“32. மனந்திரும்புதல் மற்றும் சபை உறுப்பினர் ஆலோசனைக் குழுக்கள்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).
“32. மனந்திரும்புதல் மற்றும் சபை உறுப்பினர் ஆலோசனைக் குழுக்கள்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை
32.
மனந்திரும்புதல் மற்றும் சபை உறுப்பினர் ஆலோசனைக் குழுக்கள்
32.0
முன்னுரை
ஒரு தனிமனிதனுக்கும், தேவன் மற்றும் ஒரு நபரின் பாவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே பெரும்பாலான மனந்திரும்புதல் நடைபெறுகிறது. இருப்பினும், சில சமயங்களில் ஒரு ஆயர் அல்லது பிணையத் தலைவர் மனந்திரும்புவதற்கான முயற்சிகளில் சபை உறுப்பினர்களுக்கு உதவ வேண்டும்
மனந்திரும்புதலில் உறுப்பினர்களுக்கு உதவும்போது, ஆயர்கள் மற்றும் பிணையத் தலைவர்கள் அன்பாகவும் அக்கறையுடனும் இருக்கிறார்கள். தனிநபர்களை உயர்த்தி, பாவத்திலிருந்து விலக்கி தேவனை நோக்கி திரும்ப உதவிய, இரட்சகரின் முன்மாதிரியை அர்கள் பின்பற்றுகிறார்கள் (மத்தேயு 9:10–13; யோவான் 8:3–11 பார்க்கவும்).
32.1
மனந்திரும்புதலும் மன்னிப்பும்
அவருடைய இரக்கத்தின் திட்டத்தை நிறைவேற்ற, பரலோக பிதா தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய பாவங்களுக்காக பாவநிவர்த்தி செய்ய அனுப்பினார் (ஆல்மா 42:15 பார்க்கவும்). நம்முடைய பாவங்களுக்காக நீதியின் நியாயப்பிரமாணத்துக்குத் தேவைப்படும் தண்டனையை இயேசு அனுபவித்தார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:15–19; ஆல்மா 42:24–25 ஐயும் பார்க்கவும்). இந்த தியாகத்தின் மூலம், பிதாவும் குமாரனும் நம்மீது எல்லையற்ற அன்பைக் காட்டினார்கள் (யோவான் 3:16 ஐப் பார்க்கவும்).
நாம் “மனந்திரும்பும்படியான விசுவாசத்தை” கடைபிடிக்கும்போது, பரலோக பிதா நம்மை மன்னித்து, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலம் இரக்கத்தை அளிக்கிறார் (ஆல்மா 34:15; ஆல்மா 42:13 ஐயும் பார்க்கவும்). நாம் சுத்திகரிக்கப்பட்டு, மன்னிக்கப்படும் போது, நாம் இறுதியில் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ள முடியும் (ஏசாயா 1:18; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:42 ஐப் பார்க்கவும்).
நடத்தையை மாற்றுவதை விட மனந்திரும்புதல் அதிகமானது. அது பாவத்திலிருந்து விலகி பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவை நோக்கி திரும்புகிறது. இது இருதயம் மற்றும் மனதை மாற்றுவதற்கு வழிநடத்துகிறது (மோசியா 5:2; ஆல்மா 5:12–14; ஏலமன் 15:7 பார்க்கவும்). மனந்திரும்புதலின் மூலம், நாம் புதிய நபர்களாகி, தேவனுடன் ஒப்புரவாகிறோம் (2 கொரிந்தியர் 5:17–18; மோசியா 27:25–26 பார்க்கவும்).
மனந்திரும்புவதற்கான வாய்ப்பு பரலோக பிதா தம்முடைய குமாரனாகிய வரத்தின் மூலம் நமக்குக் கொடுத்த மிகப் பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்றாகும்.
32.2
சபை உறுப்பினர் கட்டுப்பாடுகள் அல்லது திரும்பப் பெறுதலின் நோக்கங்கள்
ஒரு உறுப்பினர் கடுமையான பாவத்தைச் செய்தால், ஆயர் அல்லது பிணையத் தலைவர் அவருக்கு மனந்திரும்ப உதவுகிறார். இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, அவர் சபை உறுப்பினரின் சில சிலாக்கியங்களிலிருந்து சிறிது காலத்திற்கு கட்டுப்படுத்தப்பட வேண்டியிருக்கலாம். சில சூழ்நிலைகளில், அவர் ஒரு நபர் உறுப்பினராயிருப்பதை சிறிது காலத்திற்கு திரும்பப் பெற வேண்டியிருக்கலாம்.
ஒரு நபர் உறுப்பினராயிருப்பதைக் கட்டுப்படுத்துவது அல்லது திரும்பப் பெறுவது தண்டிக்கும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக, ஒரு நபர் மனந்திரும்பவும் இருதய மாற்றத்தை அனுபவிக்கவும் சில நேரங்களில் இந்த நடவடிக்கைகள் அவசியம். ஒரு நபர் தனது உடன்படிக்கைகளை புதுப்பிக்கவும் மீண்டும் கடைபிடிக்கவும், ஆவிக்குரியவிதமாக ஆயத்தப்படுவதற்கு ஒரு நபருக்கு நேரம் கொடுக்கின்றன.
உறுப்பினராயிருப்பதற்கான கட்டுப்பாடுகள் அல்லது திரும்பப் பெறுதல் ஆகியவற்றின் மூன்று நோக்கங்கள் பின்வருவன.
32.2.1
மற்றவர்களைப் பாதுகாக்க உதவ
மற்றவர்களைப் பாதுகாக்க உதவுவதே முதல் நோக்கம். சில நேரங்களில் ஒரு நபர் உடல் அல்லது ஆவிக்குரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார். கொள்ளையடிக்கும் நடத்தைகள், உடல் ரீதியான தீங்கு, பாலியல் துஷ்பிரயோகம், போதைப்பொருள் துஷ்பிரயோகம், மோசடி மற்றும் மதமாறுபாடு ஆகியவை நிகழக்கூடிய சில வழிகள். உணர்த்துதலுடன், ஒரு ஆயர் அல்லது பிணையத் தலைவர் இந்த மற்றும் பிற கடுமையான வழிகளில் யாராவது அச்சுறுத்தலை ஏற்படுத்தும்போது மற்றவர்களைப் பாதுகாக்க செயல்படுகிறார் (ஆல்மா 5:59-60 ஐப் பார்க்கவும்).
32.2.2
மனந்திரும்புதல் மூலம் இயேசு கிறிஸ்துவின் மீட்பின் வல்லமையைப் பெற ஒருவருக்கு உதவ
இரண்டாவது நோக்கம், மனந்திரும்புதல் மூலம் இயேசு கிறிஸ்துவின் மீட்பின் வல்லமையைப் பெற ஒருவருக்கு உதவுவதாகும். இந்த செயல்முறையின் மூலம், அவர் அல்லது அவள் மீண்டும் தூய்மையாகவும், தேவனின் அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற தகுதியுடையவராகவும் மாறலாம்.
32.2.3
சபையின் உத்தமத்தைப் பாதுகாக்க
மூன்றாவது நோக்கம் சபையின் உத்தமத்தைப் பாதுகாப்பதாகும். ஒரு நபருடைய நடத்தை சபைக்கு குறிப்பிடத்தக்க அளவில் தீங்கு விளைவிக்குமானால் அவர் சபை உறுப்பினராயிருப்பதை கட்டுப்படுத்துவது அல்லது திரும்பப் பெறுவது அவசியமாக இருக்கலாம், (ஆல்மா 39:11 ஐப் பார்க்கவும்). சபையின் உத்தமம் கடுமையான பாவங்களை மறைப்பதாலோ அல்லது குறைப்பதாலோ பாதுகாக்கப்படுவதில்லை—மாறாக அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலம்.
32.3
இஸ்ரவேலில் நியாயாதிபதிகளின் பங்கு
ஆயர்களும் பிணையத் தலைவர்களும் இஸ்ரவேலில் நியாயாதிபதிகளாக இருக்க அழைக்கப்பட்டு பணிக்கப்படுகிறார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107: 72– 74 ஐப் பார்க்கவும்). சபை உறுப்பினர்கள் மனந்திரும்புவதற்கு உதவுவதில் கர்த்தரின் பிரதிநிதிகளாக அவர்கள் ஆசாரியத்துவத் திறவுகோல்களை தரித்திருக்கிறார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13:1; 107:16–18 ஐப் பார்க்கவும்).
பெரும்பாலும் ஆயர்கள் மற்றும் பிணையத் தலைவர்கள் தனிப்பட்ட ஆலோசனை மூலம் மனந்திரும்புதலுக்கு உதவுகிறார்கள். இந்த உதவியில் சிறிது காலத்திற்கு சபை உறுப்பினர்களின் சில சிலாக்கியங்களை தகாத முறையில் கட்டுப்படுத்துவதும் அடங்கலாம்.
சில கடுமையான பாவங்களுக்கு, தலைவர்கள் உறுப்பினர் ஆலோசனைக்குழுவைக் கூட்டி மனந்திரும்புதலுக்கு உதவுகிறார்கள் (32.6 பார்க்கவும்). இந்த உதவியில் சபை உறுப்பினர்களின் சில சலுகைகளை முறையாகக் கட்டுப்படுத்துவது அல்லது ஒரு நபர் உறுப்பினராயிருப்பதை சிறிது காலத்திற்கு திரும்பப் பெறுவது ஆகியவை அடங்கும்.
ஆயர்கள் மற்றும் பிணையத் தலைவர்கள் உறுப்பினர்கள் மனந்திரும்ப உதவுவதால் அன்பாகவும் அக்கறையுடனும் இருக்கிறார்கள். விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட பெண்ணுடன் இரட்சகரின் உரையாடல் ஒரு வழிகாட்டியாகும் (யோவான் 8:3–11 ஐப் பார்க்கவும்). அவளுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக அவர் கூறவில்லை என்றாலும், அவர் அவளைக் கண்டிக்கவில்லை. அதற்குப் பதிலாக, “இனி பாவம் செய்யாதே” என சொல்லி—மனந்திரும்பி அவளது வாழ்க்கையை மாற்றச் சொன்னார்.
“மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மகிழ்ச்சி” இருக்கிறது என்று இந்த தலைவர்கள் கற்பிக்கிறார்கள் (லூக்கா 15:7). அவர்கள் பொறுமையாகவும், ஆதரவாகவும், நேர்மறையாகவும் இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையை உணர்த்துகிறார்கள். இரட்சகரின் பாவநிவாரண பலியின் காரணமாக, அனைவரும் மனந்திரும்பி சுத்தமாக முடியும் என்று அவர்கள் போதித்து சாட்சி கூறுகின்றனர்.
ஆயர்கள் மற்றும் பிணையத் தலைவர்கள் ஒவ்வொரு நபரும் மனந்திரும்புவதற்கு எவ்வாறு உதவுவது என்பதை அறிய ஆவியின் வழிகாட்டுதலை நாடுகிறார்கள். மிகக் கடுமையான பாவங்களுக்கு மட்டுமே அதன் தலைவர்கள் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதில் சபை ஒரு நிலையான தரத்தைக் கொண்டுள்ளது (32.6 பார்க்கவும்). எந்த இரண்டு சூழ்நிலைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தலைவர்கள் அளிக்கும் ஆலோசனை மற்றும் அவர்கள் வழிவகுக்கும் மனந்திரும்புதல் செயல்முறை உணர்த்தப்பட்டதாக இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாக இருக்கலாம்.
32.4
ஒப்புதல் வாக்குமூலம், இரகசியத்தன்மை மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் அறிக்கையளித்தல்
32.4.1
அறிக்கையிடுதல்
மனந்திரும்புவதற்கு, பரலோக பிதாவிடம் பாவங்களை அறிக்கையிட வேண்டும். இயேசு கிறிஸ்து சொன்னார், “தனது பாவங்களுக்காக ஒரு மனுஷன் மனந்திரும்பினால், இதோ, அவற்றை அவன் அறிக்கையிட்டு, அவற்றை கைவிடுவான் என்பதை இதனால் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:43; மோசியா 26:29 ஐயும் பார்க்கவும்).
சபை உறுப்பினர்கள் கடுமையான பாவங்களைச் செய்யும்போது, அவர்களின் மனந்திரும்புதலில் அவர்களின் ஆயர் அல்லது பிணையத் தலைவரிடம் அறிக்கையிடுவதும் அடங்கும். பின்னர் அவர் அவர்கள் சார்பாக மனந்திரும்புதலின் சுவிசேஷத்தின் திறவுகோல்களைப் பயன்படுத்த முடியும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13:1; 84:26–27; 107:18, 20 பார்க்கவும்). இது இரட்சகரின் பாவநிவிர்த்தியின் வல்லமையின் மூலம் அவர்கள் குணமடைந்து சுவிசேஷத்தின் பாதைக்குத் திரும்ப உதவுகிறது.
அறிக்கையிடுவதன் நோக்கம், தங்களை மாற்றுவதிலும் குணப்படுத்துவதிலும் கர்த்தரின் உதவியை முழுமையாக நாட முடியும்படியாக தங்களின் பாரங்களை இறக்க உறுப்பினர்களை ஊக்குவிப்பதாகும். “நொறுங்குண்ட இருதயத்தையும், நருங்குண்ட ஆவியையும்” வளர்த்துக்கொள்வது ஒப்புதல் வாக்குமூலத்தால் உதவுகிறது (2 நேபி 2:7). தாமாகவே அறிக்கையிடுதல் ஒரு நபர் மனந்திரும்ப விரும்புகிறார் என்பதைக் காட்டுகிறது.
ஒரு உறுப்பினர் அறிக்கையிடும்போது, ஆயர் அல்லது பிணையத் தலைவர் 32.8ல் உள்ள ஆலோசனைக்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறார். உறுப்பினர் மனந்திரும்புவதற்கு உதவுவதற்கான பொருத்தமான பின்னணியைப் பற்றிய வழிகாட்டுதலை அவர் ஜெபத்துடன் நாடுகிறார். உறுப்பினர் ஆலோசனைக்குழு உதவியாக இருக்குமா என்று அவர் கருத்தில் கொள்கிறார். சபைக் கொள்கைக்கு உறுப்பினர் ஆலோசனைக்குழு தேவை என்றால், அவர் இதை விளக்குகிறார் (32.6 பார்க்கவும்).
சில நேரங்களில் ஒரு உறுப்பினர், துணைவர் அல்லது மற்றொரு வயது வந்தவருக்கு அநீதி இழைத்துள்ளார். மனந்திரும்புதலின் ஒரு பகுதியாக, அவர் அல்லது அவள் பொதுவாக அந்த நபரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். கடுமையான பாவத்தைச் செய்யும் ஒரு இளைஞர் பொதுவாக அவன் அல்லது அவளது பெற்றோருடன் ஆலோசனை கேட்க ஊக்குவிக்கப்படுகிறார்.
32.4.4
ரகசியத்தன்மை
ஆயர்கள், பிணையத் தலைவர்கள் மற்றும் அவர்களின் ஆலோசகர்களுக்கு அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் அனைத்து ரகசியத் தகவல்களையும் பாதுகாக்க ஒரு பரிசுத்தமான கடமை உள்ளது. இந்த தகவல் நேர்காணல்கள், ஆலோசனைகள் மற்றும் அறிக்கைகளில் வரலாம். உறுப்பினர் ஆலோசனைக்குழுக்களில் பங்கேற்கும் அனைவருக்கும் அதே ரகசியக் கடமை பொருந்தும். ரகசியத்தன்மை அவசியம், ஏனென்றால் உறுப்பினர்கள் பாவங்களை ஒப்புக்கொள்ளளாமலிருக்கலாம் அல்லது அவர்கள் பகிர்ந்துகொள்வது ரகசியமாக வைக்கப்படாவிட்டால் வழிகாட்டுதலை நாடாமலிருக்கலாம். நம்பகத்தன்மையை மீறுவது உறுப்பினர்களின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்து, அவர்களின் தலைவர்கள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது.
அவர்களின் இரகசியத்தன்மையின் கடமைக்கு இணங்க, ஒரு ஆயர், பிணையத் தலைவர் அல்லது அவர்களின் ஆலோசகர்கள் அத்தகைய தகவல்களைப் பின்வருமாறு மட்டுமே பகிர்ந்து கொள்ளலாம்:
-
அவர்கள் உறுப்பினர் ஆலோசனைக்குழு அல்லது தொடர்புடைய விஷயங்களை நடத்துவது பற்றி உறுப்பினரின் பிணையத் தலைவர், ஊழியத் தலைவர் அல்லது ஆயர் ஆகியோரிடம் பேச வேண்டும்.
-
உறுப்பினர் நடவடிக்கை அல்லது பிற தீவிரமான அக்கறைகள் நிலுவையில் இருக்கும்போது அந்நபர் ஒரு புதிய தொகுதிக்கு (அல்லது ஆசாரியத்துவத் தலைவர் விடுவிக்கப்படுகிறார்) மாறுகிறார்.
-
ஒரு ஆயர் அல்லது பிணையத் தலைவர், தொகுதி அல்லது பிணையத்துக்கு வெளியே வசிக்கும் ஒரு சபை உறுப்பினர் கடுமையான பாவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்பதை அறிந்துகொள்கிறார்.
-
உறுப்பினர் ஆலோசனைக்குழு நடக்கும்போது தகவல்களை வெளியிடுவது அவசியம்.
-
குறிப்பிட்ட நபர்களுடன் தகவலைப் பகிர்ந்து கொள்ள தலைவர் அனுமதி வழங்க ஒரு உறுப்பினர் தேர்வு செய்கிறார்.
-
உறுப்பினர் ஆலோசனைக்குழுவின் முடிவைப் பற்றிய வரையறுக்கப்பட்ட தகவலைப் பகிர்வது அவசியமாக இருக்கலாம்.
மற்றவர்களைப் பாதுகாப்பதற்கும் சட்டத்திற்கு இணங்குவதற்கும் தலைவர்களுக்கு உதவ, பயிற்சி பெற்ற நிபுணர்களின் உதவியை சபை வழங்குகிறது. இந்த வழிகாட்டுதலைப் பெற, கிடைக்கிற இடத்தில் தலைவர்கள் உடனடியாக சபையின் துஷ்பிரயோக உதவி எண்ணை அழைக்கிறார்கள் (38.6.2.1 பார்க்கவும்). அது கிடைக்காத பட்சத்தில், பிணையத் தலைவர், பிரதேச அலுவலகத்தில் உள்ள சட்ட ஆலோசகரை தொடர்பு கொள்கிறார்.
ஒரே ஒரு சூழ்நிலையில் மட்டும் ஒரு ஆயர் அல்லது பிணையத் தலைவர் முதலில் அத்தகைய வழிகாட்டுதலை நாடாமல் ரகசிய தகவலை வெளியிட வேண்டும். உயிருக்கு ஆபத்தான தீங்கு அல்லது கடுமையான காயத்தைத் தடுக்க மற்றும் வழிகாட்டுதலைப் பெற நேரம் இல்லாதபோது தெரிவிப்பது அவசியம். இதுபோன்ற விஷயங்களில், ரகசியத்தன்மையைக் காட்டிலும் மற்றவர்களைப் பாதுகாக்கும் கடமை முக்கியமானது. தலைவர்கள் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும்.
32.6
பாவத்தின் தீவிரம் மற்றும் சபைக் கொள்கை
(1) பிறரைப் பாதுகாக்கவும் (2) ஒருவருக்கு மனந்திரும்ப உதவவும் பின்னணியைத் தீர்மானிப்பதில் பாவத்தின் கடுமை முக்கியமாகக் கருதப்பட வேண்டும். “பாவத்தை ஒரு துளியாகிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது”என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:31; மோசியா 26:29 ஐயும் பார்க்கவும்). அவருடைய ஊழியக்காரர்கள் கடுமையான பாவத்தின் அத்தாட்சியைப் புறக்கணிக்கக் கூடாது.
கடுமையான பாவங்கள் தேவனின் நியாயப்பிரமாணங்களுக்கு எதிரான தன்னிச்சையான மற்றும் பெரிய குற்றமாகும். கடுமையான பாவங்களின் வகைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
-
வன்முறை செயல்கள் மற்றும் துஷ்பிரயோகம்
-
பாலியல் ஒழுக்கக்கேடு
-
மோசடியான செயல்கள்
-
நம்பிக்கை மீறல்கள்
-
வேறு சில செயல்கள்
உறுப்பினர் ஆலோசனைக்குழு தேவைப்படும் போது அல்லது அவசியமாக இருக்கலாம்
|
பாவத்தின் வகை |
உறுப்பினர் ஆலோசனைக்குழு தேவை |
உறுப்பினர் ஆலோசனைக்குழு அவசியமாக இருக்கலாம் |
|---|---|---|
பாவத்தின் வகை வன்முறைச் செயல்கள் மற்றும் துஷ்பிரயோகம் | உறுப்பினர் ஆலோசனைக்குழு தேவை
| உறுப்பினர் ஆலோசனைக்குழு அவசியமாக இருக்கலாம் |
பாவத்தின் வகை பாலியல் ஒழுக்கக்கேடு | உறுப்பினர் ஆலோசனைக்குழு தேவை
| உறுப்பினர் ஆலோசனைக்குழு அவசியமாக இருக்கலாம்
|
பாவத்தின் வகை மோசடி செயல்கள் | உறுப்பினர் ஆலோசனைக்குழு தேவை
| உறுப்பினர் ஆலோசனைக்குழு அவசியமாக இருக்கலாம்
|
பாவத்தின் வகை நம்பிக்கை மீறல்கள் | உறுப்பினர் ஆலோசனைக்குழு தேவை
| உறுப்பினர் ஆலோசனைக்குழு அவசியமாக இருக்கலாம்
|
பாவத்தின் வகை வேறு சில செயல்கள் | உறுப்பினர் ஆலோசனைக்குழு தேவை
| உறுப்பினர் ஆலோசனைக்குழு அவசியமாக இருக்கலாம்
|
32.6.3
உறுப்பினர் ஆலோசனைக்குழு அல்லது பிற நடவடிக்கை அவசியமா என்பது குறித்து பிணையத் தலைவர் பிரதேச தலைமையுடன் ஆலோசனை செய்யும் போது
சில விஷயங்களுக்கு கூடுதல் உணர்திறன் மற்றும் வழிகாட்டுதல் தேவை. எவ்வாறு சிறந்த முறையில் உதவுவது என்பதை அறிய, பிணையத் தலைவர் இந்தப் பிரிவில் உள்ள சூழ்நிலைகளைப் பற்றி பிரதேச தலைமையுடன் ஆலோசனை செய்ய வேண்டும்.
32.6.3.2
மதமாறுபாடு
மதமாறுபாடு பிரச்சினைகள் பெரும்பாலும் ஒரு தொகுதி அல்லது பிணையங்களின் எல்லைகளுக்கு அப்பால் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மற்றவர்களைப் பாதுகாக்க அவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.
ஒரு உறுப்பினரின் செயல் மதமாறுபாடாக இருக்கலாம் என்று அவர் உணர்ந்தால், பிணையத் தலைவருடன் ஆயர் ஆலோசனை செய்கிறார்.
இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளபடி, மதமாறுபாடு என்பது பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றில் ஈடுபடும் ஒரு உறுப்பினரைக் குறிக்கிறது:
-
சபை, அதன் கோட்பாடு, அதன் கொள்கைகள் அல்லது அதன் தலைவர்களுக்கு எதிராக தெளிவான மற்றும் வேண்டுமென்றே பொது எதிர்ப்பில் மீண்டும் மீண்டும் செயல்படுவது
-
ஆயர் அல்லது பிணையத் தலைவரால் திருத்தப்பட்ட பிறகு, சபை கோட்பாடு அல்லாததை சபைக் கோட்பாடாகக் தொடர்ந்து கற்பித்தல்
-
சபை உறுப்பினர்களின் விசுவாசத்தையும் செயல்பாட்டையும் பலவீனப்படுத்த வேண்டுமென்றே வேலை செய்யும் முறையைக் காட்டுகிறது
-
ஆயர் அல்லது பிணையத் தலைவரால் திருத்தப்பட்ட பிறகு, மதமாறுபாடு குழுக்களின் போதனைகளைத் தொடர்ந்து பின்பற்றுதல்
-
முறைப்படி மற்றொரு சபையில் சேர்ந்து அதன் போதனைகளை ஊக்குவித்தல்
32.6.3.3
சபை நிதிகளை மோசடி செய்தல்
ஒரு உறுப்பினர் சபை நிதியை அபகரித்தால் அல்லது மதிப்புமிக்க சபைச் சொத்துக்களை திருடினால், பிணையத் தலைவர், உறுப்பினர் ஆலோசனைக்குழு அல்லது பிற நடவடிக்கை தேவையா என்பது குறித்து பிரதேச தலைமையுடன் ஆலோசனை செய்கிறார்.