என்னைப் பின்பற்றி வாருங்கள்
மார்ச் 2–8. “தேவன் மேற்கொள்வாராக”: ஆதியாகமம் 24–33


“மார்ச் 2–8. “தேவன் மேற்கொள்வாராக,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)

“மார்ச் 2–8. “தேவன் மேற்கொள்வாராக” என்னைப் பின்பற்றி வாருங்கள்: 2026

ஏசா தனது சேஷ்ட புத்திர பாகத்தை   ஒரு கோப்பை கூழுக்காக யாக்கோபுக்கு விற்றல்

ஏசா தனது சேஷ்ட புத்திர பாகத்தை விற்றல்–க்ளென் எஸ். ஹாப்கின்சன் (விளக்கம்)

மார்ச் 2–8: “தேவன் மேற்கொள்வாராக”

ஆதியாகமம் 24–33

தேவனின் ஆசீர்வாதத்தை எப்படிப் பெறுவீர்கள்? ஆபிரகாம் மற்றும் சாராளின் பேரனான யாக்கோபு பற்றிய விவரம் அந்தக் கேள்விக்கான பதிலைக் கற்றுக்கொண்ட ஒரு மனிதனின் கதை என்று நீங்கள் கூறலாம். முதற்பேறான மகன் சேஷ்ட புத்திர ஆசீர்வாதத்தைப் பெற்ற ஒரு கலாச்சாரத்தில், அவனுடைய இரட்டை சகோதரனான ஈசாவின் குதிகாலைப் பற்றிக் கொண்டு யாக்கோபு இரண்டாவது பிறந்தான். “யாக்கோபு” என்ற பெயரின் அர்த்தம் “பிரதி” வேறொருவருக்காக இருப்பவர். சேஷ்ட புத்திர ஆசீர்வாதத்திற்கு ஏசா தகுதியற்றவனாக இருந்ததால், ஏசாவின் சுதந்தரத்தை மாற்றுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை முயற்சி செய்து யாக்கோபு அந்த பெயருக்கு ஏற்ப வாழ்ந்தான். (ஆதியாகமம் 25:30–34; 26:34–35; 27:36). இதன் விளைவாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது, யாக்கோபு தனது ஜீவனுக்காக வனாந்தரத்திற்கு ஓட வேண்டியிருந்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, தேவன் யாக்கோபை வீட்டுக்குத் திரும்பும்படி கட்டளையிட்டார். வழியில், யாக்கோபு, மனத்தாழ்மையுடன், மீண்டும் தேவனிடம் ஆசீர்வாதத்தை நாடினான். வேதங்கள் இந்த நேரத்தை யாக்கோபுக்கு ஒரு “போராட்டம்” என்று விவரிக்கின்றன, மேலும் “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய” (ஆதியாகமம் 32:26) போகவிடேன் என்று அறிவித்தான். பின்னர் படிப்பினை—மற்றும் ஆசீர்வாதம் வந்தது. தேவன் யாக்கோபுவின் பெயரை இஸ்ரவேல் என மாற்றினார்—அதற்கு பிறவற்றுடன் “தேவன் மேற்கொள்வாராக” என்று அர்த்தம். தேவனின் மிக மதிப்புமிக்க ஆசீர்வாதங்களை, அவருடைய உடன்படிக்கை ஆசீர்வாதங்களைப் பெற, வேறொருவரை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பதை இஸ்ரவேல் கற்றுக்கொண்டான். அவனுடைய ஆசீர்வாதங்கள் வாங்கப்படவில்லை அல்லது கைப்பற்றப்படவில்லை அல்லது வெல்லப்படவில்லை. தேவன் தங்கள் வாழ்க்கையில் மேற்கொள்ளட்டும் என—இஸ்ரவேல் என்ற பெயருக்கு ஏற்ப வாழ்கிற அனைவருக்கும்—அவற்றை அவர் இலவசமாகக் கொடுக்கிறார்.

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

ஆதியாகமம் 24

தேவனின் நித்திய திட்டத்துக்கு உடன்படிக்கை திருமணம் இன்றியமையாதது.

ஆதியாகமம் 24ஐ வாசிக்கும்போது, ​​ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கின் திருமணத்தை ஏன் மிகவும் முக்கியமானதாகக் கருதினான் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். திருமணம் ஏன் தேவனுக்கு முக்கியமானது?

ஒரு வலுவான திருமணத்திற்கும் குடும்பத்திற்கும் பங்களிக்கும் என்ன குணங்களை நீங்கள் ரெபெக்காளிடம் காண்கிறீர்கள்? (விசேஷமாக வசனங்கள் 15–28, 57–61 பார்க்கவும்).

See also Topics and Questions, “Marriage,” Gospel Library.

ஆதியாகமம் 25:29–34

தற்காலிக விஷயங்களை விட நித்திய விஷயங்களை என்னால் மதிக்க முடியும்.

ஈசாக்கு மற்றும் ரெபெக்காளின் கலாச்சாரத்தில், மூத்த மகன் சேஷ்ட புத்திர பாகத்தை பெற்றான், அதாவது அதிகமான பரம்பரை சொத்து, அது குடும்பத்தைப் பராமரிப்பதற்கான அதிக பொறுப்புகளுடன் என்பது இதன் அர்த்தமாகும். ஆதியாகமம் 25: 29–34 நீங்கள் வாசிக்கும்போது, ஒரு உணவுக்கு ஈடாக ஏசா ஏன் தனது சேஷ்ட புத்திர பாகத்தை விட்டுக்கொடுக்க தயாராக இருந்திருக்கிறான் என்பதைக் கருத்தில் கொள்ளவும். இந்த விவரத்தில் நீங்கள் உங்களுக்காக என்ன படிப்பினைகளை ந கண்டுபிடிக்கிறீர்கள்? இரண்டு பட்டியல்களை உருவாக்க இது உதவக்கூடும்: (1) தேவன் உங்களுக்குக் கொடுக்க விரும்பும் நித்திய ஆசீர்வாதங்கள் மற்றும் (2) உங்களைத் திசைதிருப்பக்கூடிய உலக விஷயங்கள். பின்னர் நீங்கள் பத்தியைப் படிக்கலாம், “சேஷ்ட புத்திர பாகம்” என்பதற்குப் பதிலாக முதல் பட்டியலிலிருந்து ஏதாவது ஒன்றையும், “கூழ்” என்பதற்குப் பதிலாக இரண்டாவது பட்டியலிலிருந்து எதையாவது மாற்றவும். இரட்சகர் மற்றும் அவருடைய சுவிசேஷத்தின் நித்திய ஆசீர்வாதங்கள் மீது நீங்கள் எவ்வாறு கவனம் செலுத்துவீர்கள்?

மத்தேயு 6:19–33; M. Russell Ballard, “Remember What Matters Most,” Liahona, May 2023, 105–7 பார்க்கவும்.

பெத்தேலில் யாக்கோபு

பெத்தேலில் யாக்கோபு-ஜேம்ஸ் ஸ்மேத்தம்

ஆதியாகமம் 28

வேத பாட வகுப்பு சின்னம்
கர்த்தருடைய வீட்டின் உடன்படிக்கைகள் தேவனின் வல்லமையை என் வாழ்வில் கொண்டு வருகின்றன.

ஒரு கல் தலையணையில் தூங்கும் போது, ​​யாக்கோபு வாழ்க்கையை மாற்றும் ஒரு கனவு கண்டான். இது ஒரு பரிசுத்தமான அனுபவமாக இருந்தது, யாக்கோபு அந்த இடத்திற்கு பெத்தேல் அல்லது “தேவனுடைய வீடு” என்று பெயரிட்டு , “மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்” என்று அறிவித்தான் (ஆதியாகமம் 28:16).

ஆதியாகமம் 28 நீங்கள் வாசிக்கும்போது, இந்த அனுபவத்தை யாக்கோபுக்கு மிகவும் பரிசுத்தமானதாக ஆக்கியது எது என்று நீங்களே கேட்டுக்கொள்ளலாம். அந்த நேரத்தில் அவன் எதை அனுபவித்துக் கொண்டிருந்தான்? அவன் எப்படி உணர்ந்திருப்பான்? 10–22 வசனங்களில் கர்த்தருடைய வீட்டை நினைவுபடுத்தும் வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் நீங்கள் தேடலாம். தேவன், அவருடைய வீடு மற்றும் அவருடைய உடன்படிக்கைகளைப் பற்றி நீங்கள் என்ன எண்ணங்களைப் பெறுகிறீர்கள்?

இந்த குறிப்பின் முடிவில் யாக்கோபின் கனவைச் சித்தரிக்கும் ஒரு ஓவியம் உள்ளது; நீங்கள் வாசிக்கும்போது அதைக் குறிப்பிடலாம். அவனுடைய கனவை உங்கள் சொந்த கலை சித்தரிப்பாக உருவாக்கினால், நீங்கள் என்ன செய்வீர்கள்? கதையிலிருந்து என்ன சத்தியங்களை நீங்கள் சித்தரிக்க முயற்சிப்பீர்கள்?

Nearer, My God, to Thee” (Hymns, no. 100) என்ற பாடல் யாக்கோபுவின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் பாடலுக்கும் ஆதியாகமம் 28:10–22க்கும் என்ன தொடர்புகளை நீங்கள் காண்கிறீர்கள்? தேவனுடன் நெருங்கி வருவதற்கு ஆலயம் எவ்வாறு உதவுகிறது? தலைவர் ரசல் எம். நெல்சனின் செய்தியில் இந்தக் கேள்விக்கான பதில்களைத் தேடுங்கள்“The Temple and Your Spiritual Foundation” (Liahona, Nov. 2021, 93–96). General Handbook, 27.2 (Gospel Library) இல் உள்ள கர்த்தருடைய ஆலயத்தின் உடன்படிக்கைகளையும் ஆசீர்வாதங்களையும் நீங்கள் மறுபரிசீலனை செய்ய விரும்பலாம். உங்களுடைய வாழ்க்கையில் அது எவ்வாறு தேவனுடைய வல்லமையைக் கொண்டுவருகிறது?

ஆக்கப்பூர்வமாயிருங்கள். வேதங்களைப் படிப்பதைத் தவிர, அதிலிருந்து கற்றுக்கொள்ள பல வழிகள் உள்ளன. சிலர் அவ்விவரங்களின் படங்களை வரைந்தால் வேதங்கள் நன்றாகப் புரியும் என காண்கிறார்கள். மற்றவர்கள் பரிசுத்த நூல்கள் தொடர்பான பரிசுத்த இசையில் ஆவிக்குரிய உள்ளுணர்வுகளைக் காண்கிறார்கள். ஒரு வழியில் கற்பதற்கு உங்களை கட்டுப்படுத்த வேண்டாம்; பலவிதமான அணுகுமுறைகளை முயற்சிக்க திறந்த மனதுடனிருங்கள்.

ஆதியாகமம் 29:31–35; 30:1–24

என்னுடைய சோதனைகளில் கர்த்தர் என்னை நினைவு கூர்கிறார்.

ஆதியாகமம் 29:31–35 மற்றும் 30:1–24 நீங்கள் வாசிக்கும்போது, ராகேலுக்கும் லேயாளுக்கும் தேவனின் இரக்கத்தை விவரிக்கிற வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் தேடவும். தேவன் “[உங்கள்] உபத்திரவத்தைப் பார்த்து” உங்களை எவ்வாறு “நினைவுகூர்ந்தார்” என்பதை சிந்திக்கவும் (ஆதியாகமம் 29:32; 30:22).

ஆதியாகமம் 32–33.

இரட்சகர் என் குடும்பத்தை குணப்படுத்த முடியும்.

யாக்கோபு கானானுக்குத் திரும்பியபோது, ஏசா அவனை எப்படி வரவேற்பான் என்று அவன் “மிகவும் பயந்து வியாகுலப்பட்டான்” (ஆதியாகமம் 32:7). ஆதியாகமம் 32–33, நீங்கள் வாசிக்கும்போது, உங்கள் சொந்த குடும்ப உறவுகளைப் பற்றி சிந்தியுங்கள்—ஒருவேளை குறிப்பாக குணப்படுத்துதல் தேவைப்படும் ஒன்றை. இந்த கதை யாரையாவது அணுக உங்களைத் உணர்த்தக்கூடும். இது போன்ற கேள்விகள் உங்கள் வாசிப்பை வழிநடத்த உதவும்:

  • ஏசாவை சந்திக்க யாக்கோபு எவ்வாறு ஆயத்தமானான்?

  • ஆதியாகமம் 32:9–12ல் காணப்படுகிற யாக்கோபின் ஜெபத்தைப்பற்றி உங்களுக்கு என்ன தெரிகிறது?

  • ஏசாவின் எடுத்துக்காட்டிலிருந்து நீங்கள் மன்னிப்பைப்பற்றி என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?

  • குடும்ப உறவுகளை குணப்படுத்த இரட்சகர் எவ்வாறு உதவ முடியும்?

கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.

பிள்ளைகள் பகுதி சின்னம் 01

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

ஆதியாகமம் 24:10-21.

நான் பிறரிடம் தயவாக இருக்க முடியும்.

  • ரெபெக்காளின் தயவின் ஈர்க்கக்கூடிய உதாரணத்தை எடுத்துக்காட்ட, உங்கள் பிள்ளைகளுக்குக் கீழே உள்ள படத்தையோ அல்லது இந்த வார நிகழ்ச்சிப் பக்கத்தையோ ஆதியாகமம் 24:10–21ல் உள்ள கதையைச் சுருக்கமாகக் காட்டலாம். உங்கள் பிள்ளைகள் அபிநாதியின் கதையின் சில பகுதிகளை நடித்து ரசிக்கக்கூடும். இது நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பார்த்த தயவான செயல்களைப் பற்றிய உரையாடலுக்கு வழிவகுக்கும்.

  • Kindness Begins with Me” (Children’s Songbook, 145) போன்ற தயவு பற்றிய பாடலை ஒன்றாகப் பாடுவதைக் கருத்தில் கொள்ளவும். உங்கள் பிள்ளைகள் “தயவு” (அல்லது இதே போன்ற வார்த்தை) என்ற வார்த்தையைக் கேட்கலாம் மற்றும் அவர்கள் அதைக் கேட்கும்போது நிற்கலாம். ரெபெக்காளைப் போல் நாம் எப்படி அன்பாக இருக்க முடியும்?

ரெபெக்காளின் சித்திரம்

Old Testament Heroes, by Dilleen Marsh (detail)

ஆதியாகமம் 25:21–34.

உலகக் காரியங்களை விட நித்தியமான காரியங்கள் முக்கியம்.

  • ஆதியாகமம் 25:21–34இலுள்ள கதையை பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவ “Jacob and Esau” (in Old Testament Stories, 38–41) பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும். தனது சேஷ்ட புத்திர பாகத்தை கூழுக்கு விற்க வேண்டுமா என்று ஏசா அவர்களிடம் ஆலோசனை கேட்டதாக உங்கள் பிள்ளைகள் கற்பனை செய்யலாம். அவர்கள் அவனிடம் என்ன சொல்வார்கள்?

    2:5

    Jacob and Esau

  • உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்தியமாக என்ன காரியங்கள் முக்கியம்? ஒருவேளை உங்கள் பிள்ளைகள் இந்த விஷயங்களைக் குறிக்கும் படங்களை அல்லது பொருட்களைக் கண்டுபிடிக்கலாம். இந்த காரியங்கள் நமக்கு முக்கியம் என்பதை நாம் எப்படி கர்த்தருக்குக் காட்டலாம்?

ஆதியாகமம் 28:10–22.

பரலோக பிதாவிடம் திரும்புவதற்கு உடன்படிக்கைகள் எனக்கு உதவுகின்றன.

  • ஆதியாகமம் 28:10–22ஐ நீங்கள் ஒன்றாக வாசிக்கும்போது, ​​நமது உடன்படிக்கைகள் ஒரு ஏணியைப் போன்றது என்பதைப் பற்றி பேச, நீங்கள் ஒரு ஏணி அல்லது படிக்கட்டு (அல்லது இந்த குறிப்பின் முடிவில் உள்ளதைப் போன்ற படம்) பயன்படுத்தலாம். ஒருவேளை உங்கள் பிள்ளைகள் ஏணியில் ஏறுவது போல் பாசாங்கு செய்யலாம், ஒவ்வொரு அடியிலும் நாம் தேவனுக்குக் கீழ்ப்படிவதாக உறுதியளிக்கும் நேரங்களைப் பற்றி பேசலாம், அதாவது நாம் ஞானஸ்நானம் பெறும்போது, திருவிருந்து எடுக்கும்போது அல்லது ஆலயம் செல்லும்போது. நமது உடன்படிக்கைகள் எவ்வாறு நம்மை தேவனிடம் நெருங்கச் செய்கின்றன?

ஆதியாகமம் 32:6–11; 33:1–4

பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் என் குடும்பத்தை நேசிக்க எனக்கு உதவ முடியும்.

  • இந்த வசனங்களை அறிமுகப்படுத்த, பல வருட கடினமான உணர்வுகளுக்குப் பிறகு, யாக்கோபு மீண்டும் ஏசாவை சந்திக்கப் போகிறான் என்பதை நீங்கள் விளக்கலாம். ஆதியாகமம் 32: 6–11 ஒன்றாக வாசியுங்கள். யாக்கோபு எவ்வாறு உணர்ந்தான்?” உதவி பெற அவன் என்ன செய்தான்? யாக்கோபின் ஜெபத்திற்கு கர்த்தர் எவ்வாறு பதிலளித்தார் என்பதைக் கண்டறிய ஆதியாகமம் 33:1–4ஐ ஒன்றாகப் படியுங்கள். யாக்கோபும் ஏசாவும் இன்று நம்முடன் பேச முடிந்தால், நமது குடும்பத்தில் சர்ச்சை இருக்கும்போது நமக்கு உதவ அவர்கள் என்ன சொல்லக்கூடும்?

கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

யாக்கோபு, ஒரு ஏணி மற்றும் தூதர்கள் வானத்திலிருந்து இறங்குவதைக் கனவு காணுதல்

யாக்கோபுவின் கனவு–ஜே. கென் ஸ்பென்சர்

ஆரம்ப வகுப்பு நிகழ்ச்சி பக்கம்: நான் பிறரிடத்தில் தயவாய் இருக்க முடியும்.