2024
அடிக்கடி ஜெபிப்பதன் மூலம் உங்கள் ஆத்துமாவை போஷியுங்கள்
ஏப்ரல் 2024


“அடிக்கடி ஜெபிப்பதன் மூலம் உங்கள் ஆத்துமாவை போஷியுங்கள், ” லியஹோனா, ஏப். 2024

லியஹோனா மாதாந்தர செய்தி, ஏப்ரல் 2024

அடிக்கடி ஜெபிப்பதன் மூலம்உங்கள் ஆத்துமாவைபோஷியுங்கள்

நம்முடைய ஆவிக்குரிய போஷாக்கிற்கு பரலோகப் பிதாவுடன் தொடர்புகொள்வது அவசியமானது, இது எல்லா இடங்களிலும் எப்போதும் நமக்குக் கிடைக்கும் ஆசீர்வாதமாகும்.

ஏனோஸ் ஜெபித்தல்

ஏனோஸை சித்தரிக்கும் நடிகரின் புகைப்படம் - மேட் ரியர்

நாம் அனைவரும் பசியை முன்பே அறிந்திருப்போம். நமக்கு போஷாக்கு தேவை என்பதை சரீரம் தெரிவிக்கும் ஒரு வழி பசி உணர்வாகும். நாம் பசியாக இருக்கும்போது, ​​​​நாம் என்ன செய்ய வேண்டும் அதாவது சாப்பிடவேண்டும் என்று நமக்குத் தெரியும்

நமக்கு எப்போது ஆவிக்குரிய போஷாக்கு தேவை என்பதை தெரிவிப்பதற்கான வழிகளும் நமது ஆவிகளுக்கு உண்டு. ஆனால் சரீர பசியை விட ஆவிக்குரிய பசியை புறக்கணிப்பது நமக்கு எளிதானது என்று தோன்றுகிறது.

நாம் பசியுடன் இருக்கும்போது பல வகையான உணவுகளை சாப்பிடுவது போல, நம் ஆவிக்குரிய பசியை பூர்த்தி செய்ய நாம் பல்வேறு விஷயங்களைச் செய்யலாம். உதாரணமாக, வேதவசனங்களிலும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளிலும் நாம் “கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசித்துப் பார்க்க” முடியும் (2 நேபி 32:3). நாம் தொடர்ந்து சபைக்கு சென்று திருவிருந்தில் பங்கு கொள்ளலாம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59:9 பார்க்கவும்). நாம் தேவனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் சேவை செய்யலாம் (மோசியா 2:17 பார்க்கவும்).

ஆனால் ஆவிக்குரிய போஷாக்கின் மற்றொரு ஆதாரம் எல்லா நேரங்களிலும், நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும், நம் சூழ்நிலைகள் எவ்வாறாக இருந்தாலும் நமக்குக் கிடைக்கிறது. ஜெபத்தின் மூலம் நாம் எப்போதும் பரலோகப் பிதாவுடன் தொடர்பு கொள்ளலாம்.

“என் ஆத்துமா பசியுற்றது”

ஏனோஸ் தீர்க்கதரிசி காட்டில் மிருகங்களை வேட்டையாடியபோது, ​​“[அவரது] நித்திய ஜீவனையும், பரிசுத்தவான்களின் சந்தோஷத்தைப்பற்றியும், அவரது தகப்பன் பேசி, அவர் அடிக்கடிக் கேட்ட வார்த்தைகள்” பற்றி சிந்தித்தான். இந்த வார்த்தைகள் “[அவருடைய] இருதயத்தில் ஆழமாக பதிந்தன” (ஏனோஸ் 1:3)

ஏனோஸ் இவ்வாறான ஆவிக்குரிய நோக்கத்தில் இருந்ததால், அவன் ஒரு வலுவான தேவையை உணர்ந்தான்: “என் ஆத்துமாபசியுற்றது ,” என்று கூறினான்(ஏனோஸ் 1:4;முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது).

இந்த ஆவியின் பசியை, ஆவிக்குரிய போஷாக்கின் தேவையை உணர்ந்த ஏனோஸ் என்ன செய்தான்? “என்னை உண்டாக்கினவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு என்னுடைய சொந்த ஆத்துமாவிற்காக அவரிடத்தில் ஊக்கமான ஜெபத்திலும் வேண்டுதலிலும் கூக்குரலிட்டேன்” என்றான்(ஏனோஸ் 1:4)

ஏனோஸின் ஆவிக்குரிய பசி மிகவும் அதிகமாக இருந்தது, அவன்”நாள் முழுவதும் … இரவு வந்தபோதும் வானங்களை எட்டும்படியாய் [அவனது] குரலை உயர்த்தினான்” (ஏனோஸ் 1:4) இறுதியில், தேவன் ஏனோஸின் ஜெபத்திற்கு பதிலளித்தார் அவனுடைய பாவங்களை மன்னித்தார். ஏனோஸ் தன் குற்ற உணர்ச்சி துடைக்கப்பட்டதை உணர்ந்தான். ஆனால் அவனது ஆவியின் போஷாக்கு அதோடு முடிவடையவில்லை.

இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தின் வல்லமையைக் கற்றுக்கொண்டான், அவன் தம்முடைய முழு ஆத்துமாவையும் தம்முடைய ஜனங்களுக்காகவும்—எதிரிகளுக்காகவும் ஊற்றினான். கர்த்தருடன் உடன்படிக்கை செய்து, அவரிடமிருந்து வாக்குறுதிகளைப் பெற்றான். ஏனோஸின் ஊக்கமான ஜெபத்திற்குப் பிறகு, தம் ஜனங்கள் மத்தியில் சென்று தான் கேட்டதையும் கண்டதையும் தீர்க்கதரிசனமாக சாட்சியமளித்தான் (ஏனோஸ் 1:5-19 பார்க்கவும்.)

ஒவ்வொரு ஜெபமும் இதுபோன்ற வியத்தகு முறையில் பதிலளிக்கப்படாது, ஆனால் ஜெபத்தின் மூலம் நமது அனுபவங்கள் இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கும் மற்றும் வாழ்க்கையை மாற்றும். ஏனோஸின் ஜெப அனுபவத்திலிருந்து சில முக்கியமான பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். உதாரணமாக:

  • சுவிசேஷத்தை முழுமையாக வாழ முயற்சிப்பது நமது ஆவிக்குரிய பசியை உணர உதவும்.

  • நம்முடைய ஆவிக்குரிய பசி, பரலோக பிதாவின் உதவியை நாடுவதற்கு நம்மை முழங்காற்படியிட வைக்கும்.

  • பரலோகப் பிதாவிடம் ஜெபிப்பது நமது ஆவிக்குரிய பசி மற்றும் சில தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்

  • நாம் எங்கும், எந்த நேரத்திலும் ஜெபிக்கலாம்.

  • மனந்திரும்புவதற்கு ஜெபம் நமக்கு உதவும்.

  • ஜெபம் இயேசு கிறிஸ்துவில் நம் விசுவாசத்தை பெலப்படுத்த முடியும்.

  • நம்முடைய பரலோகப் பிதா நமக்குச் செவிசாய்க்கிறார், நம்மைப் பற்றி அறிந்திருக்கிறார் என்பதற்கான தனிப்பட்ட சாட்சியை நாம் பெறலாம்.

  • ஜெபத்தின் மூலம் நாம் பெறும் சாட்சியும் பலமும் மற்றவர்களுக்கு சேவை செய்யவும் பலப்படுத்தவும் நமக்கு உதவும்.

மூப்பர் சோயர்ஸ் சிறுவனாக

ஜெபத்தின் வல்லமையைப்பற்றிய எனது அனுபவம்

ஏனோஸைப் போலவே, இதே பாடங்களில் சிலவற்றை நான் தனிப்பட்ட அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டேன். என் பெற்றோர் நான் சிறுவனாக இருந்தபோது பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் இணைந்தார்கள், எனக்கு எட்டு வயது நிறைவடைந்த பொழுது நான் ஞானஸ்நானம் பெற்றேன். பரலோக பிதாவைப் பற்றியும், இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், அவருடைய மறுஸ்தாபிக்கப்பட்ட சுவிசேஷத்தைப் பற்றியும், அவருடைய ஆலயத்தைப் பற்றியும் என் இருதயத்தில் எப்போதும் ஒரு நல்ல, அன்பான உணர்வு இருந்தது. ஆனால் எனக்கு கிட்டத்தட்ட 16 வயதில்தான் இந்த காரியங்களின் சத்தியத்தைக் குறித்து ஜெபிக்க முற்பட்டேன்.

என்னுடைய உணர்த்தப்பட்ட ஆயர், இளைஞர் ஞாயிறு பள்ளி வகுப்பில் போதிக்கச் சொன்னார். ஜெபத்தின் மூலம் நாம் எவ்வாறு சுவிசேஷ சாட்சியைப் பெறலாம் என்பதைப் பற்றி நான் ஒரு பாடம் கற்பிக்க வேண்டியதாயிருந்தது. எனது ஆயரின் இந்த நியமிப்பு எனது சொந்த சாட்சியத்தைப் பற்றி இன்னும் ஆழமாக சிந்திக்க வைத்தது. நான் மார்மன் புஸ்தகத்தைப் படிக்க நேரம் எடுத்துக்கொண்டேன், சபை உண்மை என்று எப்போதும் உணர்ந்தேன் நான் எப்பொழுதும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை நம்பியிருந்தேன், ஆனால் மரோனி 10:4-5 இல் காணப்படும் மரோனியின் வாக்குறுதியை நான் ஒருபோதும் நினைவில் கொள்ளவில்லை. சுவிசேஷத்தின் சத்தியத்தைக் குறித்து நான் ஒருபோதும் ஜெபித்ததில்லை.

ஜெபத்தின் மூலம் ஒரு சாட்சியைப் பெறுவது எப்படி என்பதை இந்த இளைஞர்களுக்கு நான் போதிக்கப் போகிறேன் என்றால், நானே ஒரு சாட்சிக்காக ஜெபிக்க வேண்டும் என்று என் இருதயத்தில் உணர்ந்ததை நான் நினைவில் வைத்திருக்கிறேன். என் ஆத்துமா பசியுற்றது—ஒருவேளை ஏனோஸிலிருந்து என் பசி வேறுபட்டிருக்கலாம், ஆனாலும் நான் ஆவிக்குரியத் தேவையை உணர்ந்தேன்.

நான் வகுப்பிற்கு தயார்படுத்தும் போது, ​​நான் முழங்காற்படியிட்டு, என் உள்ளத்தில் உணர்ந்த சத்தியத்தை உறுதிப்படுத்த என் பரலோகப் பிதாவிடம் என் இதயத்தின் வாஞ்சையை வெளிப்படுத்தினேன். நான் எந்த ஒரு பெரிய வெளிப்பாட்டையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த சுவிசேஷம் உண்மையா என்று நான் கர்த்தரிடம் கேட்டபோது, ​​என் இருதயத்தில் ஒரு இனிமையான உணர்வு ஏற்பட்டது - அது சத்தியம் என்றும், நான் செய்துகொண்டிருப்பதைத் தொடர வேண்டும் என்றும் எனக்கு உறுதியளிக்கும் அமர்ந்த மெல்லிய சத்தம்.

அந்த உணர்வு மிகவும் வலுவாக இருந்தது, அந்த பதிலை நான் ஒருபோதும் புறக்கணித்து எனக்கு தெரியாது என்று சொல்ல முடியாது. அந்த நாள் முழுவதையும் நான் மிகவும் மகிழ்ச்சியாகக் கழித்தேன். என் மனம் பரலோகத்தில் என் இருதயத்தில் உள்ள அழகான உணர்வை சிந்தித்துக்கொண்டிருந்தது.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை, நான் மூன்று அல்லது நான்கு வகுப்பு தோழர்கள் முன் நின்றேன், அவர்கள் அனைவரும் என்னை விட இளையவர்கள். விசுவாசம் இருந்தால் பரலோகப் பிதா அவர்களுடைய ஜெபத்திற்குப் பதிலளிப்பார் என்று நான் அவர்களுக்குச் சாட்சியளித்தேன்.

மூப்பர் சோயர்ஸ்

ஒரு இளைஞனாக மூப்பர் சோயர்ஸ்ஸ் பெற்ற ஒரு ஜெபத்திற்கான பதில், அவரை ஒரு ஊழியக்காரராக (மேலே), தந்தை மற்றும் கணவர் மற்றும் அப்போஸ்தலராக சாட்சியமளிக்க ஆயத்தப்படுத்தியது, பரலோகப் பிதாவிடத்தில் விசுவாசத்துடன் ஏறெடுக்கப்படும் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார்.

அப்போதிருந்து, இந்த சாட்சியம் என்னுடன் இருந்து வருகிறது. குறிப்பாக நான் சவால்களை எதிர்கொள்ளும் தருணங்களில் முடிவுகளை எடுக்க இது எனக்கு உதவியது. அந்த நாளின் அந்த ஜெபம், பல ஆண்டுகளாக நான் பெற்ற கூடுதல் சாட்சிகளுடன் சேர்ந்து, விசுவாசத்துடன் ஜெபித்தால் பரலோகப் பிதாவிடமிருந்து பதில்களைப் பெற முடியும் என்று நம்பிக்கையுடன் ஜனங்களுக்கு சாட்சியமளிக்க என்னை ஆயத்தப்படுத்தியது. நான் ஒரு ஊழியக்காரனாகவும், ஒரு சபை தலைவராகவும், ஒரு தந்தையாகவும் கணவராகவும், இன்று ஒரு அப்போஸ்தலராகவும் சாட்சியமளிக்க இது உண்மையானது.

எப்போது மற்றும் என்ன ஜெபிப்பது

நிச்சயமாக, குறிப்பாக வலுவான ஆவிக்குரிய தேவையை உணரும்போது மட்டும் நாம் ஜெபிப்பதில்லை. ஆகவே, நாம் எப்போது ஜெபிக்க வேண்டும்? மேலும் நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்? சுருக்கமான பதில் எப்போது வேண்டுமானாலும் எதற்காகவும்.

தேவனே நமது பரலோக பிதா. இதை அறிந்தால் நாம் ஜெபிக்கும் விதம் மாறும். தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் போதித்தார்: “தேவனைப் பற்றிய ஞானத்தைப் பெற்றிருந்தால், அவரை எப்படி அணுகுவது, எப்படி பதில் பெறுவது என்று நாம் தெரிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம். … நாம் அவரிடம் வரத் தயாராக இருக்கும்போது, ​​அவர் நம்மிடம் வரத் தயாராக இருக்கிறார்.”1

நம்முடைய பரலோகப் பிதா எப்பொழுதும் நமக்குச் செவிசாய்க்கத் தயாராக இருக்கிறார், நாம் அவரிடம் அடிக்கடி தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறார். நாம் “[நம்முடைய] எல்லா செயல்களிலும் கர்த்தரிடத்தில் ஆலோசிக்க வேண்டும்” (ஆல்மா 37:37)மற்றும் காலை, மதியம் மற்றும் இரவில் ஜெபிக்க வேண்டும். நாம் வீட்டில், வேலை செய்யும் இடத்தில், பள்ளியில் ஜெபிக்க வேண்டும்-நாம் எங்கிருந்தாலும் மற்றும் நமது எந்த முயற்சியிலும் ஜெபிக்க வேண்டும் (ஆல்மா 34:17–26 பார்க்கவும்).

நம் குடும்பங்களில் நாம் ஜெபிக்க வேண்டும் (3 நேபி 18:21பார்க்கவும்). நாம் “சத்தமாகவும் [நம்] இருதயத்திலும், பகிரங்கமாகவும் மற்றும் தனிப்பட்ட முறையில்” ஜெபிக்க வேண்டும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 81:3). மேலும் “[நாம்] கர்த்தரிடத்தில் கூக்குரலிடாதபோது, ​​ [நம்] நலனுக்காகவும், [நம்மைச் சுற்றியுள்ளவர்களின் நலனுக்காகவும்] தொடர்ந்து ஜெபத்தில் [நம்] இருதயங்கள் நிறைந்திருக்கட்டும். ]”(ஆல்மா 34:27)) நாம் எப்போதும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவிடம் ஜெபிக்க வேண்டும் (3 நேபி 18:19-20 பார்க்கவும்).

இளைஞனாக ஜோசப் ஸ்மித்

ஜோசப் ஸ்மித்தின் விளக்கப்படம் - வால்டர் ரானே, பிரதியெடுக்க முடியாது

நமது பரலோகப் பிதாவை அணுகுதல்

பரலோகத்திலுள்ள நம் பிதா நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார். நாம் கேட்டால் அவர் செய்வார் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் போதித்தார், “கேட்காமல் நாம் எதையும் பெற முடியாது என்பதை நினைவில் வையுங்கள்; எனவே, விசுவாசத்துடன் கேளுங்கள், தேவன் உங்களுக்குத் தகுந்ததாகக் கருதும் அத்தகைய ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்.2

நமது வழக்கமான மற்றும் அடிக்கடி ஜெபம் நமது பசியுள்ள ஆத்துமாக்களுக்கு ஆவிக்குரிய போஷாக்கின் சீரான உணவிலுள்ள இன்றியமையாத பகுதியாகும். ஜெபத்தின் மூலம் பரலோகப் பிதாவுடன் தொடர்புகொள்வது சத்தியமானது மற்றும் எல்லா இடங்களிலும் எப்போதும் வரவேற்கப்படுகிறது.

நாம் முழங்காற்படியிட்டு ஜெபிக்கும்போது, ​​நம்முடைய பரலோகப் பிதாவை எப்படி அணுக வேண்டும் என்று எனக்குப் பிடித்த வேதவசனங்களில் ஒன்று கற்பிக்கிறது: “தாழ்மையாயிரு; கர்த்தராகிய உன்னுடைய தேவன், கரம் பிடித்து உன்னை நடத்துவார், உன்னுடைய ஜெபங்களுக்காக உனக்கு பதிலளிப்பார்.”கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112:10). நாம் தாழ்மையாகவும் கீழ்ப்படிதலுடனும் இருக்கும்போது, ​​பரலோகப் பிதா நம்மோடு இருப்பார். அவர் நம்மை கைப்பிடித்து வழிநடத்துவார். எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று அவர் நமக்கு உணர்த்துவார். அவருடைய சித்தம், வழி, நேரம் மற்றும் நமக்கு எது நல்லது என்பதைப் பற்றிய முழுமையான ஞானத்தின் படி அவர் நம்முடைய ஜெபங்களுக்குப்பதிலளிப்பார்.

இதை நாம் நினைவில் வைத்துக் கொண்டு, தேவனின் சிம்மாசனத்தை அணுகி, அவருடைய கையால் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை நாம் களிகூர வேண்டும்.

குறிப்புகள்

  1. Teachings of Presidents of the Church: Joseph Smith (2011), 4041.

  2. Teachings: Joseph Smith, 131.