2023
ஆலயத்திற்குச் செல்ல ஆயத்தப்படுதல்
டிசம்பர் 2023


”ஆலயத்திற்குச் செல்ல ஆயத்தப்படுதல்,” லியஹோனா,டிச. 2023

லியஹோனா மாதாந்தர செய்தி, டிசம்பர் 2023

ஆலயத்திற்குச் செல்ல ஆயத்தப்படுதல்

ஆக்டன் யூட்டா ஆலயத்திற்கு மக்கள் நடந்து செல்லுதல்

ஆக்டன் யூட்டா ஆலய புகைப்படம் - மார்க் புருன்சன்

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் ஆலயங்களில், நமக்கும் நம் முன்னோர்களுக்கும் பரிசுத்தமான உடன்படிக்கைகளையும், நியமங்களையும் பெற்றுக்கொள்ளலாம். பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவுக்கு நமது அன்பையும் நன்றியையும் காட்டுவதற்காக நாம் ஆலயத்திற்குச் செல்கிறோம். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கற்றுக்கொண்டு அதின்படி வாழ்வதன் மூலம் ஆலயத்திற்குச் செல்ல நாம் தயாராகலாம். ஆலயங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, அக்டோபர் 2021“லியாஹோனா பத்திரிக்கையின் “ஆலயப்பணி” என்ற சுவிசேஷ அடிப்படைக் கட்டுரையைப் பார்க்கவும்.

டர்பன் தென்னாப்பிரிக்கா ஆலயத்திற்கு வெளியே உள்ள வார்த்தைகள்

டர்பன் தென் ஆப்ரிக்கா ஆலய புகைப்படம் - மத்தேயு ரியர்

கர்த்தரின் வீடு

“ஆலயங்கள் கர்த்தரின் வீடு” என்று அழைக்கப்படுகின்றன. கர்த்தரின் ஆவியையும் அவர் நம் மீது வைத்துள்ள அன்பையும் நாம் உணரக்கூடிய பரிசுத்த இடங்கள் அவை. நித்திய ஜீவனைப் பெற நம்மைத் தயார்படுத்தும் உடன்படிக்கைகளை மேற்கொண்டு, விசேஷ நியமங்களைப் பெறக்கூடிய இடங்கள் அவை. (உடன்படிக்கைகள் தேவனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இடையே உள்ள பரிசுத்தமான வாக்குத்தத்தங்கள்.) நமது உடன்படிக்கைகளுக்கு உண்மையாக இருப்பதும், அவற்றின் நியமங்களைப் பெறுவதும், பரலோக பிதாவிடனும் இயேசு கிறிஸ்துவுடனும் ஒரு விசேஷித்த உறவைப் பெற உதவுகிறது.

குயாகுவில் ஈக்வடார் ஆலயத்தின் வெளியே இளைஞர்கள் நின்று கொண்டிருத்தல்

ஆக்டன் யூட்டா ஆலய புகைப்படம் - ஜானே பிங்காம்

ஆலயத்திற்கு யார் செல்லலாம்?

மரித்தோர்களுக்கான ஞானஸ்நானத்தை 12 வயது நிறைவடைந்த சபை உறுப்பினர்கள் மேற்கொள்ளலாம். சபையின் உறுப்பினராகிய அவன் அல்லது அவள் குறைந்தபட்சம் 18 வயதுடையவராகவும், மற்றும் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது சபையில் உறுப்பினராக இருந்து, ஆலய உடன்படிக்கைகளை செய்து அவற்றைக் கடைப்பிடிக்க விரும்பினால்தரிப்பித்தல்பெறலாம்General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 27.2.2, ChurchofJesusChrist.org). பார்க்கவும். ஏற்கனவே ஆலய தரிப்பித்தலைப் பெற்ற ஒரு ஆணும் பெண்ணும், நித்தியத்திற்கும் முத்தரிப்பை(திருமணம்) ஆலயத்தில் செய்யலாம்.

உடன்படிக்கைகளும் நியமங்களும்

ஆலயத்தில் உடன்படிக்கைகளை மேற்கொண்டு, நியமங்களை நீங்கள் பெறலாம். தேவனுடன் ஒரு உடன்படிக்கை உறவுக்குள் நுழைவது, வாழ்க்கையைப்பற்றிய அனைத்தையும் எளிதாக்கும் வகையில் அவருடன் நம்மை பிணைக்கிறது.(Russell M. Nelson, “Overcome the World and Find Rest,” Liahona, Nov. 2022, 97). ஒரு நியமம் என்பது ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தால் செய்யப்படும் ஒரு பரிசுத்தமான செயலாகும். நியமங்கள் ஆழமான ஆவிக்குரிய அர்த்தத்தைக் கொண்டுள்ளன உதாரணமாக, நீங்கள் ஒரு நியமத்தில் பங்கேற்கும் போது, கர்த்தருடைய உடன்படிக்கைகளைப் பெற்றுக் கொள்ளவும் கடைபிடிக்கவும் தயாராக இருப்பதைக் காட்டுகிறீர்கள்.

தனிப்பட்ட ஆயத்தம்

இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுவதன் மூலமும், ஞானஸ்நானத்தில் கர்த்தருடன் நீங்கள் செய்த உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும் ஆவிக்குரிய விதத்தில் தயாராகுங்கள். வேதங்கள் மற்றும் பொது மாநாட்டு செய்திகள் போன்ற சபை ஆதாரங்களிலும் நீங்கள் படிக்கலாம். Temples.ChurchofJesusChrist.org நீங்கள் ஆலயம் செல்லும்போது என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய தகவல்களை வழங்குகிறது. ஆலய உடன்படிக்கைகள், நியமங்கள் மற்றும் அடையாளங்கள் பற்றிய கூடுதல் விவரங்களும் இதில் அடங்கும்.

நாவூ இல்லினாய் ஆலயத்தின் வெளிப்புறம்

நாவூ இல்லினாய் ஆலய புகைப்படம் -ஈவ் டஃப்ட்

அடையாளங்கள்

கர்த்தர் அடிக்கடி அடையாளங்களைப் பயன்படுத்தி போதிக்கிறார். உதாரணமாக, ஞானஸ்நானம்—தண்ணீருக்கு அடியில் சென்று மீண்டும் மேலே வருவது— உங்கள் பழைய மனுஷன் மரித்து, புதிய மனுஷன் மீண்டும் பிறப்பது போன்றது (ரோமர் 6:3–6 ஐப் பார்க்கவும்). ஆலய நியமங்கள் இயேசு கிறிஸ்துவையும் அவருடைய பாவ நிவர்த்தியையும் நோக்கி செல்கின்றன. நீங்கள் ஆலயத்திற்கு முதல் முறையாகச் செல்லும் போது அனைத்து அடையாளங்களையும் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம், ஆனால் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஆலயத்திற்கு தொடர்ச்சியாகச் செல்லும் பொது நீங்கள் தொடர்ந்து கற்றுக்கொள்ளலாம்.

ஆலய பரிந்துரை

ஆலயத்திற்கு செல்ல, தயாராகவும் தகுதியுடனும் நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் ஆயர் அல்லது கிளைத் தலைவர் மற்றும் பிணைய அல்லது ஊழியத் தலைவருடனான நேர்காணலுக்குப் பிறகு ஆலயத்திற்குள் செல்வதற்கான பரிந்துரையைப் பெறலாம். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த இந்தத் தலைவர்கள் பல கேள்விகளைக் கேட்பார்கள். இந்தக் கேள்விகளைப் பற்றி உங்கள் தலைவர்கள் உங்களுடன் முன்கூட்டியே பேசலாம்.

உங்கள் மூதாதையர்களுக்காக ஆலயத்திற்குத் திரும்புதல்

தம்முடைய பிள்ளைகள் அனைவரும் தன்னுடன் உடன்படிக்கை செய்து, பரிசுத்த நியமங்களைப் பெற வேண்டுமென பரலோக பிதா விரும்புகிறார். சுவிசேஷம் பெறாமல் மரித்தவர்களுக்கு, ஞானஸ்நானம், தரிப்பித்தல் போன்ற நியமங்கள் ஆலயங்களில் செய்யப்பட வேண்டும். மரித்துப்போன உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு நியமங்கள் செய்ய நீங்கள் ஆலயத்திற்கு செல்லலாம்.