“இளைஞர்கள் மற்றும் பிள்ளைகளுக்கான வளங்கள்”,லியஹோனா பெப். 2023
லியஹோனா மாதாந்தர செய்தி, பெப்ருவரி 2023
இளைஞர்கள் மற்றும் பிள்ளைகளுக்கான வளங்கள்
இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் அவருடைய சுவிசேஷத்தைப்பற்றியும் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டிய முதன்மைப் பொறுப்பு பெற்றோருக்கு உண்டு. பெற்றோர்கள் தங்கள் முயற்சிகளில் உதவுவதற்கு, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் ஸ்தாபனம், நிகழ்ச்சிகள் மற்றும் பிற வளங்களிருக்கின்றன. பிள்ளைகள், பதின்ம வயதினர் அனைவரும் கிறிஸ்துவண்டை வர பெற்றோர்கள், சபைத் தலைவர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றுசேர உதவலாம்.
புகைப்படம் — பென் ஜான்சன்
ஆரம்ப வகுப்பு
ஆரம்ப வகுப்பானது 18 மாதங்கள் முதல் 11 வயது வரையிலான பிள்ளைகளுக்கான சபையின் ஸ்தாபனமாகும். இயேசு கிறிஸ்து மற்றும் அவரது சுவிசேஷத்தைப்பற்றி பாடங்கள், இசை மற்றும் நிகழ்ச்சிகள் மூலமாக ஆரம்ப வகுப்பில் பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள். பிள்ளைகள்மீது தேவனின் அன்பை உணர ஆரம்ப வகுப்பு அவர்களுக்கு உதவலாம்.
ஆரோனிய ஆசாரியத்துவ குழுமங்கள் மற்றும் இளம் பெண்கள் வகுப்புகள்
வருடத்தின் ஜனுவரியில் பிள்ளைகள் 12 வயதை அடையும்போது, அவர்கள் ஆரம்ப வகுப்பிலிருந்து ஆரோனிய ஆசாரியத்துவ குழுமங்களுக்கு (சிறுவர்களுக்கானது) அல்லது இளம் பெண்கள் வகுப்புகளுக்கு (சிறுமிகளுக்கானது) மாறுகிறார்கள். இளம்பிள்ளைகள் அவர்களின் குழுமங்கள் மற்றும் வகுப்புகளில், தங்கள் சாட்சியங்களை வலுப்படுத்தி மற்றவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்கிறார்கள்.
பிள்ளைகள் மற்றும் இளைஞர் திட்டம்
இயேசுவானவர் தன் இளவயதில், “ஞானத்திலும், வளர்த்தியிலும் தேவகிருபையிலும் மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்” (லூக்கா 2:52). இளம் சபை உறுப்பினர்கள் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்ற பிள்ளைகள் மற்றும் இளைஞர் திட்டம் உதவுகிறது ஆவிக்குரிய, சமூக, சரீர மற்றும் ஞானம் போன்ற தங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் வளர்கிறார்கள்.
சபை பத்திரிக்கைகள்
பிள்ளைகளுக்கான சபை பத்திரிக்கை Friend பத்திரிக்கை இளைஞர்களின் பெலனுக்காக இளைஞர்களுக்கான பத்திரிக்கையாகும். பிள்ளைகள் மற்றும் பதின்ம வயதினருக்காக குறிப்பாக எழுதப்பட்ட கதைகள், போதனைகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை இந்த பத்திரிக்கைகளில் அடங்கும்
இளைஞரின் பெலனுக்காக வழிகாட்டி புத்தகம்
இளைஞரின் பெலனுக்காக: தேர்ந்தெடுப்புகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டி சுவிசேஷ சத்தியங்களைப்பற்றி இளைஞர்களுக்குக் கற்பிக்கிறது. இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற அவர்களுக்கு உதவும் தீர்மானங்களை எவ்வாறு மேற்கொள்வது என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது. சுவிசேஷத்தில் வாழ்வது எவ்வாறு என்பதைப்பற்றி இளைஞர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களும் இதில் அடங்கும்.
சுவிசேஷ நூலகம்
காணொலிகள், இசை, வேதக் கதைகள் மற்றும் நிகழ்ச்சிகள் உட்பட பல டிஜிட்டல் வளங்கள் சுவிசேஷ நூலகத்தில் உள்ளன. பெற்றோர்களுக்கும் தலைவர்களுக்கும் சுவிசேஷ கொள்கைகளை கற்பிக்க உதவும் வளங்களும் இதில் அடங்கும். இந்த வளங்கள்ChurchofJesusChrist.org ல் உள்ள சுவிசேஷ நூலகத்திலும், சுவிசேஷ நூலக செயலியில் காணப்படுகின்றன
FSY மாநாடுகள்
ஆண்டின் துவக்கத்தில் 14 வயதை எட்டும் பொழுது இளைஞரின் பெலனுக்காக மாநாட்டில் (FSY) கலந்துகொள்ள இளைஞர்கள் அழைக்கப்படுகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசத்தை பலப்படுத்த உதவுவதற்கான மற்றும் இளைஞர்கள் ஆவிக்குரிய, சமூக, சரீர மற்றும் ஞானத்தில் வளர உதவுவதற்கான நிகழ்ச்சிகள் மற்றும் வகுப்புகளை இந்த நிகழ்சிகள் உள்ளடக்கியது.
© 2023 Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Liahona Message, February 2023 மொழிபெயர்ப்பு. Language. 18910 418