2025
நாம் எப்படி இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு “உலகத்தின் காரியங்களை ஒதுக்கி வைக்கலாம்”?
மார்ச் 2025


இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, மார்ச் 2025

நாம் எப்படி இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு “உலகத்தின் காரியங்களை ஒதுக்கி வைக்கலாம்”?

இயேசு கிறிஸ்து நேபிய சீஷர்களை நியமித்தல்

அவர் தெரிந்துகொண்ட சீஷர்கள், காஸே சைல்ட்ஸ்

“உலகத்தின் காரியங்களை நீ ஒதுக்கிவிட்டு சிறப்பானவற்றை நாட வேண்டும்” என தேவன் கூறினார்.{கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:10}. நமது உலகப்பிரகாரமான மற்றும் பொருள் தேவைகளை நாம் புறக்கணிக்கிறோம் என்பது இதன் அர்த்தமல்ல, மாறாக செல்வம், அதிகாரம், பதவி அல்லது உலகின் அங்கீகாரத்தின் மீது நம் இருதயங்களை செலுத்துவதில்லை என்பதே அதன் அர்த்தம். உலகில் வாழ்வதைப் பற்றி நமக்கு கற்பிக்கப்பட்ட சில கொள்கைகள் இதோ:

தேவனுடைய காரியங்களுக்கு முதலிடம் கொடுங்கள். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்” (மத்தேயு 6:33). நம் இருதயங்களிலும் நம் வாழ்விலும், தேவனுடைய கட்டளைகள் மற்றும் அவருடனான நமது உடன்படிக்கைகள் தான் முதலிடம்.

கற்றுக்கொள்ளுதலை நாடுங்கள். “உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி நீங்கள் கற்றுக் கொள்ளும்போது, ​​இரட்சகரைப் பற்றியும் கற்றுக்கொள்ளுங்கள். … நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப உதவவும், உலகை நன்மைசெய்யும்படி தூண்டவும் முடியும்.” (For the Strength of Youth: A Guide for Making Choices [2022], 31, 32).

வேலை “வேலை செய்வது சுவிசேஷத்தின் ஒரு முக்கியமான கொள்கை. அது வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் நம்மை வளரச்செய்கிறது. … நாம் நம் குடும்பங்களின் தேவையை பூர்த்திசெய்வது மட்டுமல்லாமல்,‘ஒரு நல்ல காரணத்திற்காக ஆவலோடு ஈடுபட வேண்டும்’ எனவும் கர்த்தர் விரும்புகிறார்.’ [கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:27]” (“Employment,” Topics and Questions, Gospel Library).