2020
இரட்சகரின் ஒளியை கிறிஸ்துமஸில் பகிர்ந்துகொள்ளுதல்
டிசம்பர் 2020


“இரட்சகரின் ஒளியை கிறிஸ்துமஸில் பகிர்ந்துகொள்ளுதல்,” லியஹோனா, டிசம்பர் 2020

ஊழியம் செய்தல்

இயேசுவின் பிறப்பு-புகைப்படம்-நில்ஸ்சா பீட்ரிஸ் சான்டிலன்; கெட்டி உருவங்களிலிருந்து பரிசாக

ஊழியம் செய்தலின் கொள்கைகள், டிசம்பர் 2020

இரட்சகரின் ஒளியை கிறிஸ்துமஸில் பகிர்ந்துகொள்ளுதல்

நீங்கள் ஊழியம் செய்கிறவர்களை கருத்தில் கொள்ளவும். இந்தக் கிறிஸ்துமஸில் அவர்கள் கிறிஸ்துவண்டை நெருங்கிவர நீங்கள் எவ்வாறு அவர்களுக்குதவ முடியும்?

ஆண்டு முழுவதும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை நாம் நினைவுகூரும்போது, கிறிஸ்துமஸ் எப்போதும் கொடுக்கப்பட்ட மகத்தான வெகுமதியானதை நாம் கொண்டாடுகிற காலம்: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”(யோவான் 3:16). கிறிஸ்துமஸின்போது நாம் ஊழியம் செய்கையில், இரட்சகரண்டை நெருங்கிவர மற்றவர்களுக்கு உதவக்கூடிய வெகுமதிகளை நாமும் கொடுக்கமுடியும். பரலோக பிதாவால் கொடுக்கப்பட்ட வெகுமதியாக நம்மையே நாம் பிரதிபலிப்பதைப்பற்றி சிந்திப்பது அற்புதமானது.

நான் இன்னமும் வெகுமதியை நினைவில் வைத்திருக்கிறேன்

சூசன் ஹார்டி, கலிபோர்னியா, அ.ஐ.நா

எனக்கு 11 வயதாயிருந்தபோது, என்னுடைய ஞாயிறு பள்ளி ஆசிரியர், சகோதரர் டீட்ஸ், எங்களுடைய விசுவாசப் பிரமாணங்களை மனப்பாடம் செய்து, அவைகளுக்கான அர்த்தத்தை நாங்கள் அவருக்கு விளக்கினால், எங்களுக்கே சொந்தமாக வேதத் தொகுப்பை வாங்கிக்கொடுப்பதாக, வகுப்பிலுள்ளவர்களுக்குக் கூறினார்.

இளம் தம்பதியரான சகோதரர் மற்றும் சகோதரி டீட்ஸ் வெளியே செல்ல ஆயத்தமாயிருந்தனர். சகோதரர் டீட்ஸால் யாருக்காவது ஒரு வெகுமதியை வாங்கமுடியுமா என எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால், விசுவாசப் பிரமாணங்கள் மனப்பாடம் செய்யப்படுமளவிற்கு முக்கியமானதென அவர் நினைத்தால், நான் அந்த சவாலை ஏற்பதென தீர்மானித்தேன்.

13யும் முழுவதுமாக முடித்த பின்னர், நேரம் கடந்துபோய், அவர் வாக்களித்ததைப்பற்றி நான் மறந்துபோனேன்.

பின்னர், கிறிஸ்துமஸ் நாளில், என்னுடைய பெயர் அதன்மேல் எழுதப்பட்டிருந்த ஒரு சிறிய பொட்டலத்தை நான் பெற்றேன். அதை நான் திறந்தபோது எனக்காக மட்டுமேயான ஒரு வேதங்களின் தொகுப்பை நான் கண்டேன், அவற்றை ஒழுங்காக வாசிக்க என்னை ஊக்குவித்து அதில் ஒரு அட்டை இணைக்கப்பட்டிருந்தது. இது 1972ல் நடந்தது, இந்நாள்வரை அந்த வேதங்களை நான் இன்னமும் வைத்திருக்கிறேன். அவைகள் எனக்கு மிகவும் அருமையானது.

அது அதன் விலையைப்பற்றியதல்ல, ஆனால் அது அவர் என்னிடம் காட்டிய அன்பையும் எனக்காக அவர் செய்ய சித்தமாயிருந்த தியாகத்தையும் பற்றியது. அது தேவ வார்த்தையைப் படிக்க என்னுள் ஒரு ஆழ்ந்த விருப்பத்தை ஏற்படுத்தியது. சகோதரர் டீட்ஸ் என்னை ஆசீர்வதித்ததைப்போல, நான் மற்றவர்களை ஆசீர்வதிக்க முடியும் என்ற நம்பிக்கையில், என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு அர்த்தமுள்ள வெகுமதிகளைக் கொடுப்பதால், ஊழியம் செய்தலில் அவருடைய எடுத்துக்காட்டை நான் பின்பற்ற முயற்சிக்கிறேன்.

ஒரு பாத்திரத்தை நடிக்க ஒரு அழைப்பு

ரிச்சர்ட் எம் .ரோம்னி, யூட்டா, அ.ஐ.நா

எங்களுடைய தொகுதியிலுள்ளவர்கள் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கு திட்டமிட்டபோது, ஒரு குறிப்பிட்ட ஆர்வம் குறைந்த அங்கத்தினரை சந்தித்து நிகழ்ச்சியில் அவரை பங்கேற்க அழைக்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டனர், நான் நடுக்கமடைவதாக நான் ஒப்புக்கொள்ள வேண்டும். இதற்கு முன், முந்திய தொகுதி நிகழ்ச்சியில் டேரன் கலந்துகொண்டபோது ஒரே ஒருமுறைதான் நான் அவரை சந்தித்திருக்கிறேன். மோட்டார் சைக்கிள் தலைப்பட்டையை அவர் நெற்றியில் அணிந்திருந்தார். அவருடைய நீண்ட வெள்ளை முடி குதிரைவால் சடையாக கட்டப்பட்டிருந்தது, அவர் நன்றாக வளர்ந்த தாடி வைத்திருந்தார், அவருடைய கைகள் முழுவதும் பச்சைக் குத்தப்பட்டிருந்தன.

இப்போது, ஒரு குழு அங்கத்தினருடன், அவர் என்ன சொல்வாரோ என்ற வியப்புடன், டேரனின் வாசற்படியில் நான் நின்றுகொண்டிருந்தேன் அவர் எங்களை உள்ளே வரும்படி சொன்னார், நாங்கள் எதற்கு வந்திருக்கிறோமென அவரிடம் நாங்கள் கூறினோம். “ஓ, நான் அங்கு வர விரும்புகிறேன்!” என அவர் சொன்னார்.

நிகழ்ச்சி அநேகருக்கு அர்த்தமுள்ளதாக்க உதவி செய்து ஒரு அற்புதமான வேலையை அவர் செய்தார். சிறிது நாட்களுக்குப் பின்னர், டேரனை அடிக்கடி சந்திக்க என்னுடைய ஊழியத் தோழரும் நானும் கேட்டுக்கொள்ளப்பட்டோம். எங்களைப் பார்க்க அவர் எப்போதும் சந்தோஷப்பட்டதாகத் தோன்றியது, நாங்கள் சந்தோஷமாக உரையாடினோம். ஒரு நேசத்துக்குரிய உறவுக்கு நடத்திய, ஒரு தொகுதி நிகழ்ச்சியில் பங்கேற்க அவரை அழைப்பதற்கு ஏற்பட்ட உணர்த்துதலுக்கு நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.

கிறிஸ்துமஸில் மற்றவர்களுக்கு ஊழியம் செய்தல்

குறிப்பாக, ஆண்டின் இந்த நேரத்தில், நீங்கள் ஊழியம் செய்கிறவர்களைப்பற்றி நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள நீங்கள் செய்ய முடிகிற சில காரியங்கள் இங்கேயுள்ளன.

  1. சிலநேரங்களில் ஒரு தொலைபேசி அழைப்பு அல்லது ஒரு குறுஞ்செய்தி அற்புதமாக வேலை செய்கிறது. “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்ற ஒரு எளிய உரையாடலை ஏற்படுத்துவது ஒரு வித்தியாசத்தை உண்டுபண்ணலாம்.

  2. பொருத்தமானபடி, அவர்களுடைய கொண்டாண்டங்களில் கலந்துகொள்ளுங்கள். பொதுவாக நமக்கிருக்கிற நம்பிக்கைகளைப்பற்றி அறிந்துகொள்ள கிறிஸ்துமஸ் ஒரு சிறப்பான நேரமாயிருக்கும். நம்பிக்கைகளை நீங்கள் பகிர்ந்து மற்றவர்களுடையதைக் கேட்கும்போது, மிகப்பெரிய புரிந்துகொள்ளுதலுக்கு நீங்கள் கதவைத் திறக்கிறீர்கள்.

  3. பெயர் சொல்லி அவர்களுக்காக ஜெபிக்கவும். அவருடைய குமாரனிடத்தில் அவர்களை நெருக்கமாகக் கொண்டுவர வழிகளை சிந்திக்க உங்களுக்குதவ பரலோக பிதாவைக் கேளுங்கள்.

  4. எளிய வெகுமதிகள் பெரும்பாலும் நினைவில் வைக்க சிறந்தவை. நேசிக்கப்பட வெகுமதிகள் விரிவாக இருக்கவேண்டியதில்லை. நேரத்துக்கேற்ற வெகுமதி, செவிகொடுத்தலின் வெகுமதி, ஒரு புகைப்படத்தை அல்லது நினைவை பகிர்ந்துகொள்ளுதல், இவைகள் யாவும் இதயத்தின் வெகுமதிகளாயிருக்கலாம்.

  5. சாட்சியின் வெகுமதியைக் கொடுக்கவும். இரட்சகரிடத்தில் அவர்களுக்குள்ள அன்பை உங்களுடன் பகிர்ந்துகொள்ள அவர்களைக் கேட்டு, அவர் மீது உங்களுடைய அன்பை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முன்வாருங்கள்.

  6. கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பங்கேற்க மற்றவர்களை அழைக்கவும். சிலர் தொழுதுகொள்ள விரும்புகிறார்கள் ஆனால், எங்கே போவதென்று அறியாதிருக்கிறார்கள். உங்களுடன் ஆராதிக்க வர அவர்களை அழைக்கவும்.

  7. அவர்களுடைய வீட்டை சமாதானத்துடன் நிரப்பவும். அவர்களுடைய இருதயங்களுக்கு நம்பிக்கையையும் அன்பையும் கொண்டுவரக்கூடிய, அவர்கள் பகிர்ந்து கொள்ள முடிகிற ஒரு சிறப்பான செய்தி ஊழியக்காரர்களிடம் இருக்கிறதென்பதை அவர்கள் அறிந்துகொள்ளட்டும்.

ஒரு சபையாக அனைவருக்கும் ஊழியம் செய்தல்

ஒவ்வொரு சபையின் தேவைகளும் தனித்துவமானவை. ஒரு பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதிலிருந்து வரும் சில பயன். மற்ற சபைகள் சிறிய மற்றும் எளிமையான சிலவற்றிலிருந்து பயனடையக்கூடும். நிகழ்ச்சிகளை திட்டமிடுதலிலும் ஏற்பாடு செய்வதிலும் ஈடுபடுகிறவர்கள், இருக்கிற தேவைகளை எவ்வாறு எதிர்கொள்வதென்பதைப்பற்றி ஜெபத்துடன் கருத்தில்கொள்ளவும்.

  • ஒரு திறமை நிகழ்ச்சி மற்றும் ஆடை அலங்கார நிகழ்ச்சி அடங்கிய உலகுக்கு ஒளியேற்றுங்கள் நிகழ்வை ஆதரிக்க பாரிஸ், பிரான்ஸில் மூன்று பிணையங்களிலுள்ள அங்கத்தினர்கள் உதவினார்கள். அகதிகளுக்கும், வீடிழந்த மக்களுக்கும் கொடுக்கப்படவிருந்த பொருட்களை அவர்கள் ஆயத்தம் செய்தனர்.

  • உணவு, பன்னாட்டு கிறிஸ்துமஸ் பாரம்பரிய காட்சிப்பொருட்கள், இசை, சேவை திட்டங்கள் மற்றும் பிள்ளைகளின் கிறிஸ்து பிறப்பு போன்றவற்றின் மூலமாக கிறிஸ்துவைக் கொண்டாட, ஒரு சமூக நிகழ்ச்சியுடன், சார்லோட் வடக்கு கலிபோர்னியா மைய பிணையம் “உலகம் முழுவதிலும் கிறிஸ்துமஸ்” நிகழ்ச்சியை நடத்தினர்.

  • கிறிஸ்துமஸை நாம் ஏன் கொண்டாடுகிறோம் என்ற சமுதாய நினைவுகூருதலில் வெரோ பீச் புளோரிடா பிணைய அங்கத்தினர்கள் இணைந்தார்கள். சமூக தொண்டு நிறுவனங்களுக்கு பொம்மைகள் நன்கொடையளிக்கப்பட்டன. ஆரம்ப வகுப்பு பிள்ளைகளின் தேர்ந்திசைக் குழுவினர் பாடல் பாடினார்கள், தகவலை காட்சிப்படுத்தி அநேக சபைகள் காட்சிகள் வைத்திருந்தனர்.

  • சமுதாயத்திற்கான தயாரிப்பான உலகத்தின் இரட்சகர் ஜாக்சன்வில் புளோரிடா தென் பிணையத்தால் நடத்தப்பட்டது.