வருங்கால ஊழியக்காரர்களுக்கான நேர்காணல் கேள்விகள்
பின்வரும் கேள்விகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு ஊழியக்கார விண்ணப்பதாரருடனும் “முழுமையான, ஆவிக்குரிய தேடல் மற்றும் எழுப்புதலான நேர்காணல்களை நடத்த” ஆயர்களும் பிணையத் தலைவர்களும் அழைக்கப்படுகிறார்கள் (பொது கையேடு, 24.4.2 ஐப் பார்க்கவும்).
-
நித்திய பிதாவாகிய தேவன், அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியில் உங்களுக்கு விசுவாசமும் சாட்சியமுமுண்டா?
-
இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியிலும் உங்களுடைய இரட்சகராகவும் மீட்பராகவும் அவருடைய பாத்திரத்திலும் உங்களுக்கு சாட்சியமுண்டா?
உங்கள் சாட்சியத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு செல்வாக்கு ஏற்படுத்தியுள்ளது?
-
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம் மற்றும் மார்மன் புஸ்தகத்தின் உண்மைத்தன்மைக்கு உங்களிடம் சாட்சியம் உண்டா?
இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைப் பற்றிய உங்கள் புரிதலும், மார்மன் புஸ்தகத்தைப் பற்றிய உங்கள் படிப்பும் இயேசு கிறிஸ்துவுடனான உங்கள் உறவை எவ்வாறு ஆழப்படுத்தியுள்ளன?
-
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவரை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும் மற்றும் ஆசாரியத்துவத்தின் சகல திறவுகோல்களையும் கையாள பூமியில் ஒரே நபராகவும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
பிரதான தலைமையின் அங்கத்தினர்கள், மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தினரை தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
சபையின் பிற பொது அதிகாரிகளையும், உள்ளூர் தலைவர்களையும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
-
அவருக்கு முன்பாக சகல காரியங்களும் “சுத்தமாகச் செய்யப்படவேண்டுமென” கர்த்தர் சொல்லியிருக்கிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:41).
தேவனுக்கு முன்பாக சுத்தத்திற்காக பாடுபடுவது ஏன் ஆபாச படத்தைத் தவிர்ப்பதை உள்ளடக்கியது?
உங்கள் புரிதலின்படி, கற்புடைமை நியாயப்பிரமாணத்தின்படி வாழ்வது என்றால் என்ன?
உங்கள் எண்ணங்களிலும் நடத்தையிலும் ஒழுக்க தூய்மைக்கு நீங்கள் முயற்சிக்கிறீர்களா?
கற்புடமை நியாயப்பிரமாணத்திற்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா?
-
உங்களுடைய குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் பிறருடன் உங்களுடைய தனிப்பட்ட மற்றும் பொது நடத்தையில் இயேசு கிறிஸ்துவின் சபையின் போதனைகளை நீங்கள் பின்பற்றுகிறீர்களா?
-
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபைக்கு எதிரான எந்த போதனைகளையும், நடைமுறைகள் அல்லது கோட்பாட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்களா அல்லது ஊக்குவிக்கிறீர்களா?
-
வீட்டிலும் சபையிலும் ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரிக்கவும், உங்கள் கூட்டங்களில் பங்கேற்கவும், திருவிருந்துக்கு ஆயத்தப்படவும் தகுதியுள்ளவராக பங்கெடுக்கவும், சுவிசேஷத்தின் நியாயப்பிரமாணங்களுடனும் கட்டளைகளுடனும் இணக்கத்துடன் உங்கள் வாழ்க்கையை வாழ நீங்கள் முயற்சிக்கிறீர்களா?
-
நீங்கள் செய்கிற எல்லாவற்றிலும் நேர்மையாயிருக்க நீங்கள் முயற்சிக்கிறீர்களா?
-
நீங்கள் முழு தசமபாகம் செலுத்துபவரா?
-
உங்கள் புரிதலின்படி, ஞான வார்த்தைப்படி வாழ்வது என்றால் என்ன?
ஞானவார்த்தைக்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா?
-
ஒரு முழுநேர ஊழியக்காரராக, நாம் கலந்துரையாடிய இந்த தரநிலைகளின்படி நீங்கள் வாழ்வீர்களா?
-
(தரிப்பிக்கப்படாத ஒரு உறுப்பினரை நேர்காணல் செய்யும்போது இந்தக் கேள்வி தவிர்க்கப்படுகிறது.) நீங்கள் ஆலயத்தில் செய்த உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கிறீர்களா?
-
(தரிப்பிக்கப்படாத ஒரு உறுப்பினரை நேர்காணல் செய்யும்போது இந்தக் கேள்வி தவிர்க்கப்படுகிறது.) ஆயத்த நியமங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளபடி வஸ்திரம் அணிவதற்கான உங்கள் பரிசுத்த சிலாக்கியத்தை நீங்கள் மதிக்கிறீர்களா? (கீழே சேர்க்கப்பட்டுள்ள “ஆலய வஸ்திரம் அணிதல்” வாசகத்தை ஒவ்வொரு உறுப்பினருக்கும் வாசிக்கவும்)
-
ஆசாரியத்துவ அதிகாரிகளிடம் கடுமையான பாவங்களை ஒப்புக்கொள்வதை உள்ளடக்கிய மனந்திரும்புதல் என்பதன் அர்த்தம் என்ன, ?
உங்கள் மனந்திரும்புதலின் பகுதியாக ஆசாரியத்துவத்துடன் தீர்க்கப்படவேண்டிய கடுமையான பாவங்கள் ஏதாவது உங்கள் வாழ்க்கையில் உண்டா?
-
இயேசு கிறிஸ்துவையும் அவரது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையையும் ஒரு ஊழியக்காரராகப் பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் தகுதியானவர் என்று கருதுகிறீர்களா?
ஆலய வஸ்திரம் அணிதல்
பரிசுத்த ஆசாரியத்துவத்தின் வஸ்திரம், ஆலயத்தில் உள்ள திரையை நமக்கு நினைவூட்டுகிறது, மேலும் அந்த திரையானது இயேசு கிறிஸ்துவின் அடையாளமாகும். நீங்கள் உங்கள் வஸ்திரத்தை அணியும்போது, நீங்கள் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த அடையாளத்தை அணிகிறீர்கள். அதை அணிவது, அவரைப் பின்பற்றுவதற்கான உங்களின் உள் உறுதிப்பாட்டின் வெளிப்புற வெளிப்பாடாகும். வஸ்திரமானது உங்கள் ஆலய உடன்படிக்கைகளை நினைவூட்டுவதாகும். உங்கள் வாழ்நாள் முழுவதும் இரவும் பகலும் வஸ்திரத்தை அணிய வேண்டும். வஸ்திரம் அணிந்து செய்ய முடியாத காரியங்களுக்காக அதை அகற்ற வேண்டி வந்தால், அதிவிரைவில் அதை திரும்ப அணிய முயற்சி செய்ய வேண்டும். ஆயத்த நியமங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளபடி, வஸ்திரம் அணிவதற்கான பரிசுத்த சிலாக்கியம் உட்பட, உங்கள் உடன்படிக்கைகளை நீங்கள் கடைப்பிடிக்கும்போது, இரட்சகரின் இரக்கம், பாதுகாப்பு, பெலன் மற்றும் வல்லமையை நீங்கள் அதிக அளவில் பெற்றுக்கொள்ளமுடியும் (பொது கையேடு, 26.3.3.2).