ஊழியம் செய்தல் கொள்கைகள், ஜூன் 2019
இரட்சகர் பார்க்கிறதைப்போல மற்றவர்களைப் பார்த்தலே ஊழியம் செய்தல்
வேறுபட்டவர்களாகக் காணப்பட்டவர்களுடன் இயேசு அவருடைய அதிக நேரத்தைச் செலவழித்தார். அவர்களுடைய தெய்வீகத் திறமைகளை அவர் பார்த்தார்.
இரட்சகரைப்போன்று ஊழியம் செய்யும் நமது முயற்சிகளில், நம்மிலிருந்து வேறுபட்ட ஒருவருக்கு ஊழியம் செய்ய நாம் கேட்கப்படலாம். கற்றுக்கொள்ளவும் வளரவும் இது நமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது.
கலாச்சாரம், கல்வி, இனம், பொருளாதாரம், வயது, கடந்த அல்லது நிகழ் கால நடத்தைகள் அல்லது பிற வேறுபாடுகள், அவர்களைப்பற்றி நாம் அறிந்துகொள்ளும் முன்னே அவர்களைப்பற்றி தீர்ப்பளிக்க நமக்கு எளிதாக்க முடியும். இந்த முன்தீர்ப்பு பாரபட்ச இருதயத்திலிருக்கிறது, இரட்சகர் இதற்கெதிராக எச்சரித்தார் ( 1சாமுவேல் 16:7 யோவான் 7:24 பார்க்கவும்.)
கடந்தகால வேறுபாடுகளை நாம் பார்த்து இரட்சகர் பார்க்கிறதைப்போல மற்றவர்களை நாம் பார்க்க முடியுமா? அவர்கள் யாராயிருக்கிறார்கள், அவர்கள் யாராய் மாறுவார்கள் என்பதற்காக பிறரை நேசிக்க நாம் எவ்வாறு கற்றுக்கொள்ளமுடியும்?
பார்த்தலும் அன்புகூருதலும்
நித்திய ஜீவனை எவ்வாறு அடைவது எனக் கேட்ட ஒரு இளம் ஆஸ்திமானின் பிரபலமான கதையை வேதாகமம் கூருகிறது. “இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்பு கூர்ந்து உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு, நீ போய் உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றி வா என்றார்”( மாற்கு 10:21)
எழுபதின்மரின் மூப்பர் எஸ். மார்க் பால்மர் இந்த வேத வசனத்தைப் படித்தபோது, கதையின் ஒரு புதிய பகுதி திடீரென அவருக்கு முன் வந்து நின்றது.
“‘பின்னர் இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்பு கூர்ந்தார்’
“இந்த வார்த்தைகளை நான் கேட்டபோது, இந்த வாலிபனை நமது கர்த்தர் பார்த்து, அன்புகூர்ந்ததின் ஒரு தெளிவான உருவம் என் மனதை நிறைத்தது. அவனுடைய நற்பண்புகளை, அவனுடைய திறனையும்கூட அடையாளம் கண்டு, அப்படியே அவனுடைய மிகப்பெரிய தேவையை பகுத்தறிந்து, ஆழமாகப் பார்த்து அவனுடைய ஆத்துமாவுக்குள் ஊடுருவுதல் என்பதே பார்த்தல்.
“பின்னர் இந்த எளிய வார்த்தைகள், இயேசு அவனிடத்தில் அன்பு கூர்ந்தார் இந்த நல்ல வாலிபன் மீது அவர் பெரும் அன்பையும் இரக்கத்தையும் உணர்ந்து, இந்த அன்பினிமித்தமும் இந்த அன்புடனும் இயேசு அவனிடம் இன்னும் அதிகமானதைக் கேட்டார் அவனுக்குச் சொந்தமானதை எல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடுக்கும்படியான மிக அதிகக் கடினமான ஒன்றைச் செய்யக் கேட்டபோது இத்தகைய அன்பால் சூழப்பட இந்த வாலிபன் எப்படி உணர்ந்திருப்பான் என நான் கற்பனை செய்தேன் ….
“ ‘என் மூலமாக தேவனின் அன்பை மற்றவர்கள் உணர்ந்து, மாறுவதற்கு விரும்பும்படியாக கிறிஸ்துவின் அன்புடன் நான் எவ்வாறு நிரப்பப்பட முடியும்?’ [நான் என்னையே கேட்டுக்கொண்டேன்] அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் அல்லது செய்துகொண்டிருக்கவில்லை என்பதைவிட உண்மையில் அவர்கள் யார், அவர்கள் யாராக மாறமுடியும் என அவர்களைப் பார்ப்பதில் அந்த இளம் ஆஸ்திமானை கர்த்தர் பார்த்த அதே வழியில் என்னைச் சுற்றியிருக்கிறவர்களை நான் எவ்வாறு பார்க்கமுடியும்? நான் எவ்வாறு இரட்சகரைப் போலாகமுடியும்?”1
மற்றவர்களைப் பார்க்க கற்றுக்கொள்ளுதல்
வளமான பிரதிபலன்களைக் கொண்டுவருகிற இரட்சகர் செய்கிறதைப்போல மற்றவர்களைப் பார்க்க கற்றுக்கொள்ளுதல் இந்த இலக்கை நோக்கி நாம் செயல்படும்போது உதவுகிற சில ஆலோசனைகள் இங்கே உள்ளன.
-
அவர்களை அறியுங்கள்
மேலோட்டமான விவரங்களுக்கு அப்பால் மக்களைப்பற்றி அறிந்துகொள்ள முயற்சி செய்யவும். உறவுகளை வளர்ப்பதற்கு நேரம் ஆகும், மற்றும் நேர்மையான முயற்சி தேவை என்பதை அடையாளம் காணவும். (உதவிக்காக the August 2018 Ministering Principles article “Building Meaningful Relationships” பார்க்கவும்.) -
உங்களையே சோதிக்கவும்
அறிந்தோ அல்லது அறியாமலோ நீங்கள் செய்கிற தீர்வுகளில் கவனம் செலுத்தவும். மற்றவர்களைப்பற்றி நீங்கள் செய்துகொண்டிருக்கிற ஊகங்களைப்பற்றி கவனம் செலுத்தி நீங்கள் செய்கிற விதமாக அவர்களைப்பற்றி ஏன் நீங்கள் உணருகிறீர்கள் என புரிந்துகொளள முயற்சிக்கவும் -
தீர்ப்பை நிறுத்தவும்
தனிப்பட்டவர்களின் தகுதியை சூழ்நிலைகள் வரையறுப்பதில்லை என்பதை உணரவும். உங்களை அவர்கள் இடத்தில் வைத்து அதே சூழ்நிலைகளில் நீங்களிருந்தால் ஒருவர் உங்களை எப்படிப் பார்க்கவேண்டுமென நீங்கள் விரும்புவீர்களென்பதைக் கருத்தில் கொள்ளவும். அவர்களுடைய உள்ளுணர்வின் மதிப்பிலிருந்தும் தெய்வீக தகுதியிலிருந்தும் ஒருவரின் தேர்ந்தெடுப்புகளையும் நடத்தைகளையும் பிரிப்பது இரட்சகர் அவர்களைப் பார்ப்பதைப்போல அவர்களைப் பார்ப்பதற்கு நமக்குதவும். -
அவர்களை நேசிக்க வேண்டி ஜெபிக்கவும்.
பெயரைச் சொல்லியும், ஒரு உண்மையான நட்பை வளர்க்க பொறுமைக்காகவும் அவர்களுக்காக வழக்கமாக ஜெபிக்கவும். உங்களுடைய சேவையில் ஒரு ஜெபத் தோற்றத்தை வைக்கவும். நீங்கள் செய்வதற்கும் அவர்களுக்கு உண்மையாகவே தேவையானவற்றிற்கும் ஒரு இடைவெளி இருக்கிறதா?
பணக்காரர், ஏழை, ஆட்சியாளர்கள், பொது ஜனங்கள் என வாழ்க்கையின் பல்வேறு பிரிவிலிருந்தும் ஜனங்களுடன் இயேசு அவருடைய நேரத்தைச் செலவழித்தார். அவரையும் அவருடைய வெளிப்படையான ஏழ்மை தோற்றத்தையும் அல்லது முக்கியமில்லாத சூழ்நிலையையும் நோக்கி, மற்றவர்களின் தவறான தீர்ப்புகளினால் அவர் அடிக்கடி பாதிக்கப்பட்டார். “நாம் அவரைப் பார்க்கும்போது நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இருக்காது. … அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார், அவரை எண்ணாமற்போனோம்” ( ஏசாயா 53:2-3).
கிறிஸ்துவைப் போன்ற பார்வை.
கிறிஸ்துவைப் போன்ற கண்களுடன் அயலாரைப்பார்க்க கற்றுக்கொள்வதைப்பற்றிய இந்த கதையை ஒரு சகோதரி பகிர்ந்துகொள்கிறார்.
எனக்குப் பக்கத்தில் வாழ்ந்துவந்த ஜூலியாவுக்கு (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) நண்பர்கள் யாருமில்லை எனத் தோன்றியது. எப்போதும் அவள் விரக்தியுடனும் கோபத்துடனும் இருப்பதாகக் காணப்பட்டாள். இருந்தபோதிலும், அவளுக்கு ஒரு தோழியாயிருக்க நான் தீர்மானித்தேன். கடந்து செல்லும் ஒரு சாதாரண தோழியாக அல்ல, ஒரு உண்மையான தோழியாயிருக்க. நான் அவளைப் பார்க்கும்போதெல்லாம் நான் அவளிடம் பேசி, அவள் எதைச் செய்தாலும் அதில் நான் நாட்டத்தைக் காண்பித்தேன். மெதுவாக, அவளுடன் ஒரு நட்பின் உறவை உண்டுபண்ணி, அது எனது உள்ளத்தில் சந்தோஷத்தைக் கொண்டுவந்தது.
“ஒரு நாள் ஜூலியாவை சந்தித்து சபைக்கு போகாதிருக்கும் அவளுடைய தீர்மானத்தைப்பற்றி அவளிடம் கேட்க நான் தீர்மானித்தேன்.
“குடும்பமோ உறவினர்களோ அவளுக்குப் பக்கத்திலில்லை என்பதை நான் தெரிந்துகொண்டேன். மிகத் தொலைவில் வாழ்ந்துகொண்டிருந்த அவளுடைய ஒரே உடன்பிறந்த சகோதரன் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை தொலைபேசியில் அவளோடு தொடர்பு கொள்வான். அவளுடைய குடும்பத்தைப்பற்றியும் சபையைப்பற்றியும் அவளுடைய கசப்பான உணர்வையும், கோபத்தையும், விரக்தியையும் வெளியே ஊற்றியதை நான் கேட்டுக்கொண்டிருந்தபோது ஒரு மறுக்க முடியாத இரக்கத்தின், அன்பின் உணர்வு இந்த சகோதரியின்மீது மிகப்பலமாக எனக்கு வந்தது. அவளுடைய வேதனையையும் விரக்தியையும் நான் உணர்ந்தேன். அவளுடைய வாழ்க்கை எவ்வளவு தனிமையிலிருந்தது என நான் உணர்ந்தேன். நானும் அவளை நேசிக்கிறேன், அவளை நேசித்து மரியாதை செலுத்தவும், என எனக்குப் பின்னால் நான் ஒரு அமைதியான சொற்றொடரைக் கேட்டதைப் போலிருந்தது.
“நான் அமர்ந்து, அவளிடம் சொல்வதற்கு எதுவுமில்லாதவரை நான் செவிகொடுத்தேன். அவள் மீது அன்பையும் இரக்கத்தையும் நான் உணர்ந்தேன். அன்பு செலுத்தப்படுவது எப்படியிருக்கும் என ஒருபோதும் அறியாத ஒரு சகோதரி இவள். திடீரென அவளை நான் மிகஆழமாகப் புரிந்துகொண்டேன். அவளை சந்திக்க என்னை அனுமதித்ததற்காக அவளுக்கு நன்றிகூறி, ஒரு அணைப்புடனும், அவளுக்கான என் அன்புடனும் மரியாதையுடனும் அவளை விட்டுப்போனேன். அந்த சந்திப்பில் அவள் எந்தளவுக்கு என் மனதைத் தொட்டாள் என அவள் ஒருபோதும் அறிந்திருக்கமாட்டாள். பரலோக பிதா என் கண்களைத் திறந்து, கூடுதலான அன்புடன் அன்புகூர எனக்கு ஒரு திறனிருந்ததாக எனக்குப் போதித்தார். அவளுக்கு ஒரு தோழியாயிருப்பது மட்டுமல்ல அவளுக்கு ஒரு குடும்பமாயிருக்க எனது தீர்மானத்தில் நான் முடிவெடுத்தேன்.
யாரோ ஒருவரின் வாழ்க்கைக்குள் அழைக்கப்படுவது ஒரு பரிசுத்தமான காரியம். ஜெபத்துடனும், பொறுமையுடனும், பரிசுத்த ஆவியிடமிருந்து உதவியுடனும், கிறிஸ்துவின் ஒரு தரிசனத்துடன் அப்படிச் செய்ய நாம் கற்றுக்கொள்ளலாம்.
© 2019 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.ஐ.நாடுகளில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/18 மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/18 Ministering Principles, June 2019, மொழிபெயர்ப்பு Tamil. 15767 418