இளைஞரின் பெலனுக்காக மாதாந்திர செய்தி, செப்டம்பர் 2024
மனந்திரும்ப பயமா?
ஜெசிகா ஜோயி ஸ்ட்ராங்
சபை பத்திரிக்கைகள்
தலைவர் ரசல் எம் நெல்சன் சொன்னதற்கிணங்க, நீங்கள் ஏன் பயப்படக்கூடாது என்பதன் விளக்கம் இதோ.
எதைக்கண்டு நீங்கள்பயப்படுகிறீர்கள்? ரோலர்கோஸ்டர்களா? கணித வகுப்பா? ஏசாயாவைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறீர்களா?
மனந்திரும்புதலை பற்றியதா? மனந்திரும்ப வேண்டும் என்ற எண்ணம் உங்களை போர்வைக்குள் மூடிமறைய செய்கிறதா அல்லது அதிகமாக சாக்லேட் சாப்பிடத் தூண்டுகிறதா என்றால் இந்தக் கட்டுரை உங்களுக்கானதுதான்.
“தயவுசெய்து பயப்படாதீர்கள் அல்லது மனந்திரும்புவதை தாமதப்படுத்தாதீர்கள்.” என்று தலைவர் ரசல் எம். நெல்சன் கூறினார். மற்றும் நல்ல காரணத்துடன். தலைவர் நெல்சன் கூறியதற்கிணங்க, மனந்திரும்புதல் மற்றும் அதல்லாத சில காரியங்கள் இங்கே உள்ளன.
விளக்கப்படங்கள் - கோரி எக்பர்ட்
தேவனின் சிறந்த பரிசை ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஆகவே, மனந்திரும்புதல் பற்றிய உங்கள் பயத்திலிருந்து மீண்டுவர இரட்சகரை நம்புவதற்கு நீங்கள் தயாராகிவிட்டீர்களா? நீங்கள் வருத்தப்படப்போவதில்லை.
தலைவர் நெல்சன் கூறுகிறார்: “உலகிற்கு இரட்சிப்பு தேவைப்பட்டதாலும், உங்களுக்கும் எனக்கும் இரட்சிப்பு தேவை என்பதாலும், [பரலோக பிதா] நமக்கு ஒரு இரட்சகரை அனுப்பினார்.
”… தேவனின் முழுமையான மற்றும் மதிப்புமிக்க பரிசை ஏற்றுக்கொள்வோம். நம்முடைய பாரங்களையும் பாவங்களையும் இரட்சகரின் பாதத்தில் வைத்துவிட்டு, மனந்திரும்புதலாலும் மாற்றத்தாலும் வரும் மகிழ்ச்சியை அனுபவிப்போம்.”