2020
திருவிருந்து கூட்டத்தின் மூலம் ஊழியம் செய்தல்
ஜூன் 2020


“திருவிருந்து கூட்டத்தின் மூலம் ஊழியம் செய்தல்,” லியஹோனா, ஜூன் 2020

ஊழியம் செய்தல்

பட விளக்கம்- எட்வர்ட் மெக்கோவன்

ஊழியம் செய்தல் கொள்கைகள், ஜூன் 2020

திருவிருந்து கூட்டத்தின் மூலம் ஊழியம் செய்தல்

பிறருடன் தொடர்புகொள்ளவும், ஊழியம் செய்யவும் திருவிருந்து கூட்டம் சந்தர்ப்பங்களை வழங்குகிறது.

திருவிருந்து கூட்டம் இரட்சகர் மற்றும் அவரது பாவநிவர்த்தியைப்பற்றிய ஆவிக்குரிய போஷிப்புக்கும் தனிப்பட்ட சிந்தனைக்குமான நேரம். நாம் திருவிருந்தில் ஒவ்வொரு வாரமும் பங்கேற்கும்போது, நாம் ஒன்றாக தெளிவடைகிறோம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:110 பார்க்கவும்). ஆனால் நமது தொகுதிகளில் மற்றும் கிளைகளில் சிலர் தங்களுடன் கனத்த பாரங்களைக் கொண்டு வருகின்றனர் அல்லது அவர்களின் மனம் அங்கே இருப்பதேயில்லை.

பிறருக்கு ஊழியம் செய்யவும் அவர்களது வாழ்க்கையில் வித்தியாசத்தை உண்டாக்கவும் அந்த பரிசுத்த நேரத்தை நாம் எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கே சில வாய்ப்புகளிருக்கின்றன.

நீங்கள் ஊழியம் செய்பவர்களுக்கு திருவிருந்து கூட்டத்தை சிறப்பானதாக்க உதவுங்கள்.

ஊழியம் செய்வது எப்படி என கற்றுக்கொள்ள, தனிநபர்கள் அல்லது குடும்பங்களை மற்றும் அவர்களின் தேவைகளை அறிவது முதல்படி. அவர்களைப்பற்றி அதிகம் கற்றுக்கொள்வதாலேயே அவர்களது திருவிருந்து ஆராதனை அனுபவத்தை சிறப்பானதாக்க நீங்கள் உதவக்கூடிய வழிகளாயிருக்கலாம்.

இரட்டைப் பிள்ளைகளின் தாயாகிய மிண்டிக்கு, அவளது ஊழியம் செய்யும் சகோதரியின் சிறு முயற்சிகள் ஒவ்வொரு வாரமும் அவளது திருவிருந்து கூட்ட அனுபவத்தில் மிகுந்த வித்தியாசத்தை ஏற்படுத்தியது.

“எனது கணவரின் அதிக வேலை நேரத்தினிமித்தம், ஒவ்வொரு வாரமும் என் இரட்டைப் பிள்ளைகளை சபைக்கு நானே தூக்கிச் செல்கிறேன்” என மிண்டி விளக்குகிறாள். “இரு துறுதுறுப்பான குழந்தைகளை திருவிருந்து கூட்டம் முழுமைக்கும் வைத்திருக்க முயற்சி செய்வது உண்மையிலே கஷ்டமானது, ஆனால் என் ஊழியம் செய்யும் சகோதரி எனக்கு உதவுவதை தானே பொறுப்பேற்றுக் கொண்டார்.

“ஒவ்வொரு வாரமும் அவர் எங்களோடு உட்கார்ந்திருக்கிறார், என் பிள்ளைகளை கவனிக்க எனக்கு உதவுகிறார். அவர் என்னருகே இருப்பதென்பது, மிகவும் உதவிகரமானது மற்றும் அவர்களது மிரளுதல் அல்லது குழப்பங்களின் நேரத்தில் என் பதட்டத்தை குறைக்கிறது. இந்த நேரத்தில், அவரது செயல்கள் என் வாழ்க்கையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அவர் ஒருபோதும் அறிவார் என நான் நினைக்கவில்லை. இளம் ஏக்கமிக்க தாயாக அவர் என் தேவையைப் பார்த்தார், எங்களனைவருக்கும் சபையை சமாதானமிக்க மகிழ்ச்சியான இடமாக்க அவர் உதவுகிறார்.”

குறிப்பிட்ட தேவையுடையோருக்கு உதவ ஆலோசனைகள்

  • அங்கத்தினர்களின் தேவைகளைப்பற்றி மூப்பர் குழுமம் மற்றும் ஒத்தாசைச் சங்க தலைவர்களிடம் அறிக்கை கொடுங்கள்.

  • அங்கத்தினர்களின் தேவைகளை சந்திக்க உதவ தலைவர்கள் திருவிருந்து கூட்டத்தின் பிரசங்கங்களைத் திட்டமிடுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட செய்தியைக் கேட்டதால் நீங்கள் ஊழியம் செய்பவர்கள் ஆதாயம் அடைந்தால், அதை உங்கள் தலைவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

  • திருவிருந்தின் ஆசீர்வாதங்களை அனுபவிப்பதிலிருந்து தடுக்கிற இயலாமை அல்லது உணவு ஒவ்வாமை இருக்கும் ஒருவரைப்பற்றி உங்களுக்குத் தெரிந்தால், அந்த விவரங்களையும் அவர்களது ஆராதனை அனுபவத்தை அதிகரிக்கச் செய்யக்கூடிய என்ன வசதி செய்யப்படலாம் என்பதையும் அவர்களிடம் கேளுங்கள். இத்தகவல்களை உங்கள் தலைவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

  • நீங்கள் ஊழியம் செய்பவர் அல்லது அறிந்தவர் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ வீட்டிலிருக்க வேண்டியதிருந்தால், அவர்களுக்கு வீட்டில் திருவிருந்து கொடுக்கப்பட முடியுமா என ஆயரிடம் கேட்கவும் திருவிருந்தின்போது, நீங்கள் குறிப்புகள் எடுத்துக்கூட தொலை பேசியிலோ, மின்னஞ்சலிலோ அல்லது நேரடியாகவோ அவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

  • நீங்கள் ஊழியம் செய்பவர்களுக்கு சிறுபிள்ளைகள் இருந்தால் திருவிருந்து கூட்டத்தின்போது அவர்களுக்குதவ நீங்கள் முன்வரலாம்.

  • நீங்கள் ஊழியம் செய்பவர்கள் அடிக்கடி திருவிருந்து கூட்டத்துக்கு வரவில்லையானால், நீங்கள் உதவக்கூடிய வழிகளைப் புரிந்து கருத்தில் கொள்ள முயலுங்கள். அவர்களுக்கு போக்குவரத்து தேவைப்பட்டால், நீங்கள் அவர்களைக் கூட்டிக்கொண்டு வரலாம். அவர்களது குடும்பத்தால் அவர்கள் ஆதரிக்கப்படாததாக அவர்கள் உணர்ந்தால், அவர்கள் உங்களுடன் உட்கார நீங்கள் அவர்களை அழைக்கலாம். அவர்கள் வரவேற்கப்படுவதாகவும், திருவிருந்து கூட்டத்தில் தேவைப்படுவதாகவும் உணர, உதவ நீங்கள் அவர்களுக்கு சிறப்பு அழைப்பு கொடுக்கலாம்.

சிறு காரியங்கள் மிக நீண்ட பயனளிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஊழியம் செய்தலைப்பற்றி பேசும்போது, ஒத்தாசை சங்க பொதுத்தலைவி, சகோதரி ஜீன் பி. பிங்காம், போதித்தார்: “நமது அயலாருக்கு சேவைசெய்வதை மிக மகத்தானதாகவும் வீரமானதாகவும் செய்யவேண்டுமென நாம் சில சமயங்களில் நினைக்கிறோம். எனினும் சேவையின் சிறு காரியங்கள் பிறரிலும் நம்மிலும் கூட ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்த முடியும்.”1

பெல்ஜியத்திலுள்ள சிறு தொகுதியில், சபைக்கூட்டங்களில் ஸ்பானிய மொழி பேசும் அங்கத்தினர்களுக்கும், வருகை தருவோருக்கும் அடிக்கடி மொழிபெயர்க்க எவிட்டா முன்வந்தாள். ஒரு சமயம், சபையைப்பற்றி கற்றுக்கொண்டிருக்கும் டொமினிக்கன் குடியரசிலுள்ள ஒருவர் எவிட்டாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். அவருக்கு சிறிது ஆங்கிலம் தெரியும், ஆனால் ஸ்பானிய மொழி அவரது தாய்மொழி. ஆகவே அவர் மிக சௌகர்யமாக உணர, திருவிருந்து கூட்டத்தில் அவருக்கு அமைதியாக மொழிபெயர்க்க எவிட்டா முன்வந்தாள்.

“மொழிபெயர்த்தல் சில சமயங்களில் ஓய்வுநாளை வேலைப்பழுவுள்ள நாளாக்கலாம்,” “ஆனால் அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர் தேவையா என பிறரைக் கேட்க தூண்டுதல்களைப் பின்பற்றுதல் அவர்கள் பரிசுத்த ஆவியை உணரவும் தங்கள் கூட்டங்களை அனுபவிக்கவும் நான் அவர்களுக்கு உதவ முடிகிறது என அறிவதில் மகிழ்ச்சியின் மற்றும் இதமான உணர்வைக் கண்டிப்பாக கொடுக்கிறது” என எவிட்டா சொல்கிறாள்.

எளிய காரியங்களால் உதவ ஆலோசனைகள்

  • திருவிருந்து கூட்டத்தின்போது, சிறிது அதிக சேவை தேவைப்படுபவர்களைக் காண உங்கள் தலைவர்களிடம் பேசுங்கள். அல்லது தேவைப்படுகிற ஒருவரை நீங்கள் அறிந்தால், அவர்களைப்பற்றி உங்கள் தலைவர்கள் அறிவதை உறுதி செய்யவும்.

  • கூட்டம் தொடங்க நீங்கள் காத்திருக்கும்போது அமைதியாக அமர்ந்திருங்கள். ஒரு பரிசுத்தமான இடத்தில் பயபக்தி மூலம் வரக்கூடிய சமாதானம் தேவைப்படுபவர்களான நம்மைச் சுற்றிலும் இருக்கக்கூடிய நொறுங்கிய இருதயங்களுக்கும் துக்கமான ஆத்துமாக்களுக்கும் உதவும். 2

  • உபவாச ஞாயிறுகளில், கூடுதல் ஆறுதல் தேவைப்படுகிற நீங்கள் ஊழியம் செய்கிற ஒருவருக்கு உங்கள் உபவாசத்தையும் ஜெபத்தையும் அர்ப்பணிப்பதைக் கருத்தில் கொள்ளவும்.

  • திருவிருந்து கூட்டத்தின்போது அவர்களுக்கு அருகில் அல்லது பக்கத்தில் நீங்கள் அமர்வதில் அல்லது பிற வழிகளில் நீங்கள் உதவுவதால் நன்மை பெறக்கூடிய ஒருவர் இருக்கிறாரா என அறிய ஜெபிக்கவும்.

திருவிருந்து கூட்டம் அனைவரையும் வரவேற்கக்கூடிய இடமாக இருக்க முடியும்.

தலைவர் ஜோசப் பீல்டிங் ஸ்மித் (1876–1972) போதித்தார், “சபையின் எல்லாக் கூட்டங்களையும் விட திருவிருந்து கூட்டம் மிக பரிசுத்தமானதும் மிக தூய்மையானதும் ஆகும்.” 3 அநத விஷயத்தில், திருவிருந்து கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும், விசேஷமாக புதிய அங்கத்தினர்களும், அல்லது கொஞ்ச நாள் வராத அங்கத்தினர்களும் வரவேற்கப்பட்டு, ஆவிக்குரிய விதமாக போஷிக்கப்படுவதை உறுதிசெய்வது முக்கியமாகும்.

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸில் வாழ்ந்த மெரானியா தன் தொகுதியில் சபையைப்பற்றி கற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் நட்பு ஏற்படுத்தினாள். “அவள் இப்போது என் நெருங்கிய தோழிகளில் ஒருத்தியாகிவிட்டாள்,” “ஒவ்வொரு வாரமும் திருவிருந்து கூட்டத்தில் அவளுடன் உட்கார்வதை நான் விரும்புகிறேன், அவள் எப்படி இருக்கிறாள், அவளுக்கு நான் உதவிசெய்ய ஏதாவது இருக்கிறதா என நான் எப்போதும் அவளிடம் கேட்கிறேன்” என மெரானியா சொல்கிறாள். சிறிது நாட்களுக்குப்பிறகு, மெரானியாவின் சினேகிதி ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டாள். தொகுதி அங்கத்தினர்களின் முயற்சிகள், அப்படியே, திருவிருந்து கூட்டத்தின் வரவேற்கும் சூழ்நிலை போன்றவை அவளது தீர்மானத்தில் பெரிய பங்கு வகிக்கும்.

திரும்ப வருகிற அல்லது புதிய அங்கத்தினர்களுக்கு ஊழியம் செய்யும் ஆலோசனைகள்

  • நீங்கள் திருவிருந்து கூட்டத்தில் பேசவிருப்பதாயிருந்தால், உங்கள் செய்தியைக் கேட்க வருமாறு நண்பர்களையும் குடும்பத்தாரையும் பிறறையும் அழைக்கலாம்.

  • தனியாக இருப்பவர்கள் அல்லது உதவி தேவைப்படுவோரைத் தேடி நீங்கள் வரவேற்கலாம். நீங்கள் அவர்களுக்கு அருகில் உட்காரலாமா அல்லது உங்களுடன் அமர அவர்களை அழைக்கலாமா என கேட்கவும்.

  • கூட்டம் முடியும்போது, நீங்கள் ஊழியம் செய்பவர்களையும் பிறரையும் வரவிருக்கிற சபை நிகழ்ச்சிகளுக்கோ, ஆலயத்துக்கோ அல்லது சமூக நிகழ்ச்சிக்கோ நீங்கள் அழைக்கலாம்.

  • நீங்கள் ஊழியம் செய்யும் ஒருவர் திருவிருந்து கூட்டத்தில் பங்கேற்று, ஆனால் சில காலம் வரவில்லையானால், அவர்களுக்குப் போதிக்கப்பட்டதைப்பற்றி அவர்களுக்கு கேள்விகள் ஏதாவதிருக்கிறதா என அவர்களைக் கேட்கவும். ஒரு வார்த்தையோ, கதையோ, பாகமோ அல்லது கோட்பாடோ அவர்களுக்குப் புரியாமலிருந்தால், உங்களை அவர்கள் அணுகுவதற்கு எப்போதும் வரவேற்கப்படுகிறார்கள் என அவர்களிடம் சொல்லவும். தேவைப்பட்டால் நீங்கள் ஒன்றாக பதில்களைக் தேடலாம்.

குறிப்புகள்

  1. Jean B. Bingham, “Ministering as the Savior Does,” Liahona,May 2018, 104.

  2. Jeffrey R. Holland, “The Ministry of Reconciliation,” Liahona, Nov. 2019, 46.

  3. Joseph Fielding Smith, in Conference Report, Oct. 1929, 60–61.