“இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்”லியஹோனா,ஜூலை 2023.
லியஹோனா மாதாந்தர செய்தி, ஜூலை 2023
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர்களாக நாம் பெறும் ஆசீர்வாதங்களைப் பற்றி சிந்திக்கும்போது, நமது அன்புக்குரியவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நம்முடைய வார்த்தைகள் மற்றும் உதாரணம் மூலம் சத்தியத்தின் சாட்சிகளை நாம் பகிர்ந்து கொள்ளலாம். யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்பதை அறிய உணர்த்துதலுக்காக நாம் ஜெபிக்கலாம்.
மற்றவர்களை நேசியுங்கள்
சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதில் ஒரு முக்கியமான பகுதி மற்றவர்களை நேசிப்பதாகும். கிறிஸ்துவைப் போன்ற அன்பை நாம் காட்டுவதன் மூலம் நாம் ஒரு வார்த்தை கூட பேசாவிட்டாலும், நாம் பிறருடன் சுவிசேஷத்தைப் பகிர்கிறோம். நாம் அவர்களிடம் உண்மையாக அக்கறை காட்டுகிறோம் என்பதை பிறர் அறிந்தால், சுவிசேஷத்தைப் பற்றிய நமது எண்ணங்களைக் கேட்க அவர்கள் அதிகம் திறந்த மனமுள்ளவர்களாக இருக்கலாம். Gary E. Stevenson, “Love, Share, Invite,” Liahona, May 2022, 84–87.) பார்க்கவும்.)
சாதாரண மற்றும் இயற்கையான வழிகளில் பகிரவும்
சுவிசேஷத்தில் நாம் விரும்புவதைப் பகிர்ந்து கொள்ளலாம். நம் அன்றாட வாழ்வின் பகுதியாக இதைச் செய்யும்போது, மோசமானதாகவோ அல்லது அசௌகரியமாகவோ இருக்காது. உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி நம் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பேசலாம். அல்லது நாம் மற்றவர்களுக்கு சேவை செய்யும்போது நாம் உணரும் மகிழ்ச்சியைப் பற்றி அவர்களிடம் சொல்லலாம். Dieter F. Uchtdorf, “Missionary Work: Sharing What Is in Your Heart,” Liahona, May 2019, 15–18 பார்க்கவும்.
நம்முடன் சேர்ந்து கொள்ள மற்றவர்களை அழைக்கவும்
சுவிசேஷத்தைப் பற்றி அதிகமாய் அறிந்துகொள்ள மற்றவர்களை நாம் அழைக்கலாம். உதாரணமாக, சபைக் கூட்டத்திற்கு அல்லது நிகழ்ச்சிகளுக்கு வருமாறு அவர்களை அழைக்கலாம், மார்மன் புத்தகத்தைப் படிக்கலாம், சபை காணொளியைப் பார்க்கலாம் அல்லது ஊழியக்காரர்களுடன் சென்று சந்திக்கலாம். இந்த அனுபவங்கள் அவர்கள் பரிசுத்த ஆவியை உணரவும் அதிகம் கற்றுக்கொள்ளவும் உதவும்.
அவர்களின் அனுபவத்தைப்பற்றி கேளுங்கள்
நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சபைக்கு வந்த பிறகு அல்லது ஊழியக்காரர்களுடன் பாடம் கற்றுக்கொண்ட பின்பு, அவர்களின் அனுபவத்தைப் பற்றி நாம் கேட்கலாம். சுவிசேஷத்தின் சில போதனைகள் அவர்களுக்கு புதியதாக இருக்கலாம், எனவே அவர்களிடம் உள்ள கேள்விகளுக்கு நாம் பதிலளிக்கலாம். கிறிஸ்துவிடம் வர அவர்களது முயற்சிகளுக்கு நம் அன்பையும் ஆதரவையும் காட்டலாம்.
அவர்களின் நம்பிக்கைகளை வலுப்படுத்தலாம்
மற்றவர்களின் நம்பிக்கைகளை நாம் மதிக்கிறோம், நன்மதிப்பு வைத்திருக்கின்றோம், மேலும் அவர்கள் ஏற்கனவே வைத்திருக்கும் விசுவாசத்தை வலுப்படுத்த முயற்சிக்கிறோம். உதாரணமாக, வேதாகம வசனங்களில் ஆறுதல் கண்ட நண்பர், மார்மன் புத்தகத்திலிருந்து நாம் பகிர்ந்துகொள்ளும் போதனைகளிலும் ஆறுதல் பெறலாம்.
சபையின் புதிய உறுப்பினர்களுக்கு உதவுங்கள்
ஜனங்கள் சபையில் இணையும்போது, அவர்களின் விசுவாசத்தை வலுப்படுத்த நாம் உதவ முடியும். நாம் அவர்களின் நண்பர்களாக ஆகலாம், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கலாம் மற்றும் அவர்கள் அழைப்புகளைப் பெறும்போது ஆதரவளிக்கலாம். இயேசுக் கிறிஸ்துவைத் தொடர்ந்து பின்பற்றவும் அவருடைய சுவிசேஷத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவர்களை ஊக்குவிக்கலாம்.
முழு நேர ஊழியப் பணியாற்றுங்கள்
நமது அன்றாட வாழ்வில் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதுடன், சபை உறுப்பினர்கள் முழுநேர ஊழியர்களாகச் சேவை செய்ய அழைக்கப்படலாம். இளம் ஆண்கள் தயாராக இருக்கும் பட்சத்தில், 18 வயதிலேயே சேவை செய்யலாம். இளம் பெண்கள் மற்றும் பெரியவர்கள் கூட சேவை செய்யலாம். மேலும் தகவலைக் காண ChurchofJesusChrist.org/callings/missionary பார்க்கவும்
© 2023 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Liahona Message, April 2023. மொழிபெயர்ப்பு. Language. 19045 418