“ஏப்ரல் 6–12. யாத்திராகமம் 7–13: “நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்”: யாத்திராகமம் 7–13 என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“ஏப்ரல் 6–12. “நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026
பார்வோனின் அரண்மனையில் மோசேயும் ஆரோனும் படவிளக்கம்–ராபர்ட் டி. பாரட்
யாத்திராகமம் 6–12: “நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்”
யாத்திராகமம் 7–13
அடுத்தடுத்து கொள்ளை நோய் எகிப்தை வாட்டியது,, ஆனால் பார்வோன் இஸ்ரவேலரை விடுவிக்க மறுத்துவிட்டான். “நானே கர்த்தர்,” “பூமியெங்கிலும் என்னைப்போல வேறொருவரும் இல்லை,” என பார்வோன் ஏற்றுக்கொள்ள தேவன் தொடர்ந்து தம் வல்லமையை செய்து காட்டி, பார்வோனுக்கு சந்தர்ப்பம் அளித்தார் (யாத்திராகமம் 7:5; 9:14). இதற்கிடையில், மோசேயும் இஸ்ரவேலரும் தங்களுக்காக தேவ வல்லமையின் இந்த வெளிப்பாடுகளைப் பிரமிப்புடன் பார்த்திருக்க வேண்டும். நிச்சயமாக இந்த தொடர்ச்சியான அறிகுறிகள் தேவன்மீதுள்ள அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தின, மேலும் தேவனின் தீர்க்கதரிசியைப் பின்பற்றுவதற்கான அவர்களின் விருப்பத்தை பலப்படுத்தின. பின்னர், ஒன்பது பயங்கரமான வாதைகள் இஸ்ரவேலரை விடுவிக்கத் தவறிய பின்னர், அது பத்தாவது வாதை ஆகும், பார்வோனின் தலைப்பிள்ளை உட்பட தலைப்பிள்ளைகளின் மரணம், இறுதியாக சிறைத்தனத்தில் முடிந்தது. ஆவிக்குரிய சிறைத்தனத்தின் ஒவ்வொரு விஷயத்திலும், தப்பிக்க ஒரே ஒரு வழி மட்டுமே இருப்பதால் இது பொருத்தமாகத் தெரிகிறது. முதற்பேறான இயேசு கிறிஸ்துவின் பலி, மாசற்ற ஆட்டுக்குட்டியின் இரத்தம், மட்டும்தான் நம்மை இரட்சிக்கும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
யாத்திராகமம் 7–11
என் இதயத்தை மென்மையாக்க நான் தேர்ந்தெடுக்கலாம்.
பார்வோனைப் போல, உங்கள் விருப்பமும் ஒருபோதும் தேவனின் விருப்பத்தை எதிர்க்காது என்று நம்புகிறோம். இருப்பினும், நம் இருதயங்கள் இருக்க வேண்டிய அளவுக்கு மென்மையாக இல்லாத நேரங்கள் நம் அனைவருக்கும் உள்ளன. யாத்திராகமம் 7:14–25; 8:5–32; 9:1–26; 10:12–29; 12:29–33லுள்ள வாதைகளுக்கு பார்வோனின் பதில்களில் உங்களுக்கு என்ன கவனிக்கத்தக்கதாகத் தெரிகிறது? யாத்திராகமம் 7:3,13; 9:12 இன் ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பில் உள்ள தெளிவுபடுத்தலைக் கவனியுங்கள்.
பார்வோனின் இருதயத்தை “கடினம்” என்ற வார்த்தை ஏன் நன்றாக விவரிக்கிறது? மென்மையான இருதயத்தைப் பற்றி இந்த வசனங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்: 1 நேபி 2:16; மோசியா 3:19; ஆல்மா 24:7–8; 62:41; ஏத்தேர் 12:27. பார்வோனின் கடின இருதயத்தின் விளைவுகளைப் பற்றி நீங்கள் படிக்கும்போது, உங்கள் இதயத்தின் நிலையைச் சிந்தித்துப் பாருங்கள். என்ன மாற்றங்களை நீங்கள் செய்யவேண்டுமென நீங்கள் உணருகிறீர்கள்?
யாத்திராகமம் 12:1–42
இயேசு கிறிஸ்து அவருடைய பாவநிவர்த்தியால் என்னை இரட்சிக்க முடியும்.
யாத்திராகமம் 11:4–5ல், விவரிக்கப்பட்டுள்ள பத்தாவது கொள்ளை நோயிலிருந்து இஸ்ரவேலரை விடுவிப்பதற்கான ஒரே வழி யாத்திராகமம் 12ல் மோசேக்கு கர்த்தர் கொடுத்த பஸ்கா என அழைக்கப்படுகிற சடங்கின் அறிவுரைகளை சரியாகப் பின்பற்றுவதுதான். கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்ததைப் போலவே, பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் அவர் நம்மை விடுவிக்க முடியும் என்பதை பஸ்கா அடையாளங்கள் மூலம் நமக்குக் கற்பிக்கிறது. யாத்திராகமம் 12:1–42 இல் உள்ள இந்த அடையாளத்தை ஆராய, இது போன்ற ஒரு விளக்கப்படத்தைப் பயன்படுத்தலாம்:
|
அடையாளம் |
சாத்தியமான அர்த்தங்கள் |
எனக்கான தேவனின் செய்தி |
|---|---|---|
அடையாளம் மாதங்களின் ஆரம்பம் (வசனம் 2; இஸ்ரவேலர்கள் தங்கள் நாட்காட்டியின் தொடக்கத்தைக் குறிக்க இந்த நிகழ்வைப் பயன்படுத்தும்படி கர்த்தர் கட்டளையிட்டார்). | சாத்தியமான அர்த்தங்கள் இது இஸ்ரவேலுக்கு ஒரு புதிய தொடக்கமாக இருந்தது. அவர்கள் “மீண்டும் பிறக்க” வேண்டும். | |
அடையாளம் ஆட்டுக்குட்டி (வசனங்கள் 3–5). | சாத்தியமான அர்த்தங்கள் யோவான் 1:29; 6:54; 1 பேதுரு 1:19 பார்க்கவும். | |
அடையாளம் நிலைக்கால்களில் ஆட்டுக்குட்டியின் இரத்தம் (வசனங்கள் 7, 13, 23). | சாத்தியமான அர்த்தங்கள் மோசியா 4:2; வெளிப்படுத்தல் 12:11 பார்க்கவும். | |
அடையாளம் புளிப்பில்லாத அப்பம் (வசனங்கள் 8, 15, 19–20). | சாத்தியமான அர்த்தங்கள் புளிப்பு அல்லது ஈஸ்ட் சீர்கேடின் அடையாளமாக இருக்கலாம், ஏனெனில் அது எளிதில் கெட்டுவிடும். மத்தேயு 16:6–12; மோசியா 6:35 பார்க்கவும். | |
அடையாளம் கசப்பான கீரைகள் (வசனம் 8). | சாத்தியமான அர்த்தங்கள் பாவத்தின் கசப்பு மற்றும் சிறையிருப்பின் நினைவூட்டல். யாத்திராகமம் 1:14, மோசே 6:55 பார்க்கவும் | |
அடையாளம் தீவிரமாக புசித்து, புறப்பட கச்சைக்கட்டி (வசனம் 11). | சாத்தியமான அர்த்தங்கள் பாவத்தின் சிறையிலிருந்து வெளியேற வேண்டிய அவசரத்தின் அடையாளம். ஆதியாகமம் 39:12; 2 தீமோத்தேயு 2:22. | |
அடையாளம் சங்காரக்காரன் (வசனங்கள் 13, 23). | சாத்தியமான அர்த்தங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89:18–21 பார்க்கவும். | |
அடையாளம் இஸ்ரவேலர் விடுவிக்கப்படுதல் (வசனங்கள் 29–32). | சாத்தியமான அர்த்தங்கள் 2 நேபி 2:26; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:15–19, 31 பார்க்கவும். | |
இயேசு கிறிஸ்துவையும் அவருடைய பாவநிவர்த்தியையும் நினைவூட்டுகின்ற பஸ்கா பண்டிகையின் அறிவுறுத்தல்களிலும் அடையாளங்களிலும் நீங்கள் என்ன காண்கிறீர்கள்? அவருடைய பாவநிவர்த்தியின் ஆசீர்வாதங்களை எவ்வாறு பெறுவது என்பது குறித்து இந்த அடையாளங்கள் உங்களுக்கு என்ன பரிந்துரைக்கின்றன?
கிறிஸ்துவின் சாட்சியங்களை அடையாளப்படுத்துவதன் மூலம் கிறிஸ்துவிடம் வாருங்கள். கர்த்தர் அறிவித்தார், “எல்லா காரியங்களும் என்னைக் குறித்து சாட்சி கொடுக்க சிருஷ்டிக்கப்பட்டு, உண்டாக்கப்பட்டுள்ளன” (மோசே 6:63; 2 நேபி 11:4 ஐயும் பார்க்கவும்). யாத்திராகமம் 12ல், ஆட்டுக்குட்டி, இரத்தம், புளிப்பில்லாத அப்பம், அற்புதங்கள் மற்றும் விடுதலை போன்ற அடையாளங்கள் அனைத்தும் கிறிஸ்துவை சுட்டிக்காட்டுகின்றன. “இந்த பொருள்கள் இரட்சகருடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பதை நாம் ஒருமுறை புரிந்துகொண்டவுடன், அவை அவருடைய வல்லமை மற்றும் பண்புகளை நமக்குக் கற்பிக்க முடியும்.” (Teaching in the Savior’s Way, 7).
என் நினைவாக–வால்ட்டர் ரானே
யாத்திராகமம் 12:14–17, 24–27; 13:1–16
இயேசு கிறிஸ்துவின் மூலம் என் விடுதலையை நினைவில் கொள்ள இந்த திருவிருந்து எனக்கு உதவுகிறது.
.இரட்சகர் இஸ்ரவேலர் ஒவ்வொரு ஆண்டும் பஸ்காவை ஆசரிக்கும்படி கட்டளையிட்டார், அவர்கள் சிறையிருப்பு ஒரு தொலைதூர நினைவாக மாறிய பிறகும், அவர் அவர்களை விடுவித்தார் என்பதை நினைவுகூர அவர்களுக்கு உதவினார். யாத்திராகமம் 12:14–17, 24–27; 13:1–16ல், இந்த அறிவுரைகளை நீங்கள் வாசிக்கும்போது, உங்களுக்கு தேவனின் ஆசீர்வாதங்களை நினைவில் வைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சிந்தியுங்கள். அந்த நினைவை “உங்கள் தலைமுறைகள் முழுவதும்” நீங்கள் எவ்வாறு பாதுகாக்க முடியும்”? (யாத்திராகமம் 12:14, 26–27 பார்க்கவும்).
பஸ்கா பண்டிகையின் நோக்கங்களுக்கும் திருவிருந்திற்கும் இடையே என்ன ஒற்றுமைகள் நீங்கள் காண்கிறீர்கள்? இயேசு கிறிஸ்துவை “எப்போதும் நினைவுகூர” நீங்கள் என்ன செய்யலாம்? மரோனி 4:3; 5:2.
நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்பும் பிற விஷயங்களையும் நீங்கள் சிந்திக்கலாம்; உதாரணமாக, ஏலமன் 5:6–12; மரோனி 10:3; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 3:3–5, 10; 18:10; 52:40 பார்க்கவும்.
See also Kevin W. Pearson, “Are You Still Willing?,” Liahona, Nov. 2022, 67–69; “Always Remember Him” (video), Gospel Library; “In Memory of the Crucified,” Hymns, no. 190.
Always Remember Him
கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
யாத்திராகமம் 7–11
கர்த்தர் அனைத்துக் காரியங்களின் மீதும் வல்லமையுடையவர்.
-
யாத்திராகமம் 7–11ல் விவரிக்கப்பட்டுள்ள வாதைகள், கர்த்தருக்குப் பெரிய வல்லமை உண்டு என்பதை எகிப்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் காட்டியது. உங்கள் பிள்ளைகள் அவருடைய வல்லமையில் விசுவாசம் வைக்கும்போது, அவர்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தர் அவர்களுக்கு உதவுவார். இந்தக் கதையிலிருந்து கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவ, ஒவ்வொரு பிள்ளைக்கும் 10 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட காகிதத்தைக் கொடுத்து, இந்த வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ள கொள்ளை நோய்களின் படங்களை வரைய அவர்களை அழைக்கவும்.: யாத்திராகமம் 7:17–18; 8:1–4; 8:16–17; 8:20–22; 9:1–6; 9:8–9; 9:22–23; 10:4–5; 10:21–22; 11:4–7 (see also “The Plagues of Egypt” in Old Testament Stories, 67–69). கர்த்தர் ஏன் வாதைகளை அனுப்பினார் என்பதை விளக்க யாத்திராகமம் 7:5 மற்றும் 9:14ஐ ஒன்றாகப் படியுங்கள்.
2:3The Plagues of Egypt
-
“பூமியெங்கும் [அவரைப்] போல வேறொருவரும் இல்லை” (யாத்திராகமம் 9:14) என்று கர்த்தர் உங்களுக்குக் காட்டிய விதத்தை உங்கள் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் வல்லமையுள்ளவர் என்பதை அவர்கள் எப்படி அறிவார்கள் என்பதை பகிர்ந்து கொள்ளட்டும்.
யாத்திராகமம் 8:28–32; 9:7
மென்மையான இருதயம் பெற கர்த்தர் எனக்கு உதவுவார்.
-
மென்மையான இருதயம் என்றால் என்ன என்பதை உங்கள் பிள்ளைகள் கற்பனை செய்து பார்க்க உதவ, பாறை போன்ற கடினமான ஒரு பொருளையும், கடற்பாசி போன்ற மென்மையான மற்றும் உறிஞ்சக்கூடிய மற்றொரு பொருளையும் காட்டுவது வேடிக்கையாக இருக்கலாம். ஒரு மென்மையான இருதயம் கர்த்தரின் வார்த்தையை எவ்வளவு எளிதாகப் பெறுகிறது என்பதை நிரூபிக்க, நீங்கள் இந்த பொருட்களின் மீது தண்ணீரை ஊற்றலாம். கர்த்தரால் அனுப்பப்பட்ட வாதைகளுக்கு பார்வோன் எவ்வாறு பதிலளித்தான் என்பதை விவரிக்கும் சில வசனங்களை நீங்கள் ஒன்றாகப் படிக்கலாம் (யாத்திராகமம் 8:28–32; 9:7 ஐப் பார்க்கவும்). பார்வோனின் இருதயம் அல்லது மனப்பான்மையை எந்தப் பொருள் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது? மென்மையான இருதயம் என்றால் என்ன? (மோசியா 3:19 பார்க்கவும்).
-
நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நம்மிடம் கடினமான இருதயம் இருக்கிற செயல்களின் பட்டியலை உருவாக்கலாம், (உதாரணமாக, அன்பற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துதல் அல்லது பகிர விரும்பாதது). நமக்கு மென்மையான இருதயம் வேண்டும் என்று கர்த்தருக்கு எப்படி காட்டலாம்?
யாத்திராகமம் 12:1–13
இயேசுவை நினைவுகூருவதற்கு திருவிருந்து எனக்கு உதவும்.
-
இரட்சகரையும், நமக்காக அவருடைய தியாகத்தையும் எதிர்நோக்கும்படி பஸ்கா இஸ்ரவேலர்களுக்குக் கற்பித்தது. யாத்திராகமம் 12:1–13ஐ நீங்கள் ஒன்றாக ஆராயும்போது, பஸ்கா மற்றும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி பற்றிய விவரங்களுக்கு இடையே உள்ள தொடர்பை உங்கள் பிள்ளைகள் காண உதவுங்கள். (see also “The Passover” in Old Testament Stories, 70–74). உதாரணமாக, 5வது வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஆட்டுக்குட்டியைப் போல் இயேசு எப்படி இருக்கிறார்?
2:54The Passover
-
இன்று, இயேசுவின் தியாகத்தை நினைவுகூர நாம் திருவிருந்தை எடுத்துக்கொள்கிறோம். நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு திருவிருந்து படத்தைக் காட்டலாம் மற்றும் இயேசு கிறிஸ்துவை நினைவுகூருவதற்கு இந்த நியமம் எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றி பேசலாம். திருவிருந்து ஜெபங்களில் “நினைவில் கொள்ள” என்ற வார்த்தையைக் கண்டறிய உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உதவலாம் (மரோனி 4-5 ஐப் பார்க்கவும்). அல்லது திருவிருந்தைப் பற்றி பிடித்தமான ஒரு பாடலை ஒன்றாகப் பாடுங்கள், மேலும் உங்கள் பிள்ளைகள் இரட்சகரைப் பற்றி நினைக்கும் போது அவர்கள் கொண்டிருக்கும் அமைதியான உணர்வைக் கவனிக்க உதவுங்கள். திருவிருந்து எடுக்கும்போது அந்த உணர்வை எப்படி தேடுவது?
கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.