2023
குடும்பங்கள் நித்தியத்திற்குமானவை
ஜனுவரி 2023


“குடும்பங்கள் நித்தியத்திற்குமானவை,” லியஹோனா ஜனுவரி 2023.

லியஹோனா மாதாந்தர செய்தி, ஜனுவரி 2023

குடும்பங்கள் நித்தியத்திற்குமானவை

புன்னகைக்கும் குடும்பம்

சமூகம் மற்றும் சபையின் அடிப்படை அங்கம் குடும்பம். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர்கள் குடும்பங்கள் நித்தியமாக இருக்க முடியும் என்று நம்புகிறார்கள். பூமியில் நமது குடும்பங்களை வலுப்படுத்த நாம் பணியாற்றுகிறோம் நித்திய குடும்பத்தின் ஆசீர்வாதத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கையும் நமக்கு உள்ளது.

தேவனின் குடும்பம்

சகல ஜனங்களும் பரலோக பெற்றோரின் ஆவி குமாரர்கள் அல்லது குமாரத்திகள். நாம் அனைவரும் தேவனுடைய குடும்பத்தின் அங்கத்தினர் நம் அனைவருக்கும்தெய்வீக இயல்பு மற்றும் இலக்கு உள்ளது நாம் நீதியுள்ளவர்களாக வாழ்ந்தால், பரலோக பிதாவின் ஒரு பகுதியாக என்றென்றும் வாழ அவரிடத்தில் திரும்பலாம்.

ஆலயத்திற்கு வெளியே புதிதாக திருமணமான தம்பதிகள்

திருமண புகைப்படம் - ஜோசப் கலுபா

நித்திய குடும்பங்கள்

ஒரு ஆணும் பெண்ணும் ஆலயத்தில் முத்திரிக்கப்பட்டு தங்களுடைய உடன்படிக்கைகளை அவர்கள் கைக்கொள்ளும்போது அவர்கள் திருமணம் நித்தியத்திற்குமாய் நீடிக்கும். இந்த ஆலய நியமம் முத்திரித்தல் என அழைக்கப்படுகிறது. தங்களுடைய பெற்றோர் முத்திரையிடப்பட்ட பிறகு பிறக்கும் பிள்ளைகள் அந்த உடன்படிக்கையில் பிறக்கின்றனர். தங்களுடைய பெற்றோர் முத்திரிப்பதற்கு முன் பிறந்த பிள்ளைகள் என்றென்றும் குடும்பமாக இருக்க முடியும்படியாக ஆலயத்தில் பெற்றோர்களுடன் முத்திரிக்கப்படலாம். சபை உறுப்பினர்கள் எல்லா தலைமுறைகளிலும் தங்கள் குடும்பங்களை ஒன்றாக முத்திரிக்க முடியும்படியாக, ஆலய மற்றும் குடும்ப வரலாறு பணியை மேற்கொள்கிறார்கள். இயேசு கிறிஸ்து மற்றும் அவரது பாவ நிவர்த்தியின் மூலம் ஒரு நித்திய குடும்பத்தின் ஆசீர்வாதம் சாத்தியமாக்கப்படுகிறது.

திருமணம்

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான திருமணம் தேவனால் நியமிக்கப்பட்டது. கணவன்களும் மனைவிகளும் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாகவும் தங்கள் திருமண உடன்படிக்கைகளில் உண்மையுள்ளவர்களாகவும் இருக்க இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் கற்றுக்கொடுக்கிறது. எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் அவர்கள் உண்மையாக இருக்க வேண்டும் திருமணம் என்பது ஒரு சம பங்கானதாகும், வாழ்க்கைத் துணைவர்கள் ஒருவரையொருவர் ஊக்குவிக்கவும், ஆறுதலடையவும், உதவவும் வேண்டும்.

கைக்குழந்தையுடன் பெற்றோர்

பெற்றோர் மற்றும் குழந்தைகள்

குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும்படி ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தேவன் கட்டளையிட்டார். இந்த கட்டளை இன்னும் நடைமுறையில் இருப்பதாக சபை தலைவர்கள் போதித்துள்ளனர். தாய்மார்களும் தகப்பன்மார்களும் தங்கள் குழந்தைகளை அன்பிலும் நீதியிலும் வளர்க்க ஒன்றாக வேலை செய்கிறார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68: 25– 28 பார்க்கவும்). பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதற்கும் மரியாதை செய்வதற்கும் கற்பிக்கப்படுகிறார்கள் (யாத்திராகமம் 20:12 பார்க்கவும்).

கற்பித்தல் மற்றும் கற்றுக்கொள்ளுதல்

தேவனை நேசிக்கவும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கிறார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியை உணரவும், பொறுமை மற்றும் தன்னலமற்ற தன்மையைக் கற்றுக்கொள்ளவும் நமக்கு வாய்ப்புகளைத் தருகிறது. இந்த குணாதிசயங்கள் நாம் தேவனைப் போல் ஆகவும், குடும்பங்களாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழவும் நம்மை தயார்படுத்த உதவுகின்றன.

குடும்பங்களை பலப்படுத்துதல்.

வெற்றிகரமான குடும்பத்தை உருவாக்க உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பொறுமை தேவை. விசுவாசம், ஜெபம், மன்னிப்பு, அன்பு, உழைப்பு மற்றும் நல்ல பொழுது போக்கு போன்ற சுவிசேஷக் கோட்பாடுகள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காண நமக்கு உதவும். நம் குடும்பங்களை எவ்வாறு பலப்படுத்துவது என்பதை அறிய தனிப்பட்ட .வெளிப்பாட்டையும் நாம் பெறலாம்

இயேசு கிறிஸ்துவின் சித்திரம்

கிறிஸ்துவின் உருவம் – ஹெய்ன்ரிச் ஹோப்மான்

ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்கிறது

இங்கே பூமியில் ஒரு சிறந்த குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்க அனைவருக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவரும் நித்திய குடும்பத்தின் அனைத்து ஆசீர்வாதங்களையும் பெறுவார்கள் என்று தேவன் வாக்குறுதி அளித்துள்ளார். நாம் அவரை நம்பலாம் மற்றும் அவருடைய காலத்திற்காக விசுவாசம் வைக்கலாம்.