2025
நம் வாழ்வின் சத்தியம்
ஆகஸ்ட் 2025


“நம் வாழ்வின் சத்தியம்,” லியஹோனா, ஆகஸ்ட் 2025.

மாதாந்தர லியஹோனா செய்தி, ஆகஸ்ட் 2025

நம் வாழ்வின் சத்தியம்

எல்லா வரங்களிலும் சிறந்ததை எவ்வாறு பெறுவது என்பது உட்பட நமது கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம் பற்றிய சத்தியங்களை நமது அன்பான பரலோக பிதா வெளிப்படுத்தியுள்ளார்.

என்.கே. விட்னி &கோ. ஸ்டோர்

ஜனவரி 22, 1833 அன்று, ஒஹாயோவின் கர்த்லாந்தில்உள்ள நியூவெல் கே. விட்னியின் கடைக்கு மேலே உள்ள ஒரு சிறிய, நெருக்கமாக நிறைந்திருந்த மாடியின் அறையில், சபையின் மூப்பர்கள் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துடன் கூடினர். முந்தைய வருடம் டிசம்பரில், பிரதானமாக சகோதரர்களை ஊழியங்களுக்கென தயார்படுத்துவதற்காக ஒரு பள்ளியை நிறுவுமாறு ஜோசப் ஒரு வெளிப்பாட்டைப் பெற்றார்.

“நான் உங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன்,” என்று கர்த்தர் உரைக்கிறார் ,“நீங்கள் ஒருவருக்கொருவர் ராஜ்யத்தின் கோட்பாட்டைப் போதிக்க வேண்டும்.

“கருத்தாய் போதியுங்கள், கருத்தியலிலும், கொள்கையிலும், கோட்பாட்டிலும், சுவிசேஷத்தின் நியாயப்பிரமாணத்திலும், நீங்கள் புரிந்துகொள்ள அவசியமாயிருக்கிற தேவனின் ராஜ்யம் குறித்த சகல காரியங்களிலும், நீங்கள் மிகப் பரிபூரணமாக அறிவுறுத்தப்படும்படியாக என் கிருபை உங்களோடிருக்கும்; …

“உங்களை நான் அழைத்த அழைப்பையும், நான் உங்களுக்குக் கட்டளையிட்ட ஊழியத்தையும் சிறப்பாக்கவும் மீண்டும் நான் உங்களை அனுப்பும்போது சகல காரியங்களிலும் நீங்கள் ஆயத்தமாயிருங்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:77–78, 80).

இந்தத் “தீர்க்கதரிசிகளின் குழு” இவ்வாறுதான் அழைக்கப்பட்டது, அற்புதமான ஆவிக்குரிய அனுபவத்தை கொடுத்தது. சபையின் ஆரம்பகாலத் தலைவர்கள் பலர் அங்குதான் கற்பிக்கப்பட்டனர். இன்றைய உலகம் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது, ஆனாலும் தேவன் அன்று அளித்த வழிகாட்டுதல் இன்னும் நம்பமுடியாத அளவிற்குப் பொருந்தக்கூடியதாகவே உள்ளது. “அவைகள் இருக்கிறபடியே, அவைகள் இருந்தபடியே, அவைகள் வரப்போகிறபடியே” சத்தியம் மற்றும் ஞானத்தின் காரியங்களைத் தேட வேண்டும்.(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:24).

படித்துக் கொண்டிருக்கும் புஸ்தகத்தைப்பற்றி தியானிக்கும் பெண்

சத்தியத்திற்கானநமது தேடல்

நாம் வாழும் இந்தக் காலத்தில், முன்பை விட அதிகமான ஞானம் நமக்குக் கிடைக்கிறது. முன்பெல்லாம், ஏதாவது ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நூலகத்திற்குச் சென்று அதைத் தேட வேண்டியிருந்தது. இன்று இணையமும் கையடக்க சாதனங்களும் நாம் உடனடியாகக் கண்டுபிடிக்கக்கூடிய கிட்டத்தட்ட முடிவில்லா தகவல்களை பெற உதவுகின்றன.

நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆதாரங்களை நாம் ஞானமாகப் பயன்படுத்தும்போது கர்த்தர் மகிழ்ச்சியடைகிறார், ஆனால் காலத்தால் அழியாத எக்காலத்திற்கும் உரிய இந்த ஆலோசனையை அவர் வழங்கியுள்ளார்: “ஒருவருக்கொருவர் ஞான வார்த்தையைப் போதியுங்கள்; ஆம், சிறந்த புஸ்தகங்களில் ஞானமான வார்த்தைகளை தேடுங்கள்; படிப்பதாலும் விசுவாசத்தாலும் கற்றுக்கொள்ள நாடுங்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:118). நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அறிய அவர் நம்மை ஊக்குவிக்கிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:79;; 93:53 ஐப் பார்க்கவும்), ஆனால் சத்தியத்திற்கான நமது தேடலில், நாம் தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும், “சகல காரியங்களையும் அவர் அறிகிறார், சகல காரியங்களும் அவருக்கு முன்பாக இருக்கின்றன, … சகல காரியங்களுக்கும் அவர் மேலானவராயிருக்கிறார், … சகல காரியங்களும் அவராலும், அவரிலும், என்றென்றைக்குமாய் இருக்கின்றன” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:41).

தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற சத்தியங்களில், பூமியில் நம் வாழ்க்கைக்கு மிகவும் அடித்தளமாக இருக்கிற ஒன்று என்னவெனில், அவர் நம்முடைய பரலோக பிதா என்பதே. நாம் அவருடைய ஆவிக்குரிய குமாரர்கள் மற்றும் குமாரத்திகள். அவர் நம்மை முழுமையாக அறிந்திருக்கிறார், நேசிக்கிறார். அவருடைய ஆவிக்குரிய பிள்ளைகளாக , நாம் ஒரு தெய்வீக இயல்பையும் இலக்கையும் கொண்டுள்ளோம். இந்த நித்திய சத்தியங்களைப் புரிந்துகொள்வதும் கடைப்பிடிப்பதும் நமக்கு அடையாளம், மதிப்பு மற்றும் நோக்கத்தைத் தருகிறது, அது நம்மை பூமிக்கு முந்தைய வாழ்க்கையில் ஆசீர்வதித்து வழிநடத்தியது போல, இப்போதும் எப்போதும் தொடர்ந்து வழிநடத்தும்.

திரை வழியாக செல்லும் மக்கள்

நாம் ஆதியிலேபிதாவோடு இருந்தோம்

நாம் காரியங்களின் சத்தியத்தை “உள்ளபடியே” தேடும்போது, நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கண்டறிகிறோம்: “இப்பொழுது, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆரம்பத்தில் நான் பிதாவோடிருந்தேன், நானே முதற்பேறானவர்,” மேலும் ”ஆரம்பத்தில் நீங்களும்கூட பிதாவோடு இருந்தீர்கள்”(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:21, 23)

பூமியில் நம் வாழ்க்கைக்கு முன்பு, பரலோகத்தில் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் நாம் கலந்துகொண்டோம், அங்கு நமது பரலோக பிதா தமது மகிழ்ச்சியின் மகத்தான திட்டத்தை வழங்கினார். “தம்மைப் போலவே முன்னேறவும் [மற்றும்] … தம்முடன் மேன்மையடையவும் ஒரு சிலாக்கியத்தை” நமக்கு வழங்குவதே தேவனுடைய திட்டத்திற்கான உந்துதலாக இருக்கிறது என்று தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் போதித்தார். “மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டுவருவது” தேவனுடைய கிரியை மற்றும் மகிமையாயிருக்கிறது (மோசே 1:39).

நாம் நம் சுயாதீனத்தைப் பயன்படுத்தி, பரலோக பிதாவின் திட்டத்தைப் பின்பற்றத் தேர்ந்தெடுத்தோம். நாம் இந்த வாழ்க்கையில் பிறப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். இங்கு நாம் தொடர்ந்து சுயாதீனத்தைக் கொண்டிருக்கவும், பூலோக வாழ்வை அனுபவிக்கவும், கற்றுக்கொள்ளவும், நித்திய ஜீவனை நோக்கி முன்னேறவும் முடியும்.

நமது பூலோக பயணத்தின் போது, நாம் சவால்களையும் பின்னடைவுகளையும் சந்திப்போம். ஆனாலும் வாழ்க்கையின் உபத்திரவங்களை நாம் தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. “பிரபஞ்சத்தின் மகத்தான தகப்பனான பரலோக பிதா[,] மனித குடும்பம் முழுவதையும் தந்தைக்குரிய பரிவோடும், தந்தையினுடைய கவனத்தோடும் பார்க்கிறார்” என்று ஜோசப் ஸ்மித் கற்பித்தார்.”

“இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாகிய” நமது பரலோக பிதா, நம்மை ஆசீர்வதிப்பார், நம்மை உயர்த்துவார், “தேவனால் நமக்கு அருளப்படும் ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலுமுள்ளவர்களுக்கும் நாம் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படிக்கு,” நம்மை ஆசீர்வதிப்பார்.(2 கொரிந்தியர் 1:3–4:). அவருடைய திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியான, நாம் அவரிடம் திரும்பிச் செல்வதற்கான வழியை பரலோக பிதா வழங்கியுள்ளார்.

கெத்செமனே தோட்டம், இஸ்ரேல்

நமது பிதாவிடம் செல்லும் வழி

“உண்மையிலேயே இருக்கிற காரியங்களின்” சத்தியமானது (யாக்கோபு 4:13) தெளிவாக உள்ளது: நமது பரலோக பிதாவின் பிள்ளைகளாகிய நாம் நமது முழு ஆற்றலையும் தனியாக அடைய முடியாது. ஆவியிலே பிதாவின் முதற்பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்து, நமது இரட்சகராகவும் மீட்பராகவும் இருக்க உடன்படிக்கை செய்தார்.

இயேசு கிறிஸ்து, “மாம்சத்திலே வந்து வாசம் செய்தவரும் நமக்கு மத்தியிலே வாசம் செய்தவருமான, … சத்தியத்தின் ஆவியாகிய, கிருபை மற்றும் சத்தியம் நிறைந்த, பிதாவின் ஒரேபேறானவர்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:11). இந்த வாழ்க்கையிலும் நித்தியத்திலும் சந்தோஷத்தையும், அதற்கு அர்த்தத்தையும் மற்றும் மகிழ்ச்சியையும் கண்டறிவதற்கான வழியைக் காட்ட அவர் வந்தார்.

“தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

“உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி, தேவன் தம்முடைய குமாரனை அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். (யோவான் 3:16–17)

இரட்சகரின் பூமிக்குரிய அனுபவம் முக்கியமானது. “முதலில் அவர் பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை, ஆனால் கிருபைக்காக கிருபையைப் பெற்றார்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:12). பிதாவின் மகிமையின் ஒரு பரிபூரணத்தை பெறும்வரை வளர்ச்சியடைந்தார்; வானத்திலும் பூமியிலும் சகல வல்லமையையும் அவர் பெற்றார், பிதாவின் மகிமை அவரோடிருந்தது, ஏனெனில் அவரில் அவர் வாசம் செய்தார்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:16–17). இரட்சகர் போதித்தார்:

“எவ்வாறு தொழுதுகொள்வதென்பதை நீங்கள் புரிந்து கொள்ளும்படியாகவும், அறிந்து கொள்ளும்படியாகவும், எதை நீங்கள் தொழுது கொள்ளவேண்டுமென்றும் அறிந்து கொள்ளும்படியாகவும், என்னுடைய நாமத்தில் நீங்கள் பிதாவிடத்தில் வரும்படியாகவும், ஏற்ற காலத்தில் அவருடைய பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாகவும், இந்த வார்த்தைகளை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

“நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டால், அவருடைய பரிபூரணத்தைப் பெற்று, நான் பிதாவில் இருப்பது போல என்னிலும் மகிமைப்படுவீர்கள்; நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் கிருபைக்காக கிருபையைப் பெறுவீர்கள்.”(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:19–20).

கெத்செமனே தோட்டத்திலும், சிலுவையிலும், இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவங்களைத் தம்மீது ஏற்றுக்கொண்டார், மேலும் அனைத்து துக்கங்களையும் “எல்லா வகையான வலிகளையும் துன்பங்களையும் சோதனைகளையும்” அனுபவித்தார்.(ஆல்மா 7:11). இது “[அவரை], … சகலத்திற்கும் மேலானவரை, வலியின் காரணமாக நடுங்கவும், இரத்தம் ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் கசியும் அளவும்” பாடுபட வைத்தது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:18). அவருடைய பாவநிவர்த்தி மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, இயேசு கிறிஸ்து இரட்சிப்பையும் மேன்மையடைதலையும் அனைவருக்கும் சாத்தியமாக்கினார்.

இரட்சகரின் கிருபையினாலும் பாவநிவாரண பலியினாலும், நாம் ஒரு முழுமையைப் பெறும் வரை வளரலாம், ஒரு நாள் பரிபூரணத்திற்குக் கொண்டுவரப்படலாம். நாம் இரட்சகரின் முன்மாதிரியைப் பின்பற்றி, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோமானால் , அவர் நம்மை பரலோகத்திலுள்ள நமது பிதாவின் மகிமையான பிரசன்னத்திற்குத் திரும்பிச்செல்லும் வழியில் வழிநடத்தி செல்வார்.

எருசலேம் செல்லும் பாதையில் கிறிஸ்து நடந்து செல்லும் ஓவியம்

எருசலேம் செல்லும் பாதையில் கிறிஸ்து மைக்கேல் கோல்மேன், நகலெடுக்கப்படக் கூடாது.

அவருடைய வரத்தைப் பெறுவீர்களா?

“உண்மையிலேயே இருக்கபோகும் காரியங்களின்” (யாக்கோபு 4:13) சத்தியங்களில், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கும் அவர் வழங்கும் வரங்களைப் பெறுவதற்கும் நாம் தேர்ந்தெடுக்கும் தேர்வின் மூலம் நித்தியத்திற்கான நமது அனுபவம் தீர்மானிக்கப்படும் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். “[நாம்] பெற்றுக்கொள்ள விரும்புவதை அனுபவிப்போம்” என்று வேதங்கள் கற்பிக்கின்றன. கவலைக்குரியதென்னவெனில், சிலர் “அவர்கள் பெற்றுக்கொண்டதை அனுபவிக்க விருப்பமுள்ளவர்களாக” இருக்க மாட்டார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:32).

நமது ஆவிக்குரிய பயணத்தில் நாம் எவ்வளவு முன்னேறியிருக்கிறோம் என்பதைத் தீர்மானிக்க ஒரு வழி என்னவென்றால், நாம் எதை ஏற்றுக்கொண்டு பெற்றுக்கொள்ளவும் அனுபவிக்கவும் விரும்புகிறோமோ அதைக் கேட்பதாகும் என்று, என்னுடைய ஊழியத் தலைவர், எழுபதின்மர் பொது அதிகாரியாகப் பணியாற்றிய மூப்பர் மரியன் டி. ஹாங்க்ஸ் (1921–2011) தனது ஊழியக்காரர்களுக்குக் கற்பித்தார். “ஏனெனில், அவன்மேல் ஒரு வரம் அருளப்பட்டு அவன் அந்த வரத்தைப் பெறவில்லையானால் மனுஷனுக்கு பிரயோஜனமென்ன? நாம் இரட்சகரின் வரங்களை ஆர்வத்துடன் தேடிப் பின்பற்றி பெறும்போது, நித்திய ஜீவனின் நம்பிக்கையிலும், “[அந்த] வரத்தைக் கொடுப்பவரிலும்” நாம் மகிழ்ச்சியடைவோம்.”(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:33). மிகவும் அன்பாகக் கொடுக்கப்பட்ட இந்த வரமானது, “தேவனுடைய வரங்கள் எல்லாவற்றிலும் மேலானது” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:7).

தேவனே நமது பரலோக பிதா. அவர் நம்மை அறிந்திருக்கிறார், நேசிக்கிறார். சத்தியத்தைத் தேடுவதில் நாம் அவரிடம் திரும்பும்போது, ​​நாம் புத்திசாலித்தனத்தைப் பற்றிக்கொள்ளலாம், ஞானத்தைப் பெறலாம், சத்தியத்தைத் தழுவலாம், நற்குணத்தை நேசிக்கலாம், அவரிடமிருந்து வரும் ஒளியைப் பற்றிக்கொள்ளலாம்.(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:40 பார்க்கவும்). பின்னர் நாம் நம் வாழ்நாள் முழுவதும் “அவரில் அவரால் உயிர்ப்பிக்கப்பட்டவர்களாக தேவனையும் நீங்கள் அறிகிற நாள் வரும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:49).

அது மிகவும் மகிமையான மற்றும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

குறிப்புகள்

  1. Teachings of Presidents of the Church: Joseph Smith (2011), 210, Gospel Library.

  2. Teachings: Joseph Smith, 39.