2025
கர்த்தர் ஏன் சபையை வைத்திருக்கிறார்?
அக்டோபர் 2025 இளைஞரின் பெலனுக்காக


இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, அக்டோபர் 2025

கர்த்தர் ஏன் சபையை வைத்திருக்கிறார்?

இளம் பெண்கள்

கிறிஸ்துவின் சபையின் நோக்கம் "தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் தேவனின் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியை நிறைவேற்ற துணைபுரிய சாத்தியமாக்குவதாகும்." பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை, “[தேவனின்] பிள்ளைகளை மேன்மையடைதலாகிய உயர்ந்த மகிமை அல்லது நித்திய ஜீவனுக்கு தகுதிப்படுத்த” உதவுகிறது.

“இரட்சகர் … [சபையை] அவருடைய நோக்கங்களை நிறைவேற்றும்படி தொடங்கினார்—அவருடைய சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது, அவருடைய நியமங்களையும் உடன்படிக்கைகளையும் வழங்குவது, நம்மை நியாயப்படுத்தவும் பரிசுத்தப்படுத்தவும் அவருடைய வல்லமைக்கு சாத்தியமாக்குவது.”

ஆசாரியத்துவ அதிகாரம் மற்றும் திறவுகோல்கள், உடன்படிக்கைகள் மற்றும் நியமங்கள், தீர்க்கதரிசன வழிகாட்டுதல், வேதங்கள் மற்றும் பரிசுத்தவான்களின் சமூகம் மூலம் சபை உறுப்பினர்கள் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் ஆசீர்வாதங்களையும் பெறுகிறார்கள்.

“உங்களுடைய வெளிச்சம் தேசங்களுக்கு ஒரு அடையாளமாய் இருக்கும்படியாக எழுந்து பிரகாசியுங்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 115:5) என்றும் சபைக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.

சபை உறுப்பினர்கள் சுவிசேஷத்தின்படி வாழ்வதன் மூலமும், சுவிசேஷத்தைப் பெற அனைவரையும் அழைப்பதன் மூலமும், நித்தியத்திற்கும் குடும்பங்களை இணைப்பதன் மூலமும், ஏழைகளையும் தேவையிலிருப்போரையும் கவனித்துக்கொள்வதன் மூலமும் "பிரகாசிக்க" முயல்கிறார்கள். இது தேவனின் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணி.

குறிப்புகள்

  1. பொது கையேடு: பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் சேவை செய்தல், 1.3, சுவிசேஷ நூலகம்

  2. Dallin H. Oaks, “Truth and the Plan,” Oct. 2018 general conference (Ensign or Liahona, Nov. 2018, 26).

  3. Dale G. Renlund, Oct. 2024 general conference (Liahona, Nov. 2024, 16).