2023
பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவ முடியும்
ஜூன் 2023


“பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவ முடியும், “லியஹோனா, ஜூன் 2023

லியஹோனா மாதாந்தர செய்தி, ஜூன் 2023

பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவ முடியும்

ஒரு மனிதன் அமர்ந்து சூரிய உதயத்தைப் பார்த்தல்

பரிசுத்த ஆவி தேவத்துவத்தின் மூன்றாம் நபர். வேதங்கள் அவரை ஆவியானவர், பரிசுத்த ஆவியானவர் அல்லது தேற்றரவாளன் என்றும் குறிப்பிடுகின்றன. நாம் அவருடைய குரலுக்கு செவிசாய்க்க கற்றுக்கொள்ளும்போது, ​​அவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி நமக்குச் சாட்சியமளிப்பார், மேலும் சுவிசேஷத்தின் சத்தியங்களைக் கற்றுக்கொள்ள உதவுவார்.

தேவத்துவத்தின் உறுப்பினர்

பரலோக பிதா, இயேசு கிறிஸ்து, மற்றும் பரிசுத்த ஆவியானவர் தேவத்துவமாக இருக்கிறார்கள். அவர்கள் நம்மை நேசிக்கிறார்கள் மற்றும் இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்ற ஒற்றுமையுடன் பணியாற்றுகிறார்கள். பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவுக்கு மாம்சம் மற்றும் எலும்புகள் உள்ளன, ஆனால், பரிசுத்த ஆவியானவர்க்கு இல்லை. அவர் ஆவியாயிருக்கிறார்.

பிதா மற்றும் குமாரனின் உருவத்தின் வண்ணக் கண்ணாடி படம்

பிதா மற்றும் குமாரனின் சாட்சியம்

பரிசுத்த ஆவியானவர் “பிதாவையும் குமாரனையும் குறித்து சாட்சி கொடுக்கிறார்” (2 நேபி 31:18). பரிசுத்த ஆவியின் மூலம் பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துபற்றிய சாட்சியைநாம் பெற முடியும் என்பதே இதன் பொருள்.

சத்தியத்தை சாட்சியளிக்கிறார்

பரிசுத்த ஆவியானவர் எல்லா சத்தியத்தைக் குறித்தும் சாட்சியமளிக்கிறார். இரட்சிப்பின் திட்டம், தேவனின் கட்டளைகள், மறுஸ்தாபிதம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பாவ நிவர்த்தி உட்பட சுவிசேஷம் சத்தியமானது என்பதை அறிய அவர் நமக்கு உதவுவார். நாம் தொடர்ந்து ஜெபிக்கும்போதும், கட்டளைகளைக் கைக்கொள்ளும்போதும், சுவிசேஷத்தைப் படிக்கும்போதும் அவர் நம்முடைய சாட்சியைப் பலப்படுத்துவார்.

திசைகாட்டி வைத்திருக்கும் கை

வழிகாட்டி, நம்மைப் பாதுகாக்கிறார்

பரிசுத்த ஆவியானவர் நம் தீர்மானங்களில் நம்மை வழிநடத்தி, சரீர மற்றும் ஆவிக்குரிய ஆபத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியும். நாம் ஜெபித்து, சரியானதைச் செய்ய முயற்சித்தால், நம்முடைய கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிக்க அவர் நமக்கு உதவுவார். அவர் எப்போதும் நம்மை “நன்மை செய்ய” வழிநடத்துவார்(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11:12).

நம்மை தேற்றுகிறார்

பரிசுத்த ஆவியானவர் சில சமயங்களில் “தேற்றரவாளன்” என்று குறிப்பிடப்படுகிறார் (யோவான் 14:26). நாம் கவலையாகவோ, சோகமாகவோ அல்லது பயமாகவோ இருக்கும்போது, ​​அவர் நம்மை “நம்பிக்கை மற்றும் பரிபூரண அன்பினால்” நிரப்ப முடியும் (மரோனி 8:26) தேவனுடைய அன்பை உணர அவர் நமக்கு உதவுவதால், நாம் அதைரியத்தை மேற்கொண்டு, பாடுகளில் பலம் பெற முடியும்.

பரிசுத்த ஆவியின் வரம்

நாம் ஞானஸ்நானம் பெற்ற பிறகு, திடப்படுத்துதல் எனப்படும் நியமத்தில்பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுகிறோம். நாம் இந்த வரத்தைப் பெற்றவுடன், நாம் நீதியாக வாழும் வரை பரிசுத்த ஆவியின் நிலையான தோழமையைப் பெற முடியும்.

பெண் வேதங்களை வாசித்தல்

விளக்கப்படம்–ஜே. கிர்க் ரிச்சர்ட்ஸ்

பரிசுத்த ஆவியை நாம் எப்படி கேட்கிறோம்

பரிசுத்த ஆவியானவர் பல்வேறு வழிகளில் ஜனங்களிடம் தொடர்பு கொள்கிறார். இதில் சமாதானமான, ஆறுதலான உணர்வுகள் அல்லது என்ன சொல்வது அல்லது செய்ய வேண்டும் என்பது பற்றிய உள்ளுணர்வுகள் இருக்கலாம். வழிகாட்டுதலுக்காக நாம் ஜெபித்து, அவருடைய தூண்டுதல்களைக் கேட்கும்போது, ​​அவர் நம்மிடம் எப்படிப் பேசுகிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.