ஊழியம் செய்தலின் கொள்கைகள், ஆகஸ்ட் 2019
ஒருவரின் மாற்றத்திற்கு என்னால் உதவமுடியுமா?
ஆம். ஆனால் உங்கள் பங்கு நீங்கள் நினைத்ததைவிட வித்தியாசமானதாயிருக்கலாம்.
மாறுவதற்கான திறமையுடன் நாம் சிருஷ்டிக்கப்பட்டோம். நமது தெய்வீகத் திறமையை நோக்கி வளருவதே நமது அநித்திய அனுபவத்தின் நோக்கம். கிறிஸ்துவண்டை வரவும், அவருடைய பிரசன்னத்திற்கு திரும்ப அவசியமான மாற்றங்களை உண்டாக்கவும் மற்றவர்களுக்கு உதவுவதே, ஊழியத்தில் நமது இறுதியான இலக்குகளில் ஒன்று. ஆனால் அவர்களுடைய சுயாதீனத்தினிமித்தம் கிறிஸ்துவைப்போலாக மாறுவதற்கு அவர்களுக்குதவுவதில் நமது பங்கு குறைவாக இருக்கிறது.
மாறுவதற்கும் அவரைப் போலாகுவதற்கும் அவர்களுடைய முயற்சிகளில் எவ்வாறு நம்மால் மற்றவர்களுக்கு உதவமுடியுமென்பதில் இரட்சகரிடமிருந்து இங்கே ஏழு ஆற்றல்மிக்க பாடங்கள் உள்ளன.
-
மாறுமாறு அழைக்க பயப்படாதிருங்கள்.
பழைய வழிகளை பின்தள்ளவும், அவருடைய போதனைகளைத் தழுவவும் மற்றவர்களை அழைக்க இரட்சகர் பயப்படவில்லை. அவர்களுடைய தொழில்களை விட்டுவிட்டு “மனுஷர்களைப் பிடிக்க” பேதுருவையும் யாக்கோபுவையும் அவர் அழைத்தார்.(மாற்கு 1:17). விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட ஸ்திரீயை அவர் அழைத்து, “போ, இனி பாவஞ்செய்யாதே என்றார்” (யோவான் 8:11). உலகப் பிரகாரமான காரியங்களில் அவனுக்குள்ள பற்றை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றிவர வாலிப ஆஸ்திமானை அவர் அழைத்தார் (மாற்கு 10:17-22 பார்க்கவும்). மாற்றங்களை உண்டாக்கவும், இரட்சகரைப் பின்பற்றவும் மற்றவர்களை நாம் அழைக்கும்போது, நாமும்கூட தைரியமாகவும் அன்புடனுமிருக்க முடியும்.
-
மாறுவது அவர்களுடைய தேர்ந்தெடுப்பு என்பதை நினைவில் வைத்திருங்கள்.
இரட்சகர் அழைக்கிற மாறும் விதத்தில் கட்டாயப்படுத்த முடியாது. இரட்சகர் போதித்தார், அழைத்தார் ஆனால் கட்டாயப்படுத்தவில்லை. வாலிப ஆஸ்திமான் “துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்” (மத்தேயு 19:22) கப்பர்நகூமில் அவருடைய அநேக சீஷர்கள் “பின்வாங்கிப்போக” முடிவெடுத்தார்கள், அவர் பன்னிருவரை நோக்கி, நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களா என்றார்.(யோவான் 6:66-67 பார்க்கவும்). யோவான் ஸ்நானனைப் பின்பற்றியவர்களில் சிலர் இரட்சகரைப் பின்பற்ற முடிவெடுத்தார்கள், மற்றவர்கள் பின்பற்றவில்லை (யோவான் 1:35-37;10:40-42 பார்க்கவும்). அவரைப் போலாகுவதற்கு நாம் மற்றவர்களை அழைக்கலாம், ஆனால் அவர்களின் மாற்றத்திற்காக நாம் தீர்மானத்தை எடுக்கமுடியாது. மாறுவதற்கு அவர்கள் இன்னமும் தெரிந்துகொள்ளவில்லையெனில், நாம் கைவிடவும்கூடாது, அல்லது நாம் தோற்றுவிட்டதாக உணரவும்கூடாது.
-
மாறுவதற்கான மற்றவர்களின் திறமைக்காக ஜெபியுங்கள்.
அவருடைய சீஷர்கள் தீமையிலிருந்து தள்ளி இருக்கவேண்டும், அவரைப்போலவும் பிதாவைப் போலவுமிருக்கவேண்டும், தேவனுடைய அன்பினால் நிறைந்திருக்கவேண்டுமென அவருடைய பரிந்து பேசும் ஜெபத்தின்போது தேவனிடம் இயேசு கேட்டார்(யோவான் 17:11, 21-23, 26 பார்க்கவும்) அவனுடைய பாத்திரத்தில் வளர அவனுடைய முயற்சிகளில் பேதுருவுக்கு பெலன் தேவையாயிருக்கும் என்றறிந்து, அவனுக்காக இரட்சகர் ஜெபித்தார் (லூக்கா 22:32 பார்க்கவும்). மற்றவர்களுக்கான நமது ஜெபங்கள் ஒரு வித்தியாசத்தை உண்டுபண்ணும் (யாக்கோபு 5:16 பார்க்கவும்).
-
அவருடைய வல்லமையை சார்ந்திருக்க அவர்களுக்கு போதியுங்கள்.
நம் எல்லோரிடமுமிருக்கிற தெய்வீகத் திறமையை நோக்கி நாம் உண்மையில் மாறவும் வளரவும் இரட்சகர் மூலமாக மட்டுமே முடியும். அவரே “வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறார் [அவராலே] அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6). அவருடைய வல்லமையே “பெலவீனமுள்ளவைகளை பெலமுள்ளவைகளாக்கும்” ( ஏத்தேர் 12:27). அவருடைய பாவநிவர்த்தியின் வல்லமையினிமித்தமே ஆல்மா இளையவன் மாறுவது சாத்தியமானது (ஆல்மா 36:16-23 பார்க்கவும்). தங்களுடைய வாழ்க்கையிலும் அவருடைய சுத்திகரிப்பின் வல்லமை அவர்களுக்கிருக்கும்படியாக இரட்சகரை சார்ந்திருக்க மற்றவர்களுக்கு நாம் போதிக்கலாம்.
-
அவர்களால் மாறமுடியும் என்பது போலவே அவர்களை நடத்துங்கள்.
அன்பும் ஏற்றுக்கொள்ளுதலும் மாற்றத்தின் ஆற்றல்மிக்க பிரதிநிதிகள். கிணற்றடியிலிருந்த ஸ்திரீ அவளுடைய கணவனாயில்லாத ஒரு மனிதனுடன் வாழ்ந்துவந்தாள். இயேசுவின் சீஷர்கள், “அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள்” (யோவான் 4:27 ) ஆனால், அவள் யாராக மாறமுடியுமென்பதைப்பற்றி இயேசு அக்கறைப்பட்டார். அவர் அவளுக்குப் போதித்து, மாறுவதற்கு அவளுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுத்தார், அவள் மாறினாள். (யோவான் 4:4-2 பார்க்கவும்.)
அவர்களால் மாறமுடியுமென்பதைவிட அவர்கள் இருந்தபடியே நாம் மற்றவர்களை நடத்தும்போது அவர்களைத் தக்கவைக்கமுடியும். மாறாக, கடந்தகால தவறுகளை மன்னித்து மறக்கலாம். மற்றவர்கள் மாறுவார்கள் என நாம் நம்பலாம். பெலவீனத்தை நாம் கவனிக்காமல் அவர்களில் அவர்களால் பார்க்கமுடியாத நேர்மறையான பண்புகளை சுட்டிக்காட்டவும். ”அவர்களிருப்பதைப் போலல்லாமல், மாறாக அவர்களால் எப்படி மாறமுடியுமென தனிப்பட்டவர்களைப் பார்க்க நமக்கு பொறுப்பிருக்கிறது”.1
-
அவர்கள் அவர்களுடைய வேகத்தில் செல்லட்டும்
மாற்றத்திற்கு நேரம் பிடிக்கும். நாம் அனைவரும் “பரிபூரணப்படும்வரை பொறுமையில் தொடர்ந்திருக்கவேண்டும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 67:13). மற்றவர்களுடன் இயேசு பொறுமையாயிருந்து, அவருடைய பிதாவால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தைப்பற்றி சாட்சியளித்து அவரை எதிர்த்தவர்களுக்கும்கூட, போதித்து, அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்து அவர் தொடர்ந்தார் (மத்தேயு 12:1-13; யோவான் 7:28,29 பார்க்கவும்). மற்றவர்களுடன் பொறுமையாயிருக்கவும், தங்களுடனேயே பொறுமையாயிருக்கவும் அவர்களை ஊக்குவிக்க நம்மால் முடியும்.
-
அவர்கள் பழைய வழிகளுக்குத் திரும்பினால் விட்டுவிடாதீர்கள்.
கிறிஸ்து மரித்த பின்பு பேதுருவும் சில பிற அப்போஸ்தலர்களும் அவர்களுக்குத் தெரிந்திருந்த தொழிலுக்குத் திரும்பினர் (யோவான் 21:3 பார்க்கவும் ). அவருடைய ஆட்டுக்குட்டிகளை அவன் மேய்க்கவேண்டுமென பேதுருவுக்கு கிறிஸ்து நினைவூட்டினார், (யோவான் 21:15-17) பேதுரு ஊழியத்திற்குத் திரும்பினான். முன்னாள் வழிகளுக்குத் திரும்புவது மிக எளிதாயிருக்கலாம். மென்மையான ஊக்கத்துடனும், இரட்சகரைத் தொடர்ந்து பின்பற்றவும் அவரைப்போலாக முயற்சிக்கவும் உணர்த்துதலான அழைப்புகளுடனும் நாம் தொடர்ந்து ஆதரவளிக்கலாம்.
மற்றவர்கள் வளர அனுமதியுங்கள்.
மற்றவர்கள் வளர அனுமதிப்பதைப்பற்றி இந்தக் கதையை பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் மூப்பர் ஜெப்ரி ஆர்.ஹாலன்ட் கூறுகிறார்: “அநேக ஆண்டுகளாக அவனுடைய பள்ளியில், ஏறக்குறைய எல்லா நகைச்சுவையும் அவனைப்பற்றியே இருந்த, ஒரு வாலிபனைப்பற்றி என்னிடம் கூறினார்கள். அவனிடம் சில குறைபாடுகளிருந்தன, அவனைக் கேலி செய்ய அவனுடைய கூட்டாளிகளுக்கு அது எளிதாயிருந்தது. பின்னர் அவனுடைய வாழ்க்கையில் அவன் அங்கிருந்து நகர்ந்தான். இறுதியாக அவன் இராணுவத்தில் சேர்ந்து அங்கே மேற்கல்வி கற்கும் சில வெற்றிகரமான அனுபவங்களைப் பெற்று அவனுடைய கடந்தகாலத்திலிருந்து வெளியே வந்தான். எல்லாவற்றிற்கும் மேலாக. இராணுவத்தில் அநேகர் செய்வதைப்போல சபையின் அழகையும் மகத்துவத்தையும் அவன் கண்டுபிடித்து, அதில் ஈடுபாடுள்ளவனவாகி, சந்தோஷப்பட்டான்.
பின்னர், அநேக ஆண்டுகளுக்குப்பின் வாலிப வயதில் வசித்த பட்டணத்திற்குத் திரும்பி வந்தான். எல்லோரும் அல்ல, ஆனால் அவனுடைய தலைமுறையிலுள்ள அநேகர் அங்கிருந்து போயிருந்தனர். மிக சாதித்தவனாக, மறுபிறவி எடுத்தவனாக அவன் திரும்பி வந்தபோது, அவன் திரும்பி வருவதற்காக காத்திருந்த அவனுக்குள்ளிருந்த அதே பழைய மனநிலை இன்னமும் இருந்தது. அவனுடைய பட்டணத்திலுள்ள மக்களுக்கு அவன் இன்னமும் பழைய மனிதனாகவே இருந்தான்.
அவனுடைய வாலிபத்தில் அவன் வாழ்ந்த வழியில், அவனுக்குப் பின்னாலிருந்த அதை விட்டுவிட இந்த மனிதனின் சிறிது சிறிதான பவுலின் முயற்சியும், தேவன் அவனுக்கு முன்னால் வைத்திருந்த பரிசைப் பற்றிக்கொள்ளுதலும் அவன் மரிக்கும்வரை, கொஞ்சங்கொஞ்சமாய் மங்கிப்போனது. அவனுடைய கடந்த காலம் அவனுடைய வருங்காலத்தைவிட சுவராஸ்யமானதென நினைத்தவர்களால் மீண்டும் அவன் சூழப்பட்டவனாயிருந்தது மிகவும் மோசமாகவும் துக்ககரமானதாகவுமிருந்தது. கிறிஸ்து அவனை பற்றிப்பிடித்திருந்த அந்தப் பிடிப்பை அவர்களால் கிழித்தெறிய முடிந்தது. அவனுடைய தவறு சிறிதாக இருந்தாலும் அதன் மூலமாக அவன் துக்ககரமாக மரித்தான்.
“ஜனங்கள் மனந்திரும்பட்டும் ஜனங்கள் வளரட்டும். ஜனங்கள் மாறி முன்னேற முடியுமென நம்புங்கள்”2
© 2019 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.ஐ. நாடுகளில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/18 மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/18 Ministering Principles, August 2019 மொழிபெயர்ப்பு. Tamil. 15769 418
© Harry Anderson/The Woman Taken in Adultery/licensed by GoodSalt.com; Living Water, by Simon Dewey; detail from Lovest Thou Me More Than These? by David Lindsley