இயேசு கிறிஸ்து
தண்ணீரை ஆசீர்வதித்தல்


தண்ணீரை ஆசீர்வதித்தல்

நித்திய பிதாவாகிய தேவனே, இந்த தண்ணீரை பானம் பண்ணுகிற
யாவருடைய ஆத்துமாக்களுக்காவும்,
அவர்களுக்காக சிந்தப்பட்ட உமது குமாரனுடைய இரத்தத்தின்
நினைவுகூர்தலில் அவர்கள் இதைச் செய்யவும்,
அவருடைய ஆவியை அவர்கள் தங்களோடே கொண்டிருக்கும்படி
அவரை எப்பொழுதும் நினைவுகூருகிறார்கள் என்று,
நித்திய பிதாவாகிய தேவனே, உம்மிடத்தில் அவர்கள் சாட்சி பகரவும்,
இதை ஆசீர்வதித்து பரிசுத்தப்படுத்துமாறு,
உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்
கேட்டுக்கொள்கிறோம்.
ஆமென்.