2025
நான் உண்மையாய் மனந்திரும்பியதையும் மன்னிக்கப்பட்டதையும் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
ஜூன் 2025


மாதாந்தர இளைஞரின் பெலனுக்காக செய்தி, ஜூன் 2025

நான் உண்மையாய் மனந்திரும்பியதையும் மன்னிக்கப்பட்டதையும் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?

இளம் பெண் ஜெபித்தல்

Coming Full Circle, by Jenedy Page

கர்த்தர் கூறியிருக்கிறார் “தனது பாவங்களுக்காக மனந்திரும்புகிறவன் மன்னிக்கப்படுகிறான், கர்த்தராகிய நான் அவற்றை நினைவுகூரமாட்டேன்.

தனது பாவங்களுக்காக ஒரு மனுஷன் மனந்திரும்பினால், இதோ, அவற்றை அவன் அறிக்கையிட்டு, அவற்றை கைவிடுவான் என்பதை இதனால் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்”.(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:42–43)

மனப்பூர்வமான மனந்திரும்புதலின் மூலம் நாம் மன்னிப்பைப் பெற முடியும். “ஆவியானவரிடமிருந்து ஆறுதலை நீங்கள் உணரும்போது, இரட்சகரின் பாவநிவர்த்தியின் வல்லமை உங்கள் வாழ்க்கையில் கிரியை செய்கிறது என்பதை நீங்கள் அறியலாம்” நாம் மீண்டும் வழுக்கிவிட்டால், நாம் மீண்டும் மனந்திரும்பலாம், மன்னிக்கப்படலாம், தொடர்ந்து முயற்சி செய்யலாம்.

கூடுதலாக, பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் மூப்பர் டியட்டர் எப். உக்டர்ப் போதித்தார்: “நம்முடைய பாவங்களை நாம் நினைவுகூர முடியும் என்பதால் அவை மன்னிக்கப்படுவதில்லை என்று நம்மை நம்ப வைக்க சாத்தான் முயற்சி செய்வான். சாத்தான் ஒரு பொய்யன். … நம்முடைய பாவங்களை நாம் நினைவுகூர மாட்டோம் என்று தேவன் வாக்குக் கொடுக்கவில்லை. நினைவுகூருவது அதே தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க உதவும். ஆனால் நாம் உண்மையாகவும் விசுவாசத்துடனும் இருந்தால், காலப்போக்கில் நமது பாவங்களின் நினைவு மென்மையடையும்.