2023
இயேசு கிறிஸ்துவில் விசுவாசம்
ஏப்ரல் 2023


“இயேசு கிறிஸ்துவில் விசுவாசம்,” லியஹோனா, ஏப்ரல் 2023.

லியஹோனா மாதாந்தர செய்தி, ஏப்ரல் 2023

இயேசு கிறிஸ்துவில் விசுவாசம்

இயேசுவின் சுயவிவரம்

இயேசு கிறிஸ்து– ஹாரி ஆண்டர்சன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தல் சுவிசேஷத்தின் முதல் கொள்கையாக இருக்கிறது (விசுவாசப் பிரமாணங்கள் 1:4 பார்க்கவும்). நம்முடைய பரலோக பிதாவிடம் நம்மைத் திரும்ப அழைத்துச் செல்லும் தேர்ந்தெடுப்புகளைச் செய்ய நம்முடைய விசுவாசம் நமக்கு உதவும். நம் வாழ்நாள் முழுவதும் நம் விசுவாசத்தை திடப்படுத்த நாம் முயற்சிக்கலாம்

பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் ஒரு புத்தகத்தை சுற்றி கூடினர்

விசுவாசம் என்றால் என்ன?

விசுவாசம் என்பது உறுதியான நம்பிக்கை அல்லது எதையாவது நம்புவது. விசுவாசம் கொண்டிருப்பதில், உண்மையுள்ள காரியங்களை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும் அல்லது முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், அதில் நம்பிக்கை வைப்பதும், நம்புவதும் அடங்கும்.(எபிரெயர் 11:1; ஆல்மா 32:21 பார்க்கவும்).

இயேசு கிறிஸ்துவின் சித்திரம்

கிறிஸ்துவும் இளம் ஐஸ்வர்யவானும் – ஹெய்ன்ரிச் ஹோப்மலிருந்து விவரம்

இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டது விசுவாசம்

இரட்சிப்புக்கு வழிவகுக்க, நம்முடைய விசுவாசம் நம்முடைய இரட்சகராகவும் மீட்பராகவும் இயேசு கிறிஸ்துவில் மையமாக இருக்க வேண்டும். கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது என்பது அவர் மீது நம்பிக்கை வைப்பதாகும். அது அவரை முழுமையாக நம்பியிருப்பதைக் குறிக்கிறது அவருடைய வல்லமை, ஞானம் மற்றும் அன்பில் நம்பிக்கை வைப்பது. அவருடைய போதனைகளை நம்புவதும் பின்பற்றுவதும் இதில் அடங்கும்.

தம்பதியினர் வேதங்களைப் படித்தல்

நமது விசுவாசத்தை அதிகரிப்பது

விசுவாசம் என்பது தேவனிடமிருந்து கிடைத்த வரம், ஆனால் நாம் அதைத் தேடி அதை வலுவாக வைத்திருக்க உழைக்க வேண்டும். வேதங்களையும் பிற்கால தீர்க்கதரிசிகளின் போதனைகளையும் படிப்பதன் மூலமும் ஜெபிப்பதன் மூலமும் நம் விசுவாசத்தை அதிகரிக்கலாம். நாம் நீதியாக வாழும்போதும் நமது உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கும்போதும் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிறோம்.

விசுவாசத்தினிமித்தம் வாழ்வது

விசுவாசம் என்பது வெறும் நம்பிக்கையை விட அதிகம். அந்த நம்பிக்கையில் செயல்படுவது இதில் அடங்கும். நாம் வாழும் விதத்தில் நம் விசுவாசத்தை நாம் காட்டுகிறோம். இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசம், அவருடைய பரிபூரண முன்மாதிரியைப் பின்பற்ற நம்மைத் தூண்டுகிறது. நம்முடைய விசுவாசம், கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும், நம்முடைய பாவங்களுக்காக மனந்திரும்பவும், உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும், கைக்கொள்ளவும் நம்மை வழிநடத்துகிறது.

ஒரு குருடனை  கிறிஸ்து சுகமாக்குதல்

விசுவாசம் அற்புதங்களுக்கு வழிவகுக்கும்

உண்மையான விசுவாசம் அற்புதங்களைக் கொண்டுவருகிறது, அதில் தரிசனங்கள், சொப்பனங்கள், குணப்படுத்துதல்கள் மற்றும் தேவனிடமிருந்து வரும் பிற வரங்களும் அடங்கும் தேவன் மீதுள்ள விசுவாசத்தின் காரணமாக அவரிடமிருந்து அற்புதங்களைப் பெற்ற மக்களின் பல கதைகள் வேதங்களில் உள்ளன. சில உதாரணங்களுக்கு வேதவசனங்களுக்கான வழிகாட்டியில் “அற்புதம்“ பார்க்கவும்.

விசுவாசம் சமாதானத்தை கொண்டுவரும்

தேவன் மீதும் அவருடைய இரட்சிப்பின் திட்டத்திலும் விசுவாசம் வைத்திருப்பது நமது சவால்களின் போது நம்மை பலப்படுத்தும். விசுவாசமானது முன்னோக்கிச் செல்லவும், நமது துன்பங்களை தைரியமாக எதிர்கொள்ளவும் நமக்கு பலத்தை அளிக்கும். எதிர்காலம் நிச்சயமற்றதாகத் தோன்றினாலும், இரட்சகர் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசம் நமக்கு சமாதானத்தைத் தரும்.

இயேசுவின் ஓவியத்தைப் பார்த்தபடி தன் பிள்ளையைப் பிடித்தபடி அப்பா

இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் இரட்சிப்புக்கு வழிவகுக்கிறது

கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது நமது இரட்சிப்புக்கு வழிவகுக்கும். கிறிஸ்து நாம் நித்திய ஜீவனைப் பெறுவதற்கான வழியை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். நாம் அவரில் விசுவாசித்து வாழும்போது, ​​நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீண்டும் தேவனுடன் வாழ திரும்பலாம்.