2025
நாம் இயேசு கிறிஸ்துவின் பணியில் அவருடன் இணைந்து கொள்வதன் மூலம் அவரைப் பின்பற்றுகிறோம்
ஜூன் 2025


“நாம் இயேசு கிறிஸ்துவின் பணியில் அவருடன் இணைந்து கொள்வதன் மூலம் அவரைப் பின்பற்றுகிறோம்,” லியஹோனா, ஜூன் 2025.

லியஹோனா மாதாந்தர செய்தி, ஜூன் 2025

நாம் இயேசு கிறிஸ்துவின் பணியில் அவருடன் இணைந்து கொள்வதன் மூலம்அவரைப் பின்பற்றுகிறோம்

நாம் இரட்சகரின் நோக்கங்களில் கவனம் செலுத்தும்போதும், அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளும்போதும், ஒருவரிலொருவர் அன்புகூரும்போதும் இரட்சகரின் பணியில் நாம் பங்கேற்கிறோம்.

கிறிஸ்துவும் செல்வந்தனாயிருந்த இளம் அதிபதியும்

கிறிஸ்துவும் செல்வந்தனாயிருந்த இளம் அதிபதியும், விளக்கம், ஹெய்ன்ரிச் ஹோப்மன்

நாம் ஞானஸ்நானம் பெறும்போது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ளும் செயல்முறையைத் தொடங்குகிறோம். இந்த செயல்முறையின் ஒரு பகுதி இரட்சகருடன் அவரது பணியில் நாம் இணைவதைக் குறிக்கிறது. பிரதான தலைமையின் முதல் ஆலோசகரான தலைவர் டாலின் ஹெச். ஓக்ஸ் எழுதினார், “கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்வதன் மிக முக்கியமான அர்த்தங்களில் ஒன்று, இரட்சகர் மற்றும் அவரது ராஜ்யத்தின் பணியை நம்மீது எடுத்துக்கொள்ள விருப்பமும் ஒப்புக்கொடுத்தலும் ஆகும்.”

இரட்சகரின் பணி “மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டுவருவது” (மோசே 1:39). அழியாமை என்பது இயேசு கிறிஸ்து ஏற்கனவே அவரது உயிர்த்தெழுதலின் மூலம் உத்தரவாதம் அளித்த ஒரு நிபந்தனையற்ற பரிசு. என்றபோதிலும், நித்திய ஜீவனும் அழியாமையும் ஒன்றல்ல. நித்திய ஜீவன் என்பது தேவன் மனுக்குலத்திற்குக் கொடுக்கக்கூடிய மிகப் பெரிய பரிசு (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:7 பார்க்கவும் ). அவர் பிரசன்னத்தில் குடும்பங்களாக என்றென்றும் வாழ்வதே அது. நாம் நித்திய ஜீவனைப் பெறுவதற்கு, நாம் இயேசு கிறிஸ்துவின் உண்மையுள்ள சீஷர்களாக மாற வேண்டும். இதன் அர்த்தம், இரட்சகரிலும் அவரது பாவநிவர்த்தியிலும் விசுவாசம் வைத்து, மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்று, ஆலய உடன்படிக்கைகளைச் செய்து கைக்கொண்டு, முடிவுபரியந்தமும் நிலைத்திருப்பதன் மூலம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தை நாம் ஏற்றுக் கொள்வதே ஆகும். முடிவுபரியந்தமும் நிலைத்திருப்பது இரட்சகருடன் அவரது பணியில் இணைவதை உள்ளடக்குகிறது.

ஆவலுடன் ஈடுபடுதல்

தேவனின் பிள்ளைகள் இயேசு கிறிஸ்துவின் உண்மையுள்ள சீடர்களாகவும் ஆவதற்கு அவர்களுக்கு உதவுவதன் மூலம் நாம் இரட்சகரின் பணியில் பங்கேற்கிறோம். அவருடைய சபையில் பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலமும் அவரைப் போல் மாற முயற்சி செய்வதன் மூலமும் இரட்சகரின் சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்ளுவதன் பலனாக சிதறுண்டு போன இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பதும் இதில் அடங்கும். நம்முடைய “[அவருடைய வேலையில்] வெற்றி என்பது மற்றவர்கள் [நமக்கு], [நமது] அழைப்புகளுக்கு அல்லது [நமது] உண்மையான தயவின் செயல்களுக்கு எவ்வாறு பதிலளிக்க தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தது அல்ல.” தலைவர் ரசல் எம். நெல்சன் உறுதிப்படுத்தினார், “நீங்கள்—திரையின் இருபுறமும்—எவருக்கேனும்தேவனுடன் உடன்படிக்கைகளைச் செய்வதற்கும் அவர்களின் அத்தியாவசிய ஞானஸ்நான மற்றும் ஆலய நியமங்களைப் பெறுவதற்கும் நேராய் ஒரு படி எடுத்து வைக்க உதவும் எதையேனும் யாதொரு நேரத்தில் செய்தாலும், நீங்கள் இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க உதவுகிறீர்கள்.”

இரட்சகரின் பணியை நமது பணியாக மாற்ற, நாம் அவரது நோக்கங்களில் கவனம் செலுத்துகிறோம், அவரது கட்டளைகளைக் கைக்கொள்கிறோம், ஒருவரையொருவர் நேசிக்கிறோம். நாம் அவருடைய பணியை அவருடைய வழியில் செய்யும்போது ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 51:2ஐப் பார்க்கவும்), சில காரியங்களை நாமே சொந்தமாக கண்டறிந்து கொள்ளும்படி விடப்படுகிறோம். மிசௌரியின் ஜாக்சன் கவுண்டியில் கூடியிருந்த பரிசுத்தவான்களிடம் இரட்சகர் சொன்னார்:

ஏனெனில் இதோ, சகல காரியங்களிலும் நான் கட்டளையிடவேண்டுமென்பது சரியல்ல; ஏனெனில் சகல காரியங்களிலும் கட்டாயப்படுத்தப்படுகிறவன் ஒரு சோம்பேறியாயிருக்கிறான், ஒரு புத்தியுள்ள வேலைக்காரனாயல்ல; ஆகவே அவன் எந்த பலனையும் அடைவதில்லை.

“மெய்யாகவே நான் சொல்லுகிறேன், ஒரு நல்ல காரணத்திற்காக மனுஷர்கள் ஆவலோடு ஈடுபடவேண்டும், தங்களின் சுயவிருப்பத்தில் அநேக காரியங்களைச் செய்து, மிகுந்த நீதியைக் கொண்டு வரவேண்டும்.

“ஏனெனில் அதிகாரம் அவர்களிடத்திலிருக்கிறது, அதனால் அவர்கள் தங்களுக்கே பிரதிநிதிகளாயிருக்கிறார்கள். மனுஷர்கள் எவ்வளவாய் நன்மை செய்கிறார்களோ அவ்வளவாய் அவர்கள் தங்கள் பலனை ஒருபோதும் இழக்கமாட்டார்கள்.” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:26-28).

நாம் இரட்சகரைப் பின்பற்றும்போதும், அவரது பணியில் அவருடன் சேரும்போதும், அவரது உண்மையுள்ள சீஷர்களாக மாற மற்றவர்களுக்கு உதவும்போதும், அவர் எதை போதிப்பாரோ அதையே நாமும் போதிக்கிறோம். வேறு எதையும் போதிக்க நமக்கு அதிகாரம் இல்லை என்பதால் ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 52:9, 36 பார்க்கவும்), நாம் எந்த மாறுபாடும் இன்றி அவரது கோட்பாட்டில் கவனம் செலுத்துகிறோம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:25 பார்க்கவும்). கூடுதலாக, எளியவர்கள், தேவையிலிருப்போர் மற்றும் பலவீனமாயிருப்போர் மீது நாம் குறிப்பாக கவனம் செலுத்துகிறோம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 52:40 பார்க்கவும்). நாசரேத்திலிருந்த ஒரு ஜெப ஆலயத்தில் இரட்சகர் ஏசாயாவிலிருந்து மேற்கோள் காட்டியபோது இந்த வலியுறுத்தல்கள் தெளிவாக்கப்பட்டன:

“கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார், ஏனெனில் தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார், இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் காயப்பட்டோருக்கு விடுதலையையும் பிரசித்தப்படுத்தவும் அவர் என்னை அனுப்பினார்,

“கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும்” (லூக்கா 4:18–19; மேலும் பார்க்கவும் ஏசாயா 61:1–2).

கர்த்தருடைய அநுக்கிரக வருஷம் என்பது தேவனுடைய உடன்படிக்கையின் அனைத்து ஆசீர்வாதங்களும் அவருடைய மக்கள் மீது குவிக்கப்படும் காலத்தைக் குறிக்கிறது. தேவனுடன் உடன்படிக்கைகளைச் செய்து கைக்கொள்வதனால் வரும் ஆசீர்வாதங்களைப் பெறவும், எளியவர்கள் அல்லது தேவையில் இருப்போரைக் கவனித்துக்கொள்ளவும் மற்றவர்களை அழைப்பதன் மூலம் நாம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறோம்.

இயேசு கிறிஸ்துவுடன் அவரது பணியில் இணைந்து கொள்வது உற்சாகமளிக்கிறது ஏனென்றால் தேவனின் கிரியைகளும், திட்டங்களும், நோக்கங்களும் “தடைபடுவதில்லை, அவைகள் நின்றுபோவதுமில்லை” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 3:1) சோர்ந்துபோனவர்களுக்கு, கர்த்தர் அறிவுரை கூறுகிறார்: “நன்மை செய்வதிலே சோர்ந்து போகாதிருங்கள், ஏனெனில் ஒரு மகத்தான பணிக்கு நீங்கள் அஸ்திபாரம் போடுகிறீர்கள். சிறிய காரியங்களிலிருந்து பெரிதானவை வரும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:33). அறுவடையைப் பற்றி கர்த்தர் கவலைப்படட்டும், நாம் வெறுமனே நம் பங்கைச் செய்கிறோம்.

இருதயமும் சித்தமாயிருக்கிற மனதும்

நமது பங்கைச் செய்வது நாம் கற்பனை செய்வதை விட எளிமையானது, ஏனென்றால் கர்த்தரின் பணிக்கு அசாதாரணமான திறமைகளையோ ஆற்றலையோ நாம் கொண்டு வர வேண்டியதில்லை. அவரது தேவை வெறுமனே அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகம். ஒஹாயோவின் கர்த்லாந்தில் உள்ள பரிசுத்தவான்களிடம் கர்த்தர் சொன்னார், “இருதயத்தையும் உற்சாகமான மனதையும் கர்த்தர் கேட்கிறார்”(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:34). மேலும், தேவன் உற்சாகமுள்ளவர்களைத் திறமையானவர்களாக்க முடியும், ஆனால் அவரால் திறமையானவர்களை உற்சாகமாக்க முடியாது அல்லது செய்ய மாட்டார். வேறு விதமாகக் கூறுவதானால், நாம் அர்ப்பணிப்புடனும் உற்சாகத்துடனும் இருந்தால், அவரால் நம்மைப் பயன்படுத்த முடியும். ஆனால் நாம் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும், நாம் அவருடைய பணியில் அர்ப்பணிப்புடனும், அவருக்கு உதவ தயாராகவும் இல்லாவிட்டால் அவர் நம்மை பயன்படுத்த மாட்டார்.

சாமுவேல் மற்றும் அன்னா-மரியா கோவிஸ்டோ அர்ப்பணிப்பு மற்றும் சித்தமாயிருத்தல் இரண்டையும் காட்டினர். திருமணத்திற்குப் பிறகு, கோவிஸ்டோஸ் பின்லாந்தின் ஜிவாஸ்கிலாவிலிருந்து ஸ்வீடனின் கோட்போர்க்கிற்கு தொழில் வாய்ப்புகளைத் தொடர குடிபெயர்ந்தார். கோட்போர்க் ஸ்வீடன் பிணையத் தலைமையில் ஆலோசகராக இருந்த தலைவர் லீப் ஜி. மாட்சனைச் சந்திக்க சகோதரர் கோவிஸ்டோ அழைக்கப்பட்டார். சாமுவேல் ஸ்வீடிஷ் பேச அறிந்திருக்கவில்லை அதனால், நேர்காணல் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது.

ஒரு சுருக்கமான சந்திப்பைத் தொடர்ந்து, தலைவர் மாட்சன், சாமுவேலை உட்பி தொகுதியில் தொகுதி ஊழியத் தலைவராக பணியாற்றும்படி கேட்டார். சாமுவேல் வெளிப்படையாக சுட்டிக்காட்டினார்: “ஆனால் என்னால் ஸ்வீடிஷ் பேச இயலாது.”

தலைவர் மாட்சன் தனது மேசையின் மீது சாய்ந்து நெருங்கி, “உங்களுக்கு ஸ்வீடிஷ் பேச முடியுமா என்று நான் கேட்டேனா, அல்லது நீங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறீர்களா ” என்று கேட்டார்.

அதற்கு சாமுவேல், “நான் கர்த்தருக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறேனா என்று கேட்டீர்கள். ஆம், இருக்கிறேன்.”

சாமுவேல் அழைப்பை ஏற்றுக்கொண்டார். அன்னா-மரியாவும் அழைப்புகளை ஏற்றுக்கொண்டார். இருவரும் உண்மையாக சேவை செய்தனர் மற்றும் நாளடைவில் அழகான ஸ்வீடிஷ் பேச கற்றுக்கொண்டனர்.

கர்த்தருக்கு சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகம் சாமுவேல் மற்றும் அன்னா-மரியாவின் வாழ்க்கையை வகைப்படுத்தியுள்ளது. அவர்கள் சபையில் சாதாரண கதாநாயகர்கள். அவர்கள் கேட்கப்பட்ட ஒவ்வொரு முறையும் உண்மையுடன் சேவை செய்திருக்கிறார்கள். நாம் சேவை செய்யும்போது, நம்மிடமுள்ள தாலந்துகளை நாம் பயன்படுத்துகிறோம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 60:13 பார்க்கவும்), பின்னர் கர்த்தர் அவருடைய நோக்கங்களை நிறைவேற்ற நமக்கு உதவுகிறார் என்று அவர்கள் எனக்குக் கற்பித்தார்கள்.

நாம் சேவை செய்ய மனமுள்ளவர்களாக இருக்கும்போது, குறை கூறவோ முறுமுறுக்கவோ கூடாது, ஏனென்றால் நம்முடைய சேவையை எந்த விதத்திலும் கெடுத்துக்கொள்ள நாம் இடங்கொடுக்கக் கூடாது. குறை கூறுவது ஊசலாடும் அர்ப்பணிப்பின் அடையாளமாக இருக்கலாம், அல்லது இரட்சகருக்கான நமது அன்பு இருக்க வேண்டியபடி இல்லாமலிருக்கலாம். தடுக்கப்படாமல் விட்டால், முறுமுறுப்பு கர்த்தருக்கு எதிரான வெளிப்படையான கலகமாக பெரிதாகும். ஓஹாயோவில் சபையின் ஆரம்பகாலத்தில் இணைந்து மிசௌரிக்கு ஊழியக்காரராக அழைக்கப்பட்ட எஸ்ரா பூத்தின் வாழ்க்கையில் இந்த சரிவின் முன்னேற்றம் காணப்படுகிறது.

ஜூன் 1831-ல் அவர் ஒஹாயோவை விட்டுப் புறப்பட்டபோது, அவர் கோடை வெப்பத்தில் நடந்து சென்று வழியில் பிரசங்கிக்க வேண்டியிருந்தபோது சில ஊழியக்காரர்கள் வண்டியில் பயணம் செய்ய முடிந்ததைக் கண்டு எஸ்றா வருத்தப்பட்டார். அவர் முறுமுறுத்தார். அவர் மிசௌரிக்கு வந்தபோது, அவர் சோர்வாக உணர்ந்தார். மிசௌரி அவர் எதிர்பார்த்தது போல் இருக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர் சுற்றிலும் பார்த்து, “எதிர்பார்ப்பு சற்றே இருண்டதாகத் தோன்றியது” என்று குறிப்பிட்டார்.

எஸ்றா அதிகமதிகமாக இழிவு, கிண்டல் மற்றும், விமர்சிப்பவராகவும் மாறினார். மிசௌரியை விட்டுப் புறப்பட்டதும், கேட்டுக்கொண்டபடி பிரசங்கிப்பதற்குப் பதிலாக, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவர் ஒஹாயோவுக்குத் திரும்பினார். அவரது ஆரம்ப கால முறுமுறுப்பு உறுதியின்மையாயும், இறுதியில் அவரது முந்தைய ஆவிக்குரிய அனுபவங்களில் நம்பிக்கையை இழந்து போகப் பண்ணுவதாயும் பரிணமித்தது. சீக்கிரத்தில் எஸ்றா சபையை விட்டு வெளியேறினார், “இறுதியில் கிறிஸ்தவத்தை ‘கைவிட்டு அறியொணாவாதியாக மாறினார்.’”

நாம் கவனமாக இல்லாவிட்டால் நமக்கும் இது நடக்கலாம். இது உண்மையில் யாருடைய பணி என்பதை நமக்கு நினைவூட்டும்படி நாம் ஒரு நித்திய கண்ணோட்டத்தை பராமரிக்கவில்லை என்றால், நாம் புகார் செய்யலாம், ஊசலாடலாம், இறுதியில் நம்மிடம் உள்ள நம்பிக்கையை இழக்கலாம்.

இயேசு கிறிஸ்துவின் பணியில் அவருடன் இணைவதன் மூலம் அவரைப் பின்பற்ற நாம் தேர்வு செய்ய நான் ஜெபிக்கிறேன். அப்படிச் செய்யும்போது, நமக்கு “மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள்” கொடுக்கப்படுகின்றன (2 பேதுரு 1:4). இந்த ஆசீர்வாதங்களில் பாவ மன்னிப்பு ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 60:7; 61:2, 34; 62:3; 64:3 பார்க்கவும்), இரட்சிப்பு ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:13; 56:2 பார்க்கவும்), மற்றும் மேன்மையடைதலும் அடங்கும் ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:3–11; 59:23 பார்க்கவும்). உண்மையில், தேவன் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பரிசு நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது—நித்திய ஜீவன்.