2024
பரிசுத்த ஆசாரியத்துவத்தின் வஸ்திரம்
செப்டம்பர் 2024


“பரிசுத்த ஆசாரியத்துவத்தின் வஸ்திரம், “லியஹோனா,செப்ட் 2024.

லியஹோனா மாதாந்திர செய்தி, செப்டம்பர் 2024

பரிசுத்த ஆசாரியத்துவத்தின் வஸ்திரம்

ஆலய தரிப்பித்தலின் ஒரு பகுதியாக, நமது உடன்படிக்கைகளை நினைவுகூர ஒரு பரிசுத்த சரீரம்சார்ந்த நினைவூட்டல் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.—இது இரட்சகரின் அடையாளமாகும்.

ஆதாமும் ஏவாளும் ஒன்றாக உலாவுதல்

ஆதாம் மற்றும் ஏவாள்விளக்கம்–டக்ளஸ் எம்.பிரையர்

அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தயாராக இருந்திருந்தாலும்,கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை நினைவில் வைக்க முயற்சித்திருந்தாலும், ஆதாமும் ஏவாளும் தங்கள் பரதீசியமான ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறி ஒரு வீழ்ந்த உலகத்தில் அடியெடுத்து வைத்தது ஒரு பேரதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும்.

நல்ல புரிதலோடு, அவர்களின் அமைதி நிறைந்த மற்றும் கவலையற்ற வாழ்க்கையை எதிர்ப்பு, வியர்வை, முட்கள் மற்றும் வேதனை நிறைந்த உலகத்திற்கு ஈடாகக் கொடுப்பதன் அர்த்தம் என்ன என்பதை அவர்கள் உணர்ந்தனர் - அதில் இறுதியியாக மரணம் என்ற ஒன்றும் பின்தொடர்ந்தது. இவைகளின் அர்த்தம் என்னவென்று அவர்கள் ஆரம்பத்தில் அறிந்திருக்க முடியாது, ஆனால் ஒவ்வொரு நாளும் புதிய வேதனையைக் கொண்டு வரக்கூடும் என்பதை அவர்கள் விரைவில் கற்றுக் கொண்டனர். உண்மையிலேயே, இவையனைத்திலும் மிகுந்த வேதனையானது என்னவென்றால், பரலோகப் பிதாவிடமிருந்து பிரிக்கப்பட்டே இவ்வனைத்தையும் அவர்கள் எதிர்கொள்வார்கள் என்ற உணர்வுதான் - “அவருடைய சமூகத்திலிருந்து தடுக்கப்பட்டிருந்தார்கள்,” என்று மோசே பின்னர் பதிவு செய்தார்.

குளிர்ந்த, மந்தமான உலகில் பிரிவும் தனிமையும் வாட்டியபோது, செய்யப்பட்ட அந்த வாக்குத்தத்தங்கள் —பரிசுத்தமும் நித்தியமானதுமான அந்த உடன்படிக்கைகள்.ஆதாம் ஏவாளுக்கு அந்த ஒரு காரியம் நினைவில் இருந்தது எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும்: தங்கள் வாழ்நாளெல்லாம் பிதாவுக்குக் கீழ்ப்படிவதாக அவர்கள் உறுதியளித்தனர், மேலும் அவர் ஒரு இரட்சகரை வழங்குவதாக உறுதியளித்தார், அவர் அவர்களின் வேதனையையும் துக்கத்தையும் நீக்கி, அவர்களின் தவறுககளுக்குப் பாவநிவர்த்தி செய்து, அவர்களைப் பத்திரமாக அவருடைய சமூகத்தில் கொண்டுவருவார்.

ஆனால் இம்மனுஷர்கள் தாங்கள் வாக்குத்தத்தம்பண்ணியதை எப்படி நினைவில் வைத்திருப்பார்கள்? தங்களின் ஆபத்தான சூழ்நிலையை அவர்கள் எவ்வாறு தொடர்ந்து அறிந்து கொள்வார்கள் - இரவும் பகலும் எந்நேரமும் விழிப்புடன் இருப்பார்களா?!

அவர்களுடைய உடன்படிக்கைகளின் நினைவூட்டுதல்

அத்தகைய நினைவூட்டலுக்காகவே அவர் அவர்களுக்கு “தோலினாலான உடைகளைக்” கொடுத்தார். சரியான நேரத்தில் இது என்னே ஒரு வரம். விலக்கப்பட்ட கனியை புசித்த பிறகு, ஆதாமும் ஏவாளும் தாங்கள் நிர்வாணமாக இருப்பதை உடனடியாக உணர்ந்தனர். முதலாவதாக, அவர்கள் அத்தி இலைகளால் தங்கள் நிர்வாணத்தை மறைக்க முயன்றனர். பின்னர், அது போதாது என்று அறிந்து பயந்து, அவர்கள் கர்த்தரிடமிருந்து ஒளிந்து கொள்ள முயன்றனர். (அத்தகைய விவேகமற்ற ஒரு முயற்சி, இம்மையை தழுவக் காரணமானது!) அத்தருணத்திலிருந்து இக்கணம் வரை, அன்புப் பிதாவானவர் தமது பிள்ளைகளை மறைவிடத்திலிருந்து தம்மண்டை வரும்படி அழைத்துக்கொண்டிருக்கிறார். அன்று தோல் உடைகள் பின்பு பல்வேறு வஸ்திரங்களைத் தந்தது போலவே, அவர் தம் இரக்கத்தினால் நம்மை நிர்வாணிகளாக விட்டுவிடவில்லை, மாறாக கீழ்ப்படிந்தவர்களுக்கு “நீதியின் வஸ்திரத்தை” அணிவிக்கிறார், இது நமது வாக்குத்தத்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளை நினைவூட்டுகிறது. இந்த “இரட்சிப்பின் வஸ்திரங்கள் “ நமக்கு அருளப்பட்ட மிகப்பெரிய ஈவான, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியை குறிக்கின்றன.

இந்த வஸ்திரம் ஆனது இரட்சகரின் அடையாளமாகும்.

இப்படியிருக்க, ஆதாமும் ஏவாளும், உடன்படிக்கைகளும் வஸ்திரமும், இவைகளைப் பற்றிய சிந்தனையானது கண்டிப்பாக ஒரு மனப் பயிற்சியை விட அதிகமானது. ஆதாமும் ஏவாளும் எப்படி உணர்ந்தார்கள் என்று கற்பனை செய்வது கடினம் இல்லை, ஏனெனில் வீழ்ந்த இவ்வுலகில் நாமும்தான் பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். நாமும் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளோம், அதுமட்டுமல்ல ஒவ்வொரு முறையும் நாம் மீறும்போது நம்மை மேலும் தூரப்படுத்துகிறோம். ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய, நாசரேத்தின் இயேசு கிறிஸ்து, ஆல்பா மற்றும் ஒமேகாவாகிய அதே இரட்சகர், ஆதாம் மற்றும் ஏவாளுக்குப் போலவே, நமக்கும் கொடுக்கப்பட்டுள்ளார். ஆதாம் ஏவாளைப் போல நாமும் தேவனோடு உடன்படிக்கை செய்துள்ளோம். மேலும், ஆலய தரிப்பித்தலின் ஒரு பகுதியாக, நமது உடன்படிக்கைகளை நினைவுகூர ஒரு பரிசுத்த சரீரம்சார்ந்த நினைவூட்டல் கொடுக்கப்பட்டிருக்கிறது.—-இது இரட்சகரின் அடையாளமாகும். நம் ஊழியக்காலத்தில், அது பரிசுத்த ஆசாரியத்துவத்தின் வஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது.

இயேசு கிறிஸ்துவின் சித்திரம்

இரண்டாம் வருகைவிளக்கம்– ஹாரி ஆண்டர்சன்

இந்த வஸ்திரத்தை நமது மேலாடைக்கு அடியில் அணிகிறோம். எனக்கு என்ன பொறுப்புகள் இருந்தாலும், வாழ்க்கையில் நான் வகிக்கும் பங்கு எதுவானாலும், அன்றாட வாழ்க்கையின் கடமைகள் எதுவாயிருந்தாலும், அனைத்திற்கும் கீழே என்னுடைய உடன்படிக்கைகள் உள்ளன-எப்போதும் என்றென்றும் இருக்கும். அனைத்திற்கும் கீழாய் நான் தீவிரமாய் பற்றிக்கொண்டிருக்கும் அந்த பரிசுத்தமான வாக்குத்தத்தங்கள் அமைந்துள்ளன. வஸ்திரமானது உலகுக்கு முன் பகட்டாக காட்டப்பட அல்ல, அதுபோலத் தான் என் உடன்படிக்கைகளும் வெளியில் காட்டப்படுவதில்லை. ஆனால் நான் இரண்டையுமே என்னுடன் நெருக்கமாக வைத்திருக்கிறேன் - எனக்கு எவ்வளவு நெருக்கம் சாத்தியமோ அவ்வளவாய். அவை எனக்கு மிகவும் தனிப்பட்டவையும்பரிசுத்தமானவையும் ஆகும்.

அந்த உடன்படிக்கைகளை, இருவழி வாக்குத்தத்தங்களை நினைவுகூரும் வண்ணம், நம் வாழ்நாள் முழுவதும் நாம் வஸ்திரத்தை அணிகிறோம். இரட்சகர் நம் வாழ்வில் நிலையாக ஊடுருவி இருக்க வேண்டும் என்ற நமது விருப்பத்தை இப்பழக்கமானது பிரதிபலிக்கிறது. மற்ற அன்பின் அடையாளங்கள் குறிப்பிட்ட கால இடைவேளையில் தொடர்ந்து நடப்பவை ஆகும். நம் வாழ்வில் ஒருமுறை ஞானஸ்நானம் பெறுகிறோம். நாம் வாரத்திற்கு ஒருமுறை திருவிருந்தில் பங்கெடுக்கிறோம். நம் சூழ்நிலை அனுமதிப்பதற்கு ஏற்ப ஆலயத்திற்குச் செல்கிறோம். ஆனால் பரிசுத்த ஆசாரியத்துவத்தின் வஸ்திரம் சிறிது வேறுபட்டது: இந்த அடையாளத்தை நாம் ஒவ்வொரு நாளும் பகலும் இரவும் ஆசரிக்கிறோம்.

வசதிக்காகவோ அல்லது கவனக்குறைவாலோ ஒதுக்கி வைக்கப்படாமல், சமூகத்தின் பாணிகள் மற்றும் நாகரீகங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படாமலிருப்பதே உடன்படிக்கைகள் ஆகும். இயேசு கிறிஸ்துவினுடைய ஒரு சீஷனி ன் வாழ்க்கையில், நமது உடன்படிக்கைகளுடன் ஒத்துப்போகும்படி உலகத்தின் வழிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும், மாறாக அல்ல.

பிரதான தலைமை போதித்தது போல, நாம் வஸ்திரத்தை அணியும்போது, ​​நாம் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த அடையாளத்தை அணிகிறோம். அப்படியிருக்க, அந்த அடையாளத்தை கழற்ற நாம் ஏன் எப்போதாவது ஒரு காரணம் தேட வேண்டும்? வஸ்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் வல்லமை , பாதுகாப்பு மற்றும் இரக்கம் ஆகியவற்றின் வாக்குத்தத்தத்தை நாம் ஏன் இழக்க வேண்டும்? மாறாக, நாம் வஸ்திரத்தை தற்காலிகமாக கழற்ற வேண்டியிருக்கும் போதெல்லாம், அதை சீக்கிரமாக மீண்டும் அணிய ஆர்வமாக இருக்க வேண்டும், ஏனென்றால் நமது உடன்படிக்கைகளுக்கு அர்த்தம் கொடுக்கும் வாக்குத்தத்தங்கள் மற்றும் ஆபத்துகள் இரண்டையும் நினைவில் கொள்ள அது உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்துவின் சிலுவை மற்றும் காலியான கல்லறையை நாம் நினைவில் கொள்கிறோம்.

“இயேசுவை நினைவுகூர எனக்கு வேறு வழிகள் உள்ளன” என்று சிலர் கூறலாம். அது மிகவும் நல்லது, என்று நான் பதிலளிப்பேன். எவ்வளவு அதிகமோ அவ்வளவு நல்லது. “எப்போதும் அவரை நினைவில் கொள்ளுங்கள் “ என்ற உறுதிப்பாட்டைக் கடைப்பிடிக்க முடிந்தவரை பல வழிகளை நாம் அனைவரும் சிந்திப்போம். ஆனால் அவ்வாறு செய்யும்போது, தரிப்பிக்கப்பட்டவர்கள்,​​ பரிசுத்த ஆசாரியத்துவத்தின் வஸ்திரத்தை, கர்த்தர் தாமே கொடுத்த நினைவூட்டலை, வேண்டுமென்றே புறக்கணிப்பது நேர்மையற்றதாகும்.

இயேசு கிறிஸ்து மற்றும் அவரது சுவிசேஷம் எனக்கு எல்லாமாகும். எனது நித்தியமான நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்கள், நான் நெருக்கமாக கொண்டிருக்கும் அனைத்தும், அவரைப் பற்றிக்கொண்டிருக்கும். அவர் “என் இரட்சிப்பின் கன்மலை,” என் பரலோக பிதாவை அணுகுவதற்கான எனது வழி, நான் முன்பு இருந்ததையும் இப்போது மீண்டும் பெற விரும்புவதையும் மேலும் பலவற்றையும் சேர்த்து, திரும்பப் பெறுவதற்கான ஒரே வழி ஆகும். அவர் நமக்கு அளித்த பரிசானது, நான் பெற்றவற்றில் மிகவும் தாராளமான , இதுவரை கொடுக்கப்பட்டதில் மிக தாராளமானதாகும் - அது எல்லையில்லாதுன்பத்துடன் வாங்கப்பட்டது, கணக்கற்ற எண்ணிக்கையில் கொடுக்கப்பட்டது, எல்லையற்ற அன்பால் வழங்கப்பட்டது. இந்த வீழ்ந்துபோன உலகின் முட்களும் முட்செடிகளும், வலியும் வேதனையும், துக்கமும் பாவமும் அனைத்துமே “கிறிஸ்துவில் விழுங்கப்பட்டிருக்கின்றன.”

ஆகவே, நான் 64 ஆண்டுகளுக்கு முன்பு, 19 வயதில், தரிப்பிக்கப்பட்ட நாள் முதல், பரிசுத்த ஆசாரியத்துவத்தின் வஸ்திரத்தை ஒவ்வொரு நாளும் பகலும் இரவும் தவறாமல் அணிந்திருக்கிறேன், ஏனென்றால் நான் அவரை நேசிக்கிறேன் மற்றும் அது பிரதிபலிக்கும் வாக்குத்தத்தங்கள் எனக்குத் தேவையாயிருக்கிறது.

வஸ்திரம் அணிவது பற்றிய கேள்விகள்?

வஸ்திரம் பற்றிய ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு நான் பதிலளிப்பேன் என்ற நம்பிக்கையில் உங்களில் சிலர் இந்தக் செய்தியைப் படித்துக்கொண்டிருக்கலாம். “கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்” அல்லது “அவருடைய ஊழியக்காரர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்” என்று உங்கள் இருதயத்திற்கு நெருக்கமான ஒரு காரியத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்கள் கேள்வியானது உங்கள் தனிப்பட்ட சூழ்நிலையான, வேலைவாய்ப்பு, உடற்பயிற்சி, சுகாதாரம், காலநிலை, ஒழுக்கம், சுகாதார வசதிகள் அல்லது மருத்துவ நிலை போன்றவற்றிலிருந்து தோன்றலாம்.

இந்த வகையான கேள்விகளுக்கான சில பதில்களை temples.ChurchofJesusChrist.org மற்றும்பொது கையேட்டின் பிரிவு 38.5 இல் காணப்படுகிறது. நம்பகமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களிடம் தனிப்பட்ட விஷயத்தைப் பற்றிய ஆலோசனை பெறலாம். ஆயத்த நியமங்களில் மிகத் தெளிவான வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் என்றென்றும் பரலோகத்திருக்கும் உங்கள் பிதா , உங்களை அறிந்திருக்கிறார், உங்களை நேசிக்கிறார் மற்றும் உங்கள் சூழ்நிலைகளைப் பற்றி அனைத்தையும் புரிந்துகொள்கிறார். இந்தக் கேள்விகளை நீங்கள் தனிப்பட்ட முறையில் அவரிடம் கேட்டால் அவர் மகிழ்ச்சியடைவார்.

செயின்ட் ஜார்ஜ்   யூட்டா ஆலய கோபுரம்

செயின்ட் ஜார்ஜ் யூட்டா ஆலய கோபுரப் புகைப்படம்

​​தயவுகூர்ந்து தவறாகப் புரிந்து கொள்ளவேண்டாம். நீங்கள் தெய்வீக வழிகாட்டுதலை நாடும்போது, ​​ஆலயத்தில் பெறப்பட்ட அறிவுரைகள் மற்றும் பிரதான தலைமையின் சமீபத்திய அறிக்கையில் பகிர்ந்துகொள்ளப்பட்ட தீர்க்கதரிசன ஆலோசனைகளைப் பின்பற்றுவதை விட குறைவாகச் செய்ய ஆவியானவர் உங்களைத் தூண்டமாட்டார். உங்களை இப்போதும் என்றென்றும் ஆசீர்வதிக்கும், அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் தன்னடக்கம் ஆகியவற்றின் தரங்களுக்கு இணையாக உங்களால் இயன்றதை விட குறைவாகச் செய்வதை நியாயப்படுத்துவதற்கு அன்பான பிதாஉதவமாட்டார். அவர் உங்கள் கேள்விகளைப் புரிந்துகொள்கிறாரா, மேலும் வஸ்திரத்தை மதித்து உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பதற்கான ஆசீர்வாதங்களை நீங்கள் பெற அவர் உங்களுக்கு உதவுவாரா? ஆம்! தேவைப்படும்போது திறமையான மருத்துவ மற்றும் சுகாதார நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டுமா? நிச்சயமாக! நீங்கள் பொது அறிவைப் புறக்கணித்து அல்லது இலக்கைத் தாண்டி பார்க்க வேண்டுமா? நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று ஜெபிக்கிறேன்.

உங்களிடமுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் என்னால் பதிலளிக்க முடியாது. என்னிடமுள்ள ஒவ்வொரு கேள்விக்கும்கூட என்னால் பதிலளிக்க முடியாது. ஆனால், நீங்கள் அவருடன் செய்த உடன்படிக்கைகளைக் கடைபிடித்தால், உங்களால் இப்போது புரிந்துகொள்ள முடியாத அல்லது முன்னறிந்திராத வழிகளில், உங்களின் ஒவ்வொரு வெற்றியையும் ஆசீர்வாதத்தையும் தேடும் அன்பான தேவனின் உதவியை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலன் என்ற முறையில், நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

குறிப்புகள்

  1. மோசே 5:4.

  2. மோசே 4:27.

  3. மோசே 4:13-14 ஐ பார்க்கவும்.

  4. ஏசாயா 61:10;2 நேபி 9:14;மேலும் வெளிப்படுத்தின விசேஷம் 19:8;2 நேபி 4:33;மார்மன் 9:5;கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:76 ஐ பார்க்கவும்.

  5. இன்று நாம் அணியும் வஸ்திரம், நிச்சயமாகஆதாம் மற்றும் ஏவாளுக்குக் கொடுக்கப்பட்ட தோலினாலானஉ டைகளுக்கு ஒத்ததாக இல்லை. ஆடை ரகங்கள் மற்றும் வடிவமைப்பு உட்பட பல ஆண்டுகளாக, வஸ்திரம் பல்வேறு விதத்தில் மாறியுள்ளது. ஆனால் உண்மையிலேயே முக்கியமான காரியங்கள் யாதெனில் - வஸ்திரத்தின் பரிசுத்தத் தன்மை, அது பிரதிநிதித்துவப்படுத்தும் உடன்படிக்கைகள் - அவை மாறாது.

  6. சபையின் முழுப் பெயரைக் கூறுவது போலவே வஸ்திரத்தின் முழுப்பெயரை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். ஆசாரியத்துவம் என்பது தேவனின் வல்லமை, மேலும் வஸ்திரம் அணிவது என்பது நாம் தேவனுடன் உடன்படிக்கை செய்து அதைக் கடைப்பிடிக்கும்போது நமக்கு கிடைக்கும் தெய்வீக வல்லமையை நினைவூட்டுவதாகும்.

  7. மரோனி 4:3; 5:2.

  8. 2 நேபி 4:30.

  9. மோசியா 16:8; மற்றும் ஆல்மா 31:38 ஐ பார்க்கவும்.