ஊழியம் செய்தலின் கொள்கைகள், செப்டம்பர் 2019
நீங்கள் ஊழியம் செய்ய பரிசுத்த ஆவி எப்படி உதவ முடியும் (உதவும்)
ஊழியம் செய்ய, ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொடுக்கப்படுகிற ஆசாரியத்துவ பணி நியமனம் வெளிப்படுத்தல் பெறும் உரிமையையும் உள்ளடக்கியதாகும்.
கெட்டி உருவங்களிலிருந்து விளக்கங்கள்
இரட்சகர் செய்தது போல ஊழியம் செய்யவும், சேவை செய்யவும், நேசிக்கவும் கூட, விசேஷமாக நாம் நன்கு அறியாதவர்களை நெருங்கும்போது, சிலசமயங்களில் அழைப்பு, சவால் நிறைந்ததாக தோன்றுகிறது. ஊழியம் செய்ய மில்லியன் வழிகள் இருக்கும்போது, பணிக்கப்பட்டவர்களை நாம் நெருங்க சிறந்த வழிகளை எப்படி அறிவது என நாம் வியப்படைகிறோம்.
நாம் அதிக நாட்கள் வியப்படைய வேண்டியதில்லை, ஏனெனில் நமது உண்மையான முயற்சிகள் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட முடியும்.
“உங்கள் பரிசுத்த ஊழியம் செய்யும் நியமிப்பு, உங்களுக்கு தெய்வீக உணர்த்துதல் பெறும் உரிமையை கொடுக்கிறது,” என இளம்பெண்கள் பொதுத் தலைவர் சகோதரி போனி எச். கார்டன் சொன்னார். “அந்த உணர்த்துதலை நீங்கள் நம்பிக்கையுடன் நாட முடியும்.”1
நாம் இரட்சகர் செய்ததுபோல சேவை செய்ய நாடும்போது, அவரை வழிநடத்திய அதே பரிசுத்த ஆவியால் நாம் நடத்தப்பட முடியும். ஆயரின் ஆசாரியத்துவ திறவுகோல்களின் அதிகாரத்தின் கீழ் கொடுக்கப்பட்ட, ஊழியம் செய்தல் போன்ற, நியமிப்புகளில் பணியாற்றும்போது விசேஷமாக இது உண்மையாக இருக்கிறது. பரிசுத்த ஆவியோடு ஊழியம் செய்ய இங்கு ஆறு ஆலோசனைகள் உள்ளன.
ஊழியம் செய்யும்போது நான் எவ்வாறு பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்க முடியும்?
-
வழி நடத்துதலுக்காகக் கேளுங்கள். ஜெபத்தின் மூலம் நாம் அவருடன் தொடர்புகொள்ள பரலோக பிதா விரும்புகிறார். ஜெபம் அவருக்கு நெருங்கி செல்ல நம்மை அனுமதிப்பது மட்டுமின்றி, “ஏற்கனவே தேவன் கொடுக்க சித்தமாயிருக்கிற ஆசீர்வாதங்களை, ஆனால் நாம் அவற்றைக் கேட்டால் அவை நிபந்தனையாக்கப்பட்டு” பெற்றுத் தருகிறது.2 “அவர்களது இருதயங்களை புரிந்துகொள்ள ஜெபித்து நாடும்போது, பரலோக பிதா நம்மை வழிநடத்துவார் மற்றும் அவரது ஆவி நம்மோடு வரும், என நான் சாட்சியளிக்கிறேன்” என சகோதரி கார்டன் சொன்னார்.3
-
தூண்டுதலுக்காக காத்திருக்காதீர். உயிர்ப்புடனிருங்கள். “ஆவலோடு ஈடுபடுங்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:27,) உங்கள் முயற்சிகள் வழிநடத்தப்பட்டு, சிறப்பாக்கப்படும் என காண்பீர்கள். “நமது சேவையுடனும் வேலையுடனும் முன்னேறுவது வெளிப்படுத்தலுக்கு தகுதிபெற ஒரு முக்கியமான வழியாகும்,” என பிரதான தலைமையின் முதல் ஆலோசகர் தலைவர் டாலின் எச். ஓக்ஸ் சொன்னார். “முதல் அடி எடுத்து வைக்க கர்த்தர் சொல்ல வேண்டும் என தங்கள் வீடுகளில் உட்கார்ந்திருக்கும்போது அல்ல அவர்கள் செயல்படும்போது, தேவனின் பிள்ளைகளுக்கு அதிக வெளிப்படுத்தல் வருகிறது, என என் வேதப் படிப்பில் நான் கவனித்திருக்கிறேன்.”4
ஊழியம் செய்யும்படி உணர்த்துதல்களை நான் எப்படி அடையாளம் காண்கிறேன்?
-
மார்மனின் புத்திமதியை கேளுங்கள். ஒரு சிந்தனை தூண்டுதலா இல்லையா என நாம் துவள வேண்டியதில்லை. அறிவதற்காக நாம் மார்மனின் எளிதான திறவுகோலைப் பெற்றிருக்கும்போது அல்ல: நன்மை செய்யவும், நம்பவும், அல்லது பிறர் கிறிஸ்துவை நம்ப உதவ ஒரு சிந்தனை உங்களைத் தூண்டினால், அது தேவனிடமிருந்து வந்தது என நீங்கள் அறிய முடியும்.(மரோனி 7:16பார்க்கவும்.)
-
அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். “குளத்தில் குதித்து நீந்தவும்,” என பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் மூப்பர் ஜெப்ரி ஆர் ஹாலண்ட் சொன்னார். “தேவையிலிருப்போரை நோக்கி செல்லுங்கள். நீங்கள் பின்நீச்சல் போட வேண்டும் அல்லது நாய் நீச்சல் போட வேண்டுமா என முடங்காதீர்கள். போதிக்கப்பட்டுள்ள அடிப்படை கொள்கைகளை நாம் பின்பற்றினால், ஆசாரியத்துவத் திறவுகோல்களோடு ஒத்திருங்கள், நம்மை வழிநடத்துமாறு பரிசுத்த ஆவியை நாடுங்கள், நாம் தோற்க முடியாது.”5
தூண்டுதலைப் பின்பற்ற சிறந்த வழி எது?
-
உடனே. சகோதரி சூசன் பெட்னார் (பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் மூப்பர் டேவிட் ஏ. பெட்னாரின் மனைவி) தூண்டுதலைப் பின்பற்றுவதன் சிறந்த உதாரணம். “தேவையுள்ளோரைப் பார்க்க, ஆவிக்குரிய கண்களால் பார்க்க,” ஜெபித்த பிறகு, அவர் சபையோரை சுற்றிலும் பார்க்கிறார், ”சந்திக்க அல்லது குறிப்பிட்ட நபரை தொலைபேசியில் அழைக்க ஆவிக்குரிய தூண்டுதலை அவர் அடிக்கடி உணர்கிறார்,” என மூப்பர் பெட்னார் சொன்னார். அப்படிப்பட்ட உணர்வை சகோதரி பெட்னார் பெறும்போது, அவர் உடனே பதிலளித்து கீழ்ப்படிகிறார். ஆசீர்வாத ஜெபத்தில் ‘ஆமென்’ சொல்லப்பட்ட உடனே அவர் ஒரு பதின்ம வயதுடையவரிடம் பேசுவார் அல்லது ஒரு சகோதரியை கட்டியணைப்பார் அல்லது வீடு திரும்பிய பிறகு உடனே தொலைபேசியை எடுத்து அழைப்பார், என்பது வழக்கமாக இருந்தது.”6
-
தைரியமாக. மறுக்கப்படும் பயம், வெட்க உணர்வு, போதாமை, அல்லது அசௌகர்யமற்றவராக இருப்பது ஊழியம் செய்யும் தூண்டுதலை பின்பற்றுவதிலிருந்து நம்மை தடுக்க முடியும். “பல நேரங்களிலும் வழிகளிலும், நாம் அனைவரும் போதாமையானவர்களாயும், நிச்சயமற்றவர்களாயும், ஒருவேளை தகுதியற்றவர்களாயும் உணர்கிறோம்,” என பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் மூப்பர் கெரிட் டபிள்யூ. காங், சொன்னார். “ஆயினும் தேவனை நேசிப்பதிலும் நமது அயலாருக்கு ஊழியம் செய்வதிலும், நமது விசுவாசமிக்க முயற்சிகளில் புதிய மற்றும் பரிசுத்த வழிகளில் அவர்களது மற்றும் நமது வாழ்க்கைக்கான தேவனின் அன்பையும் தேவையான உணர்த்துதலையும் நாம் உணரலாம்.”7
தற்கொலைக்கு முயற்சித்த ஒரு பெண்ணின் கணவரிடம் பேச அவர் எவ்வளவு தயங்கினார் என ஒரு சகோதரர் சொன்னார். ஆனால் கடைசியாக அக்கணவரை மதிய உணவுக்கு அவர் அழைத்தார். “‘உங்கள் மனைவி தற்கொலைக்கு முயற்சித்தார், அது உங்களுக்கு தாங்க முடியாததாக இருக்கும். நீங்கள் அதைப்பற்றி பேச விரும்புகிறீர்களா என, நான் சொன்னபோது”அவர் வெளிப்படையாக அழுதார், என அவர் சொன்னார். “நாங்கள் ஒரு மென்மையாக மற்றும் நெருக்கமாக, உரையாடினோம், சில நிமிடங்களுக்குள் விசேஷ நெருக்கத்தையும் நம்பிக்கையையும் வளர்த்தோம்.”8
© 2019 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.ஐ.நாடுகளில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/18 மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/18 Ministering Principles, September 2019 மொழிபெயர்ப்பு. Tamil. 15770 418