“13. ஞாயிறு பள்ளி,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).
“13. ஞாயிறு பள்ளி,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை
13.
ஞாயிறு பள்ளி
13.1
நோக்கம்
ஞாயிறு பள்ளித் தலைவர்கள், ஆசிரியர்கள், வகுப்புகள்
-
“இராஜ்யத்தின் கோட்பாட்டை” கற்பிப்பதன் மூலம் பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசத்தை பலப்படுத்தவும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:77).
-
வீட்டை மையமாகக் கொண்ட, சபையை ஆதரிக்கும் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதல் மற்றும் கற்பித்தலை ஆதரிக்கவும்.
-
இரட்சகரின் வழியில் கற்பிக்க உறுப்பினர்களுக்கு உதவவும்.
13.2
தொகுதி ஞாயிறு பள்ளி தலைமை
13.2.1
ஆயம்
ஞாயிறு பள்ளியை ஆயம் மேற்பார்வையிடுகிறது. வழக்கமாக ஆயர் தனது வழிகாட்டுதலின் கீழ் இந்த பொறுப்பை நிறைவேற்ற தனது ஆலோசகர்களில் ஒருவரை நியமிக்கிறார்.
13.2.2
ஞாயிறு பள்ளி தலைவர்
13.2.2.1
ஒரு ஞாயிறு பள்ளித் தலைவரை அழைத்தல்
தொகுதி ஞாயிறு பள்ளியின் தலைவராக இருக்க ஒரு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவரை அழைத்து, பணிக்கிறார். ஆலோசகர்கள் தேவைப்பட்டால், இந்தப் பதவிகளில் பணியாற்ற போதுமான ஆண்கள் இருந்தால், ஞாயிறு பள்ளித் தலைவர் ஒன்று அல்லது இரண்டு ஆலோசகர்களை பரிந்துரைக்கலாம்.
13.2.2.2
பொறுப்புகள்
-
தொகுதி ஆலோசனைக்குழுவில் பணியாற்றுகிறார்.
-
வீட்டிலும் சபையிலும் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதலையும் கற்பித்தலையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்பார்வையிடுகிறார்.
-
ஞாயிறு பள்ளி ஆசிரியர்களாக பணியாற்ற வயதுவந்த உறுப்பினர்களை ஆயத்திற்குப் பரிந்துரைக்கிறார்.
-
ஞாயிறு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவு, ஊக்கம் மற்றும் அறிவுறுத்துகிறார்.
-
ஆயரின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகிறார் (இரட்சகரின் வழியில் கற்பித்தல் பார்க்கவும், 3).
13.2.3
ஞாயிறு பள்ளி ஆசிரியகள்
கற்பிக்க ஆயத்தமாக வேதங்கள், என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிப்பட்டவர்களுக்கும் குடும்பங்களுக்கும், மற்றும் என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஞாயிறு பள்ளிக்காக ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர்.
13.3
ஞாயிறு பள்ளி வகுப்புகள்
ஞாயிறு பள்ளி கூட்டங்கள் மாதத்தின் முதலாவது மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகின்றன.
ஆயத்தின் ஒப்புதலுடன், ஞாயிறு பள்ளித் தலைவர் வயது வந்தவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வகுப்புகளை ஏற்பாடு செய்கிறார்.
ஒவ்வொரு இளைஞர் வகுப்பிலும் குறைந்தது இரண்டு பொறுப்புள்ள வயது வந்தவர்கள் இருக்க வேண்டும்.
இளைஞர்களுடன் பணிபுரியும் அனைத்து வயதுவந்தோரும் பிள்ளைகள் மற்றும் இளைஞர் பாதுகாப்பு பயிற்சியை ஆதரிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் (ProtectingChildren.ChurchofJesusChrist.org).
13.4
தொகுதியில் கற்றுக்கொள்ளுதலையும் கற்பித்தலையும் மேம்படுத்துதல்
தொகுதி தலைவர்கள் தங்கள் அமைப்புகளில் கற்றுக்கொள்ளுதல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்கு பொறுப்புள்ளவர்கள். தேவைப்பட்டால் அவர்கள் தொகுதி ஞாயிறு பள்ளி தலைவரிடம் உதவி கேட்கலாம்.
13.5
வீட்டில் கற்றுக்கொள்ளுதலையும் கற்பித்தலையும் மேம்படுத்துதல்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சுவிசேஷத்தைக் கற்பிக்க பொறுப்புள்ளவர்கள். ஆசிரியர்களாக முன்னேற அவர்களுக்கு உதவுமாறு ஞாயிறு பள்ளித் தலைவரிடம் அவர்கள் கேட்கலாம்.