“ஆசிரியர் ஆலோசனைக்குழு கூட்டங்கள்—பெற்றோருக்கும் அழைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும்,” இரட்சகரின் வழியில் போதித்தல்: வீட்டிலும் சபையிலும் கற்பிக்கிற அனைவருக்கும். (2022)
“ஆசிரியர் ஆலோசனைக்குழு கூட்டங்கள்,” இரட்சகரின் வழியில் போதித்தல்
ஆசிரியர் ஆலோசனைக்குழு கூட்டங்கள்—பெற்றோருக்கும் அழைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும்
ஒவ்வொரு தொகுதியும் பெற்றோர்களுக்கும், தொகுதியில் அழைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் காலாண்டு ஆசிரியர் ஆலோசனைக்குழு கூட்டங்களை நடத்த வேண்டும். இந்தக் கூட்டங்களில், பெற்றோர்களும் பிற ஆசிரியர்களும் கிறிஸ்துவைப் போன்ற கற்பித்தலின் கொள்கைகளைப் பற்றி ஒன்றாக ஆலோசிக்கலாம். (see General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 13.4, 13.5, 17.4, 17.5, Gospel Library).
ஞாயிற்றுக்கிழமை 50 நிமிட வகுப்பு நேரத்தில் இரண்டு வகையான ஆசிரியர் ஆலோசனைக்குழு கூட்டங்களும் காலாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன.
பெற்றோர்களுக்கான ஆசிரியர் ஆலோசனைக்குழு கூட்டம்.
இந்தக் கூட்டங்களை யார் நடத்துகிறார்கள்? வழக்கமாக, ஞாயிறு பள்ளித் தலைமையில் ஒரு உறுப்பினர், பெற்றோருக்கான ஆசிரியர் ஆலோசனைக்குழு கூட்டங்களை வழிநடத்துவர். இருப்பினும், ஆயம் அவ்வப்போது கூட்டங்களை வழிநடத்த மற்ற தொகுதி உறுப்பினர்களை நியமிக்கலாம்.
ஞாயிறு பள்ளி தலைமையின் உதவியுடன், தொகுதி ஆலோசனைக்குழு, பெற்றோர்களுக்கான ஆசிரியர் ஆலோசனைக்குழு கூட்டங்களை மேற்பார்வையிடுகிறது. பெற்றோர்கள் மற்றும் குடும்பங்களின் தேவைகளைப் பற்றி அவர்கள் ஒன்றாக ஆலோசனை வழங்குகிறார்கள், மேலும் இரட்சகரின் வழியில் கற்பித்தலில் இருந்து எந்தக் கொள்கைகள் அந்தத் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் என்பதைத் தீர்மானிக்க அவர்கள் ஒன்றாகச் செயல்படுகிறார்கள்.
யார் கலந்து கொள்ள வேண்டும்? குறிப்பிட்ட பெற்றோரை அழைக்க வேண்டுமா அல்லது பங்கேற்க விரும்பும் அனைவரும் வர வைப்பதா என்பதை தொகுதி ஆலோசனைக் குழு தீர்மானிக்கிறது.
இந்தக் கூட்டங்கள் எப்போது நடத்தப்பட வேண்டும்? பெற்றோர்களுக்கான ஆசிரியர் ஆலோசனைக் குழு கூட்டங்கள் தொகுதி ஆலோசனைக் குழு தீர்மானிக்கும் எந்த ஞாயிற்றுக்கிழமையும் நடத்தப்படலாம்.
அழைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஆசிரியர் ஆலோசனைக்குழு கூட்டங்கள்.
இந்தக் கூட்டங்களை யார் நடத்துகிறார்கள்? வழக்கமாக, ஞாயிறு பள்ளித் தலைமையில் ஒரு உறுப்பினர், அழைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஆசிரியர் ஆலோசனைக்குழு கூட்டங்களை நடத்துவார். இருப்பினும், ஆயம் அவ்வப்போது கூட்டங்களை வழிநடத்த மற்ற தொகுதி உறுப்பினர்களை நியமிக்கலாம்.
ஞாயிறு பள்ளி தலைமையின் உதவியுடன், தொகுதி ஆலோசனைக்குழு, அழைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஆசிரியர் ஆலோசனைக்குழு கூட்டங்களை மேற்பார்வையிடுகிறது. ஆசிரியர்கள் மற்றும் கற்பவர்களின் தேவைகளைப் பற்றி அவர்கள் ஒன்றாக ஆலோசனை வழங்குகிறார்கள், மேலும் இரட்சகரின் வழியில் கற்பித்தலில் இருந்து எந்தக் கொள்கைகள் அந்தத் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் என்பதைத் தீர்மானிக்க அவர்கள் ஒன்றாகச் செயல்படுகிறார்கள்.
யார் கலந்து கொள்ள வேண்டும்? தொகுதியில் ஒரு குழுமம் அல்லது வகுப்பில் கற்பிக்கும் அனைவரும் ஆசிரியர் ஆலோசனைக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். குழுமம் மற்றும் அமைப்புத் தலைமை உறுப்பினர்களும் அழைக்கப்படுகிறார்கள்.
இந்தக் கூட்டங்கள் எப்போது நடத்தப்பட வேண்டும்? ஆசிரியர்கள் தங்கள் வழக்கமான வகுப்பை கற்பிக்காத ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர் ஆலோசனைக்குழு கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.
-
ஆசாரியத்துவ குழுமம், ஒத்தாசைச் சங்கம் மற்றும் இளம் பெண்கள் ஆசிரியர்கள் உள்ளூர் தலைவர்களால் தீர்மானிக்கப்படும் முதல் அல்லது மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் கலந்து கொள்ளலாம்.
-
ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள் உள்ளூர் தலைவர்களால் தீர்மானிக்கப்படும் இரண்டாவது அல்லது நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் கலந்து கொள்ளலாம்.
-
தொகுதி ஆரம்ப வகுப்பு மற்றும் ஞாயிறு பள்ளி தலைமைகள் தீர்மானிக்கும் வகையில், ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் எந்த ஞாயிற்றுக்கிழமையிலும் கலந்து கொள்ளலாம். விரும்பினால், ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களிடமிருந்து தனியாகச் சந்தித்து பிள்ளைகளுக்குக் கற்பிப்பதன் தனித்துவமான அம்சங்களைப்பற்றி ஆலோசிக்கலாம். இது 20 நிமிட பாடல் நேரத்தின் போது, வழக்கமான ஞாயிறு கூட்டங்களுக்கு முன் அல்லது பின் அல்லது வாரத்தின் மற்றொரு நாளில் நிகழலாம். அதே வாரத்தில் அவர்கள் அனைத்து ஆரம்ப வகுப்புகளையும் தவறவிடாமல் இருக்க, ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களுக்காக காலாண்டுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர் ஆலோசனைக் குழு கூட்டங்கள் நடத்தப்படலாம். (குறிப்பு: தேவைக்கேற்ப, ஆரம்ப வகுப்பு தலைமை மாற்று ஆசிரியர்களை பணிக்கிறது, வகுப்புகளை ஒருங்கிணைக்கிறது அல்லது ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களை ஆசிரியர் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதிக்க மற்ற ஏற்பாடுகளை செய்கிறது.)
கூட்டங்களுக்கான வடிவமைப்பு
பெற்றோர்களுக்கும் அழைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும்—ஆசிரியர் ஆலோசனைக்குழு கூட்டங்கள்—இந்த வடிவமைப்பைப் பின்பற்றுகின்றன:
-
பகிர்ந்து கொண்டு ஒன்றாக ஆலோசனையளியுங்கள் (சுமார் 20 நிமிடங்கள்). வீட்டிலோ அல்லது அவர்களது வகுப்புகளிலோ சுவிசேஷத்தைக் கற்பிக்கும்போது என்ன சிறப்பாக செயல்படுகிறது என்பதைப் பகிர்ந்து கொள்ள பெற்றோர்களையோ அல்லது ஆசிரியர்களையோ அழைக்கவும். அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அல்லது அவர்கள் மேம்படுத்த விரும்பும் விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
-
ஒன்றாகக் கற்றுக்கொள்ளுங்கள் (சுமார் 15 நிமிடங்கள்). இரட்சகரின் வழியில் கற்பித்தல் கொள்கைகளில் ஒன்றைப் பற்றி பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்களுடன் கலந்துரையாடுங்கள்.” இந்த கலந்துரையாடல்களுக்கு ஒரு ஆதாரமாகவும் என்னைப் பின்பற்றி வாருங்கள் பயன்படுத்தப்படலாம்.
-
திட்டமிட்டு அழைக்கவும் (சுமார் 10 நிமிடங்கள்). கூட்டத்தின்போது தாங்கள் கற்றுக்கொண்டவற்றையும், அதை எவ்வாறு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர் என்பதையும் பகிர்ந்து கொள்ள பெற்றோர்களையோ அல்லது ஆசிரியர்களையோ அழைக்கவும்.