2025
முதல் தரிசனம்
டிசம்பர் 2024


“முதல் தரிசனம்,” நண்பன், ஜனவரி 2025 26–28.

நண்பன் மாதாந்தர செய்தி, ஜனவரி 2025

முதல் தரிசனம்

ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:1–20ல் இந்தக் கதையை நீங்கள் வாசிக்கமுடியும்.

ஒரு மனிதன் கூட்டத்திற்குப் போதிப்பதை ஜோசப் ஸ்மித் பார்த்தல்

ஜோசப் ஸ்மித் இளைஞராக இருந்தபோது, அநேக சபைகள் இயேசு கிறிஸ்துவைக் குறித்து வெவ்வேறு காரியங்களைக் கற்பித்தன. ஜோசப்புக்கு எந்த சபையில் சேருவது என்று தெரியவில்லை.

ஜோசப் ஸ்மித் வேதாகமம் வாசித்தல்

ஒரு நாள், அவர் வேதாகமத்தில் யாக்கோபு 1:5 ஐ வாசித்தார். நமக்கு ஞானம் தேவைப்பட்டால், நாம் தேவனிடம் கேட்கலாம் என்று அது கூறியது. ஜோசப் அதைச் செய்ய முடிவு செய்தார்.

ஜோசப் ஸ்மித் காட்டுக்குள் நடந்து செல்கிறார்

ஒரு அழகான வசந்த நாளில், ஜோசப் பரலோக பிதாவிடம் ஜெபிக்க காட்டுக்குள் சென்றார்.

ஜோசப் ஸ்மித் ஜெபித்தல்

ஜோசப் முழங்காற்படியிட்டு ஜெபிக்க ஆரம்பித்தார். ஆனால் அப்போது தன்னைச் சுற்றிலும் இருள் சூழ்ந்திருப்பதை உணர்ந்தார். ஜோசப் பயப்பட்டார். அவர் தேவனிடம் உதவி கேட்டார்.

பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் ஜோசப் ஸ்மித்துக்கு காட்சியளிக்கின்றனர்

திடீரென்று, ஒரு பிரகாசமான ஒளி வானத்திலிருந்து இறங்கி வருவதை ஜோசப் கண்டார். பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் காற்றில் நிற்பதை அவர் கண்டார். பரலோக பிதா ஜோசப்பின் பெயரைச் சொன்னார். பின்பு இயேசு கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டி, “இவர் என்னுடைய நேசகுமாரன். இவருக்குச் செவிகொடு!” என்றார்.

இயேசு கிறிஸ்து

இயேசு ஜோசப்பிடம் அவர் எந்த சபையிலும் சேரக் கூடாது என்று சொன்னார்.

ஜோசப் ஸ்மித் முழங்காற்படியிட்டு நிமிர்ந்து பார்க்கிறார்

பூமியில் சுவிசேஷத்தின் முழுமையை மீட்டெடுக்க ஜோசப் உதவுவார்.

ஜோசப் ஸ்மித் புன்னகைத்து காட்டை விட்டு வெளியேறுகிறார்

ஜோசப் அதன் பின்னர் குழம்பியிருக்கவில்லை. அவர் மகிழ்ச்சியால் நிறைந்தார்! தேவன் தன்னை நேசிக்கிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் பார்த்தார் என்று சிலர் நம்பவில்லை, ஆனால் அது உண்மை என்று அவர் அறிந்திருந்தார்.

வண்ணமிடும் பக்கம்

பரலோக பிதா என் ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்கிறார்.

முதல் தரிசனத்தின் வண்ணமிடும் பக்கம்

விளக்கப்படங்கள் - கோரி எக்பர்ட்

பரலோக பிதா ஜோசப் ஸ்மித்தின் ஜெபத்திற்குப் பதிலளித்தார். அவர் உங்கள் ஜெபங்களுக்கும் பதிலளிப்பார்.