தேவையிலிருப்போரிடத்தில் அக்கறைலியஹோனா,செப்டம்பர் 2023
லியஹோனா மாதாந்தர செய்தி, செப்டம்பர் 2023
தேவையிலிருப்போரிடத்தில் அக்கறை
He Healed Many of Diverse Diseases (அநேக பலவிதமான நோயாளிகளை அவர் குணமாக்கினார்) - ஜே. கிர்க் ரிச்சர்ட்ஸ்
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்துவின் சபை அங்கத்தினர்களாக, தேவையிலிருப்போரிடத்தில் அக்கறைகொள்வதற்கான கர்த்தரின் போதனைகளைப் பின்பற்றுகிறோம். மற்றவர்களுக்குச் சேவை செய்வதன் மூலமும், அவர்கள் சுயசார்புடன் இருக்க உதவுவதன் மூலமும், நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும் நாம் அக்கறை காட்டுகிறோம்.
இயேசு கிறிஸ்துவின் உதாரணம்
இயேசு கிறிஸ்து தம்மைச் சுற்றறிலுமிருந்தவர்களை நேசித்தார், ஆறுதல் அளித்தார், ஜெபித்தார். “அவர் நன்மை செய்பவராக சுற்றித் திரிந்தார்”(அப்போஸ்தலர் 10:38). நம்முடைய சுற்றத்தாரை நேசிப்பது, ஆறுதலளிப்பது, சேவை செய்வது, மற்றும் ஜெபிப்பதன் மூலம் நாம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றலாம். மற்றவர்களுக்கு உதவுவதற்கான வழிகளை நாம் எப்போதும் நாடலாம்
ஊழியம் செய்தல்
நாம் ஒருவரையொருவர் எப்படிக் கவனித்துக்கொள்கிறோம் என்பதை விவரிக்க, வேதங்களிலும், கர்த்தருடைய சபையிலும் ஊழியம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. தொகுதி அல்லது கிளையில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் அல்லது குடும்பத்திற்கும் ஊழியம் செய்யும் சகோதரர்களாக ஆசாரியத்துவம் பெற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் வயது வந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊழிய சகோதரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊழியம் செய்யும் சகோதர சகோதரிகள், சபை உறுப்பினர்கள் அனைவரும் நினைவுகூரப்படுவதையும் கவனிக்கப்படுவதையும் உறுதிசெய்கிறார்கள்.
மற்றவர்கள் சுயசார்புடையவர்களாக மாற உதவுதல்
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகளைக் கண்டறிய அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் சுயசார்புடையவர்களாக மாற நாம் உதவலாம். அவர்கள் தங்கள் இலக்குகளில் முன்னேறும்போது நாம் அவர்களுக்கு ஆதரவளிக்க முடியும். ஆகஸ்ட் 2023 லியாஹோனாGospel Basics article.கட்டுரையில் சுயசார்பு பற்றிய கூடுதல் தகவலைக் கண்டறியவும்
பிறருக்கு சேவை செய்தல்
நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்குச் சேவை செய்யவும், அவர்களின் லௌகீக, ஆவிக்குரிய மற்றும் உணர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பல வழிகள் உள்ளன. மற்றவர்களைப் பற்றிக் கற்றுக்கொள்வது, அவர்களுக்கு எப்படிச் சிறப்பாகச் சேவை செய்யலாம் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். நாம் என்ன உதவி செய்யலாம் என்ற வழிகாட்டுதலைப் பெற ஜெபிக்கலாம்.
நம்மிடம் இருப்பதைப் பகிர்தல்
கர்த்தர் நமக்கு வழங்கிய ஆசிர்வாதத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்து சேவை செய்யலாம். உதாரணமாக, நாம் தாராளமாக உபவாச காணிக்கையை வழங்கலாம் அல்லது மனிதாபிமான உதவி நிதிக்கு நன்கொடை அளிக்கலாம். நாம் நமது சமூகத்திலும் நமது சபை அழைப்புகளிலும் சேவை செய்யலாம்.
சபைத் தலைவர்களின் கடமைகள்
ஆயர் தனது தொகுதியில் தேவைப்படுபவர்கள் அக்கறை காட்டப்படுவதை கண்காணிக்கிறார். தேவையிலிருக்கும் உறுப்பினர்களுக்கு உதவ உபவாச காணிக்கை பணத்தை அவர் பயன்படுத்தலாம். அவரது ஆலோசகர்கள், ஒத்தாசை சங்கம் மற்றும் மூப்பர் குழுமத் தலைவர்கள் உட்பட பிற தலைவர்கள், உறுப்பினர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயனுள்ள ஆதாரங்களைக் கண்டறிய உதவுகிறார்கள்.
சபை மனிதாபிமான முயற்சிகள்.
உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அவசரகால உதவி, சமூக நலத் திட்டங்கள், மற்றும் சுத்தமான நீர்,நோய்த்தடுப்பு மருந்துகள் போன்ற பிற திட்டங்களுக்கும் சபை உதவுகிறது. மேலும் அறிந்து கொள்ள, டாலின் எச். ஓக்ஸ்Helping the Poor and Distressedலியாஹோனாநவம்பர் 2022, 6–8 என்பதைப் பார்க்கவும்.
© 2023 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. மாதாந்திர லியஹோனா, செப்டம்பர் 2023 செய்தியின் மொழிபெயர்ப்பு Language. 19047 418