2010–2019
தேவனைச் சந்திக்க ஆயத்தப்படுங்கள்
ஏப்ரல் 2018


15:5

தேவனைச் சந்திக்க ஆயத்தப்படுங்கள்

நீதியிலும், ஒற்றுமையிலும், சமத்துவத்திலும் தெய்வீகத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்புகளில் முயற்சி செய்வது தேவனை சந்திக்க நம்மை ஆயத்தப்படுத்தும்.

எலைசா ஆர். ஸ்நோ, அவர் கலந்துகொண்ட கர்த்லாந்து ஆலய பிரதிஷ்டையைப்பற்றி பேசும்போது, சொன்னார்: “பிரதிஷ்டை சடங்குகள் திரும்பவும் செய்யப்படலாம், ஆனால் அந்த நினைவுகூரத்தக்க நாளின் பரலோக தெய்வீக வெளிப்படுதல்களை உலகத்தின் எந்த மொழியாலும் விவரிக்க முடியாது. சிலருக்கு தூதர்கள் தரிசனமானார்கள், வந்திருந்த அனைவராலும் தெய்வீக பிரசன்னத்தின் உணர்வு உணரப்பட்டது. ஒவ்வொரு இருதயமும் சொல்ல முடியாத சந்தோஷத்தால் நிரப்பப்பட்டது, மகிமை நிறைந்திருந்தது.” 1

கர்த்லாந்து ஆலயத்தில் நிகழ்ந்த தெயவீக வெளிப்பாடுகள் நமது பரலோக பிதாவின் பிள்ளைகளுக்கு இரட்சிப்பையும் மேன்மைப்படுதலையும் கொண்டுவருகிற இயேசு கிறிஸ்துவின் சபையின் மறுஸ்தாபிதத்தின் நோக்கங்களுக்கு அஸ்திவாரமாக இருந்தது. 2 நாம் தேவனை சந்திக்க ஆயத்தப்படும்போது, கர்த்லாந்து ஆலயத்தில் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட பரிசுத்த திறவுகோல்களை பரிசீலனை செய்து, தெய்வீகத்தால் நியமிக்கப்பட்ட நமது பொறுப்புகள் என்ன என அறியலாம்.

பிரதிஷ்டை ஜெபத்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித், தாழ்மையாக கர்த்தரிடம் விண்ணப்பித்தார், “கட்டுமாறு நீர் கட்டளையிட்ட இந்த வீட்டை ஏற்றுக்கொள்ளும்.” 3

ஒரு வாரத்துக்குப் பிறகு, ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையில், ஒரு மகத்தான தரிசனத்தில் கர்த்தர் தோன்றி தன் ஆலயத்தை ஏற்றுக்கொண்டார். இந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கிட்டத்தட்ட சரியாக 182 வருடங்களுக்கு முன்பு, ஏப்ரல் 3, 1836ல் இது நடந்தது. அது பஸ்கா காலமாகவும் இருந்தது, ஈஸ்டரும் பஸ்காவும் சேர்ந்து வருகிற அரிய நேரங்கள் அவை. தரிசனம் முடிந்தபோது, மூன்று பூர்வ கால தீர்க்கதரிசிகள், மோசேவும், எலியாஸும், எலியாவும் தோன்றி, இந்த ஊழியக்காலத்தில், தன் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபைக்காக கர்த்தரின் நோக்கத்தை அடைய கொடுக்கப்பட்ட திறவுகோல்கள் முக்கியமானவை. அந்த நோக்கம் எளிமையாக, ஆனால் விரிவாக, இஸ்ரவேலின் கூடுகையையும், அவர்களை குடும்பங்களாக முத்திரித்தலையும், கர்த்தரின் இரண்டாம் வருகைக்காக உலகை ஆயத்தப்படுத்துவதையும் விளக்குகிறது. 4

எலியாவும் மோசேவும் சேர்ந்து தோன்றியது, ‘“காலத்தின் முடிவில் மோசேவும் எலியாவும் ஒன்றாக வருவது ‘யூத பாரம்பரியத்துக்கு சரியான இணையாக இருக்கிறது.”’ 5 நமது கோட்பாட்டில், கொடுக்கப்பட்ட முக்கிய திறவுகோல்களின் அஸ்திவாரமான மறுஸ்தாபிதத்தை, “கடைசி நாட்களுக்காகவும், கடைசி காலத்துக்காகவும் இந்த தரிசனம் நிறைவேற்றியது, அதில் காலங்களின் நிறைவேறுதலின் ஊழியக்காலம் இருக்கிறது.” 6

கர்த்லாந்து ஆலயம் இருப்பிடத்திலும் தரத்திலும் ஒப்பீட்டில் மங்கலானது. ஆனால் மனுக்குலத்துக்கு அதன் ஏராளமான முக்கியத்துவ நோக்கில், நித்தியத்தை வடிவமைப்பதாகும். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் நித்திய இரட்சிப்பின் நியமங்களுக்காக பூர்வகால தீர்க்கதரிசிகள் ஆசாரியத்துவ திறவுகோல்களை மறுஸ்தாபிதம் செய்தார்கள். இது விசுவாசமிக்க அங்கத்தினர்களுக்கு அபரிமிதமான சந்தோஷத்தில் முடிந்தது.

சபையின் பிரதான நோக்கங்களை கொண்டிருக்கிற தெய்வீகத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்புக்களுக்காக இந்த திறவுகோல்கள் “உன்னதத்திலிருந்து வல்லமை” 7 அளிக்கிறது. 8 கர்த்லாந்து ஆலயத்தில் அந்த அற்புதமான ஈஸ்டர் நாளில் மூன்று திறவுகோல்கள் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டன.

முதலில் மோசே தோன்றி பூமியின் நான்கு பாகங்களிலிருந்தும் இஸ்ரவேலின் கூடுகைக்கான திறவுகோல்களைக் கொடுத்தான், அதுவே ஊழியப் பணி. 9

இரண்டாவது, ஆபிரகாமின் உடன்படிக்கையின் மறுஸ்தாபிதம் உள்ளிட்ட, ஆபிரகாமின் சுவிசேஷத்தின் ஊழியக்காலத்தின் திறவுகோல்களை எலியா தோன்றி கொடுத்தான். 10 உடன்படிக்கையின் திறவுகோல்களின் நோக்கம் தேவ இராஜ்யத்துக்கு அங்கத்தினர்களை ஆயத்தம் செய்வதே என தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார். அவர் சொன்னார், நாம் யார் என நாம் அறிவோம், “நம்மிடம் தேவன் என்ன எதிர்பார்க்கிறார் என நாம் அறிவோம்.” 11

மூன்றாவதாக, எலியா தோன்றி இந்த ஊழியக்காலத்தில் முத்திரிக்கும் வல்லமையின் திறவுகோல்களைக் கொடுத்தான், அதுவே, உயிரோடிருப்போருக்கும் மரித்தோருக்கும் இரட்சிப்பை சாத்தியப்படுத்துகிற குடும்ப வரலாற்றுப் பணி மற்றும் ஆலய நியமங்கள். 12

கர்த்லாந்து ஆலயத்தில் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட திறவுகோல்களின் அடிப்படையில், இந்த தெய்வீகமாக நியமிக்கப்பட்ட பொறுப்புக்களை மேற்பார்வையிட பிரதான தலைமை மற்றும் பன்னிருவர் குழுமத்தின் வழிகாட்டலின் கீழ் சபைத் தலைமையகத்தில் மூன்று செயற்குழுக்கள் உள்ளன. அவை, ஊழிய செயல் ஆலோசனைக்குழு, ஆசாரியத்துவம் மற்றும் குடும்ப செயல் ஆலோசனைக்குழு, ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்று செயல் ஆலோசனைக்குழு.

இந்த தெய்வீகமாக நியமிக்கப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் நாம் இன்று எங்கு இருக்கிறோம்?

முதலாவதாக, இஸ்ரவேலின் கூடுகைக்கான மோசேவின் திறவுகோல்களின் மறுஸ்தாபிதத்துக்கு ஏற்ப அவரது தெரிந்து கொள்ளப்பட்டவர்களை கூட்டிச்சேர்க்க அவரது சுவிசேஷத்தை உலகம் முழுவதற்கும் பரப்ப இன்று கிட்டத்தட்ட 70,000 ஊழியக்காரர்கள் பரந்து காணப்படுகிறார்கள். புற ஜாதியாருக்கும் இஸ்ரவேல் வீட்டாருக்கும் மத்தியிலே, நெப்பி கண்ட மாபெரும் அற்புதமான பணியின் நிறைவேறுதலின் தொடக்கத்தின் துவக்கமாகும். பூமி முழுவதும் தேவனின் பரிசுத்தர்கள் இருக்கிற நமது காலத்தை நெப்பி பார்த்தான், ஆனால் துன்மார்க்கத்தினிமித்தம் அவர்களது எண்ணிக்கை சிறிதாக இருக்கும். எனினும் அவர்கள் “நீதியினாலும், மகா மகிமையில் இருக்கிற தேவனுடைய வல்லமையினாலும் ஆயுதந்தரித்தவர்களாயிருந்தனர்,” என்பதை அவன் முன்பே பார்த்தான்13. மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் சுருக்கமான வரலாற்றில் பார்க்கும்போது, ஊழிய முயற்சி விசேஷித்ததாயிருந்திருக்கிறது. நெப்பியின் தரிசனம் நிறைவேறுவதை நாம் பாரக்கிறோம். ஒப்பீட்டில் நமது எண்ணிக்கை குறைவாயிருந்தாலும், நாம் நமது முயற்சியைத் தொடர்ந்து, இரட்சகரின் செய்திக்கு பதிலளிப்போரிடம் செல்வோம்.

இரண்டாவதாக, எலியாஸ் தோன்றி நாமும் நமக்குப் பின்னுள்ள நமது சந்ததியும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என அறிவித்து ஆபிரகாமின் சுவிசேஷத்தின் ஊழியக்காலத்தைக் கொடுத்தான். இந்த மாநாட்டில், பரிசுத்தவான்களை பூரணப்படுத்தவும், தேவ இராஜ்யத்துக்கு அவர்களை ஆயத்தம் செய்யவும் உதவ விசேஷித்த வழிநடத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 14 மூப்பர்கள் மற்றும் பிரதான ஆசாரியத்துவக் குழுமங்கள் பற்றி ஆசாரியத்துவ கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது, ஆசாரியத்துவ வல்லமையையும் அதிகாரத்தையும் கட்டவிழ்க்கும். வீட்டு மற்றும் விசாரிப்பு போதகமாகிய, இப்போது ஊழியம் செய்தலாகியிருப்பது, இக்கூட்டத்தில் விரிவாகப் போதிக்கப்பட்டது போல, பிற்காலப் பரிசுத்தவான்களை தேவனை சந்திக்க ஆயத்தப்படுத்தும்.

மூன்றாவது, இந்த ஊழியக்காலத்தின் முத்திரிக்கும் திறவுகோல்களை எலியா கொடுத்தான். இச்சமயத்தில் உயிரோடிருக்கும் நமக்கு, ஆலயங்கள் அதிகரித்திருப்பதும், குடும்ப வரலாற்று பணியும் அதிசயமாகும். இந்த வேகம் தொடரும், இரட்சகரின் இரண்டாம் வருகை வரை வேகமெடுக்கும், இல்லையேல் பூமி முழுவதும் “அவரது வருகையில் முற்றிலுமாக வீணடிக்கப்படும்.” 15

பரலோகத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட தொழில்நுட்பத்துடன், குடும்ப வரலாற்றுப் பணி கடந்த சில வருடங்களில் வேகமாக அதிகரித்திருக்கிறது. இந்த தெய்வீகத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பைப்பற்றி நாம் சோம்பியிருப்பது மற்றும் ஜேன் அத்தை அல்லது யாராவது ஒப்புக்கொடுத்தலுள்ள உறவினர் அதைப்பார்த்துக் கொள்வார் என்றிருப்பது ஞானமல்ல, தலைவர் ஜோசப் பீல்டிங் ஸ்மித்தின் உரத்த வார்த்தைகளை நான் பகிர்ந்து கொள்கிறேன். “இந்த மாபெரும் கடமையிலிருந்து யாரும் விலக்களிக்கப்படவில்லை. அப்போஸ்தலரிடமும் அல்லது தாழ்மையான மூப்பரிடமும் [அல்லது சகோதரியிடமும்] இது எதிர்பார்க்கப்படுகிறது. இடம் அல்லது சிறப்பு, அல்லது சபையில், நீண்ட சேவை, செய்தாலும், மரித்தோரின் இரட்சிப்பை உதாசீனம் பண்ணுவதற்கு அனுமதி கிடையாது.” 16

இப்போது நமக்கு உலகம் முழுவதிலும் ஆலயங்கள் இருக்கின்றன, ஆலயத்திலிருந்து தூரத்திலிருக்கும் தேவைப்படுவோருக்கு உதவ புரவலர் உதவி நிதி இருக்கிறது.

தனிநபர்களாக ஊழியமப் பணி, ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்றுப் பணி மற்றும் தேவனைச் சந்திக்க ஆயத்தங்களில் வேலையில் நமது முயற்சியை மதிப்பிட நாம் நன்கு செயலாற்றுவோம்.

நீதி, ஒற்றுமை, மற்றும் கர்த்தருக்கு முன் சமத்துவம் இந்த பரிசுத்த பொறுப்புகளுக்கு வலிமையளிக்கும்.

நீதியைப் பொருத்தமட்டில் தேவனைச் சந்திக்க ஆயத்தப்பட நம்மனைவருக்கும் இந்த வாழ்க்கையில் இதுவே நேரம். 17 தேவ கட்டளைகளைக் கைக்கொள்ள தனிநபர்கள் அல்லது குழுக்கள் தவறும்போது, சோக விளைவுகளின் பல உதாரணங்களை மார்மன் புஸ்தகம் கொடுக்கிறது. 18

என் வாழ்நாளில் உலகத்தின் பிரச்சினைகளும் அக்கறைகளும் ஒரு எல்லையிலிருந்து மற்றொன்றுக்கு —சிறுமையான அற்ப முயற்சிகளிலிருந்து கடுமையான ஒழுக்கமின்மைக்கு நகர்ந்திருக்கிறது. ஒப்புதலற்ற ஒழுக்கமின்மை வெளிக்கொணரப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பது போற்றுதலுக்குரியது. 19 அப்படிப்பட்ட ஒப்புதலற்ற ஒழுக்கமின்மை தேவனின் மற்றும் சமூகத்தின் சட்டங்களுக்கு எதிரானது. தேவனின் திட்டத்தை புரிந்து கொள்கிறவர்கள், பாவமாயுமிருக்கிற ஒப்புதலுடைய ஒழுக்கமின்மையை எதிர்க்க வேண்டும். உலகத்துக்கு ஒரு பிரகடனம் எச்சரிக்கிறது, “கற்புடைமை உடன்படிக்கையை மீறுகிறவர்கள், தங்கள் துணையையோ அல்லது பிள்ளைகளையோ துர்ப்பிரயோகம் செய்பவர்கள் அல்லது குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றத் தவறுகிறவர்கள் [அல்லது அதைப்பொருத்தமட்டில் யாராயிருந்தாலும்] ஒரு நாள் தேவனுக்கு முன்பு கணக்குக் கொடுக்க வேண்டும்.” 20

நாம் சுற்றிலும் பார்க்கும்போது, எல்லா இடங்களிலும் துன்மார்க்கம் மற்றும் அடிமைத்தனத்தின் பேரழிவைப் பார்க்கிறோம். நாம் தனிநபர்களாக நாம் உண்மையிலேயே இரட்சகரின் கடைசி நியாயத்தீர்ப்பைப்பற்றிய அக்கறையோடு இருந்தால், நாம் மனந்திரும்புதலை நாட வேண்டும். அநேகர் தேவனுக்கு பொறுப்புள்ளவர்களாக உணராமலும், வேதங்கள் அல்லது தீர்க்கதரிசிகளிடம் வழிகாட்டுதலுக்கு திரும்புவதில்லை என்பதற்காக நான் பயப்படுகிறேன். நாம் ஒரு சமூகமாக பாவத்தின் விளைவுகளைப்பற்றி சிந்தித்தால், ஆபாசப்படத்துக்கும் பெண்களைப் போகப்பொருளாகப் பார்ப்பதற்கும் பெரும் பொது எதிர்ப்பு ஏற்படும். 21 மார்மன் புஸ்தகத்தில் தன் குமாரன் கொரியாந்தனுக்கு ஆல்மா சொன்னதுபோல, “துன்மார்க்கம் ஒருபோதும் மகிழ்ச்சியாயிருந்ததில்லை.” 22

ஒற்றுமையைப் பொருத்தவரை இரட்சகர் அறிவித்தார், “நீங்கள் ஒன்றாயில்லாவிட்டால் நீங்கள் என்னுடையவர்களல்ல. 23 பிணக்கின் ஆவி பிசாசினுடையது என நாம் அறிவோம்.” 24

நமது நாளில் ஒற்றுமைக்கான வேத கட்டளை வெகுவாக உதாசீனம் செய்யப்படுகிறது, தரம், பாலினம், இனம் மற்றும் செல்வத்தின் அடிப்படையில் அநேகர் பழங்குடிவாதம் பேசுகின்றனர். 25 எல்லா நாடுகளிலும் இல்லையானாலும் அநேக நாடுகளில் எப்படி வாழ்வது என்பதைப்பற்றி ஜனங்கள் மிகவும் பிரிந்திருக்கின்றனர். கர்த்தரின் சபையில் நாம் பின்பற்றுகிற மற்றும் போதிக்கிற ஒரே கலாச்சாரம் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் கலாச்சாரம். நாம் தேடுகிற ஒற்றுமை இரட்சகருடனும் அவரது போதனைகளுடனும் ஒன்றிணைவதுதான்.26

நாம் சபையின் பிரதான நோக்கங்களைப் பார்க்கும்போது, அவை அனைத்தும் கர்த்தருக்கு முன்பாக சமத்துவம்,27 மற்றும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதன் அடிப்படையிலானது.28 ஊழியப்பணியைப் பொருத்தவரை ஞானஸ்நானத்துக்கான முக்கிய தகுதிகள், தேவனுக்கு முன்பாக ஒருவர் தாழ்மையாக இருத்தல் மற்றும் நொறுங்குண்ட இருதயத்தோடும் நருங்குண்ட ஆவியோடும் வருதல் ஆகும். 29 கல்வி, செல்வம், இனம் அல்லது பிறந்த தேசம் ஆகியவை கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

கூடுதலாக ஊழியக்காரர்கள் அழைக்கப்படுகிற இடத்தில் தாழ்மையாக சேவை செய்கிறார்கள். அந்தஸ்தைப்பற்றிய உலக தரங்கள் அல்லது எதிர்கால தொழிலுக்கான ஆயத்தங்களின் அடிப்படையில் சேவை செய்ய அவர்கள் முயல்வதில்லை. அவர்கள் எங்கு பணிக்கப்பட்டாலும் முழு இருதயத்தோடும், பராக்கிரமத்தோடும், மனதோடும், பலத்தோடும் சேவை செய்கின்றனர். அவர்கள் தங்கள் ஊழிய தோழனை தேர்வு செய்வதில்லை, இயேசு கிறிஸ்துவின் கலாச்சாரத்தின் மையமான கிறிஸ்து போன்ற தன்மைகளை29 விருத்தி செய்ய கருத்தாய் நாடுகிறார்கள்.

நமது மிக முக்கிய உறவுகளுக்கு வேதங்கள் வழிகாட்டுதல் கொடுக்கின்றன. பிரதான கட்டளை “உன் தேவனாகிய கர்த்தரை நேசி” என இரட்சகர் போதித்தார். இரண்டாவது, “தன்னைப்போல பிறனையும் நேசிப்பதாகும்.” 30

ஒவ்வொருவரும் நமது அயலார் என கூடுதலாக இரட்சகர் விளக்கினார். 31 இனங்களும், ஜாதிகளும், அல்லது வகுப்புகளும் இருக்கக்கூடாது என மார்மன் புஸ்தகம் தெளிவுபடுத்துகிறது. 32 நாம் தேவனுக்கு முன்பாக ஒன்றுபட்டு சமமாக இருக்க வேண்டும்.

பரிசுத்த நியமங்களும் தெய்வீக பொறுப்புக்களும் இக்கோட்பாடுகளின் அடிப்படையில்தான் கட்டப்படுகின்றன. ஆலயத்தில் உங்கள் சொந்த அனுபவங்கள் என்னுடையதைப்போலத்தான் இருக்கும் என நான் எதிர்பார்க்கிறேன். நான் சான்பிரானசிஸ்கோவில் என் வேலையிலிருந்து ஓக்லாண்ட் ஆலயத்துக்கு வரும்போது நான் அதிக அன்பு மற்றும் சமாதான உணர்வை அனுபவித்தேன். அதன் முக்கிய பகுதி, நான் தேவனுக்கும் அவரது நோக்கங்களுக்கும் நெருக்கமாக உணர்வதுதான். எனது முக்கிய நோக்கம் இரட்சிக்கும் நியமங்கள்தான், ஆனால் அந்த அழகிய உணர்வுகளின் முக்கிய பகுதி, ஆலயத்தை ஊடுருவுகிற சமத்துவமும் ஒற்றுமையும்தான். அனைவரும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறார்கள். அங்கு செல்வம், பதவி, அல்லது கல்விச்சாதனையின் எந்த வித அடையாளமும் இல்லை. தேவனுக்கு முன்பாக தாழ்மையாயிருக்கும் நாமனைவரும் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள்.

பரிசுத்த முத்திரிக்கும் அறையில் நித்திய திருமண நியமம் அனைவருக்கும் ஒன்றே. தாழ்மையான பின்னணியிலிருந்து வருகிற தம்பதிகள் மற்றும் செல்வம் நிறைந்த பின்னணியிலிருந்து வருகிற தம்பதியர் சரியாக அதே அனுபவத்தைப் பெறுகிறார்கள் என்ற உண்மையை நான் நேசிக்கிறேன். அவர்கள் ஒரே விதமான அங்கிகள் தரித்து, அதே பலிபீடத்தின் குறுக்கே அதே உடன்படிக்கைகளைச் செய்கிறார்கள். அவர்கள் அதே நித்திய ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களைப் பெறுகின்றனர். கர்த்தரின் பரிசுத்த வீடாக, பரிசுத்தவான்களின் தசமபாகத்தால் கட்டப்பட்ட அழகிய ஆலயத்தில் இது நிறைவேற்றப்படுகிறது.

நீதி, ஒற்றுமை, கர்த்தருக்கு முன்பாக சமத்துவம் அடிப்படையிலான தெய்வீகத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்றுதல் இந்த உலகத்தில் தனிப்பட்ட சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொடுத்து, வரவிருக்கிற உலகில் நித்திய ஜீவனுக்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறது. 33 அது நம்மை தேவனை சந்திக்க ஆயத்தப்படுத்துகிறது. 34

உங்களது தற்போதைய சூழ்நிலை பொருட்டின்றி, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஆயருடன் ஆலோசித்து, ஆலய சிபாரிசுக்கு தகுதிப்பட வேண்டும் என நாங்கள் ஜெபிக்கிறோம். 35

அநேக அதிகமான அங்கத்தினர்கள் ஆலயம் செல்ல ஆயத்தம் செய்கிறார்கள் என்பதற்காக நாம் நன்றியுடையவர்களாக இருக்கிறோம். அநேக ஆண்டுகளாக தகுதிவாய்ந்த ஆலய சிபாரிசு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்திருக்கிறது. தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கான வரையறையுடைய சிபாரிசுகள் கடந்த இரு ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது. தெளிவாகவே விசுவாசமிக்க மொத்த சபை அங்கத்தினரத்துவம் இதுபோல எப்போதும் பெலமானதாக இருந்ததில்லை.

நிறைவாக தெய்வீகமாக நியமிக்கப்பட்ட சபையின் நோக்கங்களுக்குத் தலைமை தாங்குகிற மூத்த சபைத்தலைவர்கள் தெய்வீக உதவி பெறுகின்றனர் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த வழிகாட்டுதல் ஆவியிடமிருந்து வருகிறது, சில சமயங்களில் நேராக இரட்சகரிடமிருந்தும் கூட. இரு விதமான ஆவிக்குரிய வழிகாட்டுதல்களும் கொடுக்கப்படுகின்றன. இவ்விதமான உதவி பெற்றதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் வழிநடத்துதல் கர்த்தரின் நேரத்தில், “நமக்கு படிப்பிக்க சர்வஞான கர்த்தர் தெரிந்துகொள்ளும்போது,”36 வரிமேல் வரியாகவும் கொள்கை மேல் கொள்கையாகவும் கொடுக்கப்படுகிறது. 37 மொத்த சபைக்கான வழிநடத்துதல் தீர்க்கதரிசிக்கு மட்டுமே வருகிறது.

இந்த மாநாட்டில் தலைவர் ரசல் எம். நெல்சனை நமது தீர்க்கதரிசியாகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும் ஆதரிக்கும் சிலாக்கியத்தை நாம் அனைவரும் பெற்றோம். தலைவர் நெல்சனின் தலையில் நாங்கள் கைகளை வைக்க, தலைவர் டாலின் எச். ஓக்ஸ் குரலாக செயல்பட்டு, அவரை நியமித்து சபைத்தலைவராக பணித்தபோது, பன்னிருவர் குழுவாகவும், தனியாகவும் குறிப்பிடத்தக்க ஆவிக்குரிய அனுபவம் பெற்றோம். அவர் முன்னியமனம் செய்யப்பட்டிருகிறார், மற்றும் நமது நாட்களுக்காக கர்த்தரின் தீர்க்கதரிசியாக இருக்க தன் வாழ்நாள் முழுதும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறார் எனவும் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.