பெற்றோர்
பிரதான தலைமையிலிருந்து செய்தி


பிரதான தலைமையிலிருந்து செய்தி

எங்கள் அன்பான இளம் சகோதர சகோதரிகளே,

நாங்கள் உங்களை நேசிக்கிறோம், உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நீங்கள் உண்மையிலேயே பரலோக பிதாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவிகளில் ஒருவராக இருக்கிறீர்கள், முக்கியமான காரியங்களைச் செய்ய இந்த நேரத்தில் பூமிக்கு அனுப்பப்பட்டிருக்கிறீர்கள்.

நீங்கள் உணர்வதை விட நீங்கள் வலிமையானவர் மற்றும் திறமையானவர். நீங்கள் இரட்சகரை சார்ந்திருக்கும்போது, ​​உங்கள் பலம் இன்னும் அதிகமாக வளரும். அவர்தான் “இளைஞரின் பெலன்.”

நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் பாதையில் நிலைத்திருக்க தேர்வுகளைச் செய்வதற்கு உறுதியான அடித்தளத்தை உருவாக்க இந்த வழிகாட்டி உங்களுக்கு உதவும். ஆலயத்தில் பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்ய ஆயத்தமாகவும், ஊழியத்திற்குச் செல்ல ஆயத்தமாகவும், உங்கள் வாழ்நாள் முழுவதும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் மகிழ்ச்சியைக் காணவும் இது உதவும். அவருடைய சபையில் உங்களுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. இயேசு கிறிஸ்து உங்களுக்காக தம்முடைய நோக்கங்களை நிறைவேற்ற உங்களுக்கு உதவுவார்.

தேவன் ஜீவிக்கிறார் என நாங்கள் அறிகிறோம். தேவனுடன் பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்து காத்துக்கொள்வதற்கான உடன்படிக்கைப் பாதையில் நீங்கள் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும் என்பதே எங்கள் ஜெபம். அதுதான் உங்கள் பரலோக பிதாவிடம் திரும்பிச் செல்லும் பாதை. நீங்கள் அவ்வாறு செய்யும்போது, ​​ மகிழ்ச்சியுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து, இரட்சகரின் இரண்டாம் வருகைக்கு உலகை ஆயத்தப்படுத்தி, நீங்கள் நன்மைக்கான ஒரு செல்வாக்காக இருப்பீர்கள். நினைவில் கொள்ளுங்கள்: இயேசு கிறிஸ்துவே உங்கள் பெலன்!

பிரதான தலைமை