2025
இயேசு கிறிஸ்துவிடமிருந்து உதவி : ஏன் மற்றும் எப்படி
இளைஞரின் பெலனுக்காக ஏப்ரல் 2025.


இளைஞரின் பெலனுக்காக மாதாந்திர செய்தி, ஏப்ரல் 2025

இயேசு கிறிஸ்துவிடமிருந்து உதவி: அது ஏன் மற்றும் எப்படி

ஏன் இயேசு கிறிஸ்துவே பதில் மற்றும் அவர் உங்களுக்கு எவ்வாறு உதவுகிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இயேசு கிறிஸ்து

டான் வில்சனின் விளக்கப்படம்

“நான் தொடர்ந்து குழப்புகிறேன் என்று தோன்றுகிறது. தொடர்ந்து முயற்சி செய்வது கடினம்.”

“எனது நிலைமை கடினமாக உள்ளது. எப்படி முன்னேறுவது என்று எனக்குத் தெரியவில்லை.”

“எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். வெற்றிபெற என்ன தேவை என்று எனக்குத் தெரியவில்லை.”

“நான் களைத்துவிட்டேன், ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.”

இந்த பிரச்சனைகளில் ஏதேனும் ஒன்றை உங்களால் தொடர்புபடுத்த முடிகிறதா? தலைவர் ரசல் எம். நெல்சன், “உங்களுக்கு என்ன கேள்விகள் அல்லது பிரச்சனைகள் இருந்தாலும், பதில் எப்போதும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் போதனைகளிலும் காணப்படுகிறது” என்று கற்பித்தார்.(“The Answer Is Always Jesus Christ,” Apr. 2023 general conference [Liahona, May 2023, 127]).

“இயேசு கிறிஸ்துவே பதில்” என்று சொல்வதுஎளிது. அவர் ஏன் மற்றும் எப்படி பதில் என்று புரிந்து கொள்ள இன்னும் கொஞ்சம்கூட முயற்சி தேவைப்படுகிறது.

ஏன் கிறிஸ்துவே பதில்?

அவர் தனது பாவநிவாரண பலியை சகித்தபோது, ​​இரட்சகர் மூன்று முக்கியமான காரியங்களைச் செய்தார்:

  1. அவர் மரணத்தை வென்றார், நாம் உயிர்த்தெழுப்பப்பட அனுமதித்தார்.

  2. அவர் எல்லா பாவங்களுக்கும் விலை கொடுத்து , நாம் மனந்திரும்பவும், வளரவும், தேவனிடம் திரும்பச்செல்வதையும் சாத்தியமாக்கினார். மற்றவர்கள் பாவம் செய்யும் போது மன்னிக்கவும் இது நமக்கு உதவுகிறது, ஏனென்றால் கிறிஸ்து அவர்களின் பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டார்.

  3. நம்முடைய வலிகள், துன்பங்கள், சோதனைகள், வியாதிகள் மற்றும் பெலவீனங்கள் அனைத்தையும் அவர் அனுபவித்தார் (ஆல்மா 7:11–13 பார்க்கவும்). அதாவது, உங்களுக்கு எவ்வாறு உதவுவது மற்றும் குணப்படுத்துவது என்பதை அவர் சரியாக அறிந்திருக்கிறார், மேலும் சோதனைகளைச் சகித்துக்கொண்டு சிறந்தவர்களாக மாற முயற்சி செய்ய உங்களைப் பெலப்படுத்தவும் முடியும்.

ஏதேனும் ஒரு பிரச்சினையைத் தேர்வு செய்யுங்கள், அதன் தீர்வை அந்த மூன்று சத்தியங்களில் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ இணைக்க முடியும்.

வறுமையா? இயேசு கிறிஸ்து எல்லாவற்றையும் அனுபவித்ததால், அது எப்படியிருக்கும் என்று அவருக்குத் மிகச் சரியாகத் தெரியும். அவர் எப்பொழுதும் தடையை அகற்றுவதில்லை, ஆனால் அந்த சுமையை சுமக்கும் மக்களை அவர் பெலப்படுத்த முடியும் (மோசியா 24:15 பார்க்கவும் ).

தோல்வியா? கிறிஸ்து பாவத்தை வென்றதால், நமது தோல்விகள் நிரந்தரமாக இருக்க தேவையில்லை. மனந்திரும்புதலில் அதிகமும் நாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கும் வண்ணம் மேம்படுத்துவதும், மாறுவதுமேயாகும்.

நோயா? இயேசு கிறிஸ்து நமக்காக பலியானதன் காரணமாக, நோய் மற்றும் வேதனை இல்லாத பரிபூரண சரீரத்தில் என்றென்றும் வாழ நாம் அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவோம். கிறிஸ்து “அவர் மீது … நோய்களை ஏற்றுக்கொண்டார்” (ஆல்மா 7:11), அவரே ஆறுதலும் தேறுதலும் வழங்கும் பூரணரானார்.

கிறிஸ்து எவ்வாறு உதவுகிறார்?

ஆனால் இரட்சகர் ஏன் பதில் என்று தெரிந்தாலும் (அவர் யார், அவர் நமக்கு என்ன செய்திருக்கிறார் என்பதன் காரணமாக), அவரிடமிருந்து நாம் எவ்வாறு உதவியையும் பெலத்தையும் பெறுகிறோம் என்பதை நாம் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும். இதோ சில வழிகள்:

ஜெபம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிப்பதன் மூலம், நம்மைப் போன்ற அபூரண மனிதர்கள் ஒரு பரிபூரண தேவனோடு பேச முடியும். எந்தவொரு சூழ்நிலையிலும் நமக்குத் தேவையான பெலத்திற்காக நாம் ஜெபிக்கலாம், தேவன் பதிலளிப்பார்—எப்போதும் நாம் விரும்பும் அல்லது எதிர்பார்க்கும் விதத்தில் அல்ல, ஆனால் நம்மை ஆசீர்வதிக்கக் கூடிய விதத்தில். இரட்சகரின் அழைப்பு உண்மையானது: “கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்” (யோவான் 16:24; 3 நேபி 27:29; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 4:7).

பரிசுத்த ஆவியின் வரம் பரலோக பிதா, இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியானவர் நோக்கத்தில் ஒன்றுபட்டுள்ளனர். அவர்கள் ஒன்றுபட்டு செயல்படுகிறார்கள்! பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலை அல்லது ஆறுதலை நீங்கள் எப்போதாவது உணர்ந்தால், கிறிஸ்து உங்களுக்கு உதவுவதாக நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

உடன்படிக்கைகளைக் கடைப்பிடித்தல். மூப்பர் டேல் ஜி. ரென்லன்ட் கூறியபடி: “உடன்படிக்கை பாதை என்ற சொல் கிறிஸ்துவிடம் வந்து அவருடன் இணைக்கும் உடன்படிக்கைகளின் தொடரைக் குறிக்கிறது. “இந்த உடன்படிக்கையின் இணைப்பின் மூலம், அவருடைய நித்திய வல்லமையை நாம் பெறுகிறோம்”.(Apr. 2023 general conference [Liahona, May 2023, 36]).

கிருபை. நாம் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து மனந்திரும்பும்போது, ​​நம்மால் செய்ய முடியாத காரியங்களையும் செய்ய கூடுதல் உதவியையும் பெலத்தையும் (கிருபை என்றும் அழைக்கலாம்) பெறலாம் (see Guide to the Scriptures, “Grace”). இந்த பெலன் அல்லது கிருபை, பரிசுத்த ஆவியிலிருந்து, ஒரு நண்பரிடமிருந்து, ஒரு அந்நியரிடமிருந்து, அல்லது ஒரு உணர்விலிருந்து பல வழிகளில் வரக்கூடியது. அடிப்படையில், ஒவ்வொரு நல்ல காரியமும் கிறிஸ்துவினாலே வருகிறது (மரோனி 7:22 பார்க்கவும்). நீங்கள் இன்னும் கொஞ்சம் கூடுதல் பொறுமை, இன்னும் கொஞ்சம் கூடுதல் ஆற்றல், இன்னும் கொஞ்சம் கூடுதல் தாங்கும் வலிமை ஆகியவற்றைக் கண்டால், கிறிஸ்து உங்களுக்கு உதவுகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஏன், எப்படி என்பதை நினைவில் கொள்ளுங்கள்

எனவே அடுத்த முறை உங்களுக்கு ஒரு கேள்வி அல்லது பிரச்சனைக்கு பதில் தேவைப்படும் போது, ​​கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். பாவம், மரணம் மற்றும் மற்ற எல்லாவித உலகப்பிரகாரமான சவால்களின் மீதும் அவருடைய வெற்றியின் காரணமாக, எதுவும் சாத்தியமில்லாமல் போகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் உங்களை எவ்வாறெல்லாம் ஆசீர்வாதிக்க முடியுமென்று பாருங்கள், உங்கள் வாழ்வில் அவருடைய செல்வாக்கை நீங்கள் காணமுடியும். அவர் உங்களை ஆழமாக நேசிக்கிறார்!