2022
வேதங்கள்: தேவ வார்த்தை
ஜூன் 2022


“வேதங்கள்: தேவ வார்த்தை,” லியஹோனா, ஜூலை 2022.

லியஹோனா மாதாந்தர செய்தி, ஜூலை 2022

வேதங்கள்: தேவ வார்த்தை

ஒரு பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி எழுதுதல்

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி–ஜூடித் ஏ. மெர்

வேதங்கள் முக்கியமாக தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட பரிசுத்தமான புஸ்தகங்கள். வேதங்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி சாட்சியமளிக்கின்றன மற்றும் அவருடைய சுவிசேஷத்தைப்பற்றி போதிக்கின்றன. சபையின் அதிகாரப்பூர்வ வேதங்கள், வேதாகமம் (பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டை உள்ளடக்கியது), மார்மன் புஸ்தகம், கோட்பாடும் உடன்படிக்கைகளும் மற்றும் விலையேறப்பெற்ற முத்து.

பழைய ஏற்பாடு

பழைய ஏற்பாடு என்பது பழங்காலத்தில் தேவன் தம் உடன்படிக்கை ஜனத்துடன் செயல்பட்டதுபற்றிய பதிவு. மோசே, யோசுவா, ஏசாயா, எரேமியா, தானியேல் போன்ற தீர்க்கதரிசிகளின் போதனைகள் இதில் அடங்கும். இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டிருந்தாலும், பல பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் அவரைப்பற்றி எழுதினார்கள்.

புதிய ஏற்பாடு

புதிய ஏற்பாடு இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, பூலோக வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாவநிவர்த்தி ஆகியவற்றை பதிவு செய்கிறது. கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் மற்றும் பிற சீஷர்களின் போதனைகளும் இதில் அடங்கும். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி இன்று எப்படி வாழ்வதென புரிந்துகொள்ள புதிய ஏற்பாடு நமக்கு உதவுகிறது.

இயேசு கிறிஸ்து மலைப்பிரசங்கம் பிரசங்கித்தல்

மார்மன் புஸ்தகம்: இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடு

மார்மன் புஸ்தகம் என்பது பண்டைய அமெரிக்காவில் வாழ்ந்த சில ஜனங்கள் பற்றிய பதிவு. இது தீர்க்கதரிசிகளின் போதனைகளை உள்ளடக்கியது, மேலும் இயேசுவே கிறிஸ்து என்று அனைத்து மக்களையும் நம்ப வைப்பதே இதன் முக்கிய நோக்கம். ஜோசப் ஸ்மித் தீர்க்கதரிசி அதை தேவனின் வரம் மற்றும் வல்லமையால் தங்கத் தகடுகளிலிருந்து மொழிபெயர்த்தார்.

ஜோசப் ஸ்மித் வெளிப்படுத்தல் பெறுதல்

ஜோசப் ஸ்மித் இளையவர் வெளிப்படுத்தல் பெறுதல்– டானியேல் எ. லூயிஸ்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும்

கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் ஜோசப் ஸ்மித்துக்கும் பிற பிற்கால தீர்க்கதரிசிகளுக்கும் கொடுக்கப்பட்ட வெளிப்பாடுகள் அடங்கியிருக்கிறது. கிறிஸ்துவின் சபை எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துதல்கள் விவரிக்கின்றன. ஆசாரியத்துவம், சுவிசேஷத்தின் நியமங்கள் மற்றும் இந்த வாழ்க்கைக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது பற்றிய முக்கியமான சுவிசேஷ போதனைகளும் அவற்றில் அடங்கியுள்ளன.

விலையேறப்பெற்ற முத்து

விலையேறப்பெற்ற முத்துவில் மோசே மற்றும் ஆபிரகாமின் புத்தகங்கள், ஜோசப் ஸ்மித்தின் சாட்சியம் மற்றும் சபையின் விசுவாசப் பிரமாணங்கள் ஆகியவை அடங்கும். புதிய ஏற்பாட்டின் ஜோசப் ஸ்மித்தின் மொழிபெயர்ப்பின் ஒரு பகுதியான ஜோசப் ஸ்மித்-மத்தேயுவும் இதில் அடங்கும்.

வேதங்களைப் படித்தல்

வேதங்களை தினமும் படிக்க வேண்டும் என்று தீர்க்கதரிசிகள் போதித்திருக்கிறார்கள். அவ்வாறு செய்வது நமது விசுவாசத்தை அதிகரிக்கவும், பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவுக்கு நெருக்கமாக வரவும் உதவுகிறது. நாம் வேதங்களை ஜெபத்துடன் படிக்கும்போது, நம்முடைய கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிக்க பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவார்.

தற்கால தீர்க்கதரிசிகள்

இன்று தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் பேசும்போது, அவர்களுடைய வார்த்தைகள் வேதம் போல இருக்கிறது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு பொது மாநாடு. லியாஹோனாவின் மே மற்றும் நவம்பர் இதழ்களில் உள்ள மாநாட்டின் போதனைகளை நாம் படிக்கலாம்.

மோசே சாத்தானை மேற்கொள்ளுதல்

மோசே சாத்தானை மேற்கொள்ளுதல்–ஜோசப் பிரிக்கி