2025
முதல் கிறிஸ்துமஸில் இருந்த மேய்ப்பர்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?
டிசம்பர் 2025 லியஹோனா


இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, டிசம்பர் 2025

முதல் கிறிஸ்துமஸில் இருந்த மேய்ப்பர்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

இளம் பெண்

மேய்ப்பர்கள்–ப்ரையன் கால்

முதல் கிறிஸ்துமஸில் இருந்த மேய்ப்பர்களைப் பற்றி நமக்கு சில விஷயங்கள் தெரியும்.

அவர்கள் பெத்லகேமுக்கு அருகில் இருந்தார்கள். மேய்ப்பர்கள் கிறிஸ்துவின் பிறப்பு நடந்த “அந்த நாட்டில்” இருந்தனர் (லூக்கா 2:8). அவர் அங்கே இருந்தபோதே அவர்கள் கால்நடையாக பெத்லகேமை அடைய முடிந்தது (லூக்கா 2:15-16 ஐப் பார்க்கவும்).

அவர்கள் தங்கள் கடமையைச் செய்து கொண்டிருந்தார்கள். இந்த மேய்ப்பர்கள் “வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.” (லூக்கா 2:8). அவர்கள் இரட்சகராகியஅந்த நல்ல மேய்ப்பரைப் போலவே நல்ல மற்றும் உண்மையுள்ள மேய்ப்பர்களாக இருந்தனர் (யோவான் 10:11, 14 ஐப் பார்க்கவும்).

அவர்கள் மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை அறிந்திருந்தார்கள். “கர்த்தராகிய கிறிஸ்துவின்” பிறப்பை அறிவித்தபோது (லூக்கா 2:11), மேசியா குறித்து பண்டைய காலங்களிலிருந்து தீர்க்கதரிசனம் உரைத்தபோது, ​​தேவதூதர் என்ன பேசினார் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

அவர்களுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. தூதன் அவர்களிடம் “முன்னணையில் கிடக்கும் குழந்தையைப் பற்றி” (லூக்கா 2:12) சொன்னபோது, ​​அவர்கள் அவரைப் பார்க்க “தீவிரமாய்” சென்றார்கள் (லூக்கா 2:16).

அவர்கள் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டனர். கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய தூதனின் செய்தியைப் பற்றி அவர்கள் கேட்டதையும் கண்டதையும் அவர்கள் “பிரசித்தம்பண்ணினார்கள்” (லூக்கா 2:17).

அவர்கள் தேவனுக்கு நன்றி சொல்லி துதித்தார்கள். இவை அனைத்திற்கும் பிறகு, அவர்கள் “கேட்டு, கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்” (லூக்கா 2:20).