2023
ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள்
மார்ச் 2023


“ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள்,” லியஹோனா,மார்ச் 2023

லியஹோனா மாதாந்தர செய்தி, மார்ச் 2023

ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள்

கிறிஸ்து பன்னிரண்டு அப்போஸ்தலர்களை நியமித்தல்

கிறிஸ்து பன்னிரண்டு அப்போஸ்தலர்களை நியமித்தல் - ஹாரி ஆண்டர்சன்

மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை தருப்பித்திருப்பவரின் உணர்த்துதலின் மூலம் ஆசாரியத்துவ ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது. தேவனின் பிள்ளைகள் அனைவருக்கும் அவருடைய வல்லமை, குணப்படுத்துதல், ஆறுதல் மற்றும் வழிகாட்டுதலைப் பெறுவதை ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள் சாத்தியமாக்குகிறது.

ஆசாரியத்துவம்

ஆசாரியத்துவம் என்பது தேவனிடமிருந்து வரும் வல்லமை மற்றும் அதிகாரமாகும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை தருப்பித்திருக்கும் தகுதியுள்ள ஆண்கள் ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களை வழங்கும்போது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செயல்படுகிறார்கள். அவர்கள் இந்த ஆசீர்வாதங்களைக் கொடுக்கும்போது, ​​மற்றவர்களை ஆசீர்வதிக்கும் இரட்சகரின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள்.

கைகள் தலையின் மேல் வைக்கப்படுகின்றன

புகைப்படம் - டேவிட் விண்டர்ஸ்

ஆசீர்வாதங்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன

ஆசாரியத்துவ ஆசீர்வாதம் கைகளை வைப்பதன் மூலம் வழங்கப்படுகிறது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர் ஆசீர்வாதத்தைப் பெறுபவரின் தலையில் கைகளை வைக்கிறார். பிறகு ஆவிக்குரிய நடத்துதலின்படி ஆசீர்வாதம் வழங்குகிறார். ஆசீர்வாதங்களை வழங்குபவர்களும் அவற்றைப் பெறுபவர்களும் தேவன் மீது விசுவாசத்தை பிரயோகித்து அவருடைய சித்தம் மற்றும் நேரத்தை நம்புகிறார்கள்.

பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுதல் மற்றும் ஆசீர்வாதம் அளித்தல்

குழந்தை பிறந்த பிறகு, ஆசாரியத்துவத்தைத் தருப்பித்திருப்பவர் அவன் அல்லது அவளுக்கு ஒரு பெயரையும் ஆசீர்வாதத்தையும் கொடுக்கிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:70 பார்க்கவும்). இது பொதுவாக ஒரு உபவாச மற்றும் சாட்சி கூட்டத்தில் நடக்கும். குழந்தைக்கு முதலில் ஒரு பெயர் சூட்டப்படும் பின்னர் ஆசாரியத்துவத்தைத் தருப்பித்திருப்பவர் குழந்தைக்கு ஆசீர்வாதம் வழங்குகிறார்.

நோய்வாய்ப்பட்ட சிறுவன் ஆசாரியத்துவ ஆசீர்வாதத்தைப் பெறுகிறான்

புகைப்படம் - வெல்டன் சி. ஆண்டர்சன்

நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஆசீர்வாதம்

மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தருப்பித்திருப்பவர்கள் நோய்வாய்ப்பட்ட ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கலாம். இந்த வகையான ஆசீர்வாதம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: எண்ணெய் அபிஷேகம் மற்றும் அபிஷேகத்தை முத்திரித்தல். முதலில், ஆசாரியத்துவத்தைத் தருப்பித்திருப்பவர், பிரதிஷ்டை செய்யப்பட்ட அல்லது ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு துளி ஒலிவ எண்ணெயை அந்த நபரின் தலையில் வைத்து, ஒரு சிறிய ஜெபத்தை ஏறெடுக்கிறார் பின்னர் ஆசாரியத்துவத்தைத் தருப்பித்திருக்கும் மற்றொருவர் அபிஷேகத்தை முத்திரையிட்டு, பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டு நபருக்கு ஒரு ஆசீர்வாதத்தை அளிக்கிறார்.

ஆறுதல் மற்றும் ஆலோசனையின் ஆசீர்வாதங்கள்

மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தருப்பித்திருப்பவர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கும், தங்களை வேண்டிக்கொள்ளும் மற்றவர்களுக்கும் ஆறுதல் மற்றும் ஆலோசனையின் ஆசீர்வாதங்களை வழங்க முடியும். மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் பெற்ற ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுக்கு தந்தையின் ஆசீர்வாதங்களை வழங்க முடியும். பிள்ளைகள் சிறப்பு சவால்களை எதிர்கொள்ளும் போது இவை குறிப்பாக உதவியாக இருக்கும்.

அழைப்புகளில் சேவை செய்ய உறுப்பினர்களை தெரிந்தெடுத்தல்

சபை உறுப்பினர்கள் அழைப்புகளைப் பெறும்போது, ​​​​அவர்கள் சேவை செய்ய நியமிக்கப்படும் போது அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது. ஒரு ஆசாரியத்துவத் தலைவர் அவர்களை அழைப்பில் செயல்படும் அதிகாரத்துடன் ஆசீர்வதிக்கிறார். ஆசாரியத்துவத் தலைவர் அவர்களின் சேவையில் அவர்களுக்கு உதவ ஒரு ஆசீர்வாதத்தையும் கொடுக்கிறார்

பெண் தன் கோத்திரப் பிதா ஆசீர்வாதத்தைப் படிக்கிறாள்

புகைப்படம் — ஷௌனா ஸ்டீபன்சன்

கோத்திரப் பிதா ஆசீர்வாதங்கள்

ஒவ்வொரு விசுவாசமிக்க அங்கத்தினரும் கோத்திரப் பிதா ஆசீர்வாதத்தை கோரலாம். இந்த ஆசீர்வாதம் கர்த்தரிடமிருந்து தனிப்பட்ட ஆலோசனையை அளிக்கிறது. இது ஒரு நபரின் வாழ்நாள் முழுவதும் வழிகாட்டுதலையும் ஆறுதலையும் அளிக்கும். இஸ்ரவேல் வம்சத்திலுள்ள நபரின் வம்சாவளியையும் அது சொல்கிறது. இந்த மாதிரியான ஆசீர்வாதத்தை நியமிக்கப்பட்ட கோத்திரப் பிதா மட்டுமே கொடுக்க முடியும்.