் விளக்க விரும்பலாம். இயேசு தம்முடைய பூலோக தாயையும், பரலோக பிதா வையும் கனப்படுத்த என்ன செய்தார்? (லூக்கா 2:48–51; யோவான் 19:26–27 பார்க்கவும்). ஒருவேளை உங்கள் பிள்ளைகள் தங்கள் பெற்றோரைக் கனம்பண்ணுவதற்காகச் செய்யக்கூடிய விஷயங்களை மாறி மாறி நடிக்கலாம், மற்ற குழந்தைகள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று யூகிக்கலாம்.
யாத்திராகமம் 31:13, 16–17
ஓய்வுநாளை மதித்து நடப்பது கர்த்தர் மீது எனக்குள்ள அன்பின் அடையாளம்.
-
சாலை அடையாளங்கள் அல்லது கட்டிடத்தில் உள்ள அடையாளங்கள் போன்ற அடையாளங்களின் உதாரணங்களை உங்கள் பிள்ளைகள் பார்த்து மகிழ்வார்கள். அடையாளங்களின் நோக்கம் என்ன? உங்கள் பிள்ளைகள் யாத்திராகமம் 31:13, 16–17 இல் “அடையாளம்” என்ற வார்த்தையைக் காணலாம். நமக்கும் அவருக்கும் இடையே ஓர் அடையாளம் என்று கர்த்தர் சொன்னது என்ன? ஓய்வுநாளில் கர்த்தரிடம் உங்கள் அன்பைக் காட்ட நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் முயற்சிக்கும் சில வழிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மோசே பத்துக் கட்டளைகளைப் பிடித்திருத்தல் விளக்கப்படம்–சாம் லாலர் (விளக்கம்)
யாத்திராகமம் 32:1–8,19–24; 34:6–7
நான் தேவனின் வழிகளை “விட்டு விலக” மாட்டேன்.
-
யாத்திராகமம் 32:1–8, 19–24 லுள்ள கதையை உங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்ள உதவுவதற்காக “Moses on Mount Sinai” (in Old Testament Stories, 77–82) பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும். தேவனுக்குப் பதிலாக இஸ்ரவேலர்கள் சிலையை வணங்கியது ஏன் தவறு?
2:55Moses on Mount Sinai
-
யாத்திராகமம் 32:8: “அவர்கள் சீக்கிரமாக வழியை விட்டு விலகினார்கள்” எனும் இந்த வார்த்தைகளை விளக்குவதற்கு, தரையில் ஒரு பாதையை உருவாக்குவது (அல்லது உங்கள் வீட்டிற்கு அருகில் ஒன்றைக் கண்டறிவது) வேடிக்கையாக இருக்கலாம். பாதையில் நடக்கும்போது, தேவனிடமிருந்து விலகிச் செல்ல நாம் எதிர்கொள்ளும் சோதனைகளைப் பற்றி உங்கள் பிள்ளைகள் பேசலாம். தேவனின் பாதையில் நிலைத்திருக்கவும், நாம் வழிதவறிச் சென்றால் அதற்குத் திரும்பவும் எது நமக்கு உதவுகிறது? (யாத்திராகமம் 34:6–7 பார்க்கவும்).
கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.